வினா எழுப்பினர்! விடை கண்டனர்!!

in 1990 மார்ச்

குர்ஆனின் நற்போதனைகள் :

வினா எழுப்பினர்! விடை கண்டனர்!!

தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, எம் ஏ.,பி.எட்.,எம்.பில்.,

10. (நபியே) அவர்கள் துல்கர்னைனைப் பற்றி உங்களிடம் வினவுகிறார்கள்:

அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன் என்று கூறுவீராக. துல்கர்னைனின் சரித்திரத்தை நபி(ஸல்) ஓதிக் காட்டுவதை 18:83 முதல் 110 வசனத்தில் காணலாம்.

11. (நபியே) உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் வினவுகிறார்கள்.

நீர் கூறுவீராக! ரூஹு(ஆத்மா) என் ரப்புடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும், ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை. (17:85)

12. (நபியே) அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள். நீர் கூறும்! அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் உள்ளது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது. (7:187,79,42-44)

13. (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையைப் பற்றி மக்கள் உம்மை வினவுகின்றனர். நீர் கூறும்! அதைப் பற்றிய ஞானம்-அல்லாஹ்விடமே உள்ளது. அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.  (33:63)

14. (நன்மை, தீமைக்குக்) கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்? என்று (ஏளனமாக) வினவுகின்றார்கள்.

நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறுவீராக!) (51,12,13)

15. (நபியே!) அவர்கள் (இறுதி நாளின் போது) மலைகள் (உடைய நிலை என்ன என்பது) பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும்! என் இரட்சகன் அவற்றை மணல்களாக்கிப் பரத்திவிடுவான். (20,105)

16. நிச்சயமாக அந்த (கியாமத்-இறுதி) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிந்தவன். நுட்பம் மிக்கவன். (31:34)

17. வானங்களிலும் பூமியிலுமுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமேக் கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். (55:29)

18. யாரிடம் நாம் நமது தூதை அனுப்பி வைத்தமோ அவர்களை திடனாக விசாரனை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (7:6)

19. ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்குள் வருத்தம் ஏற்படலாம். மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் வினவுவீர்களேயானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும். (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்.(5:101)

***************************

மூமினானவன் இடுப்பில் அணியும் கீழ்பாகம் அவருடைய கரண்டைக் காலில் பாதி  பாகம் வரையிலாகும். அதற்கும் கரண்டைமொளிக்கும் இடையில் அது இருப்பது பற்றிக் குற்றமில்லை. ஆனால் அதைவிட கீழ் இறங்கிய பாகம் நரகத்தைச் சார்ந்ததாகும். (அதுப் பெருமையைக் காரணமாக கொண்டதாக இருக்குமானால்) என்று மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அபூஸயிதில் குத்ரீ(ரழி)  அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

 

Previous post:

Next post: