அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

in 1990 ஜூன்

குர்ஆனின் நற்போதனைகள்:  

 தொடர்:17

அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

    ஏ. முஹம்மது அலி, எம், ஏ.,பி.எட்.,எம். பில்.,

1.     (நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்.     அல்லாஹ் உங்களை நேசிப்பான். (3:31)

2.    (நபியே!) நீர் கூறுவீராக. நீங்கள் எனக்கு வழிபட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். (48:16)

3.     அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவன். (58:13, 33:33)

4.    நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமின்)களாயின் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள். (8:1)

5. (மூமின்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தைக் கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கு கீழ்படியுங்கள். (24 : 56)

6. எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்துக் கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். (24 : 52)

7.     எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிபடுகிறாரோ, அவர் மகத்தான பாக்கியத்தை வெற்றிக் கொண்டுவிட்டார். (33:71)

8.     அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள். நீங்கள் அதனால் கிருபை செய்யப்படுவீர்கள்.(9:71)

9.     நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிபட்டு நடப்பீர்களேயானால் அவன் உங்களது நற்செயல்களில் எதனையும் உங்களுக்கு குறை வைக்கமாட்டான். (49:14)

10.     இறை நம்பிக்கைக் கொண்டோர்(மூமின்)களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; மேலும் அவனது தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் மிணக்கு ஏற்ப்பட்டுவிட்டால்-நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புவர்களாக இருப்பின் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான அழகான முடிவாகும். (4:59)

11.     நிச்சயமாக அல்லாஹ்:-(அவனது) நபியின்மீதும், கஷ்டகாத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும் அருள் புரிந்தான். (9: 117)

12. ஆகவே அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றினார்கள். (3:17)

13.     எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதியில் பிரவேசிக்கச் செய்வன்; அங்கு கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள்-இது மகத்தான பாக்கியமாகும். (4:13)

14.     எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் பெற்ற நபிமார்கள். சித்தீக்கீன்கள்(சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலீஹீன்கள்(நல்லொழுக்கமுடையவர்கள்). ஆகியவர்களுடன் இருப்பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (4:69)

15.     என்னையே நோக்கி நிற்போரின் வழியை நீர் பின்பற்றுவீராக! (31:15)

16.     (அவர்கள்) சொல்லை – நல்லுபதேசத்தைச் செவியுற்று அதில் அழகானதை பின்பற்றுகிறார்கள். இத்தகையோரைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறான். மேலும் இவர்களே நல்லறிவுபடைத்தோராவர். (39:18)

17..     உன் வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னிப்பாயாக! (என வானவர்கள் பிரார்த்திக்கின்றனர்.)

Previous post:

Next post: