குர் ஆனை விளங்குவது யார்?

in 1990 ஏப்ரல்

குர் ஆனை விளங்குவது யார்?

 தொடர் :16 

இப்னுஹத்தாது

அல்குர்ஆன் 3:7 வசனம் அல்குர்ஆனிலுள்ள இரண்டு வகையான வசனங்கள்  பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லும் முஹ்க்கமான வசனம். இதில் ஒருவகை, திட்டமான உறுதியான இறுதியான பொருள் கொள்ள முடியாமல் பல பொருள்களில் விளங்க முடிந்த பல பொருள்களில் விளங்க முடிந்த முத்தஷாபிஹ் வசனங்கள். அப்படிப்பட்ட இரண்டாம் வகையைச் சார்ந்த வசனங்களின் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ் அல்லாத யாராலும் அறிய முடியாது.

3:7 வசனத்திலுள்ள தஃவீல் என்ற அரபி பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்வது கூடாது. அங்கு இறுதி முடிவு என்றுப் பொருள் கொள்வதே சரி. இரண்டாம் வகையான முத்தஷாபிஹ் வசனங்கள் பற்றிக் காலத்திற்கேற்றவாறு விஞ்ஞான வளர்ச்சிக்கேற்றவாரெல்லாம் பொருள் கொள்ள முடியும். இந்த வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண இலக்கிய ஞானமும் அவசியம் என்றெல்லாம் முன் தொடர்களில் தெள்ளத் தெளிவாக விளங்கி இருந்தோம்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் முத்தஷாபிஹ் வசனங்களை விளங்க முடியாது  என்று நாம் சொல்வதாக, விளங்கிக் கொள்வதற்கும் அதைப்பற்றிய இறுதி முடிவுக்கு வருவதற்குமுள்ள வித்தியாசம் தெரியாமல் தவ்ஹீத் மல்லவிகள் தடுமாறுகின்றனர். அல்முபின் மார்ச் 90 பக்கம் 31லும் இந்த தடுமாற்ற நிலையைப் பார்க்க முடிகின்றது.

3:7 வசனம் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக விளக்கிய பின்னும் அதுப் பற்றி விளங்காதவர்கள் ஒன்று அறிவு சூனியங்களாக இருக்க வேண்டும் அல்லது தங்கள் மல்லவி வர்க்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள விதண்டாவாதம் புரிபவர்களாக இருக்க வேண்டும். மூன்றாம் நிலை இருக்க முடியாது. எனவே தவ்ஹீத் மல்லவிகளின் நிலைப்பற்றி நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

தங்கள் தவறான வாதத்தை நிலைநாட்ட அல்ஜன்னத் பிப்’90 பக்கம் 38ல் அல்குர்ஆன் வசனம் 2:221ஐ எவ்வாறு திரித்துள்ளனர் என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

அதற்கு முன்பு ஒன்றை தெளிவாக்கிட விரும்புகிறோம். 3:7 வசனத்தின் உண்மை நிலையைத் தெளிவாக்கிட நாமோ குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் நேரடியான விளக்கங்களை எடுத்து எழுதி வருகிறோம். அவர்களோ குர்ஆன் வசனங்களைத் திரித்து எழுதி வருகிறார்கள். அதற்கு அண்மை காலத்திய மல்லவி ஸனாவுல்லாஹ்வை சான்றாக்குகிறார்கள். உண்மையைக் கொண்டு நீதி வழங்கும் பொருப்பிலிருந்த முன்னால் தமிழக தலைமை நீதிபதி எம்.எம் இஸ்மாயில் அவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர்.

இப்படி முற்படுகின்ற இவர் ஹதீஸ் வல்லுனர்களுடைய காலத்தில் இருந்திருப்பாரேயானால், இவர் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்திருந்தாலும், இவர் ஒரு பொய்யர் (கஃதிப்), இட்டுக்கட்டக் கூடியவர், இவரதுக் கூற்று ஏற்கத் தக்கதல்ல  என்று அடையாளம் காட்டப்பட்டிருப்பார். எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹாபிழ் இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் இவருக்காக பல பக்கங்களை ஒதுக்கி இவரது வீர தீர சேவைகளை எல்லாம் ஆராய்ந்து விளக்கிவிட்டு சொல்லப்படும் கூற்றின் உண்மைநிலையை விசாரித்தறியும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடிருக்கும் நிலையிலேயே இந்த அளவுப் பொய்க் கூற்றுகளை துணிந்து அள்ளி விடுபவர், சம்பந்தப்பட்டவர்கள் இறந்து போன பின் எந்த அளவு பொய் கூற்றுகளை துணிந்து அள்ளி விடுபவராக இருப்பர் என்றெல்லாம் தெளிவுப்படுத்தி, இறுதியில்ட

    இவர் ஒரு பொய்யர்;

    இட்டுக் கட்டக் கூடியவர்;

    இல்லாததை சொல்பவர்;

    மறுக்கப்பட வேண்டியவர்,

    என்று தீர்ப்பு வழங்கி இருப்பார்கள். நல்லவேளை, அக்காலத்தில் வாழாமல் இக்காலத்தில் வாழ்வதால் தப்பித்துக் கொண்டார்.

அந்நஜாத் ஜனவரி-90 இதழில் “இபாததுல்வலீ” என்ற அரபிக் பதத்தை வைத்து அகந்தை பேசிய விபரங்களையும் 3:30 வசனத்தைத் திரித்து எழுதி தங்கள் தவறான வாதத்தை நிலைநாட்ட  முற்ப்பட்டிருந்ததையும் தெளிவுப் படுத்தி இருந்தோம்.

இப்போது அவர் திரித்து எழுதியுள்ள 2:221 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பார்ப்போம்.

1.    இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

2. இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவனாக இருந்த போதிலும்,

3. அவனை விட விசுவாசியான ஒரு அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவள்.

4. அவ்வாறே இணை வைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (விசுவாசியான பெண்களை)நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.

5. இணை வைக்கும் ஆண் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும்,

6. ஒரு விசுவாசியான அடிமை அவனை விட மேலானவன்.

7. இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.

8. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கின்றான்.

9. மனிதர்கள் படிப்பினை  பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.     (2:221)

இங்கு ஒவ்வொரு வாக்கியத்திற்கும் தனித்தனி எழுவாய் பயனிலை இருப்பதைக் கவனிக்கவும், அதாவது விசுவாசிகளுக்குத் தனி பயனிலையும், இணைவைப்பவர்களுக்குத் தனி பயனிலையும் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே 7வது வாக்கியத்திலுள்ள இவர்கள் என்ற எழுவாய் இணைவைப்பவர்களையும், 9வது வாக்கியத்திலுள்ள அவன் அல்லாஹ்வையுமே குறிக்கிறது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். இப்படிப் பொருள் கொள்வது குர்ஆனிலுள்ள வழக்கப்படியே  அமைந்துள்ளது, உதாரணமாக :

12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்ப்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள், என்று முடிவுற்றப்பின்,

12:52 வசனத்தில் “இதன் காரணம் நிச்சயமாக அவர்(என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்துக் கொள்வதுடன் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.” என்றும் 12:53  வசனத்தில் “அன்றியும், நான் என் மனதை பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் இல்லை, ஏனெனில்  மன இச்சையானது தீமையைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது. என் இறைவன் அருள் புரிந்தாலன்றி, நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கிறான்” என்றும் உள்ளது.

இங்கு சிந்திப்பவர்கள் அஜீஸின் மனைவிக் கூறிலாள் என்று 12:51 வசனம் முடிவுற்றாலும், 12:52, 53 வசனத்திலும் இடம்பெறும் யூசுப்(அலை) அவர்கள் கூறிய கூற்றுகளாகும் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். தப்ஸீர் இப்னு கதீரில் எழுதப்பட்டுள்ள  தவறான விளக்கத்தை நம்பிக் கொண்டு 12:52,53 வசனங்கள் அஜீஸின் மனைவி கூறியதுதான் என்று அடம் பிடிக்கும் மதனிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதேப் போல் 22:78 வசனத்தில் “இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹிமுடைய மார்க்கமாகும்” என்பதற்கு பின்வரும் “ஹுவ” என்ற அரபிப் பதம் இப்றாஹிம்(அலை) அவர்களைக் குறிக்கும் என்று நம்பிக் கொண்டு இப்ராஹிம்(அலை)  அவர்கள் தான் “முஸ்லிம்” என்று பெயரிட்டார்கள் என்று நம்புபவர்களும் எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆணால் இங்கும் அதற்கு முன்னுள்ள வாக்கியங்கள் குறிக்கும் அல்லாஹ்வையே இந்த “ஹுவ” குறிக்கும் என்பதே சரியாகும். 

ஆக ஒரு வசனத்தில் தனித்தனி எழுவாய் பயனிலை உள்ள வாக்கியங்கள் இடம் பெற்று அதற்கு பின் அவர் அல்லது அவர்கள் இடம் பெற்றால் அதனை எந்த வாக்கியத்துடன் இணைத்துச் செல்ல வேண்டும் என்பதை முன்பின் தொடர்களை கவனிக்கும் போது விளங்கிக் கொள்ள முடியும். அதற்கு முன்னைய வாக்கியத்தையே குறிக்கும் என்று சொல்வது தவறு என்பதை 12:51,52,53 மற்றும் 22:78 வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்தி விட்டோம்.

இப்போது 8:7 வசனத்தை அவர்கள் தவறாக மொழிப் பெயர்த்துள்ள படி தனிதனி வாக்கியங்களாக பிரித்து எழுதிப் பார்ப்போம்.

    1. அவன் தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான்.

    2. இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன.

    3. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.

    4. மற்றவை முத்தஷாபிஹாத் ஆகும்.

   5. எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்ப்படுத்துவதற்காக முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.

    6. அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிபாடுடையவர்களையம் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள்.

    7. “அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் நாங்கள் அதை நம்பிக்கைக் கொள்கிறோம்,” என்று அவர்கள் கூறுவார்கள்.

    8. அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

இப்போது குர்ஆனின் நடைமுறைப்படி 7வது வாக்கியத்தில் இடம் பெறும் அவர்களை அதற்கு முன்னுள்ள 1,2,3,4,5,6 என்ற ஆறு வாக்கியங்களில் எது ஒன்றுடனாவது இணைத்து சொல்லட்டும். நாம் மறுக்கப் போவதில்லை. அல்லது அதற்கு முன்னுள்ள ஆறு வசனங்களுடனாவது பொருத்திக் காட்டட்டும் பார்க்கலாம். 1வது வாக்கியத்திலுள்ள அவனுக்கு அது பொருந்தாது,2,3,4 பது வாக்கியங்களில் சம்பந்தமே இல்லை. 5 வது வாக்கியத்திலுள்ள அவர்களுக்கும் பொருந்தாது.

ஆக, இந்த ஐந்து வாக்கியங்களுக்கோ அல்லது முன்னைய ஆறு வசனங்களுக்கோ 7 லிலுள்ள அவர்கள் பொருந்தாது என்பதை அவர்களும் மறுக்கப் பொவதில்லை. எஞ்சி இருப்பது ஆறாவது வாக்கியம் மட்டுமே அவர்களுக்குத் திறமை இருந்தால் 6வது வாக்கியத்தை இரண்டு தனித்தனி வாக்கியங்களாக எழுவாய், பயனிலையுடன் மூல அரபி மொழியில் பேதகம் ஏற்படாமல் பிரித்துக் காட்டட்டும் முடியாது.

எனவே 7-லுள்ள அவர்கள் 6-ல் உள்ளவர்களைத் தான் குறிக்கும் என்றால் நிச்சயமாக அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் “அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொள்கிறோம்.” என்று மொழிப் பெயர்க்கப்பட்ட முடியுமேயல்லாமல், அல்லாஹ்வை விட்டு கல்வியில் உறுதிபாடுயவர்கள் மட்டுமே அவ்வாறு கூறினார்கள் என்று பிரித்தெடுப்பதற்கு அல் குர் ஆனில் ஆதாரம் இல்லை. அரபி இலக்கண விதிப்படியும் தவறு என்ற முடிவுக்கே வர முடியும்.

Previous post:

Next post: