துலாக்கோல்

in 1990 ஏப்ரல்

துலாக்கோல்

 கிரிட்டிக்

இந்த இதழில் அல் ஜன்னத் டிசம்பர்’89 இதழின் 53ம் பக்கத்தில் இடம் பெற்ற மறுப்புக் கட்டுரையின் ஆட்சேபனை 3 விளக்கம் 3 ஐ அலசுவோம்.

நான் நினைவில் வைத்திராத ஒன்றை என்னிடம் கேட்கிறீர். உமக்கு முன்னர் வேறு எவரும் என்னிடம் (இதுப் பற்றி) கேட்டதில்லை. என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஆறு நூல்களில் இடம் பெற்று அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கும் ஒரு ஹதீஸை அவர்கள் எடுத்து எழுதியதாகக் கூறியுள்ளனர். (பார்க்க அல் ஜன்னத் டிசம்”89 பக்கம் 57) அதே சமயம் அல்ஜன்னத் செப்’89 பக்கம் 34ல் அபூ சலமா அவர்களால் அறிவிக்கப்பட்டு நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அஹ்மத், தாரகுத்னீ, இப்னு குஸைமா ஆகிய மூன்று(3) நூல்களில் பதியப்பட்டுள்ளதாக அறிவிப்பு, 3 மாதம் கழித்து அபூ மஸ்மா வழியாக ஆறு நூல்களில் பதியப்பட்டுள்ளதாக அறிவிப்பு. நிச்சயமாக இரண்டும் சரியாக இருக்க முடியாது.  பின்னால் எழுதியுள்ள  6 நூல்களில் காணப்படுவதையே அவர்கள் சரி கண்டுள்ளதாகவே கொள்ள முடியும்.

அபூஹுரைரா(ரழி) சம்பந்தமான ஹதீஸ் எந்தெந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டிருந்தமோ அத்தனை நூல்களிலும் தேடிப் பார்த்தப் பின்பே நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்று நம்மைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். (பார்க்க அல் ஜன்னத் டிச’89 பக்கம் 61) அவர்களை ஊருக்கு உபதேசியப்பவர் என்று நாம் சொல்லவில்லை. எனவே அனஸ்(ரழி) அவர்கள் சொன்னதாக அவர்கள் சொல்வதை அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆறு(6) நூல்களிலும் நேரடியாகத் தேடிப் பார்த்து உறுதி செய்துக் கொண்டப் பின்னே எடுத்து எழுதியிருப்பார்கள் என நம்புகிறோம்.

எனவே அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஆறு(6) நூல்களையும் அனஸ்(ரழி) அவர்களது தடுமாற்றம் பற்றி அவர்கள் குறிப்பிட்டுள்ள நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் மத்ன், ஸனது பாகம் பக்கங்களை மக்களுக்கு அறிதத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி ஆறு (6) நூல்களிலும் இடம் பெற்றுள்ள அந்த ஹதீஸின் மத்ன், ஸனது இடம் பெற்றுள்ள நூல்களின் பாகம் பக்கம் இவற்றை அவர்கள் மக்களுக்கு அறியத்தர தவறுவார்களேயானால் அவர்களது கூற்றுப்படியே அவர்களை சமுதாயம் புரிந்துக் கொள்ளும் என்பதையும், திட்டமிட்டு பொய் சொல்லி இருக்க வேண்டும் என்றும், உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு நிலைநாட்ட முயலுங்கள்,

பொய்களை அஸ்திவாரமாக்க நீங்கள் துணியாதீர்கள் என்றும் இவ்வளவுத் துணிந்து பகீரகமாக ஒப்புக்கொண்டு வருகிறோமேயல்லாமல் , வரட்டு கவுரவம் காரணமாக தவறுகளை என்றுமே நியாயப்படுத்த முற்ப்பட்டதே இல்லை. மெளனம் சாதித்ததும் இல்லை. சமுதாயத்தை வழிக்கெடுக்கும் தவறுகள் எங்களிடமிருந்து ஏற்ப்பட்டு விட்டால் உணர்த்தப்பட்டவுடன் ஏற்றுத் திருத்திக் கொண்டிருக்கிறோம். மன்னிப்புக் கேட்கவும் தயங்கியதில்லை. ஊருக்கு உபதேசம் செய்பவர்களாக நாங்கள் இல்லை. ” நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ (அதற்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை.” (11:88) என்று ஷுஐபு(அலை) கூறியுள்ளபடியே செயல்படுகிறோம்.

அடுத்து தொழுகையில் தினசரி பலமுறை ஓதப்படும் கிராஅத்தைக் கண்டிப்பாகக் கவனமுடன் வாய்மூடி செவித்தாழ்த்திக் கேட்க வேண்டும். என்ற இறைக்கட்டளையை ஏற்று பல வருடங்கள் கேட்டுக் கொண்டிருந்த அனஸ்(ரழி) அவர்களுக்கு பிஸ்மி சப்தமின்றி ஓதப்பட்டதா அல்லது சப்தமிட்டு ஓதப்பட்டதா என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை என்று கூறுவது அறிவுக்கே பொறுந்துவதாக இல்லை என்று நாம் எழுதியிருந்ததற்கு  மறுப்பாக “அடிக்கடி பரிச்சயமான விஷயங்களை மனிதன் சரிவர கவனிக்க தவறுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

தனது சொந்த வீட்டில் இருக்கின்ற மாடிப்படிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை மனிதன் கவனிக்கத் தவறிவிடுவதை நாம் பார்க்கின்றோம். ஒரு நாளைக்குப் பலமுறை அதில் ஏறிச் சென்றாலும் கூட இதைக் கவனிக்கத் தவறி விடுகிறோம்” என்று எழுதி தங்கள் கூற்றை நியாயப்படுத்தியுள்ளனர். தொழுகையில் ஓதப்படும் கிராஅத்திற்கு  படிகளின் எண்ணிக்கையை உதாரணமாக காட்டியது நகைப்புக்குரியது. அல்லது அனஸ்(ரழி) அவர்களை ஒரு பொடுபோக்கான கவனமில்லாத தொழுகையாளி என்று அவர்கள் கூற வருகிறார்கள் என்றே சாதாரண அறிவு படைத்தவனும் விளங்க முடியும்.

தொழுகையின் கிராஅத்திற்கும் மாடிப்படிகளின் எண்ணிக்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஏறுபவர்கள் படிகளின் எண்ணிக்கையை அறிந்திருக்க வேண்டும் என்பதோ அல்லது எண்ணிக் கொண்டே ஏற வேண்டும் என்பதோ அறீவீனர்களின் கூற்றாக இருக்க முடியுமேயன்றி அறிவாளிகளின் கூற்றாக இருக்க முடியாது. தொழுகையில் ஓதப்படும் கிராஅத்தை வாய்மூடி செவித்தாழ்த்திக் கேட்பதோ, கண்டிப்பான இறைவனின் கட்டளையாக இருக்கிறது. நிச்சயமாக இதனை அறியாதவர்கள் அல்ல அவர்கள். இந்த நிலையில் மாடிப்படி உதாரணம் சொல்லி தொழுகையில் சப்தமிட்டு பிஸ்மி ஓதும் தவறான வாதத்தை நிலைநாட்ட முற்ப்பட்டுள்ளனரே! அவர்களே கூறுவதுப் போல் அவர்களை சமுதாயம் புரிந்துக் கொள்ள இது ஒன்று போதாதா?

Previous post:

Next post: