ஹதீஸ் பெட்டகம்

in 1990 ஜூன்

ஹதீஸ் பெட்டகம்

தொடர் :4

ஏ. முஹம்மது அலி. எம்.ஏ.பி.எட்,எம்.பில்.

ஹஜ்ஜின் சிறப்பு:

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் வெகு தொலைவிலிருந்து உம்மிடம் வருவார்கள். (22:27)

அரஃபாத்திலிருந்து திரும்பும் போது “மஷ்அருல் ஹராம்” என்னும் இடத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். (2:198)

ரசூல்(ஸல்) கூறினார்கள்: வானவர்(மலக்கு)களிடம் அல்லாஹ் அரபாவில் கூடியிருக்கும் ஹாஜிகளைக் காட்டி (சிலாகித்துக்) கூறுகிறான். புழுதிபடிந்த, கலைந்த முடிகளுடனிருக்கும் எனது (சிறப்புமிக்க) அடியார்களைப் பாருங்கள்!

இந்த நபிமொழி ஹஜ்ஜு பாடங்களின் சிறப்பைப்பற்றி கூறும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது. இந்த நபிமொழி இடம்பெற்றுள்ள ஆதார நூல்களையும், அறிவித்த நபித்தோழர்களையும் காண்போம்.

ஆதார நூல்கள்                                              அறிவிப்பாளர்கள்                இறப்பு

1.முஸ்லிம்                               ஆயிஷா(ரழி)                                                  57-58 ஹி

2. நஸயீ                                   ஆயிஷா(ரழி)                                                57-58 ஹி

3. இப்னுமாஜா                            ஆயிஷா(ரழி)                                                  57-58 ஹி

4. முஸ்னது அஹ்மது                   அபூஹுரைரா(ரழி)                                        59 ஹி

                                                                           அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி)                  65   ஹி

4. இப்னு ஹிப்பான்                     அபூஹுரைரா(ரழி)                                          59   ஹி

5. அல்ஹாகிம்                          அபூஹுரைரா(ரழி)                                          59   ஹி

6. தப்ரானி சகீர்                         அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி)                   65  ஹி

7. தப்ரானி கபீர்                         அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி)                   65  ஹி

9. அத்தர்ஃகீப்-அல்முன்தீர்             அபூஹுரைரா(ரழி)                                         59  ஹி

இதுவன்றி அனஸ்பின் மாலிக்(ரழி) அறிவித்ததாக ஒரு அறிவிப்பு முஸ்னது அபீணஃலாவில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் சாலிஹுல மரீ என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார். எனவே இந்த ஹதீதைப் பற்றிய அறிவிப்பு மாத்திரமே பலவீனமானதாகும்.

நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்த நபிமொழி(9) ஒன்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. (15) பதினைந்துக்கு மேற்பட்ட அறிவிப்பாளர் வரிசைகளில் ஆயிஷா, அபூஹுரைரா, அப்துல்லாஹ்பின் அம்ர் (ரழி – அன்ஹும்) போன்ற ஸஹாபிகள் அறிவித்ததாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்   சகோதர   சகோதரிகளே!

தனது கட்டளைகள்படி ஹஜ்ஜு செய்வோரை அல்லாஹ் புகழ்கிறான் என்று வெறுமனே கூறுவதால் அப்புகழ்ச்சியை அறிந்துகொள்வதைவிட சிறிய விளக்கமாக அறிந்தால் நமது மனம் புளங்காகிதம் அடையுமல்லவா?

இந்நபிமொழியை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள். யார், யாரிடம் யாரைப்பற்றி புகழ்கிறான் என்பதைச் சிந்தியுங்கள். அகில உலகத்தின் அதிபதி, அருளாளன், அன்புடையோன், எல்லாம் வல்ல அல்லாஹ் புகழ்கிறான். யாரிடம் புகழ்கிறான்? ஒளியால் படைக்கப்பட்டு, அல்லாஹ்வின் ஆணையை முற்றிலும் நிறைவேற்றும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அறவே மாறு செய்யாத பரிசுத்தமான வானவர்(மலக்கு)களிடம் புகழ்கிறான். யாரைப் பற்றி புகழ்கிறான்? தனது (மனித) அடியார்களைப் பற்றி-அல்லாஹ்வின் ஆணைகளுக்குத் தெரிந்தோ,  தெரியாமலோ தவறுகளைச் செய்துகொண்டு, மாறுபட்டுக் கொண்டிருக்கும் மனித அடியார்களில், ஹஜ்ஜுக்காக மக்கா சென்று அரஃபாவில் கூடியிருக்கும் அடியார்களைப் புகழ்கிறான்.

இன்னும் விளக்கம் பெற திருக்குர்ஆன் வசனம் 2:30ஐ பார்வையிடுங்கள். அல்லாஹ் மனித இனத்தைப் படைத்த ஆரம்ப நிலையை நினைவு கூறுங்கள். அல்லாஹ் மனிதனை (தனது) பிரதிநிதியாக இவ்வுலகில் படைக்கப் போவதாக கூறுகிறான். வானவர்கள் (இறைவா) குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா நீ படைக்கப் போகிறாய்? உன்னைப் புகழ்ந்து, துதித்துப் போற்றக் கூடியவர்களாக நாங்களிருக்கிறோம் என்று கூறினார்கள். அல்லாஹ் அவன் நாடியபடியே மனித இனத்தைப் படைத்தான். அல்லாஹ் மனிதனுக்கு நல்கிய அறிவின் சிறப்பை அல்லாஹ் அன்றே நிரூபித்து சிறப்பித்ததை 2:31 முதல் 33 வசனங்கள் மூலம் அறியலாம்.

எந்த மனித இனம் குழப்பம் உண்டாக்கும், இரத்தம் சிந்தும் என மலக்குகள் கூறினார்களோ, அந்த மனித இனத்தின் தனது கட்டளைக்கு முற்றிலும் (ஹஜ்ஜு செய்து) வழிபட்டுள்ள அடியார்களைப் பற்றி அதே மலக்குகளிடம் புகழ்கிறான். “இதோ பாருங்கள்! புழுதி படிந்து, தலைமுடிகள் கலைந்தவர்களாக என்னிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கும் என் அடியார்களைப் பாருங்கள்” எனப் பெருமிதத்துடன் கூறுகிறான்.

துல்ஹஜ் பிறை 7ம்நாள் இஹ்ராம் என்ற வெள்ளை ஆடை அணிந்து ஹஜ்ஜு செய்யப் புறப்படும் ஹாஜிகள் ஹரம், மினா, அரபா என மூன்று இடங்களில் பிறை 5,9,10,11,12 நாட்களைக் கழிக்கிறார்கள். தங்களது சொந்த ஊரை, உற்றார், உறவினர்களை, பந்தபாசங்களை, வியாபார தொழில் தொடர்புகளை விட்டு, நாடு விட்டு நாடு கடந்து வந்துள்ளார்கள். அல்லாஹ்வின் ஆணையான ஹஜ்ஜை நிறைவேற்ற வந்துள்ளார்கள்.

மாடமாளிகைகளில் எல்லாவித வாதிகளுடனும் தங்களது நாட்டில், ஊரில் வாழ்ந்தவர்கள் இவர்கள். இன்று சிடைக்கும் மிகக் குறைந்த வசதிகளில் கூடாரங்களில் தங்குகிறார்கள் பற்பல அலங்கார ஆடைகள் உடுத்தியவர்கள் இவர்கள், இன்று சாதாரண இரு துண்டுகளான வெள்ளை ஆடையை மட்டும் அணிந்துள்ளார்கள். பற்பல சிகை அலங்காரங்களை செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள். இன்று எவ்வித அலங்காரமுமின்றி தலைவரிகோலமாக ஐந்து நாட்கள் பற்பல இடங்களில், கூடாரங்களில் தங்கியுள்ளார்கள். தரையில் படுத்துறங்குகிறார்கள். கொடிய உஷ்ண காற்றால் ஏற்பட்ட வேர்வையுடன் இணைந்து புழுதி படிந்தவர்களாக அரபாவில் தோன்றுகிறார்கள்.

அரபாவில் ளுஹர், அஸர் தொழுகையை நபி(ஸல்) காட்டித்தந்த நடைமுறைப்படி கஸர், ஜம்உ”(குறைத்து இணைந்து) தொழுகிறார்கள். அஸர் நேரத்தில் அரபா மைதானத்தில் நின்று அல்லாஹ்விடம் தங்களது தேவைகளை இறைஞ்சுகிறார்கள். இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இன்றிலிருந்து சரியாக 1400 வருடங்களுக்கு முன் அரஃபாத்தில் கூடிய மாநாட்டை இது நினைவுபடுத்துகிறது. அன்று முழுமையாக்கப்பட்ட இஸ்லாத்தை ஏற்றுள்ள நாம் அதனை ஏற்று வாழத் தூண்டுகிறது.

அனைத்துக்கும் மேலாக ஹஜ்ஜில் தலையாய அம்சமான அரஃபாவில் தரிபடுதல் மூலம் ஹஜ்ஜு நிறைவாகிறது. இந்நிலையில் அல்லாஹ் தனது மலக்குகளிடம் இச்சிறப்பான நல்ல அமலைச் செய்யும் அடியார்களைப் புகழ்ந்து பாராட்டுகிறான். இச்சிறப்பு எல்லோருக்கும் கிட்ட அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

2. ஹஜ் செய்பவர்களை தலை முடியை முற்றாக நீக்குவதன் சிறப்பு:

அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சம் தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள்-(அப்போது எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள்.  (48:27)

ரசூல்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: யா அல்லாஹ்! (ஹஜ்ஜின் போது முழுமையாக தலை) முடியிறக்கியவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

நபித்தோழர்கள் : (சிறிது தலை) முடியை கத்தரித்துக் கொண்டவர்களுக்கு? (ம் துஆ செய்யுங்கள்)

ரசூல்(ஸல்) : யா அல்லாஹ்! (முழுமையாக தலைமுடியிறக்கியவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

நபித்தோழர்கள்:  (சிறிது தலை) முடியை கத்தரித்துக் கொண்டவர்களுக்கு?

ரசூல்(ஸல்) : யா அல்லாஹ்! (முழுமையாக தலைமுடியிறக்கியவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

நபித்தோழர்கள்:  (சிறிது தலை) முடியை கத்தரித்துக் கொண்டவர்களுக்கு?

ரசூல் (ஸல்) : (சிறிது தலை) முடியை கத்தரித்துக் கொண்டவர்களுக்கு? (ம் துஆ செய்யுங்கள்)

மற்றொரு அறிவிப்பில் : “பாவங்களை மன்னிப்பாயாக” என பிரார்த்தித்ததாக உள்ளது.

பெரும்பாலும் இந்நபிமொழிகள் ஹஜ்ஜு பாடத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நபிமொழி இடம்பெறும் ஆதாரநூல்களையும், அறிவித்த ஸஹாபிகளையும் பார்ப்போம்.

ஆதார நூல்கள்                                    அறிவிப்பாளர்கள்                              இறப்பு

1. புகாரீ (194-256 ஹி)                                            ஆயிஷா(ரழி)                                                59 ஹி

                                                                                        இப்னு உமர்(ரழி)                                         73 ஹி

2. முஸ்லீம்(204-256 ஹி)                                       அபூஹுரைரா(ரழி)                                    59 ஹி

                                                                                         இப்னு உமர்(ரழி)                                          73 ஹி

                                                                                         யஹ்யாபின் ஹுசைன்(ரழி)

3. அபூதாவூத் (202-275ஹி)                                   இப்னு உமர்(ரழி)                                          73 ஹி

4. திர்மிதீ (209-279ஹி)                                            இப்னு உமர்(ரழி)                                          73 ஹி

5. இப்னுமாஜ்ஜா (207-275ஹி)                             இப்னு அப்பாஸ்(ரழி)                                68 ஹி

                                                                                           அபூஹுரைரா(ரழி)                                    59ஹி

                                                                                            இப்னு உமர்(ரழி)                                       73ஹி

6. முஸ்னது அஹ்மது (164-247)

                                                                                             முஸ்னது அபீஹுரைரா

  பாகம் 2ல் பக்கங்கள் 231, 411,                           அபூஹுரைரா(ரழி)                                  59ஹி

  முஸ்னது இப்னு உமர் பாகம்

  2ல் பக்கங்கள் 16, 34, 79, 119, 138, 141, 151           இப்னு உமர்(ரழி)                                     73ஹி                                                         

                                                                                              முஸ்னது இப்னு அப்பாஸ்

  பாகம் 1ல் பக்கங்கள் 216,  353                           ஹதிஸ் காரிப்(ரழி) பாகம் 6ல்

                                              பக்கம் 393                          காரிப்(ரழி)                                                         __

   ஹதீஸ் யஹ்யாபின்

  ஹுசைன் பாகம் 4ல் பக்கம்

  70, பாகம் 5ல் பக்கம் 381

  பாகம் 6ல் பக்கம் 402,403                                          யஹ்யாபின் ஹுசைன்              __   

  முஸ்னது அபீஸயீத் பாகம்

  3-ல் பக்கங்கள் 20,84                                                     அபூஸயீத் அல்குத்ரீ(ரழி           63ஹி

 

  ஹதிஸ் ஹபஸிபின்

  ஜனாதா பாகம் 4ல் பக்கம் 165                                 ஹபஸிபின் ஜனாதா(ரழி)                    ___

  ஹதீஸ் மாலிக் இப்னு ராபிஆ(ரழி)

  பாகம் 4ல் பக்கம் 177                                                      மாலிக் இப்னு ராபிஆ(ரழி)                 60ஹி

7. தப்ரானி கபீர்                                   காரிப்(ரழி)                                                         __

                                                                                                          ஹபஸிபின் ஜனதா(ரழி)                        __

8. தப்ரானி அவ்ஸத்                               மாலிக் இப்னு ரபீஆ(ரழி)                  60ஹி

9. அல்பாஜ்                                         காரிப்(ரழி)                                                        __

இந்த நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் யஹயாபின் ஹுசைன்(ரழி) அவர்கள் தனது பாட்டியிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்.

காரிப்(ரழி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிந்ததாக அறிவிக்கிறார்.

ஹபஸியின் ஜனதா(ரழி) அவர்கள்: நபி(ஸல்) இவ்விதமாக பிரார்த்தித்தது ஹஜ்ஜத்துல் விதாவில் என்கிறார்.

உஸ்மான்(ரழி) அபூகதாதா(ரழி) தவிர ரசூல்(ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் ஹுதைபிய்யா நிகழ்ச்சியின் போது இஃராம் கட்டியிருந்தனர். ரசூல்(ஸல்) அவர்கள் தலைமுடியை முழுமையாக சிரைத்துக் கொண்டவர்களுக்கு மூன்று தடவை பாவமன்னிப்பு கோரினார்கள். தலைமுடியை (சிறிது) கத்தரித்துக் கொண்டவர்களுக்கு ஒரு தடவை பாவமன்னிப்பு கோரினார்கள் என்று அபூஸயீத் அல்குத்ரீ அறிவிக்கிறார்கள். இதனை முஸ்னது அஹ்மதில் பாகம் 3ல் பக்கங்கள் 20, 89ல் காணலாம்.

அல்லாஹ்வின் அருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழி (9) ஒன்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. முப்பதுக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசைகளில் வருகிறது. இவ்வரிசைகளில் பற்பல ஸஹாபாக்(நபித்தோழர்)களும் தாபீஈன்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தங்களது முடிகளில் சிறிது சிரைத்துக் கொண்டாலும் போதுமானது. ஆனால் முழுமையாக சிரைத்துக் கொள்வது தான் சாலச்சிறந்ததாகும் என்பதை (43:27) அல்லாஹ் அதனை முழுமைப்படுத்தியிருப்பதிலிருந்து அறியலாம். நபி(ஸல்) அவர்களின் வாக்கும் அதனை உறுதிப்படுத்துவதைக் காணலாம்.

எனவே ஹஜ்ஜு செய்பவர்கள் தலை முடியை முழுமையாக சிரைத்துக் கொண்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் முதன்மைப்படுத்தியதை முதன்மைப்படுத்தி முழுமையாக நிறைவேற்றுவார்களாக!

3. இஹ்ராம் அணிந்தவர்களே! எதனையும் கொல்லாதீர்கள்.

(விசுவாசிகளே!) நீர் வேட்டையாடுவதும் அதனை உணவாக கொள்ளுவதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) யாத்திரிகர்களுக்கும் பயன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளன எனினும் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது தடுக்க (ஹராமாக்க)ப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். (5:96)

ஈமான்(நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடைஉடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். (5:95)

மேலேக் கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் ஹஜ்ஜு செய்பவர்கள் தரைவாழ் உயிரினங்களை வேட்டையாடிக் கொல்வதை அல்லாஹ் தடை செய்கிறான். ஹராமாக்குகிறான். இவ்வசனங்களுக்கு விளக்கமளித்து ரசூல்(ஸல்) அவர்கள் மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சில உயிரினங்களைக் கொல்வதை அனுமதியளித்தார்கள்.

ரசூல்(ஸல்) கூறினார்கள்: ஹஜ்ஜு செய்பவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் ஐந்து உயிரினங்களைக் கொல்வது குற்றமாகாது. அவையாவன: 1. பாம்பு 2.தேள் 3.கருடன் 4. எலி, 5. வெறிநாய்

ஆயிஷா, ஹப்ஸா(ரழி அன்ஹுமா) அறிவிப்புப்படி 1. காகம் 2. கருடன், 3.தேள், 4. எலி, 5. வெறிநாய்

இந்நபிமொழியான ஹஜ்ஜு அல்லது வேட்டையாடுதல் என்ற பாடங்களில் இடம்பெற்றுள்ளன. இது இடம் பெறும் ஆதார நூல்களையும் அறிவித்த நபித்தோழர்களையும் காண்போம்.

ஆதார நூல்கள்                                        அறிவிப்பாளர்கள்                                     இறப்பு

1. புகாரீ (194-256ஹி)                                                 ஆயிஷா(ரழி)                                               57-58  ஹி

                                                                                            ஹப்ஸா(ரழி)                                                73  ஹி

                                                                                            இப்னு உமர்(ழி)                                           73  ஹி

2.முஸ்லிம்(204-261ஹி)                                            ஆயிஷா(ரழி)                                                57-58  ஹி

                                                                                             இப்னு உமர்(ழி)                                          73   ஹி

3.நஸயீ(215-303ஹி)                                                   ஆயிஷா(ரழி)                                                 57-58  ஹி

                                                                                             ஹப்ஸா(ரழி)                                                73  ஹி

                                                                                             இப்னு உமர்(ழி)                                           73  ஹி

4. அபூதாவூத்(202-275ஹி)                                        இப்னு உமர்(ழி)                                            73  ஹி

                                                                                             அபூஹுரைரா(ரழி)                                     59   ஹி

                                                                                             அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)                      63   ஹி

5. திர்மிதீ(209-279ஹி)                                                  ஆயிஷா(ரழி)                                               57-58  ஹி

                                                                                             அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)                      63  ஹி

6. இப்னுமாஜ்ஜா(207-275ஹி)                                 ஆயிஷா(ரழி)                                                 57-58  ஹி       

                                                                                             இப்னு உமர்(ழி)                                           73  ஹி

                                                                                             அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)                      63  ஹி

7. முஸ்னது அஹ்மது(164-247ஹி)                     இப்னு அப்பாஸ்(ரழி)                               73  ஹி

8. அபூயஃலா                                 இப்னு அப்பாஸ்(ரழி)                               73  ஹி

9. அல்பராஜி                                 அபீராஉபிஉ(ரழி)                                         68  ஹி

10.தப்ரானீ கபீர்                              இப்னு அப்பாஸ்(ரழி)                               73 ஹி

11. தப்ரானீ அவ்ஸத்                        இப்னு அப்பாஸ்(ரழி)                                 73 ஹி

12. அபூதாவூத்-தயாலிசி                    ஆயிஷா(ரழி)                                                   57-58  ஹி

                                                                                             ஹதீஸ் எண் 1521

                                                                                              இப்னு உமர்(ரழி)

                                                                                              ஹதீஸ் எண் 1889                                        73 ஹி

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அறிவிப்பில் பருந்துக்கு பதீலாக பாம்பு என இடம் பெற்றுள்ளது. இதனை நாம் முஸ்னது அஹ்மது, அபூயஃலாவில் காணலாம்.

தப்ரானி அவ்ஸத்தில் வரும் ஒரு சில அறிவிப்புகளில் லைஸ்பின் அபீசுலைம் என்பவர் இடம்பெற்றிருப்பதால் அவை பலஹீனமானதாகும். அல்பராஜில் வரும் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் யூசுப் இப்னு நாபிஊ என்பவர் இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர அனைவராலும் பலவீனமானவராக காட்டப்படுகிறார். எனவே இது பலவீனமானதாகும்.

அல்லாஹ்வின் அருளால் நாம் ஆய்ந்தறிந்தவரையில் இந்த நபிமொழி(12) பன்னிரண்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது. இருபத்தைந்துக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர்கள் வரிசைகளில் வருகிறது. இவ்வரிசைகளில் பற்பல சஹாக்களும், தாபீஈன்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நபிமொழி மூலமும், மேலேக் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தின் படியும் ஹஜ்ஜு செய்பவர்கள் தீங்கிழைக்காத உபயோகமான எந்த கால்நடை, உயிரினங்களையும் கொல்லக்கூடாது. அங்ஙனம் அவர்கள் கொல்வார்களானால் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம். அதனை கீழ்வரும் அல்லாஹ்வின் அறிவுறுத்துவதைக் காண்க.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடிப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை ஈடாகத் தர வேண்டும். அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் அதற்குச் சமமாக தீர்ப்பளிக்க (பொருளை ஈடாகக் கொடுக்க வேண்டும்.

இது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனது விளையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்!) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் மீண்டும் (இதைச் செய்வாரோ அல்லாஹ் அவரை வோனை செய்வான் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும் (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டளிப்போனுமாகவும் இருக்கிறான்.         (5:95)

*****************************************

குர்பானிக்கு தகுதியற்ற பிராணிகள்

    நபி(ஸல்) அவர்களிடம் எவற்றை குர்பானி செய்வது கூடாது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தமது கையால் நான்கை சமிக்கை செய்தார்கள்.

1. தெளிவான நொன்டி

2. தெளிவான ஒற்றைக்கண் குருடு.

3. தெளிவான வியாதி உள்ளது.

4. கடுமையாக மெலிந்தமையால் எழும்பில் மூளையற்று, மற்றப்பாகங்களில் கொழுப்பும் இல்லாதது.  (பர்ராஉபின் ஆஜிப்(ரழி), நஸயீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத்)

Previous post:

Next post: