குர்ஆனின் நற்போதனைகள்

in 1990 டிசம்பர்

குர்ஆனின் நற்போதனைகள் :

    அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

தொடர்: 21

  A. முஹம்மது அலி

பகுதி 7  நபி(ஸல்) அவர்களுக்கே எச்சரிக்கை!

1.     பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் ஊகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.   (6:116)

2.    நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நன்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணை வைப்போர்) ஆவீர்கள்.    (6:121)

3.    எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; எனினும் யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும் மிகக் கருணையுடையவனாகவும்  (14:36)

4.    தன்(மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதை விட்டும் உம்மை திருப்பி விட வேண்டாம். அவ்வாறாயீன் நீர் அழிந்துப் போவீர்.

5.    ஞானம் (குர்ஆன் மூலம்) உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உனக்கு உதவி செய்பவனும் இல்லை.  (2:120,  13:37)

6.   அல்லாஹ்வுடைய கிருபையும், அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்,   (4:83)

7.    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள். உங்கள் செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.  (47:33)

8.    (நபியே!) நீர் கூறுவீராக! உங்களுடைய மனோ இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன் (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன். மேலும் நான் நேர்வழிப் பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்’ என்று நபியே! நீர் கூறுவீராக)     (6:56)

9.    (நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றித் திருப்தி அடைய மாட்டீர்கள். ஆகவே அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ்வின் வழி இஸ்லாம் அதுவே நேர்வழி என்று சொல்லும்.  (2:120)

10.    அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தை கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பு செய்வீராக! அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்; அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்தலில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மை திருப்பி விடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவஙங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்துக் கொள்வீராக! மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றார்கள்.     (5:49)

11.    மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு(நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்; (ஏனெனில்) அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிக் கெடுத்துவிடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுகிறாரோ, அவர்களுக்கு கேள்விக் கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக் கொடிய வேதணையுண்டு.   (38:26)

12.    (நபியே நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டேயிருப்பீராக! மேலும் நீர் ஏவப்பட்டப்படி உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; மேலும்,

13.    (நபியே!) உம்மை ஷரீஅத்தில்  (சன்மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையேப் பின்பற்றுவீராக! அன்றியும், அறியாமல் இருக்கிறார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.    (45:18)

14.    (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும் உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய் மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.    (7:193)

15.    வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான ஆத்தாட்சிகளையும் எடுத்துக்காட்டிய போதிலும் அவர்கள் உம் கிப்லாவையும் பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களது கிப்லாவைப் பின்பற்றுபவரல்ல. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர். எனவே (இதைப் பற்றிய) ஞானம் உம்மை எய்தியபின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயீன்,  நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.  (28:45)

Previous post:

Next post: