ஹதீஸ் பெட்டகம்

in 1990 டிசம்பர்

ஹதீஸ் பெட்டகம்

தொடர் : 7

A. முஹம்மது அலி,

அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு எதிலும் சிரமம் தரவில்லை.

எவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு அழகான நற்கூலி இருக்கிறது. இன்னும் நமது கட்டளைகளில் (சிரமமற்ற) இலகுவானதை அவருக்கு நாம் கூறுவோம்.  (18:88)

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ அவருடைய காரியத்தை அவன் (அல்லாஹ்) எளிதாக்குகிறான்.  (65:4)

என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!   (20:26)

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை.   (2:185)

அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.  (2:286, 65:7)

நாம் எந்த ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு அப்பாற்ப்பட்ட (தாங்க முடியாத சுமையை) கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை.    (6:152, 7:42, 23:62)

எங்கள் இறைவா!

எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!    (2:286)

நபி(ஸல்) கூறினார்கள்:

என் சமூகத்திற்கு என்னால் சிரமம் இல்லையாயின் நான் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்கும்படி அவர்களுக்கு கட்டளையிட்டிருப்பேன்.

முஸ்னது அஹ்மது அறிவிப்பில்:

ஒவ்வொரு தொழுகைக்கும் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு ஒளுவிற்கும் என இடம் பெற்றுள்ளது. அறிவிப்பாளர் வரிசையின்றி இமாம் புகாரீ கூறும் கூற்றும் இவ்விதமே அமைந்துள்ளது.

பைஹகீ, ஹாகிம் அறிவிப்புகளில் :

ஒவ்வொரு ஒளுவிற்கும் பல்துலக்குவது கடமை(பர்லாக)யாக்கப்பட்டிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர், அபூ ஸயீத் , அல் குத்ரீ, இப்னு அப்பாஸ் (ரழி – அன்கும் அறிவித்துள்ளார்கள்.

இந்நபிமொழிகள் இடம்பெற்ற நூல்களையும் அறிவிப்பாளர்களையும் காண்போம்.

                        ஆதார நூல்கள்                                                    அறிவிப்பாளர்கள்

                   1.       புகாரீ                                                            அபூஹுரைரா(ரழி)

                   2.      முஸ்லிம்                                                        அபூஹுரைரா(ரழி)

                    3.    நஸயீ                                                             அபூஹுரைரா(ரழி)

                                                                                                                                                                   அப்துர் ரஹ்மான் பின் அவ் ஃப்(ரழி)

                   4.    அபூதாவூத்                                                        அபூஹுரைரா(ரழி),

                                                                                                                                                                   ஜைது பின் காலித்(ரழி)

                                                                                                                                                                    இப்னு ஹன் ழலா(ரழி)

                    5.    அபூ அவானா                                                     அபூஹுரைரா(ரழி)

                    6.    திர்மிதி                                                            அபூ ஸலமா(ரழி),

                                                                                                                                                                    ஜைது பின் காலித்(ரழி)

                    7.    தாரமி                                                              அபூஹுரைரா(ரழி)

                    8.    முஸ்னது ஷாபிஈ                                                                                                   அபூஹுரைரா(ரழி)

                    9.    இப்னு மாஜா                                                       அபூஸயீத் அல்மக்பரி(ரழி)

                    10.    இப்னு ஹுசைமா                                                  அப்துர் ரஹ்தமான் பின் அவ் ஃப்(ரழி)

                    11.    ஹாகிம்                                                             இப்னு அப்பாஸ்(ரழி)

                                                                                                                                                                           இப்னு ஹன்ழலா(ரழி)

                    12.    பைஹகீ                                                              அபூஹுரைரா(ரழி)

                                                                                                                                                                             அபூஸயீத் அல்மக்பரீ(ரழி)

                                                                                                                                                                              அப்துர் ரஹ்மான் பின் அல்மக்பரீ(ரழி)

                                                                                                                                                                              ஜைது பின் காலித்(ரழி)

                                                

                   13.    முஸ்னது அஹ்மது                                                   அபூஹுரைரா(ரழி)

                                                                                                                                                                              அபூ ஸலமா(ரழி),

                                                                                                                                                                              அபூஸயீத் அல்மக்பரீ(ரழி)

                                                                                                                                                                              அப்துர் ரஹ்தமான் பின் அவ்வஃப்(ரழி)

                                                                                                                                                                               அலிபின் அபீதாலீப்(ரழி)

                                                                                                                                                                               இப்னு அப்பாஸ்(ரழி)

                                                                                                                                                                               உம்மு ஹபீபா(ரழி)

                                                                                                                                                                                ஜைனப் பின் ஜஹ்ஷ்(ரழி)

                14.     ஹாவி                                                                   அபூஹுரைரா(ரழி)

                                                                                                                                                                                அபூ ஸலமா(ரழி),

                                                                                                                                                                                 அபூஸயீத் அல்மக்பரீ(ரழி)

                                                                                                                                                                                 அப்துர் ரஹ்தமான் பின் அவ்வஃப்(ரழி)

                                                                                                                                                                                 ஜைது பின் காலித்(ரழி)

                                                                                                                                                                                 அலிபின் அபீதாலீப்(ரழி)

                                                                                                                                                                                  இப்னு உமர்(ரழி)

அல்லாஹ்வின் அருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழிகள் (14) பதினான்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்ப்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசைகளில் பற்பல நபித்தோழர்கள், தாஈன்கள் இடம் பெற்றுள்ளனர். எந்த மெளலவி, ஆலிமாலும் மறுக்க முடியாத அளவு மக்களிடையே பிரபல்யமாக உள்ளது என்பது இங்கு நினைவு கூறத்தக்க விஷயமாகும்.

முஹம்மது  ரசூல்(ஸல்)  அவர்களது  சமுதாயம்  பலஹீனமானவர்களே!

ஆதி நபி ஆதம்(அலை) முதல் ஆகிர் (கடைசி) நபி முஹம்மது(ஸல்) வரையில் இவ்வுலகில் தோன்றிய சமுதாயங்களில் முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயம் தான் மிக மிக பலஹீனமானவர்கள், வலிமையற்றவர்கள் இதனை ரசூல்(ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணம் சென்ற போது மூஸா(அலை) அவர்களால் நினைவூட்டப்பட்டது.

அல்லாஹுவின் ஆணைப்படி ஒரு நாளைக்கு 50 நேரத் தொழுகையைக் கடமையாக ஏற்று நபி(ஸல்) திரும்புகிறார்கள். வழியில் மூஸா(அலை) அவர்களை சந்திக்கிறார்கள். தாம் 50 நேரக் தொழுகையை  கடமையாக ஏற்றுக் செல்வதாக கூறுகிறார்கள், இதனை செவியுற்ற மூஸா(அலை) அவர்கள்; உங்களது சமுதாயம் மிக மிக பலஹீனமானவர்கள், 50 நேரங்கள் அவர்களால் தொழ முடியாது எனவே திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் குறைத்துக் கொள்வீராக! என அறவுரைப் பகர்ந்தார்கள்.

அவரது அறிவுரைப்படி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் முறையிடவே சிறிது குறைக்கப்படுகிறது. அதனை ஏற்று வருகையில் மீண்டும் மூஸா(அலை) அவர்கள் அதுவும் நம்மால் தொழ முடியாது மீண்டும் சென்று குறைத்துக் கொள்வீராக என்றார்கள்.

இவ்விதம் பல தடவைகள் அல்லாஹ்விடம் முறையிடவே சிறிது சிறிதாகக் குறைத்து கடைசியாக 5 வேளை தொழுகையுடன் வருகிறார்கள். இதுவும் தொழ முடியாது, மீண்டும் சென்றுக் குறைத்துக் கொள்வீராக! என மூஸா(அலை) கூறுகிறார்கள். உடனே நபி(ஸல்) தனது சமுதாயத்தின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டு, இல்லை! இனி என்னால் அல்லாஹுவிடம் திரும்பி சென்று  கேட்கவியலாது. நான் வெட்கப்படுகிறேன் என கூறி ஐவேளைத் தொழுகையைக் கடமையக ஏற்று வந்தார்கள்.

இந்த மிஃராஜ் நிகழ்ச்சிகள் அனஸ்(ரழி) மூலமாக புகாரீ, முஸ்லிம், முஸ்னது அஹ்மதுப் போன்ற பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயம் எந்த அளவு பலஹீனமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக அறியலாம். அதனை முந்திய நபி மூஸா(அலை) அவர்கள் நினைவூட்டியிருப்பினும் கவனிக்கத்தக்கது.

முந்திய சமுதாயத்தினருக்கு நீண்ட ஆயுட்காலம் அல்லாஹுவால் கொடுக்கப்பட்டது. ஆதம்(அலை), நூஹ்(அலை) போன்றவர்கள் 1000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துள்ளனர். பனூ இஸ்ரவேலர்கள் பல நூறாண்டுகள் வாழ்ந்தார்கள். உடல் வலிமை மிக்கவர்களாக வாழ்ந்தார்கள். என்பதை நாம் காண முடிகிறது. எவ்வித நவீன இயந்திரங்களும் கண்டறியாக் காலத்தில் வாழ்ந்த பனூ இஸ்ரவேலர்கள் பிரமிடுகள் போன்ற கட்டிடங்கள் கட்டியிருப்பதிலிருந்து அவர்களது உடல் வலிமையை நம்மால் ஊகிக்க முடியும்.

பனூ இஸ்ரவேலர்கள் கூட்டத்தில் ஒரு மனிதர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹுவின் வழியில் புனிதப்போர் (ஜிஹாது) செய்வதற்காக ஆயத்தமாக இருந்தார். அவர் இரவில் விழித்திருந்து விரோதிகளுடன் போர் புரிந்தார். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் (அது எங்ஙனம் முடியுமென) வியப்புற்றனர்.

அப்போது அல்லாஹ் லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும்.  (அல்குர்ஆன்  97:3)

என்ற இறைவசனத்தை இறக்கி வைத்தான். நாம், பனூ இஸ்ரவேலர்கள் போல் மாதக் கணக்கில் பகலிலும், இரவிலும் வணங்கத் தேவையில்லை. ஒரே ஒரு இரவை (லைலத்துல் கத்ர்) பெற்றுவிட்டால் அவர்கள் பெற்ற 1000 மாத நன்மையைப் பெறலாமென வாக்களித்தான்.  அறிவிப்பு : முஜாஹித் (ரழி)  ஆதாரம் : இப்னுஜரீர், அபூ ஹாதம், இப்னு கதீர்.

இதனைக் கீழ்காணும் நபிமொழியும் உண்மைப்படுத்துவதைக் காணீர்:

நமக்கு முந்திய சமூகத்தினருக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தான். எனது உம்மத்துக்களின் ஆயட்காலத்தை சுருக்கி (குறைத்து) விட்டான். ஆனால் சிரமமற்ற இலகுவான வழியில் நீண்ட ஆயுட் கொண்ட முந்திய சமூகத்தினர், பல மாதங்கள் நற்செயல் (இறை வணக்கங்)கள் செய்து பெற்ற நன்மைகளை விட அதிகமாகப் பெற லைலத்துல் கத்ர் இரவை (இறை வணக்கங்களால்) சிறப்பிக்க வழி வகை செய்தான். அல்லாஹ் என நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அறிவிப்பு : இப்னு உர்வா (ரழி)  ஆதாரம் : மு அத்தா மாலிக், இப்னு ஜரீர், அபூ ஹாதம்.

‘லைலத்துல் கத்ர்’ எனது உம்மத்துக்களுக்கு மட்டும் அருளப்பட்ட ஒரு அருட்கொடை எனவும் நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பு : அனஸ்பின் மாலிக்(ரழி)  ஆதாரம் : முஸ்னது அஹ்மது, தைலமி.

இச்சிறப்பு நமக்கு கிடைக்க காரணம் என்ன? நமது ஆயுள் குறைவுத்தான். இதனையும் நபி(ஸல்) அவர்கள் நினைவூட்ட தவாவில்லை. எனது உம்மத்துக்களின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வயதாகும். ஒரு சிலர் இதிலிருந்து விதிவிலக்காக ஆகலாம்.  அறிவிப்பு : அபூஹுரைரா(ரழி)  ஆதாரம் : திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மது.

இந்த நபிமொழிகள் மூலம் தனது சமுதாயத்தை எந்த அளவு பலஹீனமானவர்கள் என நபி(ஸல்) அறிவித்துள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

தனது சமுதாயம்.

1.    ஆயுட் காலம் குறைந்தவர்கள்

2.    பல் துலக்கும் விஷயத்தில் கூட சிரமத்தை எடுத்துக் கொள்ளாதவர்கள்.

3.    தனது தோழர்கள் ஆர்வத்தால் ரமழான் மாத இரவுகளில் தொழும் உபரியான தொழுகை (தற்சமயம் தராவிஹ் என அழைக்கப்படுவது) தனது சமூகத்தின் மீது கடமையாகி விடுமோ என பயந்தார்கள். எனவே தான் மூன்று நாட்கள் ஜமாஅத்தாக தொழவைக்கப்பட்ட ரமழான் இரவுத் தொழுகைகள் இதேக் காரணத்தைக் கூறி நபி(ஸல்) அவர்களால் நிறுத்தப்பட்டது.

இந்த அளவு நமது நிலையறிந்து அல்லாஹுவாலும் அவனது தூதராலும் காட்டப்பட்ட இலகுவான இஸ்லாத்தை இன்றைய முஸ்லிம்கள் முழுமையாக பின்பற்றுகிறார் களா? என்றால் இல்லை! என்ற பதிலே மிஞ்சுகிறது.

ஐவேளை தொழ நாம் சங்கடப்படுகிறோம். 50 வேளைத் தொழுகையாயிருந்தால் நம் நிலை என்னவோ?

தினசரி ஐவேளைத் தொழாதவர்கள் கூட ரமழானின் இரவுநேரத் தொழுகையில் கலந்து சிறப்பித்ததாக நினைத்துத் தொழுகிறார்கள் எதற்கு எந் அளவு சிறப்பளிக்க வேண்டுமென்பதை மறந்து வாழும் நமது இஸ்லாமியத் தோழர்களுக்கு அல்லாஹ் நற்கிருபை செய்வானாக! இலகுவான இஸ்லாத்தை ஏற்று அவனும், அவனதுத் தூதரும் காட்டிய வழியில் வாழ அருள்பாலிப்பானாக! ஆமின்.

Previous post:

Next post: