ஐயமும்! தெளிவும்!!

in 2019 நவம்பர்,பொதுவானவை

ஐயம் : சர்வதேச நேரம் UTC2 மணியை தாண்டியதும் ஆங்கில கணக்கீட்டின்படி தேதிக்கோட்டில் (உலகில்) புதிய நாள் ஆரம்பமாகிவிடுகிறது. எனவே UTC2 மணிக்குப் பிறகு நடைபெறும் சங்கமத்தை இலண்டனின் நாளில் (நேரத்தில்) கணக்கிடவதா? இல்லை தேதிக்கோட்டின் நாளில் (நேரத்தில்) கணக்கிடுவதா?

உதாரணத்திற்கு கடந்த 28.9.2019 சர்வ தேச நேரம் Uவீ18:26 மணிக்கு சங்கமம் நடைபெற்றபோது ஆங்கில தேதிக்கோடு 29.9.2019 நேரம் UTC6:26 மணியாகும்.

ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆங்கில கணக்கீட்டின்படி 29.9.2019 முதல் புதிய மாதத்தை ஆரம்பித்தால் தேதிக்கோடு பகுதி 24 மணி நேரத்தை முழுமையாக அடைய முடியாத நிலையல்லவா ஏற்படும்?

ஃபஜ்ரிலிருந்து கிழமையை ஆரம்பிப்ப தற்காக கூறி காலண்டர் வெளியிடுபவர்கள் சிலரும் கஃபா கணக்கீட்டை கண்டு கொள்ளாமல் கிரீன்விச் கணக்கீட்டையல்லவா சரி காண்கிறார்கள்.

கஃபாவின் அந்திப் பொழுது முதல் அந்திப் பொழுது வரை (UT+14:00 மிலி 14.:00) உள்ள 24 மணி நேரத்தின் அடிப்படையில் கணக்கிடாமல் இலண்டனின் நடு இரவு முதல் நடு இரவு வரை (UT+00:00 மிலி 24.:00) உள்ள 24 மணி நேரத்தின் அடிப்படையில் கணக்கிடுவது எப்படி இஸ்லாமிய கட்ட மைப்பில் உருவாக்கப்பட்ட கணக்கீடாக இருக்க முடியும்? வானர் நதீர்.

தெளிவு : சர்வதேச நேரம் UTC12 மணி தாண் டியதும் ஆங்கில கணக்கீட்டின்படி தேதிக் கோட்டில் புதிய நாள் ஆரம்பித்துவிடுகிறது உண்மையே. அதன் பிறகு சங்கமம் நடந்தால் அது அந்த புதிய நாளுக்கு உரியது. அதுவே சரியானதாகும். புதிய கிழமை பிறந்த பிறகு பழைய கிழமைக்கு நடக்கும் சங்கமத்தை தரமுடியாது. ஆனால் ஆங்கில கணக்கீட்டின்படி லண்டன் நேரம் உலக நேரமாக ஆக்கப்பட்டிருப்பதால் லண்டன் அப்போது இருக்கும் பழைய தேதியிலேயே குறிப்பிடப்படுகிறது. இது உலகில் புதிய தேதி வந்ததை கண்டுகொள்ளாமல் லண்டன் தேதியை உலகிற்கு தேதியாக தினிக்கும் முயற்சி ஆகும்.

ஆங்கிலேயர் தனது தேதியும் நேரமும் உலக நேரமாக ஆக்கவேண்டும் என்று ஏற்படுத்தியது ஆகும். உண்மையில் தேதிக்கோட்டில் யார் நாளை முதலில் ஆரம்பம் செய்கிறார்களோ அவர்களின் நாளில் அவர்களின் நேரப்படி ஆரம்பிப்பதே சரியாகும்.

நீங்கள் சொல்வது உண்மைதான் 28.9.2019 சர்வதேச நேரம் 18:26Uவீக்கு சங்கமம் நடைபெற்றபோது தேதிக்கோட்டின் நேரம் அடுத்த நாள் 29.06.2019 அன்று 06:26 மணியாக தான் இருக்கும் அந்த நாளின் 6:26 நிமிடம் 24 மணி நேரத்தில் குறையும் முழு நாளை அடைய முடியாத நிலை ஏற்படும்.

நாளை பஜரில் ஆரம்பிப்பதாக கூறி காலண்டர் வெளியிட்டிருக்கும் ஹிஜிரி கமீட்டியும் ஆங்கிலேயரின் லண்டன் கணக்கீட்டைதான் அறிந்தோ அறியாமலோ பின்பற்றுகின்றனர். அது குறித்து கட்டுரைகள் எழுதியும் அதை கண்டுகொள்ளாமல் லண்டனை மையமாகக் கொண்டே ஹிஜிரி காலண்டரை கணக்கிட்டு கொண்டிருக்கின் றனர். காபா தான் உலகின் மையம் என்பதற்கு 1867ல் அலாஸ்காவின் இடமாற்றம் கிழமைகளின் மாற்றம் நடந்ததை கூறியும் அவர்கள் அதற்கு எந்த பதிலையும் இது வரை தரவில்லை. இஸ்லாமிய உலகம் நாளின் ஆரம்பம் மக்ரிப் என்றும் பஜர் என்றும் அடித்து கொண்டிருக்க, மக்ரிபையும் விட்டுவிட்டு பஜரையும் விட்டுவிட்டு நாளை லண்டனின் நள்ளிரவு முதல் ஆரம்பம் செய்கின்றனர். இந்த கணக்கு ஒருபோதும் இஸ்லாமிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட கணக்கீடாக ஆகாது. ஆங்கிலேயர் பூமியின் ஒருபுறம் உச்சியும் ஒருபுறம் நள்ளிரவும் இருக்கும்படியான அமைப்பில் கணக்கிட்டுள்ளனர். அதில் லண்டனின் நள்ளிரவையும் பிஜி தீவின் உச்சி பொழுதையும் வைத்து கணக்கிட்டு, காலண்டர் போட்டு உள்ளனர்.

24UTC என்பது லண்டனின் நள்ளிரவாகவும் பிஜி தீவின் உச்சியாகவும் அமையும். இத்தகைய உலக நேரம் UTCஐ கொண்டு இஸ்லாமிய காலண்டரை கணக்கிடுவதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. உண்மையில் மக்காவின் மஃரிப் பொழுதையும், அலாஸ்காவின் பஜரையும் வைத்து கணக்கிட்டு காலண்டர் போடுவதே இஸ்லாமிய அடிப்படையாகும். 14UTC என்பது மக்காவின் அஸர் 5 மணியாகவும் அலாஸ்காவில் பஜர் 5 மணியாகவும் இருக்கும். இதுவே இஸ்லாமிய காலண்டர் கணக்கிட ஏற்ற உலக நேரம் ஆகும். முஸ்லிம்கள் உண்மையான தேதிக்கோடையும் உண்மையான உலக நேரம் UTCஐயும் தெரிந்து கொள்ளும் வரை இதற்கு தீர்வு ஏற்படாது.

ஹிஜிரி கமீட்டியினரும் இத்தகைய ஆங்கில உலக நேரத்தை UTCஐப் பயன்படுத்தி கணக்கிடுவதால் தான் கணக்கில் பிழை ஏற்பட்டு, ஹஜ்ஜத்துல் விதா அரஃபா நாள் வியாழக்கிழமை என்று தவறாக வருகிறது. அது பற்றி எழுதிய கட்டுரைகளும் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. கமீட்டியினர் தங்களின் பிழைகளை திருத்தி கொள்வார்களா அல்லது நபி(ஸல்) அரஃபாவில் நின்றது வெள்ளிக்கிழமையே என்று ஹதீஃத், தப்ஸீர், வரலாறு என்று அனைத்திலும் இருக்க தங்கள் காலண்டர் காட்டும் வியாழன் கிழமையைதான் சரி என்று வாதிடுவார்களா? தெரியவில்லை. கமீட்டியினர் எதற்கும் பதில் தராமல் இருப் பதைப் பார்க்கும்போது மவுனம் சம்மதத் திற்கு அறிகுறியோ என்று எண்ண இடமளிக்கிறது.

ஹிஜ்ரி கமீட்டியினர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அரபாவின் கிழமை குறித்தும் ஆதாரங்களை மக்களுக்கு தரவேண்டும் இல்லை எனில் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கணக்கீட்டில் இருந்து விலகி விடுவார்கள். அல்லாஹ் நாடினால் இதற்கு சரியான தீர்வு ஏற்படும் இன்ஷா அல்லாஹ். மக்கள் சரியான காலண்டரின் பக்கம் செல்ல துவா செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

*****************************************************

Previous post:

Next post: