ஐயமும்! தெளிவும்!!

in 2019 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : அக்டோபர் 2019 இதழ் 32 பக்கத்தில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறவதாகக் கூறுகிறீர்கள். இரு நாடுகிளின் கிப்லாவின் திசைகள் எது? ஹாஸிக் முகம்மது, சென்னை

தெளிவு : கிப்லாவின் திசைகள் சர்வதேச தேதிக்கோட்டில் மாறுவதாக ஹிஜ்ரி கமீட்டி கூறி வந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பார்த்தபோது அது உண்மை இல்லை என்று தெரிய வந்தது. உண்மையில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள நேர்கோட்டில் மாறுகின்றது. அதுதான் சரியான இயற்கை யான தேதிக்கோடு ஆகும். அலாஸ்காவின் கிப்லா திசை வடமேற்காக உள்ளது. கனடாவின் கிப்லா திசை வடகிழக்கே உள்ளது. இரண்டும் வட துருவத்திற்கு அருகே அமைந்து உள்ளதால் கிப்லா திசையை வடக்கு நோக்கி வடமேற்காகவும், வட கிழக்காவும் அமைத்து உள்ளது குறிப்பிடத் தக்கது.

ஐயம் : உலகில் புதிய ஆங்கில நாள் ஆரம்பமாவது தேதிக்கோட்டின் ஆரம்ப புள்ளியிலிருந்தா? இல்லை கிரின்விச் என்ற மையப் புள்ளியிலிருந்தா?
ஏனெனில் சர்வதேச நேரத்தை UT12 TO 12 என்று கணக்கிடாமல் கணக்கிட்டுள்ளார்களே ஏன்?

UT12 என்று ஆகும்போது உலகில் புதிய நாள் ஆரம்பமாகிறது. UT24 ஆகும்போது உலகில் புதிய நாள் உதயமாவதில்லையே! தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
ஹாஸிக் முகம்மது, சென்னை

தெளிவு : உலகில் புதிய ஆங்கில நாள் ஆரம்பம் ஆவது தேதிக்கோட்டின் ஆரம்பம் புள்ளியில் இருந்துதான் ஆரம்பம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் உலக நாள் கணக்கிடப்படும் போது லண்டனின் நேரப்படி உலக நாளை ஆரம்பிப்பதால் கணக்கீடு தலைகீழாக கணக்கிடப்படுகிறது. லண்டனின் நேரம் உலக நேரமாக ஆக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயர் ஏற்படுத்தியதுதான் இந்த உலக நேர அமைப்பு. மக்காவை உலகின் மையப்பகுதியில் இருந்து லண்டனை மையப்படுத்துவதற்காக தான். 1867ல் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றினார்கள்.

உண்மையில் மக்காவே உலகின் மையமாக 1867க்கு முன் இருந்தது. அலாஸ்காவிலேயே ஜும்மா முதலில் ஆரம்பிக்கப்பட்டு வந்தது. அது 1867க்கு பின் பிஜி தீவில் இருந்து ஜும்மா ஆரம்பிக்கப்படுகிறது.

உண்மையில் சரியான தேதிக்கோட்டில் இருந்துதான் உலக நாள் ஆரம்பிக்கப்பட வேண்டும் அதுவே இயற்கையானது.

இப்போது உள்ள உலக அமைப்புப்படி சர்வதேச நேரப்படி 0UTC முதல் 24UTC என்று கணக்கிட்டு வருகிறது. தேதிக்கோட்டின் உச்சியில் சூரியனை நிறுத்து 0UTC என்று உலகிற்கு தரப்படுகிறது. இது லண்டனின் நள்ளிரவு 12 மணியாகும். இதனால் லண்டன் நேரம் உலக நேரமாக திணிக்கப்படுகிறது.

சர்வதேச நேரத்தை 12UTC முதல் 12UTC வரை என்று கணக்கிட்டால் மக்கள் தேதிக் கோட்டு நேரம் உலக நேரமாக மாற்றப்படும். அதனை விரும்பாமலே தான் லண்டன் நேரம் உலக நேரமாக வைப்பதற்கு 0UTC முதல் 24UTC வரை கணக்கிடப்படுகிறது. அதனை மறைக்கவே 24 மணி நேரம் 0-12AM மற்றும் 0-12PM என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு 0க்கள் உருவாக்கப்பட்டு சரியான தேதிக் கோட்டிற்கு தரப்பட வேண்டிய 0வானது லண்டனுக்கே தரப்பட்டுள்ளது. இதற்கு சான்று நாம் இன்று பயன்படுத்தி வரும் உலக நேரம் (UTC)ல் 12UTCக்கு தான் உலகில் புதிய கிழமை ஆரம்பம் ஆகிறது. 24UTCல் உலகில் புதிய கிழமை உதயமாவது இல்லை, இது ஒன்றே அவர்களின் முரண்பாட்டை விளங்கி கொள்ள போதுமானது ஆகும். அதாவது லண்டனின் உச்சி மீது சூரியன் வரும்போது உலகில் புதிய கிழமை பிறக்கின்றது. அது 12UTCயாக குறிக்கப்படுகிறது. உண்மையில் அதுவே 0UTCயாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

அப்படி அடையாளப்படுத்தினால் தேதிக் கோடு நேரம், உலக நேரம் ஆகிவிடும். அதனை தடுக்கவே இந்த அமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. இதனை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை உணராமல் சரியான காலண்டரை கணக்கிட முடியாது.

Previous post:

Next post: