ஐயம் : ஆங்கில தேதிக்கோட்டில் இருந்து தான் உலகில் கிப்லா மாற்றம் ஏற்படுகிறதா? வார்னர் நதீர், நாகர்கோவில்
தெளிவு : ஆங்கில தேதிக் கோட்டில் உலகின் கிப்லா திசை மாறுவதாக கூறுவது தவறான செய்தியாகும். இது ஹிஜிரி கமீட்டியினாரால் பரப்பப்படுகிறது. உண்மையில் கிப்லா மாறுவது மக்காவிற்கு நேர் எதிரான பகுதியிலாகும். (Antipode of Makkah) அலாஸ்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறுகிறது. அதுவே உலகிற்கு சரியான, இயற்கையான தேதிகோடு ஆகும். ஆங்கிலேயரால் அலாஸ்கா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு 1867ல் விற்கப்பட்டு அமெரிக்காவுடன் இணைத்து ஏற்படுத்தப்பட்டதே புதிய தேதிக்கோடு ஆகும். அது உலக மக்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குதான் புதிய கிழமை ஆரம்பிப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் உண்மையில் 1867க்குமுன் அலாஸ்காவில்தான் புதிய கிழமை ஆரம்பிக்கப்பட்டது.