பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படலாமா?

in ஹிஜ்ரி காலண்டர் விமர்சனமும், விளக்கங்களும்ஐயம் :
 பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ
கட்டுப்படலாமா?

தெளிவு : பிறை விசயத்தில் மட்டுமல்ல, மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில்
குர்ஆனுக்கு, ஹதீஸுக்கு முரணாக தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படக்
கூடாது என்று மார்க்கம் திட்டமாகக் கூறுகிறது.

4:59 இறைவாக்கு அல்லாஹ்வுக்கு அடி பணிய வேண்டும். தூதருக்கும், அமீருக்கும்
கட்டுப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குர்ஆனின்
பாலும், ஆதாரபூர்வமான ஹதீஸின்பாலும் திரும்பி விடுங்கள் என்று கூறுவது எதை
உணர்ததுகிறது? மார்க்க முரணான ஒன்றை அமீர் சொன்னாலும் கட்டுப்படக் கூடாது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்க வில்லையா?

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஒரு ஜமாஅத்திற்கு அமீராகச் சென்றவர் கோபமுற்று
நெருப்பு மூட்டச் செய்து அதில் அனைவரையும் குதிக்கச் சொன்ன சமயத்தில், நபிதோழர்கள்
அச்சப்பட்டு பின்வாங்கி வந்து, நபி(ஸல்) அவர்களிடம் சம்பவம் பற்றி முறையிட்டபோது
நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள். நீங்கள் அமீரின் கட்டளைக்கு அடிபணிந்து
நெருப்பில் குதித்திருந்தால், அதை விட்டு வெளியே வரவே முடியாது. மார்க்க முராணான
பாவமான செயல்களில் அமீருக்குக் கட்டுப்படுவது கூடாது என்று நேரடியாக எச்சரித்த
பிரபல்யமான ஹதீஸ் மார்க்கத்திற்கு உட்பட்டே அமீருக்குக் கட்டுப்படவேண்டும். மார்க்க
முரணான ஒன்றை அமீரே கட்டளையிட்டாலும் அதற்கு அடிபணியக் கூடாது என்பது திட்டமாகத் தெரிகிறதா? இல்லையா?

பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கமில்லை. மாதம் பிறப்பதை அறிந்து அதன்படி
நடப்பதுதான் மார்க்கம். அன்று கண்ணால் பார்த்து மாதம் பிறந்ததை முடிவு செய்ததை இன்று
கணினி கணக்கீட்டைப் பார்த்து மாதம் பிறந்ததை அறிந்து செயல்படுவது குர்ஆனுக்கோ
ஹதீஸுக்கோ முரண் அல்ல. மாதம் பிறந்ததை கணக்கீட்டின் மூலம் திட்டமாக அறிந்த பின்னரும் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் ரமழானின் ஆரம்ப ஒரு நோன்பையோ, இரு நோன்பையோ விடுவது கொடிய ஹராமாகும். எனவே இதில் அமீருக்குக் கட்டுப்படவேண்டும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

Previous post:

Next post: