وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ இறுதி காட்சி உர்ஜூனில் கதீம்

Post image for  وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏  இறுதி காட்சி உர்ஜூனில் கதீம்

in ஹிஜ்ரி காலண்டர் விமர்சனமும், விளக்கங்களும்

விமர்சனம்: முஸ்லிம்களின் நடைமுறையில் கண்ணால் காணும் பிறை 3 என்பதே உங்கள் குற்றச்சாட்டு, 3-ம் பிறையை முதல் பிறையாக கணிக்கின்றனர் என்கிறீர்கள். அப்படியானால், நபி(ஸல்) காலத்தில் முதல் பிறை என்று கணித்தது 3-ம் பிறையை தானா?
அபூ இத்ரீஸ், சிங்கப்பூர்.

விளக்கம் : மாதக் கடைசியில் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறையும் பிறை பார்த்துப் பிறை பிறந்துவிட்டது. மாதம் ஆரம்பித்து விட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்ற மூடநம்பிக்கையை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தவும் இல்லை; கற்றுத் தரவும் இல்லை. அந்த மூட நம்பிக்கை நபி(ஸல்) பிறப்பதற்கும் 570+383=953 வருடங்களுக்கு முன்னர் யூதர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் எப்படி குறைஷ்களிடம் மூட நம்பிக்கையான சிலைகள் வழிபாடு இருந்ததோ அதேபோல் யூதர்களிடம் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொள்ளும் மூட நம்பிக்கை இருக்கவே செய்தது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த மூட நம்பிக்கையைப் பின்பற்றவில்லை.

அதற்கு மாறாக அன்றாடம் பிறையின் வளர்ச்சி, தேய்வுகளை அவதானித்து வந்தார்கள். இப்படி அன்றாடம் பிறையின் தோற்றத்தை அவதானித்தக் காரணத்தால் நபிதோழர்களிடையே இந்த மாதம் 29-ல் முடியும் என்றும் இல்லை இல்லை 30-ல்தான் முடியும் என்றும் கருத்து வேறுபாடு உண்டானது. அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இப்படி கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபடாதீர்கள்.

 وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ

இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். அல்குர்ஆன் 36:39

36:39 இறைவாக்குக் கூறும் பிறையின் இறுதிக் காட்சியை (உர்ஜூனில் கதீம்) கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன்னர் பார்த்து, அடுத்த நாளை (சங்கமம்) கழியும் மாதத்துடன் சேர்த்து மாதத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கருத்தில் வழிகாட்டியுள்ளார்கள். அன்று நபி(ஸல்) காலத்தில் சூரிய சுழற்சியையும், சந்திர சுழற்சியையும் துல்லியமாகக் கணக்கிடும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. இதையே நபி(ஸல்) அவர்கள் “லாநக்த்துபு வலா நஹ்ஸுபு” என்று கூறி இருக்கிறார்கள்.

இன்று அந்தக் கணக்கீட்டு முறையும், பல வருடங்களின் மாதங்களின் துவக்கத்தைப் பதிவு செய்யும் நிலையும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. வருடா வருடம் இடம்பெறும் சூரிய, சந்திர கிரகணங்கள் நூறு வருடங்களுக்கும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை, அவை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்டநேரங்களில் தவறாது இடம் பெறுவதை சொந்த அனுபவத்தில் பார்த்து வருகிறோம். ஆக கணக்கீடு நூற்றுக்கு நூறு சரி என்பதை இது நிரூபிக்கிறது. 

ஆனால் நபி(ஸல்) அவர்கள் கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையைத்தான் முதல் பிறையாகக் கொண்டு செயல்படக் கூறி இருக்கிறார்கள் என்று வடிகட்டினப் பொய்யைத் தொடர்ந்து கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 

அதுவும் மேற்கில் மாலையில் பிறை பார்த்த ஹதீஃதைக் காட்ட வேண்டும். மஃறிபு ஜமாஅத்தைக் கோட்டை விட்டுவிட்டு மறையும் பிறையைப் பார்த்த ஹதீஃதைக் காட்ட வேண்டும். வெளியூரிலோ, உள்ளூரிலோ பிறை பார்த்தத் தகவலை உடனடியாக தமக்கு அறிவிக்கக் கட்டளையிட்ட ஹதீஃதைக் காட்டவேண்டும். இவற்றில் ஒரேயொரு ஹதீஃதைக் கூட இந்த மூட முல்லாக்களால் காட்ட முடியாது. 

உண்மை இதுதான். நபி(ஸல்) அவர்கள் கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கொள்ளக் கட்டளை இடவே இல்லை. இது இந்த மவ்லவிகள் கூறும் அண்டப்புளுகு, ஆகாசப் பொய். யூதர்களே 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கணித்தார்கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் தினசரி பிறையின் தோற்றத்தை அவதானித்து வந்தார்கள். 36:40 இறைவாக்குக் கூறும் மாத இறுதியில், இறுதியாகக் காட்சி தரும் உர்ஜூனில் கதீம் என்ற பிறையை சங்கமத்திற்கு முதல் நாள் கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன்னர் பார்த்து வந்தார்கள். சந்திர ஒளி முற்றிலும் மறைக்கப்படும் அடுத்த நாளை (கும்ம, குப்பிய) கழியும் மாதத்துடன் சேர்த்தார்கள். அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக (பிரதமை) கொண்டு மாதத்தை ஆரம்பித்தார்கள்.

இதுதான் நபிகாலத்து சரியான நடைமுறையாகும். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த மூட முல்லாக்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்து கொண்டு நடைமுறைப்படுத்திய யூத மத கலாச்சாரமே 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கொள்ளும் மூட நம்பிக்கையாகும். குர்ஆன், ஹதீஃதுக்கு நேர்முரணான வழிகேடாகும். (பார்க்க : புகாரீ : 3456,7319)

Previous post:

Next post: