அறிந்து கொள்வோம்!

in 2020 ஜுலை

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

  1. சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஜின்கள், மனிதர்கள், பறவைகள். 27:17
  2. யார் தேவை உள்ளவர்கள், யார் தேவை அற்றவர் என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வை தவிர மற்ற அனைவரும் தேவை உள்ளவர்கள். அல்லாஹ் தேவை அற்றவன். குர்ஆன் : 35:15
  3. ஸபா நாட்டு இளவரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தது யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    வேதம் பற்றி அறிவுள்ள ஒருவர். 27:40
  4. நபி(ஸல்) அவர்களுக்கு அய்லாவின் மன்னர் அன்பளிப்பாக கொடுத்து எது?
    வெள்ளை நிற கோவேறு கழுதை.  புகாரி: 1481, 1482, 3161
  5. கிராமவாசியின் ஒட்டகத்திடம் தோற்றுப் போன நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகத்தின் பெயர் என்ன?
    அள்பா. புகாரி : 2872
  6. ஸபா நாட்டினர் எதனை சுஜூது செய்து கொண்டிருந்தனர்?
    சூரியனுக்கு சுஜூது செய்தனர். 27:24
  7. பெண்கள் தமது அலங்காரங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
    தமது அழகு அலங்காரத்தை, அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர, வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. 24:31
  8. கடலின் நடுவே ஒரு தடுப்பு இருப்பதாக கூறிய வசனம் எது?
    அல்குர்ஆன் : 55:20
  9. மனிதர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது குறித்து மறுமை நாளில் எது வெளிப்படுத்தும்?
    பூமியிலிருந்தது வெளிப்படும் பிராணி.  27:82
  10. தர்மத்தை வரையறுத்தால் அல்லாஹ் என்ன செய்வான்?
    அவனும் வரையறுத்து விடுவான்.  புகாரி : 1433
  11. மறுமை நாளில் மலைகள் எது போன்று நகரும் என அல்லாஹ் கூறுகிறான்?
    மேகத்தைப் போல பறந்தோடும். 27:88\
  12. மறுமை நாளில் திடுக்கத்தில் இருந்து அச்சமற்றவர்கள் யார்?
    நன்மையை கொண்டு வருகின்றவர்.  குர்ஆன் : 27:89
  13. ஒரே வியாபாரத்தில் எத்தனை நிபந்தனைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை?
    இரண்டு நிபந்தனைகளை. திர்மிதி: 1155
  14. எந்த மாதிரியான வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?
    கல்லெறி வியாபாரம், மோசடி வியாபாரம். முஸ்லிம் : 3033
  15. அல்லாஹ்விடம் ஒரு நாள் என்பது எத்தனை ஆண்டு என அல்லாஹ் கூறுகிறான்?
    நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகள். குர்ஆன் : 22:47
  16. பராஉ இப்னு ஆஸிப்(ரழி) இப்னு உமர் (ரழி) இருவரையும் எதனால் பத்ரு போரில் கலந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை?
    இருவரும் சிறுவர்களாக இருந்ததால்.  புகாரி : 3955
  17. நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பயன்படுத்திய கழுதையின் பெயர் என்ன?
    பைளா. புகாரி : 2864
  18. மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவது எதை பற்றி?
    கல்வி மக்களிடம் மறைவது, அறியாமை நிலைத்து விடுவது, மது அருந்துவது, வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பது. புகாரி : 80

Previous post:

Next post: