குர்ஆனின் நற்போதனைகள் :

in 1990 பிப்ரவரி

குர்ஆனின் நற்போதனைகள் :

தொடர் : 13

வினா எழுப்பினர்! வீடை கண்டனர்!!

பகுதி – 1

தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, MA., M.Phil.,

1. (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர்கூறும் : அவை மக்களுக்குக் (காலக் கணக்குகளையும்), ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும். (2:189)

2. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்.
நீர் கூறும் : அக்கலாத்தில் போர் புரிவது பெருங்குற்றமாகும். (2:217)

3. (நபியே!) போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் (அன்ஃபால்) பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக! போரி கிடைத்த வெற்றிப் பொருட்கள் (அன்ஃபால்) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் சொந்தமானதாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.   (8:1)

4. (நபியே! தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டுமென அவர்கள் வினவுகிறார்கள்.
(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் எனக்கூறுவீராக!   (2:215)

5. (நபியே!) அவர்கள் எதை, (யாருக்குச்) செலவு செய்ய வேண்டும் என உம்மிடம் வினவுகிறார்கள்.
நீர் கூறுவீராக! (நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தை யருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழை மிஸ்கீன்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள்.   (2:215)

6. (நபியே! ) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப்பற்றி நீங்கள் தெளிவு பெற) அவர்கள் அநாதைகளைப் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள்.
நீர் கூறும்! அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்.   (2:220)

7. (நபியே!) அவர்கள் (உண்பதற்கு) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வை எவை? என்று உம்மிடம் வினவுகின்றனர்.
நீர்கூறும்! உங்களுக்கு ஹலாலானவை: சுத்தமான நல்ல பொருட்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையாகும். எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும் போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக்கூறி விடுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் ; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.   (5:4)

8. (நபியே!) மதுபானத்தைப் பற்றியும் சூதாட்டத்தையும் அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்.
நீர்கூறும் ! அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில்) சில பயன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்லுள்ள பாவம் அவ்விரண்டிலுள்ள பயனைவிடப் பெரியது.  (2:219)

9. (நபியே!) பெண்களின் மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்.
நீர் கூறும்! அது ஓர் (அசுத்தமான) உபாதையாகும். ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். கழிவிரக்கங்கொண்டு பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான். (2:222)

(இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் இதே தொடர் தொடரும்)

Previous post:

Next post: