மூல ஆதாரங்கள் அடிப்படையில்

in 1990 பிப்ரவரி

மூல ஆதாரங்கள் அடிப்படையில்

முஹப்புல் இஸ்லாம் துபை.

“ஈமான் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீளவேண்டி இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை யயல்லாம் அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான் ” (5:105)

பெருமதிப்பிற்குரிய முஸ்லிம் பெருங்குடி மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆலிம்கள் வாக்கே வேதவாக்கு! அவர்கள் எதைச் சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெருங்குடி மக்களே!

ஆலிம்கள் போடும் உத்தரவுகள் எத்தகையோ! அத்தனைக்கும் தாங்கள் கட்டுப்படுகின்றீர்களா?… இல்லையா? !… என்பது தனி வி­யம். ஆனால் ஒரு சில வி­யங்கள்! எந்த பார்வையும், பரிசீலனையும் இன்றி, அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள்… எப்படி? அதில் ஒன்று தான்;-

” அந்நஜாத்தைப் படிக்காதீர்கள்!”

அந்நஜாத்தை ஏறெடுத்துப் பாராமலும், அந்நஜாத்தில் என்னென்ன வி­யங்கள் இடம் பெறுகின்றன? என்பதையும் அறியாமலும் அந்நஜாத்தைக் கண் மூடித்தனமாய் விமர்சிக்கின்றார்கள். மனம் போன போக்கில் விமர்சிக்கின்றார்கள். நோக்கம்: அந்நஜாத்தை கொச்சைப்படுத்தி-கேவலமாய் விமர்சித்து-முஸ்லிம் பெருங்குடி மக்கள் அந்நஜாத்தைப் பார்க்க விடாமல் தடை செய்திட வேண்டும். அந்நஜாத்தைப் படிக்க விடாமல் தடுப்போரின் உள் நோக்கம் இதுவே !

ஆம்! அன்று ஃபிர்அவ்ன்-சக்தியப் பிரச்சாரம் மக்களைச் சென்றடையாமல் தடுக்கக் கையாண்ட யுக்தி! கல்வித் கூடங்களையயல்லாம் இடித்து தரைமட்டமாக்கினான். அதே போன்று சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அந்நஜாத்தைப் படிக்கக் கூடாதென்று இன்று ஆலிம்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரண்டிற்கும் அதிக வித்தியாசமில்லை.

இன்றைய வார, மாத இதழிகள், நாவல்கள் போதிப்பதென்ன?

நமது நாட்டின் எத்தனையோ வார, மாத இதழ்கள், மாத நாவல்கள் வெளிவருகின்றன. ஒழுக்கக் கேடுகளை நியாயப்படுத்துகின்றன. கொலை கொள்ளை, மது, மாது என்று பஞ்சமா பாதகங்களை – சமூக நியதிபோல் சித்தரித்துக் காட்டுகின்றன. திருமணமாகி, குழந்தைகள் ஈன்றெடுத்தவள் தனக்குள்ள குடும்பப் பொறுப்புகள் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல்- விரும்பியவனோடு ஓடிச் செல்லக் கற்றுக் கொடுக்கின்றன. அதுபோல் திருமணமான ஆண்கள் வேறு திருமணமான பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ தவறான முறையில் கடத்திக் கொண்டு செல்லுதல் அல்லது அவள் சம்மதத்துடன் இழுத்துக் கொண்டு ஓடுதல் காணக் கண் கூசும் சினிமா நடிகைகளின் ஆபாசப் புகைப்படங்கள்- சித்திரங்கள் இவைகளையே தாங்கி நிற்கின்றன.

கதைகளில் காமரஸம் சொட்டும் பச்சை பச்சையான வர்ணனைகள்! இன்னும் மனித சமுதாயத்தை இழிவிற்கு இட்டுச் செல்லும் அத்தனை வி­யங்களையும் தாங்கி, நிற்கும் வார, மாத இதழ்கள், மாத நாவல்கள்…. இவைகளை முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாய் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமா? ஆலிம்களில் பலரும் இவைகளை படித்துக் கொண்டிருப்பது கண்கூடு!

இஸ்லாம் பட்டியலிட்டுக் காட்டியுள்ள பெரும் பாவங்களையும், இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் ஒழுக்கக் கேடுகளையும் தாங்கி நிற்கும் மேற்படி இதழ்களைவாங்கிப் படிக்கக் கூடாது என்று தடை செய்யும் ஆலிம்கள் அரிதிலும் அரிது

தீமைகளை எதிர்க்கும் அந்நஜாத் :

அதே நேரத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுவது ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு சேவையாற்றிக் கொண்டிருக்கும் அந்நஜாத், பெரும்பாவங்கள், ஒழுக்கக் கேடுகள் முதல் மனித சமுதாயத்தை இழிந்த நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து தீமைகளையும் தகுந்த குர்ஆன், ஹதீது ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி வருகின்றது. அவைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்ட பாடுபட்டுக் கொண்டிருக்கும் “அந்நஜாத்தை” படிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் ஆலிம்கள் எத்தகையவர்கள்? என்பதனை முஸ்லீம்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம். ஆலிம்கள் பாணியைப் பின்பற்றி ஆலிமல்லாத பலரும் இத்திருப்பணியைத் தீவிரமாய் செய்து வருகின்றார்கள்.

சத்திய தீனுல் இஸ்லாத்தின் நேர்வழிப் பிரச்சாரம் செய்ய தாங்களும் முன்வருவதில்லை. முன்வரும் வெகு சிலரையும் பின்னுக்குத் தள்ளி நேர்வழி பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இத்தகையவர்களை இறைமறை எப்படி விமர்சிக்கிறது…? இதோ… “இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் (நேர்)வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள். அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள். இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.” (14:3)

7:45, 4 :167 போன்ற இறை வாக்குகள் மேற்கூறிய இறை வாக்கிற்கு விளக்கமாய் அமைகின்றன. என்னரும் முஸ்லிம்களே…. ! இப்போது சிந்தியுங்கள் பெரும்பாவங்களைச் செய்யத் தூண்டும் நச்சுக் கருத்துக்கள் பரவினாலும் பரவாயில்லை; ஒழுக்கக்கேடுகளுக்கு இட்டுச் செல்லும் ஈன கருத்துக்கள் பரப்பப்பட்டாலும் பரவாயில்லை; நேர்வழிக்கு அழைக்கும் “அந்நஜாத்”தை மட்டும் படிக்காதீர்கள்; ஆலிம்களின் இந்த கோசம் தான் நேர்வழி மக்களிடம் பரவாமல் தடுக்க ஆலிம்கள் போடும் முட்டுக்கட்டை “அந்நஜாத்தைப் படிக்காதீர்கள்” இதுவே ஆலிம்கள் போடும் கோசம். இது எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாதது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது அந்நஜாத்தைப் படித்தால் இப்பேருண்மையை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இதுவரை ஆலிம்கள் கூற்றை அப்படியே நம்பி அந்நஜாத்தைப் படிக்காதவர்களே…! அல்லது அறைகுறையாகப் படித்து தவறாக புரிந்து கொண்டவர்களே!

புரிந்து கொள்ளுங்கள்!

அந்நஜாத்தையும் படியுங்கள்…! தொடர்ந்து படியுங்கள்! நிதானமாய் பொறுமையுடன் படியுங்கள். எதுவும் விளங்க வில்லையயனில் தயக்கம் வேண்டாம், எமக்கு எழுதுங்கள் உடன் விளக்கம் தருகின்றோம். அந்நஜாத்தில் இடம் பெறுபவைகளை உடன் அப்படியே நீங்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக இதைக் கூறவில்லை. ஏற்பதும் விட்டு விடுவதும் உங்கள் சுய விருப்பம் நாங்கள் அதில் குறுக்கீடு செய்யவில்லை.

அந்நஜாத்தில் இடம் பெறும் அனைத்து மார்க்க வி­யங்களும்-அது பெரிய தாய் இருந்தாலும் சரி, சிறியதாயிருந்தாலும் சரி அத்தனையும் குர்ஆன், ஸஹீஹான ஹதீது அடிப்படையில் அமைந்திருப்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். அந்நஜாத்தில் இடம் பெறும் குர்ஆன், ஹதீது ஆதாரங்களை உரிய முறையில் பரிசீலனைச் செய்து, சிந்தித்து ஏற்பதும் விட்டு விடுவதும் உங்கள் சுய விருப்பம்! “படிக்க வேண்டாம்” என்று தடை செய்யுமளவுக்கு அந்நஜாத்தில் பாரதூரமான கருத்துக்கள் எதுவும் இடம் பெறுவதில்லை என்பதை அறுதிவிட்டு உறுதியாக கூறிக் கொள்கிறோம்.

இதை எங்கும், எவரிடமும் நிரூபக்கத் தயார். உண்மை நிலை இவ்வாறிருக்க, குத்பா மேடைகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் சொற்பொழிவு நிகழும் இடங்களிலும் முஸ்லிம்கள் நடத்தும் வார, மாத மிருமுறை மாத இதழ்களிலும் அந்நஜாத்தை படிக்காதீர்கள்! என்று அந்நஜாத் எதிரிப்பாளர்கள் கோ­ம்டுவதின் மர்மம் என்ன? அவர்களது உள்நோக்கம் தான் என்ன? அதுதான் சுய நலம், சுய லாபம். இதற்கு நீங்கள் பலியாகி விடக் கூடாதென்பதே எங்கள் அன்பு வேண்டுகோள்!

அடிப்படை ஆதாரங்கள் :

அந்நஜாத் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தையும் – அதைப்படிப்பவர்கள் உடன் ஏற்றுக்கொள்வார்கள்- ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்நஜாத் என்றும் எதிர்பார்த்ததில்லை. அந்நஜாத் வெளியிடும் கருத்துக்களை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறைக்கு பன்முறை சிந்தித்துப்பார்க்க வேண்டும். அப்போது தான் அந்நஜாத்தை படிக்க வேண்டாம் என்று ஆலிம்கள் ஏன் தடையுத்தரவு போடுகிறார்கள்? என்ற பேருண்மையை அனுபவ ரீதியில் உணர முடியும்.

இன்றளவும் மார்க்கம் போதிக்கும் மிகப் பெரும்பான்மையோர்-அவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம் களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எவ்வித குர்ஆன்- ஹதீது அடிப்படையிலான மூலாதாரங்களையும் தருவதில்லை. அதே நேரத்தில் மார்க்கம் குறித்து எந்த கருத்தாக இருந்தாலும், அதற்குரிய அசைக்க முடியாத-உறுதியாக குர்ஆன் ஹதீது ஆதாரங்களை அந்நஜாத் தந்து கொண்டிருக்கிறது.

அந்நஜாத்தை ஆலிம்கள் எதிர்ப்பதேன்?

இவ்வேறுபாட்டை சாதாரண சாமான்யரும் அந்நஜாத்தைப் படித்து எளிதாய் உணரத் தொடங்கி விட்டார்கள், சிந்திக்கின்றார்கள். அந்நஜாத் எடுத்துக் காட்டும் கருத்தை அப்படியே ஏற்காவிட்டாலும், மார்க்கமென்பது குர்ஆன், ஹதீது வரையறைக்குட்பட்டது என்பதைத் தெளிவாக உணரத் தொடங்கி விட்டார்கள். இதுதான் தற்போது ஆலிம் களுக்கு பெரிய தலைவலியாகிவிட்டது. பேரதிர்ச்சியாக இருக்கின்றது. இதுகாறும் சொன்னதை எல்லாம் அப்படியே எவ்வித பார்வையும், பரிசீலனையும் இன்றி, வாய்பொத்தி, கைகட்டி கேட்டவுடன் அப்படியே ஏற்றுக் கொண்டிருந் தவர்கள், தற்போது ஆதாரம் கேட்கத் துவங்கி விட்டார்கள். நியாயமான ஐயங்களை எழுப்புகின்றார்கள்.

இதனால் மார்க்கம் போதிப்போர் விழிகள் பிதுங்கி, பேந்தப் பேந்த விழிக்கின்றார்கள். மூலாதாரங்கள் அடிப்படையில் மார்க்கத்தை அணுக பயிலாததால், மூலாதாரங்களை அறிவதும், அதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவதும் ஆலிம்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது. மூலாதாரங்களை அலசி ஆராய நேரமின்மை, சோம்பல், அலுப்பு இவை போன்ற இன்னபிற காரணங்களும், அவர்களது இயலாமையும் மூலாதாரங்கள் அடிப்படையில் மார்க்கத்தை எடுத்துக்காட்டும் அந்நஜாத்தின் மீது கோபக்கனலை கக்கச் செய்கின்றன. இதுகாறும் தாங்கள் கண்டும், கேட்டும், படித்தும் வந்த மார்க்க வி­யங்கள் மூல ஆதார அடிப்படையில் அமைந்திருக்கவில்லை.

இனி எந்த வி­யமாயிருந்தாலும் ஆதாரத்துடனே அறிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மார்க்கத்தை அணுகத் துவங்கியிரு(துடி)க்கும் முஸ்லிம்களுக்கு, ஆதாரம் கேட்டால் ஆத்திரமடையும் ஆலிம்கள் போக்கு எரிச்சலூட்டுகிறது. ஏமாற்றத்தைத் தருகிறது. இந்நிலையில் ஆதாரங்கைளை அள்ளித்தரும் அந்நஜாத்தைப் படிக்கக்கூடாது என்று ஆலிம்கள் தடையுத்தரவு போடுகின்றார்கள். அதில் வியப்பேதுமில்லை. அவர்களும் ஆதாரங்களைத் தரமாட்டார்கள்; ஆதாரங்களோடு எடுத்துக்காட்டப் படுபவைகளையும் படிக்கக் கூடாதென்று தடையுத்தரவு போடுகின்றார்கள் என்றால், சத்தியம் சரியான ஆதாரங்களுடன் முஸ்லிம் பெருங்குடி மக்களை சென்று அடையக் கூடாது எனத் தடை செய்கின்றார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

முஸ்லிம்கள்! இப்போது சிந்தியுங்கள். மூல ஆதாரங்களின் அடிப்படையில்-முஸ்லிம் பொது மக்கள் மார்க்கத்தை நேரடியாக அணுக முட்டுக்கட்டை போடுவது ஆலிம்கள் தான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.\

தவ்ஹீத் ஆலிம்கள் நிலையே இதுவென்றால்….

தங்களுக்கு வேண்டாதவர்களை எதிரிகளாய் பாவிப்பதும், கீழ்த்தரமாய் வசைபாடுவதும், கேவலமாய் விமர்சிப்பதும், சீற்றத்துடன் பழி வாங்குவதும், ஆலிம்களுக்கு கைவந்த கலை! பாமர மக்களை தங்களுக்கு வேண்டதவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுதல்! அவதூறுகளைப்பரப்புதல் அபாண்டங்களைச் சுமத்துதல், இவைகளிலிருந்து (தங்களைத்) தவ்ஹீத் ஆலிம்களே (என்று மார்தட்டிக் கொள்வோரே) விடுபடவில்லை என்கிறபோது மற்றவர்களைப் பற்றி கூறுவும் வேண்டுமா….?

தாங்கள் கொண்டுள்ள தவறான கொள்கைகளுக்கு மாற்றமாய்-ஆலிம்கள் அல்லாதோர் சரியான ஆதாரங்களை எடுத்துக்காட்டும் போது, ஆலிம்கள் அடையும் ஆவேசத்தை எழுத்தில் வடிக்க இயலாது. ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விடுவார்கள். நீ என்ன ஆலிமா? அரபி தெரியுமா? எத்தனை கிதாபுகள் ஓதியிருக் கின்றாய்….? என்று ஆத்திர மேலீட்டால் அறியாமை வினாக்கள் எழுப்பி, தங்கள் ஆதங்கத்தை வெளிப் படுத்துவார்கள். இதுவும் தவ்ஹீத் ஆலிம்கள் நிலையயனில் மற்றவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

தாங்கள் கொண்டுள்ள தவறான கொள்கைகளை கருத்துக்களை நிலைநாட்ட-இறைவாக்குகளுக்கே தவ்ஹீத் ஆலிம்கள் தவறான பொருள் செய்யத் துவங்கிவிட்டார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றி கூறவும் வேண்டுமா….?

தங்களது தவறான கொள்கைகளை வாபஸ் வாங்க சுய கெளரவம் இடம் கொடாததால் – தவ்ஹீத் ஆலிம்கள் பொருத்தமில்லாத ஆதாரங்களையும் பொருத்திக் காட்டுகின்றார்கள். என்றால்-மற்றவர்கள் நிலையைக் கூறவும் வேண்டுமா…?

அடிப்படை மூலாதாரங்களின்றி மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்களே கூறியிருப்பினும் அவைகளை ஏற்கக் கூடாதென்று கூறிக்கொண்டிருக்கும் தவ்ஹீத் ஆலிம்கள் தங்கள் தவறான கொள்கைகளை நிலைநாட்ட, தாங்கள் விரும்பியேற்றுள்ள இமாம்களின் (முஃபஸ்ஸிர்களின்) வலுவிழந்த ஆதாரமற்ற வியாக்கியானங்களை ஆதாரமாக்குகின்றார்கள்.

தவ்ஹீத் ஆலிம்கள் தங்களை மற்ற ஆலிம்களிடமிருந்து பிரிந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார்கள். தவ்ஹீத் ஆலிம்களும் “”அந்நஜாத் படிக்கக் கூடாது” என்று தற்போது தடையுத்தரவு பிறப்பித்து வருகிறார்கள் என்றால் மற்றவர்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா…? ஆக, ஆலிம்கள் அனைவரும் “”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ” தான் என்பதையும் தவ்ஹீத் ஆலிம்கள் மெய்ப்பித்து வருவதும் வேதனைக்குரியது.

Previous post:

Next post: