அறிந்து கொள்வோம்!

in 2020 ஆகஸ்ட்

அறிந்து கொள்வோம்!

 

மர்யம்பீ, குண்டூர்,

  1. தான் எந்த தினத்தில் பிறந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    திங்கட்கிழமை.  அபூகத்தாதா அல்அன்சாரி (ரழி), முஸ்லிம் : 2153
  2. யாரை மறுமை நாளில் குருடனாக எழுப்புவேன் என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வுடைய உபதேசத்தை புறக்கணிப்பவன். அல்குர்ஆன் : 20:124
  3. எந்த நோயானாலும் நிவாரணம் இருக்கும் பொருள் எது? என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    கருஞ்சீரகம், மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. அபூஹுஹைரா (ரழி), முஸ்லிம்: 4452
  4. உறங்கச் செல்லும் முன் எதனை அணைக்காமல் விட்டுவிடவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    வீட்டிலுள்ள நெருப்பை. அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) முஸ்லிம் : 4103.
  5. ஒவ்வொரு ஆண்டின் ஓர் இரவில் என்ன நடக்கிறது என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
    கொள்ளைநோய் இறங்குவதாக. ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி), முஸ்லிம்: 4102
  6. நபி(ஸல்) அவர்கள் பிராத்திக்கும் போது கைகளை உயர்த்தும் பிரார்த்தனை எது?
    மழை வேண்டி பிரார்த்திக்கும் போது மட்டுமே கைகளை உயர்த்துவார்கள்.  அனஸ் (ரழி) அபூதாவூத். 989
  7. பெண் குழந்தைகளால் இம்மையில் யார் சோதிக்கப்படுகிறார்களோ மறுமையில் அவரது நிலமை என்னவாக இருக்கும்?
    அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரை காக்கும் திரையாக இருப்பார்கள். ஆயிஷா (ரழி), புகாரி: 1418
  8. ஈமான் கொண்ட பெண்யாருடைய மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் பிடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    கணவரைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும். (உம்முஹபீபா(ரழி),புகாரி: 1281)
  9. இஸ்லாமிய மார்க்கத்தில் எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
    எவ்வித நிர்பந்தமும் இல்லை. குர்ஆன் : 2:256
  10. எது ஹலால் இல்லை என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள்?
    கொள்ளையடிக்கப்பட்ட பொருளும், கீறி கிழிக்கும் (கோரைப்) பற்களையுடைய வன விலங்குகளும். நஸயீ : 4252
  11. ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நபியாக அனுப்பப்பட்ட நபி யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    நான் மட்டுமே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ : 429
  12. பேரீத்தம் பழ சிறுதுண்டை ஸதகா(தர்மம்) செய்து எதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    நரகிலிருந்து. புகாரி: 1417
  13. குர்பானிப் பிராணிகளில் எவை அறுப்பதற்கு தகுதியற்றவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    வெளிப்படையாக தெரியக்கூடிய ஒற்றைக் கண் குருடு, நொண்டி, நோய் உள்ளவை எலும்பு வலுவிழந்தவை.  பராஉபின்ஆஸிப் (ரழி), நஸாயீ : 4295\
  14. குர்பானிப் பிராணியிடம் எந்த இடத்தில் சிறப்பு கவனம் செலுத்த நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள்?
    கண், காது. அலி(ரழி), நஸயீ: 4296
  15. செயல்களில் எது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    அல்லாஹ்வையும் அனது தூதரையும் நம்புவது. அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 1519
  16. நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்ததில் மிகப் பெரிய பொய் என எதனை கூறினார்கள்?
    சந்தேகப்படுவதை.  அபூஹுரைரா (ரழி), புகாரி : 6064
  17. எதனை பின் தொடரவேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
    எதனைப் பற்றி உமக்கு அறிவு இல்லையோ அதனை பின்தொடரவேண்டாம்.  அல்குர்ஆன் : 17:36
  18. குளிப்பு கடமையான ஒருவர் எந்த தண்ணீரில் குளிக்கக்கூடாது என கூறினார்கள்?
    தேங்கி நிற்கும் தண்ணீரில். நஸயீ : 220
  19. பரிந்துரை செய்யக்கூடிய வாய்ப்பு எந்தத் தூதருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்?
    எனக்கு மட்டும்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ : 429

 

 

Previous post:

Next post: