சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்…

in 2020 ஆகஸ்ட்

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்…

எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர்,   இலங்கை.

ஜூலை  மாத   தொடர்ச்சி….

சுவர்க்கத்தில் பசி எனும் அந்தரங்க அவலம் இல்லை. இன்ப ருசியை அனுபவிப்பதற்காகவே உண்ணலும், பருகலும்:

நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் (சூரியனால் ஏற்படும்) வெயிலில் (கஷ்டப்) படவும் மாட்டீர். இன்னும் இதில் நீர் தாகிக்கவும் மாட்டீர். பசியாகவும் இருக்க மாட்டீர்(என்று கூறினோம். 20:118.119, 76:13) அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்தவர்களாக) இருப்பார்கள். (சூடாக இருக்கும்) சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13)\

சுவர்க்கவாசிகளின் முதலாவது விருந்து உணவு :

“மறுமை நாளில் இந்தப் பூமி, (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப் போடுவதைப் போன்று, சர்வவல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப் போடுவான். அதையே “சுவர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று சொன்னார்கள்.

அப்போது யூதர்களில் ஒருவர் (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம்) வந்து, அபுல்காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு அருள் வளம் வழங்கட்டும். மறுமை நாளில் சுவர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “சரி” என்றார்கள். அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே “மறுமை நாளில் இந்தப் பூமி ஒரே ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) இருக்கும்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்.

பிறகு “(அபுல்காசிமே!) உங்களுக்குச் சுவர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?” என்று அந்த யூதர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “சரி” என்றார்கள். அவர், “அவர்களின் குழம்பு “பாலாம் மற்றும் நூன்” என்றார். மக்கள் “இது என்ன?” என்று கேட்டார்கள். அந்த யூதர், (அவை) காளை மாடும் மீனும் ஆகும். அவ்விரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), புகாரி: 6520, முஸ்லிம் : 5382) மேலும்,

சுவர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு மீனுடைய ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஸயீத் அல்குத்ரி(ரழி), புகாரி: பாகம்: 7, பக்கம், 96, பாடம், 51, பின்னர்,

சுவர்க்கத்தில்  காலையிலும்,  மாலையிலும்  அவர்களுக்குரிய   உணவுகள் வழங்கப்படும்.

“அங்கு அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் உணவு வழங்கப்படும்” (19:62) அறப்போர் இறைத் தியாகிகள் சுவர்க்கவாசலில் உள்ள “பாரிக்” எனும் ஒளிரும் நதியில் உள்ள பச்சை நிறக் கூடாரத்தினுள் அமர்ந்திருப்பார்கள் அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் சுவர்க்கத்திலிருந்து உணவு கொண்டுவரப்படும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:627)\

“அங்கு அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் உணவு வழங்கப்படும்”(19:62) என்ற தொடருக்கு “இரவு மற்றும் பகலின் கால அளவில் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்: 5:627) காரணம், சுவர்க்கத்தில் இரவோ, பகலோ கிடையாது காலை மாலை போன்ற நேரப் பிரிவுகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். எனினும் அவர்கள் ஒளியின் வேறுபாட்டை வைத்து நேர மாற்றங்களை அறிந்து கொள்வார்கள். மேலும்,

சுவர்க்கத்தில்  வழங்கப்படும்  பறவையுணவு :

அவர்கள் விரும்பும் பறவையின் மாமிசத்தையும் (கொண்டு அவ் இளைஞர்கள் சுற்றி வருவார்கள். 56:21) இன்னும் அவர்கள் விரும்பும் (பறவைகளின்) இறைச்சிகள் அனைத்தையும் நாம் அவர்களுக்குச் தாராளமாகக் கொடுப்போம். (52:22) அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய பல வகையான இறைச்சிகள் அனைத்தையும், நாம் அவர் களுக்குத் தாராளமாக அனுபவிக்கக் கொடுப்போம். (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:719)

சுவர்க்கத்துடைய பறவைகள் “புக்த்” என்ற உயர்ரக ஒட்டகத்தைப் போன்று (அழகியதாக பெரியதாக) இருக்கும். அவை சுவர்க்கத்திலுள்ள மரங்களில் மேய்ந்து கொண்டு இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அபூபக்கர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பறவை மிகச் சிறப்பு மிக்கதாக இருக்குமே என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அதைச் சாப்பிடுபவர் அதை விடவும் சிறப்பு மிக்கவராக இருப்பார் என்று மூன்று முறை கூறினார்கள் பிறகு… (அனஸ்(ரழி) அஹ்மத்)

நீ சுவர்க்கத்துடைய பறவையைக் கண்டால் அதை விரும்புவாய் அப்போது அது உனக்கு முன்னால் இறங்கி நடந்தவரும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறி னார்கள். (இப்னு மஸ்வூத்(ரழி), தஃப்சீர் இப்னு அபூஹாத்திம்)

சுவர்க்கத்திலுள்ள நதியில் ஒரு பறவை இனம் உள்ளது. அதன் கழுத்துக்கள் ஒட்டகத்தின் கழுத்துக்கள் போன்றதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு உமர்(ரழி) அவர்கள் அப்பறவை இனம் கொழு கொழுவென்று இருக்குமா? என்று கேட்டார்கள். அதை உண்பவர்கள் அதை விடக் கொழு கொழுவென்று மாறிவிடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (அனஸ் பின் மாலிக்(ரழி), திர்மிதி: 2665)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் நிச்சயமாக நீர் சுவர்க்கத்தில் ஒரு பறவையை(க் கண்டு ஆசையுடன் அதனைப்) பார்த்தால் அது பொரிக்கப்பட்ட நிலையில் உமக்கு முன்னே வந்துவிடும் என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) முஸ்னத் அல் பஸ்ஸார், ஃபவாயித்தமாம், மேலும் நபியவர்களின் வரையில் செல்லும் அறிவிப்புத் தொடருடன் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் அறிவிப்பாக இதனை இப்னு அபூஹாத்திம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 4:910, 8:655)

சுவர்க்கச் சோலை நிழல் மரங்களில் பல வகைக் கனிகள் :

மேலும் சுவர்க்கத்தில் மர நிழல்கள் அவர்கள் மீது மிக நெருங்கியதாக இருக்கும் அன்றியும் அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும் (76:14) உங்களுக்கு சுவர்க்கத்தில் ஏராளமான கனி வகைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள் (எனக் கூறப்படும் 43:73) சுவர்க்கச் சோலைகளின் பழங்கள் கொய்வதற்கு நெருக்கியி ருக்கும் (55:54) அதன் கனி வகைகள் கைக்கு எட்டியதாக சமீபத்திலிருக்கும். (69:23) அங்கே அவர்களுக்குப் பல வகைக் கனி வகைகளும் உண்டு. (36:57) இன்னும் அதில் அவர்களுக்கு எல்லாவிதமான கனி வகைகளும் தங்களது இறைவனின் மன்னிப்பும் உண்டு. (47:15) எக்காலமும் நின்று போகாத, தடுக்கப்படாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் அவர்கள் இருப்பார்கள். (56:32,33,34) மேலும்,

முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும் குலைகுலைகளாகத் (தொங்கும்) பழங்களையுடைய வாழை மரத்தின் கீழும் ஏராளமான கனி வகைகள் மத்தியிலும் (இருப்பார்கள், 56:28,29) அவர்கள் விரும்புகின்ற கனிகளிலும் இருப்பார்கள். (77:42) அவர்கள் (விரும்பி) தேர்ந்தெடுக்கும் கனி வகைகளும் உண்டு, 56:29, 21, 52:22) தோட்டங்களும் திராட்சைப் பழங்களும் (அங்கு) உண்டு. (78:31,32) ஒவ்வொரு கனி வர்க்கத் திலும் இரண்டு வகை உண்டு. (55:52) பேரீச்சையும், மாதுளையும் (மற்றும் பல) கனி வகைகளும் உண்டு (55:68) அச்சமற்றவர்களாக சகலவிதமான கனி வகைகளையும் அங்கு கேட்டு(ப் பெற்று)க் கொண்டுயிருப்பார்கள். (44:55) பார்வைக்கு ஒரே விதமாகத் தோற்றமளிக்கக் கூடிய கனிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவை ருசியில் விதவிதமானவையாக இருக்கும். (2:25)

ஒரு சுவர்க்கவாசி சுவர்க்கத்திலுள்ள ஒரு பழத்தை புசித்தால் அந்த இடத்தில் இன்னொன்று (உடனே) வந்துவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸவ்பான் (ரழி) தப்ராணி)

இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்கள் அனைத்தையும் நாம் அவர்களுக் குத் தாராளமாகக் கொடுப்போம். (52:22) அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய பல வகையான பழங்கள் அனைத்தையும் நாம் அவர்களுக்குத் தாராளமாக அனுபவிக்கக் கொடுப்போம். (தஃப்சீர் இப்னு கஸீர்:8:719)

நான் தொழுது கொண்டிருக்கையில் சுவர்க்கத்தைக் கண்டேன் அல்லது சுவர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது அதிலிருந்து பழக் குலையயான்றை எடுக்க முயன்றேன் அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்த பழத்திலிருந்து புசித்திருப்பீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி:748,1052, 5197, முஸ்லிம் : 1650)

சுவர்க்கமும் அதிலுள்ள பொலிவும் வனப்பும் எனக்குக் காட்டப்பட்டன உங்களுக்குக் கொடுப்பதற்காகத் திராட்சைப் பழக்குலை ஒன்றைப் பறிக்க முயன்றேன். அதற்குள் எனக்கும் அதற்கும் இடையே திரை விழுந்துவிட்டது அதை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள அனைவரும் அதை உண்டாலும் அவர்கள் அதைச் சிறிதளவும் குறைத்துவிட முடியாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர் (ரழி) முஸ்னத் அஹ்மத், தஃப் சீர் இப்னு கஸீர்: 4:908,909)

எந்த இறை நம்பிக்கையாளர் பசித்த இறை நம்பிக்கையாளருக்கு உணவளிப் பாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பழத்தின் மூலம் உணவளிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூ ஸயீத் (ரழி), அஹ்மத்)

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு (சுவர்க்கச்) சோலைகள் உண்டு, அதன் கனிகளில் ஒன்று அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல் லாம் இது முன்னர் எமக்கு வழங்கப்பெற்று தானே! என்பர். ஆனால்(உருவத்தில்) ஒத்த (தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. (2:25) என்னும் தொடருக்கு,

சுவர்க்கவாசிகளுக்குச் சுவர்க்கத்தில் பழம் ஒன்று வழங்கப்படும் அதைக்காணும் அவர்கள் “இது முன்னர் உலகத்திலேயே எங்களுக்கு வழங்கப்பட்டதுதானே!” என்று கூறுவார்கள் என்பதாக இக்ரிமா(ரஹ்) அவர்களும், வேறு சிலர் கூறுகிறார்கள். சுவர்க்கத்தின் கனிகள் ஒன்றுக்கொன்று தோற்றத்தில் மிகவும் ஒத்திருப்பதால்தான் இவ்வாறு கூறுவார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் (உருவத்தில்) ஒத்த கனியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று 2:25, ஆவது அடுத்து வசனத் தொடரில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதில்,

“ஒரே மாதிரியான கனி அவர்களுக்கு வழங்கப்படுகிறது” எனும் தொடருக்கு, “நிறத்திலும் தோற்றத்திலும் ஒரே மாதிரியாகவும் சுவையில் வித்தியாசமானதாகவும் உள்ள கனி வழங்கப்படும்” என்று இப்னு ஜரீர்(ரஹ்) அவர்களும், உலகத்தின் கனிகளுக்குச் சுவர்க்கத்தின் கனிகள் ஒத்திருக்கும் ஆனால் அது மிகவும் சுவையாக இருக்கும் என்ற இக்ரிமா(ரஹ்) அவர்களும் அறிவிக்கின்றார்கள். அதேவேளை “சுவர்க்கத்தி லுள்ள எந்தப் பொருளும் இவ்வுலகத்திலுள்ள பொருளுக்குப் பெயரளவில் மட்டுமே ஒத்திருக்கும் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “சுவர்க்கத்திலுள்ள ஒன்று இவ்வுலகிலும் இருக்கிறதென்றால் அது வெறும் பெயரளவில் மட்டுமே” (தஃப்சீர் இப்னு கஸீர்:1:130,131)

சுவர்க்கத்தில்  சாப்பிடுவார்கள்  ஆனால்  மலம்  கழிப்பதில்லை:

சுவர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போன்று (பிரகாசமாக) இருக்கும். சுவர்க்கத்தில் அவர்கள் மலம் கழிக்கவும் மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), ஜாபிர் (ரழி), புகாரி: 3245, 3327, முஸ்லிம்: 5450,5451,5453)

“சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் சாப்பிடுவார்கள், ஆனால் மலம் கழிக்கமாட்டார்கள். எனினும் அவர்களின் உணவு அது ஒரு ஏப்பமாக வெளியேறிவிடும். அதன் வாடை கஸ்தூரியின் வாடையைப் போல் இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்:2835, 5453,4550, ரி,ஸா:1880) “சுவர்க்கவாசிகள் மலம் கழிக்கமாட்டார்கள் என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3245, திர்மிதி: 2660)

 

Previous post:

Next post: