இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு

in 1990 அக்டோபர்

இன்றைய அரபி மதரஸாக்கள்

– ஓர் ஆய்வு

அபூ ஃபாத்திமா.

அரபி மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவநாடி. இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான் (ஃபத்வா) இறுதி முடிவு. அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரு மாயத் தோற்றத்தை இந்த மவ்லவிகள் உண்டாக்கி வைத்துள்ளனர்.

மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம்:

ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்தியாவில் காணப்படும் பெரும்பாலான மதரஸாக்கள் கடந்த 50 வருடத்திற்குள் உருவாக்கப்பட்டவையே. இந்தியாவில் ஆரம்ப மதரஸா என்று சொல்லப்படும் தேவ்பந்த் மதரஸாவே 1866ல் உருவானதுதான். அதற்குப் போட்டியாக ஷிர்க்கையும், பித்அத்துகளையும் கொள்கையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது பரேலியிலுள்ள மதரஸாவாகும். தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத் துஸ்ஸாலிஹாத் ஆரம்பிக்கப்பட்டது. 1885ல் ஆகும். இப்படி விரல் விட்டு எண்ணப்படும் சில மதரஸாக்களைத் தவிர எஞ்சிய அனைத்து மதரஸாக்களும் உருவானது கடந்த 50 ஆண்டுகளுக்குள்தான் என்று உறுதிபட சொல்ல முடியும்.

ஆரம்பிக்கப்பட்ட நோக்கம்:

அடுத்து இந்த மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை ஆராயும்போது ஒருசில மதரஸாக்கள் ஒரு சிலரால் நல்லெண்ணத்துடனும் சமுதாய நலன் கருதியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குர்ஆன், ஹதீஸை நிலைநாட்டும் தூய நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டவையல்ல. எப்படி மாற்று மதங்களிலுள்ள சமுதாய நலன் கருதுவோர் நல்லெண்ணத்துடனும், குருட்டு பக்தியுடனும் தங்கள் வழிகாட்டிகள், ஆசிரியர்கள் போதித்துத் தந்த இறைவனுக்கு இணை வைக்கும் அவதார நம்பிக்கை, திரியேகத்துவ நம்பிக்கை இவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனரோ, அதே போல இவர்களும் இவர்களது வழிகாட்டிகள், உஸ்தாதுகள் (ஆசிரியர்கள்) போதித்துத் தந்த மனிதன் இறைவனுடன் இரண்டரக் கலக்க(அத்வைதம்) முடியும் என்ற ஷிர்க்கான கொள்கையையுடைய சூஃபியிஸத்தை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு சமுதாய நலனில் அக்கறை இருந்தாலும், மக்களை நேரான வழியில் இட்டுச்செல்லும் ஆர்வமும் நல்லெண்ணமும் இருந்தாலும், இவர்கள் தங்கள் முன்னோர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் முதலானோர்கள் மீது கொண்டுள்ள அபாரமான குருட்டு நம்பிக்கை இவர்களை குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான கொள்கைகளை ஏற்றுச் செயல்படச் செய்கிறது. இந்த வகையில் மாற்று மதங்களின் அறிஞர்களுக்கும், இவர்களுக்கும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. மாற்று மத அறிஞர்களில் சிலர் அவதாரக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும், சில திரியேகத்துவக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் இவர்களை அப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆயினும் இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், ஷெய்குகள், உஸ்தாதுகள் முதலானோர்களின் சில கூற்றுகள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக இருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் அந்த நாதாக்கள் எல்லாம் தவறு செய்திருக்க முடியுமா? என்ற குருட்டு நம்பிக்கையில் அவர்களின் அந்த தவறான செயல்களையும் மார்க்கமாக இவர்கள் நம்பிச் செயல்படுவதோடு மக்களுக்கும் முறையே அவற்றை மார்க்கமாக இந்த மதரஸாக்களில் போதிக்கின்றனர்.

தவறு செய்யாத தனித்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது அதனை நபிமார்களுக்கோ, நபித்தோழர்களுக்கோ, இமாம்களுக்கோ, வேறு எந்த மனிதருக்கோ சொந்தப்படுத்த முடியாது என்பதைப் புரியாமல் செயல்படுகிறார்கள். மனித வர்க்கம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வகையில் ஆரம்பத்திலிருந்து செய்துவரும் பெரும் தவறையே இவர்களும் செய்து வருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தங்கள் பாதிரிகள், சந்நியாசிகள் கூறிய கூற்றுக்களை மார்க்கமாக எடுத்துச் செயல்பட்டு அவர்களை தங்கள் இறைவனாக ஆக்கிக்கொண்டது போல் இவர்கள் தங்கள் இமாம்களையும்  ஷைகுகளையும் இறைவனாக ஆக்கி கொண்டது போல் இவர்கள் தங்கள் இமாம்களையும் ஷைகுகளையும் இறைவனாக ஆக்கி, குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட அவர்களின் கூற்றுக்களையும் மார்க்கமாக்கிச் செயல்படுகின்றனர் (பார்க்க 9:31) தக்லீதும், தஸவ்வுஃபும் இந்த அடிப்படையிலானவையே. ஆயினும் இந்த அறிஞர்கள் இவை இரண்டிலும் பிடிவாதமாகவே நடந்து வருகின்றனர்.

“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா?” (42:21)

“அல்லாஹ்வுக்கல்லாது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” (6:57,62, 12:40,67)

இந்த வேதவசனங்களை அவர்கள் விளங்கிச் செயல்படுவதாகத் தெரியவில்லை. மாறாக மாற்று மத அறிஞர்களிடையே தங்கள் முன்னோர்கள் மீது காணப்படும் மூடப் பக்தியே இவர்களிடமும் காணப்படுகிறது என்றே சொல்லுகிறோம்.

தப்லீஃ பணியில் ஈடுபட்டு அதன் மூலம் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சமுதாய நலன் கருதியே மதரஸாக்களைத் தொடங்கியவர்களும் இந்த தவறான போக்கிலிருந்து விடுபட்டவர்களாக இல்லை.

“எவர்கள் மெய்யாகவே விசுவாசங்கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் (யாதோர்) அக்கிரமத்தையும் கலந்துவிட வில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு. அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர். (6:82)

அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு மாறாக தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு தங்கள் விசுவாசத்தில் அக்கிரமத்தைக் கலக்கின்றனர். தங்கள் முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் அல்லாஹ்வின் சொல்லைவிட தங்கள் முன்னோர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதே தவறையே கிறிஸ்தவர்கள் செய்தனர். அதனையே “தங்கள்” பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அல்லாஹ்வாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க 9:31)

ஆக மதரஸாக்களை தொடங்கியவர்களில் சிலரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், கொள்கையில் கோளாறு இருக்கும் நிலையில், எஞ்சியவர்களின் நோக்கமும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. தமிழகத்தில் பல மதரஸாக்களின் தொடக்கத்தை உற்று நோக்கும்போது இது புலனாகின்றது. ஒரு மதரஸாவில் பணி புரிந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்குமோ அல்லது தலைமை ஆசிரியருக்குமோ கருத்து மோதல்கள் ஏற்பட்டு தகராறு முற்றி இறுதியில் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டால் உடன் இவர்கள் ஏதாவதொரு ஊரில் 10 அல்லது 15 மாணவர்களை வைத்துக் கொண்டு புதியதொரு மதரஸாவை ஆரம்பித்து விடுவார்கள்.

ரசீது புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு ஊர் ஊராக வசூலுக்குக் கிளம்பி விடுவார்கள். முஸ்லிம் சமுதாய மக்களும் தாங்கள் மார்க்கத்திற்குப் பெரிதும் உதவுவதாகக் கருதிக் கொண்டு தாராளமாக இவர்களுக்குப் பொருள் உதவி செய்து வருகிறார்கள். அதாவது தங்கள் இவ்வுலக வாழ்க்கைத் தேவைகளுக்காக மதரஸாக்களைத் தொடங்குகின்றனர். இப்படி பல மதரஸாக்கள்.

மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள்:

மவ்லூது ஓதுவதை நபி(ஸல்) அவர்கள் மீது சொரியப்படும் புகிாகக் கருதிக் கொண்டு அதனை பக்தி சிரத்தையோடு ஓதுவதற்கு ஆட்கள் தேவை. மதரஸா தொடங்கி அங்கு பல மாணவர்கள் ஓதி வந்தால், மவ்லூது ஓதுவதற்கு ஆட்களைத் தேடி அலைய வேண்டியதில்லை என்ற நல்ல(?) நோக்கத்தோடு சில மாவட்டங்களில் பல மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதாவது மவ்லூது ஓதுவதற்கென்றே மதரஸாக்கள். இதுபோல் மதரஸா ஒன்றை தொடங்கிய செல்வந்தர் ஒருவர். ராதிபு ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற நோக்கத்திற்காகவே மதரஸா தொடங்கியதாகப் பெருமைப்பட ஒரு மவ்லவீயிடமே கூறி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆக இப்படித்தான் தமிழகத்தின் பெரும்பாலான மதரஸாக்கள் தொடங்கப்பட்டுள்ளன. நோக்கமே இப்படி இருக்கும்போது, அவற்றிலிருந்து பெறப்படும் பலன் எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மதரஸா சொல்லும் மாணவர்களின் நிலை:

மதரஸாக்கள் தொடங்கப்பட்ட நோக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் ஓதப்போகும் மாணவர்களின் (சில வருடங்களுக்குப் பின் மவ்லவிகள்) நிலையைப்பற்றி அடுத்துப் பார்ப்போம். அவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கூடங்களில் பலமுறை ஃபெயிலாகி, இனி இவனுக்குப் படிப்பு ஏறவே ஏறாது. வேறு போக்கே இல்லை என்ற நிலை வரும்போது தான் இந்த அரபி மதரஸாக்களின் ஞாபகமே வரும். அப்படிப்பட்ட பிள்ளைகளையே இந்த மதரஸாக்களுக்கு அனுப்பிவைப்பர் பெற்றோர்கள்.

பொதுவாகக் கல்வி நிலையங்களில் காணப்படும் ஆற்றலுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பரீட்சை முறை எதுவும் இம்மதரஸாக்களில் இல்லை. காரணம் இம்மதரஸாக்கள் மக்கள் தரும் தருமத்தைக் கொண்டு (மார்க்க முரணான சாராயம், வட்டி, லாட்டரி போன்ற தொழில்களைக் கொண்டு பொருளீட்டுபவர்களிடமும் எவ்வித கூச்சமும் இல்லாமல் வசூல் செய்வது தனி விஷயம்) நடத்தப்படுவதால், அந்த மக்களிடம் காட்டும் அளவுக்குத் தலைகள் இருந்தால் போதும். திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம்.

மறுபக்கம் கல்லூரிகளில் போல படிப்புக்குப் ஃபீஸ் கட்டி, சாப்பாட்டுக்கும் தங்கவும் பணம் கட்டி படிக்கும் நிலை இல்லை. அப்படி ஒரு நிலை இருக்குமானால் யாரும் இந்த மதரஸாக்களை எட்டியும் பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தரமான(?) பாடத் திட்டத்தையே இம்மதரஸாக்கள் கொண்டுள்ளன. இதனை நாம் முன்பு “ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.

எனவே இந்த மதரஸாக்களில் எப்படிப்பட்ட மாணவர்கள் ஓத வருகிறார்கள் தெரியுமா? சுருக்கமாகச் சொல்லுவதாக இருந்தால் ஓசிச் சாப்பாடும் உறைவிடமும் கிடைப்பதால் பயனில்லாத படிப்பைப் படிக்க வேறு போக்கில்லாத மாணவர்களே வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் டாக்டர், என்ஜினியர் மற்றும் பட்டப்படிப்புகளுக்குச் சென்று விடுகின்றனர். கல்லூரிப் படிப்புப் படிக்கும் ஆற்றல் சிறிது இருந்தாலும் அவர்கள் ஏழையாக இருந்தாலும் நாலு பேரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் படிக்கவே செல்லுகின்றனர்.

அப்படிப் படிக்க வசதி கிடைக்காவிட்டாலும், கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ சிறிய வயதிலேயே போய்ச் சேர்ந்து முன்னுக்கு வரவே முயற்சி எடுக்கின்றனர். மதரஸா போய் ஓதுவதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. மவ்லவிகளில் பலர் தங்கள் மக்களை மதரஸாக்களுக்கு அனுப்பாமல் கல்லூரிப் படிப்புக்கே அனுப்பி வைக்கின்றனர் என்பதே உண்மையாகும். இதிலிருந்து அந்த மவ்லவிகளும் தங்களின் மவ்லவி படிப்பின் தரத்தை றிந்தே வைத்துள்ளனர் என்பது புலனாகு். மதரஸாக்களில் சில காலம் போக்கிவிட்டு மவ்லவிகளாக வெளி வருபவர்களுக்கு சத்தம் ஃபாத்திஹா ஓதுவதையும், பள்ளிகளில் இமாமாகப் பணி புரிவதையும் தவிர வேறு போக்கில்லை என்பதே உண்மையாகும்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்த உதவாக்கரை மதரஸாக்களில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்புக் கிடைக்கும். மற்றபடி அரபியில் பேசவோ, அரபி நூல்களைப் படித்துச் சொல்லவோ, அரபு நாடுகளிலிருந்து வரும் விஸாக்கள் பற்றிய விபரத்தைக் கூட படித்துச் சொல்லவோ இந்த மவ்லவிகளில் பெரும்பாலோருக்கு ஆற்றல் இல்லை என்பதே உண்மையாகும்.

ஆக அறிவுக்கும், அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், எத்துறையில் ஈடுபட்டும் முன்னுக்கு வர முடியாதவர்கள், வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத முரட்டுப் பேர்வழிகள் இத்தரம் வாய்ந்தவர்களே வேறு போக்கின்றி இன்றைய மதரஸாக்களில் போய் தஞ்சம் புகுகின்றனர். தப்லீக் பணியால் கவரப்பட்டுப் பக்தி பரவசத்தால் தங்கள் பிள்ளைகளை அரபி மதரஸாக்களுக்கு அனுப்புபவர்களும் உண்டு. இந்த மாணவர்களில் சிறிது அறிவுக் கூர்மையுடையவர்கள் தங்களது தந்தையார் நிர்ப்பந்தித்தாலும் மதரஸாக்களின் நடைமுறைகளைச் சரிகாணாமல் இடையில் வெளியேறி விடுகின்றனர்.

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதைத் தலைமேல் கொண்டு தந்தை எதைச் சொன்னாலும் (அவை மார்க்க முரணான, ஷிர்க்கான காரியங்களாக இருந்தாலும்) அதை அப்படியே ஏற்றுச் செயல்படுகிறவர்கள் மட்டுமே மதரஸாவில் இருந்து காலத்தை ஓட்டி விட்டு மவ்லவி பட்டத்துடன் வெளிவருகின்றனர். தந்தை சொல்லை அப்படியே சிந்திக்காது ஏற்றவர்கள் இப்போது தங்கள் ஆசிரியரின் (உஸ்தாது) சொல்லை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர். இதே அடிப்படையில் தான் ஒரு மவ்லவி

“இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபைப் பார்ப்பதைவிட அது மிகப் பெரிய ஆதாரமாகும்”

என்று கூறிக்கொண்டு 1ல் 12+13 போக எஞ்சியுள்ளது 1/9 என்று கண்மூடித்தனமாகச் சாதித்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும். அதாவது 12+13+1/9=17/18 அல்ல; முழுமையாக 1 ஆகும் என்பதே அந்த மவ்லவியின் அறியாமை வாதமாகும். இது அவர் தனது உஸ்தாது மீது வைத்த குருட்டு பக்தியால் விளைந்த விளைவு! இந்த மவ்லவி தான் தமிழகத்திலுள்ள தலைசிறந்த விரல் விட்டு எண்ணப்படும் மவ்லவிகளில் ஒருவர் என்றால் மற்ற மவ்லவிகளின் தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அறிவீனர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதிமுறைகள்:

எப்படிப்பட்ட தரத்தை உடையவர்களை இந்த அரபி மதரஸாக்களுக்கு ஓதப் போகின்றனர் என்பதைப் புரிந்துகொண்டீர்கள். இன்னும் கேளுங்கள் வேடிக்கையை. அரபி மதரஸாக்கள் அல்லாத மற்ற ஸலபி ஸ்தாபனங்கள் திறமையிலும் திறமை மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கையாள்வார்கள். ஆனால் இந்த அரபி மதரஸாக்களோ அறிவீனத்திலும் அறிவீனமான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவார்கள் போலும்.

ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டு எதற்கும் லாயக்கற்றவர்களே அரபி மதரஸாவைப் போய் அடைகின்றனர். அவர்களிலும் தப்பித் தவறி அறிவுடையவர்கள் இருந்து விடக்கூடாது. அவர்களையும் கழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மதரஸாவின் விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதரஸாவில் நுழைந்தவுடன் முதல் நிபந்தனை மொட்டை அடித்துத் தொப்பி போட வேண்டும். ஜூப்பா போடவேண்டும். இந்த விதிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை நாம் அறியோம். நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே ஹஜ்ஜில் வைத்துத்தான் மொட்டை அடித்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. ஜுப்பா போடுவது நபி(ஸல்) அவர்களின் ஆதத்தில் இருந்திருக்கிறதேயல்லாமல் ஏவப்பட்ட சுன்னத்து அல்ல. இந்த நிலையில் அவற்றைக் கடமையாக்கப்பட்ட காரியங்கள் போல் ஏன் கடைபிக்கப்படுகிறது?

வேறு வழியில்லாத மதரஸாக்களில் ஓத வருபவர்களில் சிலர் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஓடிப் போய் விடுவதும் உண்டு. வெளியேறினால் தங்கள் சாப்பாட்டிற்கு வேறு வழியில்லை என்ற நிலையிலுள்ள மாணவர்களே இறுதியில் எஞ்சுகின்றனர். அவர்கள் விடுமுறையில் வெளியில் செல்லும்போது ஜுப்பா அல்லாத சட்டைகளில் அவர்கள் காட்டும் ஆர்வம். தலைமுடி சிறிது வளர்ந்தவுடன் அவற்றைச் சீவி அழகு பார்க்கும் அவர்களின் ஏக்கம் இவை அவர்கள் எப்படிப்பட்ட நிர்ப்பந்த நிலைகளில் மதரஸாக்களில் ஓதி வருகின்றனர் என்பதைப் புரிய வைக்கும். ஆக ஆரம்ப நிலையிலேயே அவர்களின் சுயசிந்தனை. சுயவிருப்பம் மழுக்கப்பட்டு உஸ்தாதுகள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் நிலை உருவாக்கப்படுகின்றது.

திறமையற்றவர்களாக ஆக்குவதற்கென்றே பாட போதனை:

திறமையற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இது இரண்டாவது கட்டம். இந்த இரண்டு தேர்வுகளையும் மீறி சுயசிந்தனை உடையவர்கள் தப்பித் தவறி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் இவர்களுக்கு இன்னும் எஞ்சி இருக்கும்போலும். எனவே அவர்களது சுய சிந்தனைகளையும் மழுங்கச் செய்யும் முறையில் விசேஷமான ஒரு பாடத் திட்டமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்கென்றே ஒரே நூல் உண்டு. அதன் பெயர் “தஃலீமுல் முதஅல்லிம்” அதன் பொருள்; “மாணவர்களுக்கான போதனை” இந்த நூலில் மாணவர்கள் தங்கள் உஸ்தாதுகளின் மீது அளவு கடந்து பக்தி செலுத்தும் வகையில் கற்பனையாகப் பல கதைகள் புனையப்பட்டுள்ளன. அதில் ஒன்று வருமாறு:

ஒரு உஸ்தாது தனது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் உட்காருவதும், எழும்புவதுமாக டிரில் செய்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் ஆச்சரியப்பட்டு அதற்குரிய காரணத்தைக் கேட்டார்களாம். அதற்கு அந்த உஸ்தாது கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அதாவது எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உஸ்தாதின் மகன் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இந்தப் பக்கம் வரும்போது எனது பார்வையில் படுகிறார். எனது உஸ்தாது மீதுள்ள பக்தியால் அவரது மகனை பார்த்த உடன் மரியாதைக்காக எழும்புகிறேன். \

எனது உஸ்தாதில் மகன் என் கண்ணை விட்டும் மறைந்ததும் உட்கார்ந்து கொள்கிறேன். எனது உஸ்தாதின் மகனுக்கு மரியாதை செய்வது எனது உஸ்தாதுக்கு மரியாதை செய்வது போலாகும்” என்று விளக்கம் தந்துள்ளாராம். சிரிப்பு வருகிறதா? நன்றாகச் சிரியுங்கள். இந்தக் கற்பனைக் கதையையும் கேட்டுவிட்டு அந்த மாணவர்கள் அந்த உஸ்தாதைப் போல் தங்கள் உஸ்தாதுக்கு மரியாதை செய்ய முற்படுகின்றனர் என்றால் அவர்களுக்கு எந்த அளவு சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள். உஸ்தாதுகளுக்கெல்லாம் பெரிய உஸ்தாது நபி(ஸல்) அவர்களேயாகும். அவர் வரும்போது கூட நபித்தோழர்கள் எழுந்து மரியாதை செய்தது இல்லை. காரணம் அப்படி எழுந்து மரியாதை செய்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை. மாறாகத் தடுத்துள்ளார்கள்.

“(சஹாபாக்களாகிய) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களை விட அதிய விருப்பமுள்ள மனிதர் எவரும் இருந்ததில்லை. இந்நிலையில் சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து விட்டால் எழுந்து நிர்பவர்களாக இருந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு அவர்கள் எழுந்து நிற்பதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (அனஸ்(ரழி), திர்மிதி)

இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களின் போதனைக்கும், நடைமுறைக்கும் மாறாகக் குருட்டுத்தனமான குருபக்தியை வளர்க்கும் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்படி நடக்கிறார்களா? அல்லது மாற்று மத அறிஞர்களைப் போல் மனிதனை தெய்வமாக்கும், இணைவைக்கும் கொள்கையை வளர்க்கத் துணை போகிறார்களா? என்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்படி முறை தவறிய குரு பக்தியை வளர்க்கும் பல கற்பனைக் கட்டுக் கதைகள் அந்த ஒழுக்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு போதிக்கப்படும் “தஃலீமுல் முதஅல்லிம்” என்ற நூலில் காணப்படுகின்றன. அவை பற்றிய மேலதிக விளக்கத்திற்கு பார்க்க அல்ஜன்னத் மார்ச் 90, பக்கம்.3 இந்த நூலிலுள்ள போதனைகளை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டதன் விளைவே பிரபலமான மவ்லவி எனது உஸ்தாது சொல்லுவது நூறு கிதாபைப் பார்ப்பதைவிட மிகப் பெரிய ஆதாரமாகும்” என்று கூறி வருவதாகும்.

இன்னொரு சம்பவம் மதரஸாவின் ஒரு வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. உஸ்தாது ஒரு கிதாபை வைத்துப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவர் ஒரு நூலின் சில பாராக்களுக்கிடையே காணப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கைப் பற்றிய தவறைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார். விளக்கம் கொடுக்க கடமைப்பட்ட உஸ்தாதுக்கு வந்ததே கோபம். அந்தப் பெரிய மேதை எழுதிய நூலாகும். அதில் நீ குறை காண்பதா? என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு கையில் வைத்திருந்த கிதாபை அந்த மாணவரின் முகத்தை நோக்கி வீசினாரே பார்க்கலாம். வெள்ளை வெளேர் என்று தெள்ளத் தெளிவாக எண்ணிக்கையில் காணப்பட்ட தவறைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்ட மாணவருக்குக் கிடைத்த பரிசைப் பார்த்தீர்களா?

4+3=7 என்பதற்கு பதிலாக அந்த நூலில் 8 என்று எழுதப்பட்டிருந்தாலும் அந்த நூலை எழுதிய மேதையின் மீது அப்படியே குருட்டு நம்பிக்கை வைத்து அதனை 8 என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழுதானே என சந்தேகமோ, மறுப்போ கிளப்பக் கூடாது. இப்படிப்பட்ட குருட்டு குரு பக்தியை ஏற்றுக் கொண்டவர்களே இந்த மதரஸாக்களில் தொடர்ந்து ஓத முடியும். இல்லை என்றால் வெளியெறிச் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான். அல்லது மஸ்ஜிதுகளில் சென்று சுயமரியாதையை விட்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். ஆக இந்த மூன்றாவது வடிகட்டலின் மூலம் சமுற்றிலும் சுய சிந்தனையற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக் காலத்தை மதரஸாவில் கழிக்கச் செய்து அவர்களுக்கு மவ்லவி ஆலிம்(?) பட்டம் கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எப்படி சுயசிந்தனையை எதிர்பார்க்க முடியும்? குதிரைக் கொம்புதான்.

இதுவரை அரபி மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தையும். அவற்றில் ஓத முன் வருபவர்களின் ஆற்றலையும் விளங்கிக் கொண்டீர்கள். இனி அங்கு போதிக்கப்படும் கல்வியின் நிலையைப் பார்ப்போம்.

மதரஸா கல்வித் திட்டம்:

அரபி மதரஸாக்களின் கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அந்நஜாத் செப்டம்பர் 89 இதழில் “ஸில்ஸிலேயே நிஜாமிய்யா” என்ற தலைப்பில் விளக்கி இருந்தோம். மீண்டும் ஒருமுறை அதனை நிதானமாகப் படித்துப் பார்க்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

“ஸில்ஸிலேயே நிஜாமிய்யா” கல்வித் திட்டப்படி குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதைவிட வாதக்கலைக்கும், பிக்ஹின் பெயரால் முன்னோர்களில் கூற்றுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வலியுறுத்தப்படுகிறது. ஹனபி பிக்ஹு நூல்களில் ஒரு விஷயத்தில் இமாமின் கூற்று குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரணாகத் தெரிந்தாலும் இமாமின் கூற்றையே எடுத்து நடக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பொருள் என்ன? உண்மையில் அந்த விஷயத்தை இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களும் கூறி இருக்கமாட்டார். முன்னூறு வருடங்களுக்கு முன் இருந்த ஹனபி மத்ஹபின் இமாம் ஒருவர் அவ்வாறு கூறி இருப்பார். அது இப்போது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.

இந்த மதரஸாக்களின் பாடத் திட்டத்தில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்கலாம். அதாவது எந்த விஷயங்களில் மனித அபிப்பிராயங்கள் செல்லாதோ – குர்ஆன், ஹதீைஸ மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டுமோ – 1400 வருடங்களுக்டகு முன் இருந்த நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாது எடுத்து நடக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட மார்க்க விஷயங்களில் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இமாமின் கூற்றை இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால் அரங்கேற்றம் செய்தார்கள். அதே சமயம் உலக விவகாரங்களில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகக் கண்டு பிடிக்கப்படும் எதார்த்த நிலைகளை இன்றுள்ள விஞ்ஞானிகள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளாமல் சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன் சில இமாம்களின் யூகத்தால் எழுதி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் முழு நம்பிக்கை வைத்து அதனையே இன்றும் போதிக்கிறார்கள்.

உதாரணமாக வானம், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களை விளக்கும் ஒரு தூய (தஷ்ரீஹுல் அஃப்லாக்) அரபி மதரஸாக்களில் போதிக்கப்படுகிறது. அதில் பூமி தட்டையானது. சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது போன்ற அபத்தங்கள் (சுமார் 600 அல்லது 700 வருடங்களுக்கு முன் மக்களிடையே இருந்து தவறான நம்பிக்கை) எழுதப்பட்டுள்ளன. அதனையே இந்த மதரஸாக்களில் இன்றும் போதிக்கின்றனர். எனவே இன்றைய மவ்லவிகளில் பலரும் இன்றும் பூமி தட்டை என்றே சொல்லி வருகின்றனர்.

இப்படிச் சாதாரண உண்மைகளைக் கூட ஏற்றுக் கொள்ள அவர்கள் தங்கள் முன்னோர்கள் மீது கொண்டுள்ள குருட்டு நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை. முன் சென்ற நாதாக்கள் எல்லாம் சாமான்யப்பட்டவர்களா? அவர்களைப் போல் நாம் ஆக முடியுமா? அவர்கள் வானத்தை வில்லாத வளைத்தார்கள். மணலைக் கயிறாகத் திரித்தார்கள் என்றெல்லாம் சரடுவிடுவார்கள். இந்தப் புளுகு மூட்டைகளை எல்லாம் அப்படியே நம்பிச் செயல்படுகிறவர்கள் மட்டுமே அரபி மதரஸாக்களில் ஓதுபவர்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதற்கும் அவர்களுடைய பிக்ஹு நூல்களில் சட்டம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த அசிங்கங்களை எல்லாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் விளக்கியுள்ளோம்.

“ஒருவன் தனது ஆண் குறியைத் தனது பின் துவாரத்தில் நுழைத்தால் குறிப்பு கடமையாகாது” போன்ற உலகத்திலேயே நடக்க முடியாத காரியங்களுக்கெல்லாம் தீர்ப்புகளை (ஃபத்வா) இவர்களது பிக்ஹு நூல்களில் பார்க்கலாம்.

“ஒருவன் விந்து வரும்போது தனது குறியை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு ஆசை அடங்கியதும் விந்தை வெளிப்படுத்தினால் அவன் மீது குளிப்பு கடமை இல்லை.

இதுவும் அரபி மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்டும் பிக்ஹு நூல்களில் உள்ளதுதான். இப்படிப்பட்ட விஷயங்களை 15 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட வாலிபர்களிடையே போதிக்கும்போது என்ன விளைவு ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் அவற்றைச் செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இரவில் செயல்படுத்திவிட்டு, குளிக்காமலேயே பஜ்ர் தொழுவதற்கு சட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் முகல்லிதுகள் தங்கள் பிக்ஹு நூல்களில், இது முற்றி ஓரினப் புணர்ச்சிக்கு இந்த வாலிபர்கள் ஆளாகிறார்கள். கல்லூரிகளில் காணப்படுவதைவிட, அரபி மதரஸாக்களில் இந்த கூடா ஒழுக்கம் அதிகமாக இருக்கிறது.

நம்மில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்குக் காரணம்:

நம்மை திடுக்கிட வைத்து இந்த அளவு சிந்திக்க வைத்து குர்ஆன், ஹதீஸின் உண்மை நிலைகளை கண்டறிய வைத்ததே மதரஸாக்களில் காணப்படும் இந்த கூடா ஒழுக்கம்தான். 1963 முதல் 1959 வரை இந்த மவ்லவிகளுக்கு அபாரமான மரியாதை செலுத்தி வந்தோம். பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட இந்த மவ்லவிகளை மதித்து நடந்தோம். மவ்லவிகளின் கூற்றுக்கள் அனைத்தையும் வேதவாக்காக எடுத்து நடந்தோம். இவர்களது வாக்கை நம்பி சூஃபியிஸ வாழ்க்ககையை மேற்கொண்டோம். 21 வயதில் காடா துணியில் கைலி, ஜுப்பா அணிந்தோம். மொட்டை அடித்தோம். முக்தி பெறுவதற்கு வீட்டைத் துறக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில் காலில் கட்டையை மாட்டிக் கொண்டு வீட்டைத் துறந்து வெளியேறினோம்.

அப்படிப்பட்ட நிலையில் 1969ல் மக்கள் வலியுல்லாக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சில மவ்லவிகளிடமும் இந்த கூடா ஒழுக்கம் இருக்கிறது என்பது தெரிய வந்ததும் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இதனை நம்மால் நம்பவே முடியவில்லை. இச்செய்தியைக் கொண்டு வந்தவரை ஏசி விரட்டி விட்டோம். பின்னர் ஆதாரப்பூர்வமாக உரிய சாட்சிகளுடன் இன்னொரு மவ்லவி மூலமாகவே நம்மிடம் கொண்டுவரப்பட்டு உண்மைப் படுத்தப்பட்டவுடன் நம்மால் மறுக்க முடியவில்லை.

தனிப்பட்ட ஒருவரைப் பற்றிக் கிடைத்த செய்தியை வைத்து நாம் முடிவு செய்யவில்லை. பல செய்திகள் தெரியவந்து பொதுவாக இன்றைய பெரும்பாலான மதரஸாக்களின் நிலையே இதுதான் என்று தெரிய வந்தபின் தான் நமது மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. இதற்குப் பரிகாரம் என்ன என்று ஆராய்ந்தோம். இது விஷயமாகப் பல மவ்லவிகளைக் கலந்தோம். இன்று நம்மமைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் நாம் கலந்து பேசிய மவ்லவிகளும் மதரஸா நிர்வாகத்தில் இருக்கிறார்கள். (அவசியப்பட்டால் அவர்கள் பெயரை வெளியிடவும் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறவும் தயாராக இருக்கிறோம்) அன்று அவர்களை அணுகிப் பேசும் போது அதனை ஒரு பாராதூரமான விஷயமாகவே  அவர்கள் நினைக்கவில்லை. ஒரு ஈ மேனியில் அமர்ந்தது, பறந்து போய்விட்டது என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது. அவர்களின் பேச்சு நமக்குக் கீழ் வரும் ஹதீஸை நினைவுபடுத்தியது.

“நிச்சயமாக ஒரு மூமினானவர், மலையின் கீழ் ஒருவர் அமர்ந்து கொண்டு அது தம்மீது விழுந்து விடும் என்பதை பயந்து கொண்டிருப்பவரைப் போன்று நமது பாவங்களைப் பற்றி கருதிக் கொண்டிருப்பர். ஆனால், ஒரு பாவியானவன் தனது பாவங்களைப் பற்றி அவன் மூக்கின் அருகில் பயந்து செல்லும் ஓர் ஈயைப் போன்றது என நினைத்து அதைத் தன்னை விட்டும் தனது கையால் ஓட்டி பிடலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறான்”. (இப்னு மஸ்ஊத்(ரழி), புகாரீ)

இந்த மவ்லவிகளின் மீது நமக்கிருந்த நம்பிக்கை வீணான பின்பே நாம் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்தோம். 12 வருடங்களுக்குப் பிறகே, நேரடியாக குர்ஆன், ஹதீஸை புரட்ட ஆரம்பித்தோம். உண்மை நிலையைக் கண்டறிந்தோம். இந்த மதரஸாக்களில் இவர்கள் கடைபிடித்து வரும் பாடத் திட்டமே இவர்களை இப்படித் தவறான வழியில் இட்டுச் செல்கிறது என்பதை அறிந்து அதனையும் தெளிவாக அவர்களிடம் எழுத்து மூலமாக எடுத்து வைத்தோம். நமது முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது. அதன் பின்னரே பொது மக்களை அணுகி உண்மை மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தோம்.

இதுவரை மெளனம் சாதித்த மவ்லவி வர்க்கம் ஆர்த்தெழுந்தது. பொதுமக்களிடம் கலப்படமே இல்லாத பொய்களைக் கூறி மக்களை நமக்கெதிராகத் தூண்டும் முயற்சியில் இறங்கினர். நம்மைக் குழப்பவாதி என்றும் இமாம்களை அவமதிப்பதாகவும் பொய் கூறி பொதுமக்களின் கோபத்தை நமக்கு எதிராகக் கிளப்பி விட்டனர். சத்தியத்தை மறைக்க இந்த அளவு துணிந்த பின்னரும் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் நாம் எப்படி மெளனம் சாதிக்க முடியும்?

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?

இந்த மவ்லவிகளால் மக்கள் முன் சத்தியத்தை எடுத்து வைக்க முடியவில்லை. “நாங்கள் பொதுமக்களின் தயவில் வாழ்கிறோம். உண்மையைச் சொன்னால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும். எங்கள் வீட்டு அடுப்பில் பூணை தூங்க ஆரம்பித்து விடும்” என்று சொல்லுகிறார்கள். அந்த சத்தியத்தை நாங்கள் எடுத்து வைக்கும்போது எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டுமே? அதற்கு மாறாக எங்கள் மீது அவதூறுகளை அள்ளிச் சொரிந்து பொது மக்களை எங்களுக்கெதிராகத் தூண்டி சத்தியத்தை மறைக்க முனையும்போது. அந்த மவ்லவி வர்க்கத்தை அவர்களின் தரத்தை, அவர்களின் இழி நிலையை அடையாளம் காட்டாமல் சத்தியத்தை நிலைநாட்டக் கடமைப்பட்ட எங்களால் எப்படி இருக்க முடியும்? அதன் விளைவே இந்த ஆக்கம்.

இதன் பின்பாவது அவர்கள் உண்மையை உணர்வார்களாக. எங்களது கூற்றுக்கள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணாக இருந்தால் ஆதாரத்துடன் எடுத்துத் தரட்டும். அதனை ஏற்றுக் கொள்வதில் முன்னணியில் நாங்கள் இருப்போம். அதில் சந்தேகமே இல்லை. வீண் அவதூறுகளையும், அபாண்டங்களையும் சொல்லுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு பயந்து சத்தியத்தை உணர்ந்து செல்பட முன்வரட்டும். அவர்கள் சத்தியத்தை மறைக்க  பெரும் முயற்சிகள் செய்வதால் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோமேயல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எங்களுக்குக் கோபமோ, குரோதமோ இல்லை.

ஆக இன்றைய மதரஸாக்களில் போதிக்கப்படும் பிக்ஹு நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள அசிங்கங்கள் அங்கு ஓதிவரும் வாலிபர்களைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்து வீணாக வழி வகுக்கின்றன. அதன் விளைவு மதரஸா காலத்தோடு இக்கூடா ஒழுக்கம் ஒழிவதில்லை. இவர்களின் வெளியுலக வாழ்விலும் இது தொடர்கிறது. அவர்கள் மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணி புரியும் காலத்திலும் இக்கூடா ஒழுக்கத்தைச் செயல்படுத்தி மதரஸா பக்கமே செல்லாத சிறார்களையும் கெடுத்து வருகின்றனர். இக்கூடா ஒழுக்கம் எந்த அளவு இந்த மவ்லவிகளை ஆட்டிப்படைக்கிறது என்பதற்கொரு ஆதாரம்:

இந்த ஆக்கத்தைத் தயார் செய்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் திருச்சியிலுள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாகப் பணிபுரிந்த ஒரு மவ்லவி ஒரு சிறுவனிடம் தவறாக நடந்து கையும் மெய்யுமாய் பிடிபட்டு உடனடியாக சீட்டுக் கிழிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கையும் மெய்யுமாய் பிடிப்பட்டதால் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இல்லை என்றால் மூடி மறைத்து விடுவர்.

மவ்லவிகள் மீதுள்ள குருட்டு பக்தியால் சமுதாயத் தலைவர்கள் பள்ளி மூத்தவல்லிகள் இவர்களின் இத்தவறுகளையும் மூடி மறைக்கவே முற்படுகின்றனர். இதன் காரணமாக இந்த மவ்லவிகளின் தரங்கெட்ட நிலை வெளியுலகுக்குத் தெரியும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. தனி நபர்களின் தவறுகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. சமுதாயத்தைச் சத்திய வழியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதற்கு மாறாக சமுதாயத்தை அசத்தியத்தில் மூழ்கடித்து அற்ப உலக ஆதாயம் அடைய இந்த மவ்லவிகள் முற்படுவதால், இவர்களை அடையாளம் காட்டிச் சமுதாயத்தை சிந்தித்து செயல்பட வைப்பது நமது கடமையாகும்.

படித்து தேற வேண்டிய அவசியம் இல்லை:

இத்தனை முறைகேடுகள் உள்ள அரபி மதரஸாக்களில் அவர்களே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் கல்வியாவது முறைப்படி கற்பிக்கப் படுகிறதா? என்றால் அதுவும் இல்லை. உஸ்தாதுகள் மீது குருட்டுப் பக்தியை மாணவர்களிடையே வளர்ப்பதற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்ய, செய்யப்படும் முயற்சியில் பத்தில் ஒரு பங்கு தானும் பாடங்களைப் படிப்பதில் காட்டப்படுவதில்லை. அரபி மதரஸாவில் சேரும் ஒரு மாணவன் பாடங்களை ஒழுங்காகப் படித்து பரீட்சைகளில் ஒழுங்காக எழுதி பாஸாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவன் படிக்கிறரனோ படுத்துத் தூங்குகிறானோ, 7 வருடங்கள் ஆகிவிட்டால் மவ்லவி ஆலிம் பட்டத்துடன்(?) வெளியே வருவான். இந்த மவ்லவிகளிடம் என்ன திறமையை எதிர் பார்க்க முடியும்?

மதரஸாக்களின் இந்த நிலையை அங்குள்ள உஸ்தாதுகளும், மாணவர்களும் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். மதரஸாக்களில் உஸ்தாதுகள் மாணவர்களைப் பார்த்து அடிக்கடி இவ்வாறு சொல்லுகிறார்கள்.

“ஒரு மாட்டைக் கொண்டு வந்து மதரஸாவினுள் கட்டி 7 வருடங்கள் சாப்பாடு போட்டால் அதற்கும் மவ்லவி ஆலிம் பட்டம் கிடைத்து விடும்”

என்று கிண்டலாகவே கூறுவார்கள். 4 அல்லது 5 வருடங்களிலேயே மவ்லவி ஆலிம் பட்டம் பெறும் மாணவர்களும் உண்டு. அவர்களின் திறமை காரணமாக DOUBLE PROMOTION என்று எண்ணி விடாதீர்கள். ஒரு மதரஸாவில் 2ம் ஜுமரா ஓதிவிட்டு அடுத்த வருடம் இன்னொரு மதரஸாவுக்குப் போய் நான் 3ம் ஜுமரா சென்ற வருடம்ட ஓதினேன்” என்று பொய் கூறினார் போதும். 4ம் ஜுமராவில் சேர்த்துக் கொள்வார்கள். காரணம் ஒரு மதரஸாவிலிருந்து இன்னொரு மதரஸாவில் போய்ச் சேர உரிய சான்றிதழ்களோ, பரீட்சை முறையோ கிடையாது. இவற்றை ஏற்படுத்த முடியாது என்பதல்ல.

அப்படி ஏற்படுத்தினால் மதரஸாவைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இவர்களின் பிழைப்பில் மன் விழுந்து விடும் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்தருக்கிறார்கள். மக்களிடம் பணம் வசூல் செய்ய மாணவர்களின் தலைகளைக் காட்டவேண்டும்ட. மாணவர்களைச் சேர்ப்பதில் இந்த நியதிகளை எல்லாம் கடைபிடித்தால் மாணவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார்கள். எனவே எண்ணிக்கைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்பதே மதரஸாக்களில் இன்றைய நிலையாக இருக்கிறது.

இதனை 1978ல் நாம் நன்கு உணர்ந்து கொண்டோம். மதரஸாக்களில் போதனா முறை ஒழுங்கில்லாமல் இருப்பதாலும்ட, படிப்பில் கண்டிப்புக் காட்டுவதற்கு வகை இல்லாததாலும், மதரஸாக்களிலிருந்து தகுதி இல்லாதவர்களே மவ்லவிகளாக வெளி வருகின்றனர். தகுதி இல்லாதவர்களே மவ்லவிகளாக வெளி வருகின்றனர். தகுதி உள்ளவர்களை மவ்லவிகளாக வெளிவரச் செய்ய ஒரு காரியம் செய்யலாம்.

எங்கே யார் மதரஸா நடத்தினாலும் ரி.1ம் ஜும்ராவிலிருந்து 6ம் ஜுமரா வரை அந்தந்த மதரஸாக்களில் எப்படி பரீட்சை நடத்தினாலும் சரி, நடத்தாவிட்டாலும் சரி, மவ்லவி ஆலிம் பட்டம் கொடுக்க இறுதி 7ம் ஜுமராவின் பரீட்சையை பொதுவாக ஆக்குங்கள். தமிழ்நாடு ஜ.உ. சபையினரே கேள்விகளை தயாரித்து பரீட்சை நடத்தி வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் மவ்லவி பட்டம் கொடுக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறினோம். இந்த ஆலோசனையை சங்கரன் பந்தலில் நடைபெற்ற ஜ.உ.ச. கூட்டத்திலேயே வைத்தோம். சமூக நலனில் அக்கறை உடையவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த நமது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.

ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? நீங்கள் கூறும் ஆலோசனைப்படி பரீட்சை வைத்தால் எங்கள் மதரஸாக்களை எல்லாம் இழுத்து மூட வேண்டிவரும் என்று பலர் வாய் கூசாமல் கூறினார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதியற்றவர்களை எண்ணிக்கைக்காக மக்களிடம் காட்டி பணம் வசூலித்து காலத்தை ஓட்டி வருகிறோம். நீங்கள் ஆலோசனை கூறுவதுபோல் பொதுப்பரீட்சை வைத்தால் பெரும்பான்மையினர் தேரமாட்டார்கள். தங்கள் மதரஸாக்களின் கையாலாகாத நிலை வெட்ட வெளிச்சமாகிவிடும்ட. பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்ட என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருப்பது தானே நமது இந்த ஆலோசனையை அன்று ஏற்க ஜ.உ.சபையினர் மறுத்து விட்டதற்குரிய காரணம் புரிகிறதா?

இந்த மவ்லவிகளை சத்தியத்தை உணரச் செய்ய நம்மால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து அவற்றில் தோல்வியுற்ற பின்பே மவ்லவிகளைப் புறக்கணித்து சத்தியத்தைப் பொதுமக்கள் முன் எடுத்து வைக்க ஆரம்பித்தோம். இந்த மவ்லவி வர்க்கம் தமது இந்த சத்திய முயற்சிக்கு ஆதரவு தராவிட்டாலும்,மெளனமாக ஒதுங்கி இருந்தாலும் நாம் அவர்களைக் கண்டு கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அன்றைய ஜ.உ. சபையினராகிய தாருந் நத்வாவினர் செயல்பட்டது போல், சத்தியத்தை எடுத்துச் சொல்லும் நம்மீது வீண் அபாண்டங்களையும், பழிகளையும், அவதூறுகளையும் கூறி நம்மை, எதிர்ப்பது கொண்டும் மக்களிடம் எங்களைக் குழப்பவாதிகள், வழிகேடர்கள் என்று ஓயாது பிரச்சாரம் செய்வது கொண்டும் சத்தியம் பொது மக்களை சென்றடைய முடியாமல் தடுப்பதற்கு முனைந்து விட்டனர். இந்த நிலையில் அவர்களின் உண்மையான இழிநிலைகளை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் வேறு என்ன செய்ய முடியும்? சத்தியம் நிலைநாட்டப்படுவது இந்த முல்லாக்களின் வரட்டு கொளரவத்தை விட முக்கியமானதாகும்.

முல்லாக்களை நம்பினால் மறுமலர்ச்சி ஏற்படப் போவதில்லை. மக்கள் சத்தியத்தை உணர்ந்து கலப்படமில்லாத தூய இஸ்லாம் மார்க்கத்தை விளங்கி ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. காரணம் மக்கள் குர்ஆன், ஹதீஸை கேட்பதையோ, பார்ப்பதையோ இந்த முல்லாக்கள் சகிக்காமல் தடுத்து வருகின்றனர். எனவே இந்த மவ்லவிகளையும் அவர்களது பின்னணிகளையும் பச்சையாக எதையும் மறைக்காமல் மக்கள் முன் எடுத்து வைப்பது எங்களுக்குக் கடமையாகி விட்டது. அதனையே செய்து வருகிறோம்.

இந்த மவ்லவி வர்க்கத்தினர் அறியாத நிலையில் இந்தத் தவறுகளைச் செய்து வருகிறார்கள் என்று சொல்ல முடியாது. நன்கு அறிந்த நிலையிலேயே சத்தியத்தை எதிர்த்து வருகின்றனர். தங்கள் மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் போதிக்க ஆரம்பித்து விட்டால் இதுவரை தங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்தை-ஹஜ்ரத்-ஹழரத்-சந்நிதானம்-ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர் அல்லவா அது என்னாவது!

அதாவது பிராமணர்கள் தாங்கள்தான் பிரம்மாவின் முகத்திலிருந்து படைக்கப்பட்டவர்கள். தங்களுக்கு தெய்வாம்சம் உண்டு. எனவே மக்கள் தங்களை ஸ்வாமி என்று அழைத்துக் கொண்டு தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகக் கருதி மரியாதை செய்து வரவேண்டும் என்ற தவறான – மோசமான நிலையை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதேபோல் இந்த மவ்லவி வர்க்கமும் தாங்கள் அரபி கற்றிருப்பதால் உயர்ந்தவர்கள்-தெய்வத் தன்மையுடைவர்கள், மக்கள் தங்களை ஹஜ்ரத்-சந்நிதானம் என அழைத்துக் கொண்டு தங்களின் வாக்கை வேத வாக்காக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்ற தவறான – ஷிர்க்கான நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். தெரிந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்.

மதரஸா மாணவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகக் கற்றுத் தெளிவு பெற்றால், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக கட்டிக்காத்து வரும் தங்களின் தனி அந்தஸ்து தவிடு பொடியாகிவிடும் என்ற அச்சமே அவர்களைக் குர்ஆன், ஹதீஸை போதிப்பதை விட்டும் தடுக்கிறது. மற்றபடி அவர்கள் மனம் வைத்தால் சத்தியத்தைப் போதிக்க முடியும். ஆற்றல் குறைந்தவர்களையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குர்ஆனை முறைப்படி தஜ்வீது சட்டத்துடனும், இனிமையாகவும் ஓதக் கற்றுக் கொடுக்கத்தானே செய்கிறார்கள். குர்ஆனை மனப்பாடமிட்டு ஹாபிழ்களாக உருவாக்கத் தானே செய்கிறார்கள். இந்த இரு சாரியங்களைத்தான் இன்றைய அரபி மதரஸாக்கள் உருப்படியாகச் செய்து வருகின்றன.

ஆயினும்ம அற்ப உலக ஆதாயம் கருதியே இவை இரண்டையும் கற்றுத் தருகின்றனர். இமாமத் செய்யவும், ரமழானில் தராவீஹ் என்ற பெயரால் 8+3க்குப் பதிலாக 20+3 தொழ வைத்து ஆயிரக் கணக்கில் ஊதியம் பெறவுமாகும். மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணியாற்ற வேண்டும். மவ்லவிகள் நல்ல கிராஅத்தைக் கொண்டு மக்களைக் கவரவேண்டும் என்பதில் அக்கறையாகச் செயல்படத்தானே செய்கின்றனர். அப்படியானால் அந்த மவ்லவிகள் சத்தியத்தை உணர்ந்து செயல்படும் வகையில் குர்ஆன், ஹதீஸை ஏன் போதிக்க முடியவில்லை? சிந்திக்க வேண்டுகிறோம்.

தங்களில் தனி அந்தஸ்து தக்க வைக்கப்பட வேண்டும். உஸ்தாது என்ற போர்வையில் ஹஜரத்-சந்நிதானம் என்ற இறைத்தன்மையை நிலைக்கச் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மவ்லவி என்று அரபியில் கூறினால் அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படுகிறது. இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள் படுகிறது. இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்களா? மற்ற மக்கள் எல்லாம் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் இல்லையா? மவ்லவி, ஹஜ்ரத் போன்ற பதங்களை அவர்கள் விரும்புவதிலிருந்தே அவர்கள் தங்களை இறைத் தன்மை-தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதுகிறார்கள் என்பது புரிகிறதல்லவா?

மவ்லவி வர்க்கத்தின் மீதுள்ள குருட்டுப் பக்தியை விட்டு நிதானமாகச் சிந்தித்தால் இந்த மவ்லவி வர்க்கம் இந்தச் சமுதாயத்திற்கு எத்தனைப் பெரிய கொடுமையை இழைத்து வருகிறது என்பது புரிய வரும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே இந்த முல்லா வர்க்கம் மார்க்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற எண்ணம் மிகப் பெரிய தவறாகும். நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளிடையே வேரூன்றிப் போயிருந்த முல்லாப் பரம்பரையினரை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டினார்கள். தாருந்நத்வா இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டது. இஸ்லாத்தில் புரோகிதர்களுக்கு இடமே இல்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கப்பட்டது.

தனக்குப் பின்னால் புரோகிதக் கூட்டமான இந்த முல்லா வர்க்கம் மீண்டும் சமுதாயத்தில் நுழைந்து விடாதிருக்க அஜமியை (அரபி மொழி தெரியாதவன்) விட அரபி (அரபி மொழி தெரிந்தவன்) உயர்ந்தவன் அல்ல. அதேபோல் அரபியை விட அஜமி உயர்ந்தவன் அல்ல என தெள்ளத் தெளிவாக தனது ஹஜ்ஜின் இறுதி உரையில் அறிவித்து விட்டார்கள். அரபி மொழியைக் கொண்டு இந்த முல்லா வர்க்கம் பெருமை பேசிச் சமுதாயத்தைக் கூறுபோடுவார்கள் என்று தெரிந்தே ஆரம்ப காலத்திலிருந்து இந்தப் புரோகிதர்கள் போலும். காரணம் ஆரம்ப காலத்திலிருந்து இந்தப் புரோகிதர்கள் கூட்டமே (முல்லா வர்க்கமே) மனித சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வைப் போதித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்து பட காரணமாக இருந்து வருகிறது. இந்தச் சாபக்கேடு தனது உம்மத்தைத் தொடராதிருக்க நபி(ஸல்) அவர்கள் பல முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்தாலும், இந்த சமுதாயத்தை ஏமாற்றி மீண்டும் இந்த புரோகிதர்களான முல்லா வர்க்கத்தினர் இந்த சமுதாயத்தில் வந்து நுழைந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன காலம் பாரீர்:

நபி(ஸல்) அவர்களோடு இருந்த நபித்தோழர்களில் அரபி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், அரபி நாட்டைச் சாராத பார்ஸி, ஹபஸி, தேசத்தைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். நபித்தோழர்களில் குர்ஆன் ஹதீஸை அதிகமாக அறிந்தவர்களும், அறியாதவர்களும் இருந்து தான் இருக்கிறார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை அறிந்தவர்கள் தங்களை ஆலிம்-அறிந்தவர் என்றும் மற்றவர்களை அவாம்-பாமரர் என்றும் பிரித்துச் செயல்பட்டாதாகச் சரித்திரமே இல்லை. மார்க்க விஷயங்களில் பல விஷயங்களை நன்கு தெரிந்தவர். தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அந்த ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அழகிய நடைமுறையைக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கவில்லை. அல்லது தனக்குக் குர்ஆன், ஹதீஸைக் கற்றுக் கொடுத்த உஸ்தாதுக்கு தெய்வாம்சம் கற்பித்து அவர்களை மனித நிலையிலிருந்து தவறே செய்யாத தெய்வ நிலைக்கு உயர்த்தவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமல்ல அதற்குப் பின்னும் இந்த அழகிய நிலை நீடித்தே வந்திருக்கிறது. இதற்கு அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களுமே தக்க சான்றாகும். இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் உஸ்தாது. இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் இமாம் ஹன்பல்(ரஹ்) அவர்களின் உஸ்தாது. இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உஸ்தாதாக ஹம்மாது(ரஹ்) அவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாரும் தங்களின் உஸ்தாதுகளின் சொல்லு நூறு கிதாபுகளைப் பார்க்கிலும் ஆதாரப்பூர்வமானது என குருட்டுத் தனமாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை. குர்ஆன், ஹதீஸைப் பார்த்தே செயல்பட்டது தெளிவாகத் தெரிகிறது. அதனைத் தெளிவாக அவர்கள் அறிவித்துள்ளதும் சரித்திர ஏடுகளில் பதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்து. அவற்றை நாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் வெளியிட்டிருந்தோம்.

அன்றைய கால் கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது நபி(ஸல்) அவர்கள் போதித்தபடியே குர்ஆன், ஹதீஸையே ஒருவருக்கொருவர் போதித்து வந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிந்து போதித்து வந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிந்து கொள்வதில் அந்த இமாம்கள் பெரிதும் முயற்சிகள் எடுத்துள்ளனர். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் கிடைத்தால் அதனை அவசியம் எனக்கு அறிவிக்கவும் என உஸ்தாகிய இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் தனது மாணவராகிய ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் கூறி இருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து என்ன தெரிகிறது?

உஸ்தாதின் வாக்கை வேத வாக்காகக் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்படுபவராக இமாம் ஹன்பல்(ரஹ்) அவர்களும் இருந்ததில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தனது மாணவரிடமிருந்து கிடைத்தால் அதனை உதாசீனம் செய்யும் நிலையில் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களும் இருந்ததில்லை. ஆசிரியராக இருந்தாலும், மாணவராக இருந்தாலும்  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிவதிலும், அவற்றின்படி செயல்படுவதிலுமே குறியாக இருந்திருக்கிறார்கள். அதல்லாமல் ஆசிரியரின் வாக்கை வேதவாக்காக எடுத்துச் செயல்படுபவர்களாகவோ, ஒருவரை ஒருவர் தக்லீது செய்பவர்களாக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?

ஒரு முக்கியமான விளக்கம்:

இங்கு குர்ஆன், ஹதீஸை வைத்துச் சுயமாகச் சிந்தித்து விளங்கிச் செயல்படுவதற்கும், உஸ்தாதையோ, முன்னோர்களையோ நம்பி தக்லீது செய்வதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டை விளக்குவது நமது கடமையாகும். அல்லாஹ் தனது வேதக் கட்டளையில்,

உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், மற்றவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்” (7:2)

என்று தெளிவாகக் கட்டளையிட்டுள்ளான்.

ஒருவர் குர்ஆன், ஹதீஸை வைத்து சத்தியத்தை விளங்கிக் கொள்ளும் தூய்மையான எண்ணத்துடன் முயற்சி செய்து அதில் அவர் சரியான முடிவுக்கு வந்தால் அவருக்கு இரண்டு நன்மை. ஒன்று முயற்சி செய்ததற்கு, மற்றொன்று சரியான முடிவுக்கு வந்ததற்கு ஆயினும் அவர் தவறான முடிவுக்கு வந்தால் முயற்சி செய்ததற்கு ஒரு நன்மை உண்டு. (அமர்பின் ஆஸ்(ரழி) அபூஸரமா(ரழி) புகாரீ, முஸ்லிம், அபூதாவூத் திர்மிதீ, நஸயீ)

இப்போது இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள்.

குர்ஆனையும், ஹதீஸையும் வைத்துக் கொண்டு ஒருவர் சத்தியத்தை விளங்க முற்படுகிறார். அவர் எண்ணத்தில் தூய்மை இருக்கிறது. ஆயினும் அவரது இயலாத நன்மையின் காரணமாக சரியான முடிவுக்கு வர முடியவில்லை.  நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் ஆஜராகும்போது “யா அல்லாஹ் நான் உனது வேதத்தையும், உனது தூதரின் நடைமுறைகளையும் வைத்து தூய எண்ணத்தோடு 7:2 வசனத்தின்படி உனது கட்டளைக்கு வழிபட்டு ஆராய்ந்து செயல்பட்டேன். எனது இயலாமையால் அதில் தவறான முடிவுக்கு வந்து விட்டேன்” என்று முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயம் அல்லாஹ் அவரை மன்னிப்பான் என்று நம்ப இடமிருக்கிறது. அதே சமயம் அல்குர்ஆன், ஹதீஸை தன்னால் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையால் அவற்றில் முயற்சி செய்யாமல், ஒரு இமாமையோ, அல்லது உஸ்தாதையோ அவர்கள் தன்னை நரகத்திலிருந்து பாதுகாப்பார்கள் என நம்பி அவர்களை தனது பாதுகாவலர்களாக்கி அவர்களைத் தக்லீது செய்தார் என்று வைத்துக் கொள்வோம். நாளை அல்லாஹ்வின் தர்பாரில் என்ன சொல்வார் குர்ஆன், ஹதீஸை என்னால் விளங்க முடியாது என எண்ணி இந்த இமாமை நான் தக்லீது செய்தேன்” என்றுதான் சொல்லமுடியும்.

இப்போது சிந்தியுங்கள். குர்ஆன், ஹதீஸ் எளிதானவை, தெளிவானவை. இரவும், பகலைப் போன்று வெள்ளை வெளேர் என்று தெளிவாக்கப்பட்டவை என்றுதான் குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படுகிறது. குர்ஆன், ஹதீஸை விளங்க முடியாது. அல்லது விளங்குவதற்குக் குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஒரே ஒரு வரியும் இல்லை. அது மட்டுமல்ல. யாரையும் தங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி பின்பற்றுவதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவ்வாறு மற்றவர்களைப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றக் கூடாது என 7:3 வசனத்தில் கட்டளையிட்டிருக்கிறான்.

இந்த நிலையில் நாம் ஒருவரை நம்பி அவரைப் பின்பற்றி நடப்பது அதாவது தக்லீது செய்வது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ததாகத் தானே முடியும். “நான் என் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி நான் தெளிவாக கட்டளையிட்டுள்ளேன். மற்றபடி இமாம்களான அபூஹலீபாவையோ, மாலிக்கையோ, ஷாபிஈயையோ, ஹன்பலையோ(ரஹ்-ம்) கண்மூடி பின்பற்றும்படி – அதாவது தக்லீது செய்யும்படி எங்கே கட்டளையிட்டுள்ளேன்” என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு மாறு செய்த குற்றத்திற்கு ஆளாக வேண்டி வருமா, வராதா? என்பதை நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட முன்வாருங்கள்.

மனமுரண்டாகச் செய்யும் தவறுக்கு மன்னிப்புண்டா?

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டால் அதில் குறை ஏற்பட்டாலும் அல்லாஹ் மன்னிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளைக்கு அதுவும் அதனை அறிந்தநிலையில் மறு செய்கிறவனை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்? அறிந்த நிலையில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்த ஷைத்தானின் கதிதான் ஏற்படும். அல்லாஹ் காப்பானாக! எந்த நிலையிலும் தக்லீது செய்யும் முகல்லிதாக இருக்க குர்ஆன், ஹதீஸில் அணுவளவும் ஆதாரம் இல்லாத நிலையில்தான் இந்த அரபி மதரஸாக்கள் தக்லீதை மிகக் கடுமையாக வலியுறுத்திப் போதித்து வருகின்றன.

உண்மையில் இந்த அரபி மதரஸாக்களுக்கு மக்களுக்கு மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டதே மிகச் சமீப காலத்தில்தான். ஆங்காங்கே தெருதிண்ணைகளில் உட்கார்ந்து கொண்டு தங்களின் குருட்டுத்தனமான குப்பைக் கொள்கைகளை போதித்துக் கொண்டிருந்த இந்த முகல்லிது முல்லாக்களுக்கு மக்களிடையே இப்போதுதான் செல்வாக்கு ஏற்பட்டு வளர்ந்திருக்கிறார்கள். பல அரபி மதரஸாக்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

சூஃபியிஸ இஸ்லாத்தை இவர்கள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் தோற்றுவித்துப் போதித்து வந்தாலும் 900 வருடங்களுக்கு மேலாகத் தங்களின் தவறான கொள்கையை தெருத் திண்ணைகளிலும் மறைவிடங்களிலும் வைத்தே போதிக்கும் நிலை இருந்து வந்தது. கடந்த 100 வருடங்களுக்குள்தான் இப்படி அரபி மதரஸாக்களாக வளரும் வாய்ப்பு ஏற்பட்டது. நடிகர்களுக்கு நீண்ட நெடு நாட்களாக கூத்தாடிகள், திண்ணைத் தூங்கிகள் என்ற பெயரே நிலைத்திருந்தது. கடந்த 75 வருட கால கட்டத்தில் கூத்தாடிகள், மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் தலைவர்களாகி மக்களை ஆட்சி செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது போல்தான். இந்த முகல்லிது முல்லாக்களும் வளர்ந்துள்ளார்கள்.

கடந்த 100 வருட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை வைத்துக் கொண்டுதான் இந்த முல்லாக்கள் “நாங்கள் தான் நபிமார்களின் வாரிசுகள், மக்களின் தலைவர்கள், எங்கள் சொல்படி நான் மார்க்க விஷயத்தில் மக்கள் நடக்கவேண்டும்” என தம்பட்டம் அடிக்கின்றனர். இவை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த தாருந் நத்வாவினரின் கூற்றுகளை நினைவுபடுத்துகிறதா” இல்லையா?  என்பதை இஸ்லாமிய  சரித்திரம் நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவர்களின் ஜ.உ.சபை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்பதே உண்மையாகும். இந்த நிலையில் தூய இஸ்லாத்தில் தனி உரிமை கொண்டாட அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

மடமைக்கும் எல்லை உண்டோ?

இந்த முகல்லிது முல்லாக்களிடம் இன்னொரு பொருளற்ற வினோத நிலையையும் பார்க்க முடிகிறது. அதாவது, இவர்களில் இந்த அரபி மதரஸாக்களில் சில ஆண்டுகள் ஓசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு தங்கியவர்கள் மட்டுமே ஆலிம்களாக இருக்க முடியும். அதல்லாமல் கல்லூரிகளில் படிப்புக்காகவும், சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகளுக்காகவும் ஃபீஸ் கட்டிப் படித்து அரபி மொழியில் பட்டம் பெற்று பாண்டித்யம் பெறுகிறார்களே அப்படிப்பட்டவர்களை இந்த முகல்லிது முல்லாக்கள் ஆலிம்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அரபு நாட்டிற்கே போய் அங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கிக் கற்று அரபி மொழியில் தெளிவாக எழுதப் பேச்சு கற்று குர்ஆன், ஹதீஸைத் தெளிவாகப் புரிகிறவர்கள் இவர்களிடத்தில் ஆலிம்களாக கருதப்படமாட்டார்கள்.

அதைவிட வேடிக்கை இவர்களின் இந்த மதரஸாக்களில் சில வருடங்கள் தங்கி ஓசிச் சோறு சாப்பிட்ட நிலையில் மவ்லவி ஸனது கொடுக்கப்பட்டு ஆலிம்களாக இவர்களாக கருதப்பட்டவர்கள் – ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் அதன்பின் அரபு நாடு சென்று அதற்குமேல் 5ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ செலவிட்டு அரபி மொழியில் திறமையாக எழுத பேசவும், குர்ஆன், ஹதீஸை அதிகமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டால் அவர்கள் இந்த முல்லாக்களிடத்தில் ஆலிம்களின் நிலையை இழந்து ஜாஹில்களாக ஆகிவிடுகிறார்கள். இதனை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.

அறிவற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதிகள் அமைத்து அப்படித் தேர்ந்தெடுத்த பின்பும் அவர்களிடம் மிச்சம் மீதியுள்ள சுய சிந்தனையையும் போக்கி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அத்வைதத்தை – இறைவனும் அடியானும் இரண்டறக் கலக்கும் நிலையை ஒப்புக் கொள்ளச் செய்து, உஸ்தாதுகளை தெய்வாம்சம் பெருந்தியவர்களாக நம்பச் செய்து இவற்றிற்குச் சாதகமாக இவர்களால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிக்ஹு நூல்களை அவர்களின் மண்டைகளில் ஏற்றி மவ்லவிகளாக -ஆலிம்களாக(?) வெளியே அனுப்புகிறார்கள். அந்த மவ்லவிகளுக்கு அரபியைத் தெளிவாகப் பேசவோ, எழுதவோ தெரியாது. குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கும் ஆற்றலும் இல்லை.

அவர்கள் மதரஸாவில் காலம் கழிக்கும்போது திட்டமிட்டு போதிக்கப்பட்ட ஆசிரியரை தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதும் அறிவும், அறைகுறையாக அறிந்துகொண்ட பிக்ஹு சட்டங்களும் மட்டுமே தெரியும். அதனடிப்படையில் “எனது கண்ணியத்திற்குரிய உஸ்தாது சொன்னது எனக்கு நூறு கிதாபுகளைப் பார்ப்பதைவிட ஆதாரமானது” என்று உஸ்தாதுகள் குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

இந்த நிலையில் இவர்களை ஆலிம்களாக இந்த மதரஸாக்கள் ஒப்புக் கொள்ளும். ஆனால் அதன்பின் அவர்கள் அரபு நாட்டிற்குச் சென்று அங்கு முறையாக அரபி மொழியையும், குர்ஆனையும், ஹதீஸையும் கற்றுக் கொள்வதால் அவர்கள் இதுகாலம் வரை நாங்கள் இருந்துவந்த மடமைநிலை விளங்கி குப்பைக் கிதாபுகளில் இருந்த மோகம் நீங்கி சத்திய வழியாகிய குர்ஆனயும், ஹதீஸையும் நேரடியாக விளங்கிச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் இவர்களை ஆலிம்கள் என ஒப்புக் கொண்டால் இந்த முகல்லிது முல்லாக்களின் நிலை என்னாவது? அதனால்தான் இவர்களிடம் மவ்லவி ஆலிம் பட்டம் பெற்றபின் அரபு நாடு சென்று மேல்கல்வி கற்றுக் கொண்டால் அவர்கள் ஜாஹில்களாக மாறி விடுகின்றார்கள் என புதிய பாடம் சொல்லித் தருகின்றனர். இதைவிட பேதமையை வேறு யாரிடமும் பார்க்க முடியுமா? என சிந்தித்துப் பாருங்கள்.

இன்னொரு சீர்கேடு:

இந்த சமுதாயத்தில் இந்த அரபி மதரஸாக்களைக் கொண்டு இன்னொரு சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து பயனற்ற பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதரஸாவுக்கு ஓதச் சென்றவர்களில் சிலர் நாம் முன்பு குறிப்பிட்டுள்ள சில காரணங்களால் வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் வாழ வேறு வழி வகை தெரியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே கூசாமல் மக்களிடம் அதுவும் பெரும்பாலும் மஸ்ஜிதுகளிலேயே யாசகம் கேட்டு பிழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மதரஸாவில் ஓதிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து ஓத முடியவில்லை. இன்னின வகையில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே தயவு செய்து பொது மக்களே எனக்கு உதவுங்கள் என்று மஸ்ஜிதுகளில் பிச்சை எடுப்பதையும் பார்க்கத்தான் செய்கிறோம். மாற்று மதங்களில் தெய்வப் பணி செய்கிறவர்கள் பிச்சை எடுத்துத்தான் சாப்பிடவேண்டும் என்றதொரு நியதி உண்டு. அதனை இவர்களும் கடைபிடித்து வருகிறார்கள்.

நபிமார்களால் போதிக்கப்பட்ட தூய இஸ்லாத்தை மதமாக்கிய புரோகிதர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள் பெரும்பாலும் எல்லா மதங்களிலும் சின்னஞ்சிறு வித்தியாசங்களுடன் ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த முல்லாக்கள் யூத கிறிஸ்தவர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் மேடைகளில் ஹதீஸ்கள் என்று முழங்கும் பெரும்பாலான கட்டுக்கதைகளும், கப்ஸாக்களும் பர்ன பாஸ் பைபிளில் இருப்பதைக் காணலாம். திருடன் மற்றவர்களைத் திருடன், திருடன் என கத்திக் கொண்டு தப்பிச் செல்வதுபோல் இந்த முல்லாக்கள் குர்ஆன், ஹதீஸை மட்டும் எடுத்துச் சொல்லும் நம்மை யூத கிறிஸ்தவர்களின் நடைமுறைகளை போதிக்கிறோம் என்றும் குழப்பவாதிகள் என்றும் மேடைகள் தோறும் பிரச்சாரம் செய்வது திருடனின் பாணியிலேயாகும்.

உண்மையில் முகல்லிது முல்லாக்களே குழப்பவாதிகளாகவும், யூத கிறிஸ்தவ நடைமுறைகளை இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நடுநிலை மக்கள் நிதானமாகச் சிந்தித்தால் விளங்க முடியும். ஹிந்துக்களிடம் காணப்படும்ட குருகுலக் கல்வியும், வேதக்காரர்களிடம் காணப்படும் குருத்துவக் கல்வியும், வேதக்காரர்களிடம் காணப்படும் குருத்துவக் கல்வியும்,

இந்த முல்லாக்கள், இந்த மதரஸாக்களில் நடைமுறைப்படுத்தும் மவ்லவி கல்வியும் ஆக இவை மூன்றும் ஒரே அடிப்படையிலானவையே. மக்கள் சத்தியத்தை உணர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன்வந்தாலும் அவர்கள் மீது அபாண்டமாக அவதூறுகள் கூறி மக்களை அந்தச் சத்தியவான்களிடமிருந்து பிரிப்பதையும் செம்மையாகச் செயல்படுத்தத் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட கல்வி முறையுமே, மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி இந்தப் புரோகிதர்கள் மக்களிடையே தெய்வாம்சத்துடன் திகழவும், அரபு மக்களிடையே தெய்வாம்சத்துடன் திகழவும், அற்ப உலக ஆதாயம் அடைந்து கொள்ளவும், வயிறு வளர்க்கவும் அமைத்துக் கொண்ட மிக இழிவான வழிமுறையேயாகும்.

முடிவுரை:

நீங்கள் இதுகாலம் வரை பெரிதாக எண்ணிக் கொண்டிருந்த இன்றைய அரபி மதரஸாக்களின் உண்மை நிலையை அறிந்து கொண்டீர்கள். அவற்றில் தங்கி சில ஆண்டுகளுக்குப் பின் மவ்லவி-ஆலிம்(?) என்று ஸனது பெற்று வெளி வருபவர்களின் தரம் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். இப்படிப் பட்டவர்களை நம்பி இந்தச் சமுதாயத்தை அவர்களிடம் ஒப்படைத்தால்தான் இஸ்லாமிய சமுதாயம் இந்த அளவு அடி பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் இழிநிலை மாறி அது இழந்துவிட்ட மிக உன்னத நிலையை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் இரண்டில் ஒன்று அவசியம் செய்யப்பட்டே ஆக வேண்டும்.

ஒன்று இந்தப் புரோகித முல்லாக்கள் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கிவைத்துள்ள “பிக்ஹு” என்ற பெயரால் இருக்கும் நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிட்டு பொசுக்கி விட்டு குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் இந்த மதரஸாக்களில் போதிக்குமுன் வரவேண்டும். அதற்கு இந்தப் புரோகித முல்லாக்கள் சம்மதிக்காவிட்டால் பொதுமக்கள் தாராளமாக வழங்கி வரும் நன்கொடைகள், ஜகாத் குர்பானித்தோல், மற்றும் தான தர்மங்கள் அனைத்தையும் நிறுத்துவது கொண்டு இந்த முல்லாக்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும். இதுவும் சாத்தியமில்லாவிட்டால் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் இந்த மதரஸாக்களை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் “தாருந்நத்வா” அழித்தொழிக்கப்பட்டது போல் அழித்தொழிக்கப்படுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இதனை முஸ்லிம் சமுதாயம் உணர்ந்து செயல்படும் காலம் வெகு தூரத்திலில்லை.

இன்னொரு தகவலைத் தந்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம். சுமார் 2 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்னால் வடநாட்டில் சில நல்லெண்ணம் கொண்டவர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. இந்த மதரஸாக்களில் கடைபிடிக்கப்படும் பாடத்திட்டங்களிலுள்ள குறைகளைப் போக்கிச் சமுதாயத்திற்கும் பலனளிக்கும் வகையில் பாட திட்டத்தை மாற்றி அமைக்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முகல்லிது முல்லாக்கள் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து காரியம் நிறைவேறாமல் ஆக்கி விட்டனர்.

அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதைவிட ஆத்திரத்தை உண்டுபண்ணுவதாக இருக்கிறது. “நமது முன்னோர்களால் எழுதப்பட்ட இப்போதுள்ள கிதாபுகளை வைத்து பாடம் நடத்துவதால்தான் “பரக்கத்” இருக்கிறது. அந்தக் கிதாபுகளை அகற்றி விட்டால் “பரக்கத்” போய்விடும். என குருட்டுவாதம் செய்துள்ளனர். இப்ராஹீம்(அலை) அவர்களால் போதிக்கப்பட்ட சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் குறைஷ்களால் இடைக் காலத்தில் புகுத்தப்பட்ட சடங்குகளை நபி(ஸல்) அவர்கள் களைந்து சத்திய இஸ்லாத்தை மீண்டும் நலைநாட்ட பாடுபட்டபோது குறைஷ்கள் (குறிப்பாக அபூலஹப்) முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் என்ன வாதத்தை எடுத்து வைத்தனரோ அதே வாதத்தையே இந்த முகல்லிது முல்லாக்களும் எடுத்து வைக்கின்றனர்.

Previous post:

Next post: