அறிந்து கொள்வோம்!

in 2020 டிசம்பர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்,

 1. எதனை முன்னிலைப்படுத்தி என்னிடம் உதவி தேடுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
  பொறுமையை கொண்டு.   அத். 2:45
 2. பிர்அவ்னின் கூட்டத்தாரை எப்படி அழித் ததாக அல்லாஹ் கூறுகிறான்?
  கடலை பிளந்து மூழ்கடித்ததாக கூறுகிறான்.   குர்ஆன் : 2:50
 3. இறுதி நாளையும், நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிபவரின் கூலி யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தன்னிடம் இருப்பதாக கூறுகிறான்.  குர்ஆன் :  2:62
 4. ஷைத்தான் விரும்புவது எது என அல்லாஹ் கூறுகிறான்?
  மது, சூதாட்டம் மற்றும் தொழுகையை தடுப்பது.   அத். 5:91
 5. மூஸா(அலை) அவர்களுக்கு துணையாக எந்த நபியை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
  ஹாரூன்(அலை)   குர்ஆன்: 19:53
 6. யூஸுப்(நபி) தனது தந்தையிடம் எதனை கனவில் கண்டதாக கூறினார்கள்?
  பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும்.  குர்ஆன்:12:4
 7. பரிந்துரைகள் அனைத்தும் யாருக்கு உரியன?
  அல்லாஹ்வுக்கே.  குர்ஆன்: 39:44
 8. யாருக்கு இரு மடங்கு வேதனை தரப்படும்?
  மானக்கேடான ஒன்றைச் செய்யும் நபியின் மனைவியருக்கு.  குர்ஆன் : 33:30
 9. யாரை நேர்வழியில் செலுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தான் நாடுவோரை.  குர்ஆன்: 16:93
 10. எவர்களை நிச்சயமாக விசாரிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தூதர்களாக அனுப்பப்பட்டவர்களை.  குர்ஆன் : 7:6
 11. இம்மை மறுமையின் பயன் யாரிடத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தன்னிடத்தில்.  குர்ஆன் : 4:134
 12. பூமியிலுள்ள அனைத்து(ஜீவராசிகளின்) உயிரினங்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?
  அல்லாஹ்விடம்.  குர்ஆன் : 11:6
 13. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு எவ்விதமான கூலி தரப்படும்?
  நரகம் என்ற நிலையான வீடு.  குர்ஆன் : 41:28
 14. நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு திருடியதற்காகத் திருடியவனின் கையை துண்டித்தார்கள்?
  ¼ தீனர்(பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காக.  ஆயிஷா(ரழி), முஸ்லிம்: 3478
 15. மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்கு உரியவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  உண்மையை மறைத்து பொய்மையை நிலைநாட்ட கடுமையாக சச்சரவு செய்பவன்.  ஆயிஷா(ரழி), முஸ்லிம்: 5183
 16. யார் பெயரால் சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்?
  தெய்வச் சிலைகள், தந்தையர் மற்றும் அல்லாஹ் அல்லாதவைகள் மீது. அப்துர் ரஹ்மான் பின் சமுரா(ரழி), முஸ்லிம் : 3385
 17. நேர்த்திக்கடன் செய்வதால் என்ன பலன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  எவ்வித நன்மையும் இல்லை. கஞ்சனின் செல்வம் வெளிக்கொணரப்படும்.   இப்னு உமர்(ரழி) முஸ்லிம்: 3370
 18. சூரிய கிரகணம் ஏற்பட்டபோது என்ன நிகழ்ந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நரகம் காட்டப்பட்டதாக. புகாரி: 431
 19. தொழுகை நடபெறாத சவக்குழிகளாக ஆக்காதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் எதனை பற்றி கூறினார்கள்?
  இல்லங்களை (வீடுகளை)ப் பற்றி.   இப்னு உமர்(ரழி) முஸ்லிம் : 1426
 20. மனிதன் எப்போது தன்னை பிரார்த்திப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  தீங்கு ஏற்படும்போது படுத்தவனாக, அமர்ந்தவனாக, நின்றவனாக பிரார்த்திக்கின்றான்.  அல்குர்ஆன்: 10:12

Previous post:

Next post: