தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்
அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
- அப்துல் ஹமீத்
தொடர் : 65
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
சென்ற இதழில் …!
சென்ற இதழில் 18:28வது இறை வசனத்திலுள்ள “ஸப்ர்” என்ற வார்த்தையை “பொறுமை” என்று மொழி பெயர்க்காமல் “கட்டுப்படுத்தல்” என்று வேண்டுமென்றே தவறாக மொழிப் பெயர்த்து, அதன் மூலம் அந்த ஆயத்தின் சரியான பொருளை அறிந்து கொள்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த குழப்பத்தை பயன்படுத்தி, ஹதீஃதுகள் என்ற பெயரில் சிலவற்றை அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகத்தில் உள் நுழைந்ததை, ஆய்வு செய்ததில், அவைகள் அத்தனையும் பொய் செய்திகள் என்று தெளிவுபடுத்திக் காட்டினோம்.
இந்த இதழில்…!
அல்லாஹ்வுக்கே ஐடியா கொடுத்த அசி ஆசிரியர் :
அல்லாஹ், தன்னை ஞானம் மிக்கவன் ஞானத்தில் மிகைத்தவன் என்று குர்ஆனில் பல இடங்களில் கூறி இருக்கும்போது (உம். 2:220) உயர்ந்தோனாகிய அல்லாஹ்வை விட ஞானத்தில் தம்மை மிகைத்தவனாகக் காட்டிக் கொள்கிறார் அசி ஆசிரியர்! நவூதுபில்லாஹ்! விநோதமாக இருக்கிறதல்லவா? இதிலும் ஒரு தந்திரம்! தாமே நேரடியாக ஐடியா கொடுத்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டார். ஐடியா என்னுடையது ஆதாரம் அவருடையது என்ற பாணியில் இறந்துபோன நல்லவர்களின் பெயரில் அல்லது பேர், ஊர் தெரியாதவர்களுக்கு வினோதமான பெயர்களை சூட்டி அந்தப் பெயர்களை பயன்படுத்தி, அன்னார் இப்படிக் கூறியதன் காரணமாகத்தான் அல்லாஹ் இந்த கட்டளையை இட்டிருக்கிறான் என்று குறிப்பாக அல்லாஹ்வின் ஏதாவது ஒரு கட்டளையை சுட்டிக் காண்பித்து விடுவார். அனைத்திற்கும் காரணகர்த்தவாக அல்லாஹ் இட்ட கட்டளைக்கு அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களை காரணகர்த்தாவாகக் காண்பிக்கிறார்.
இப்படியாக, இவரது பொய்யை உண்மையைப் போலக் காண்பித்து செயல்படும் மோசடிக்காரர் இவர்! நபி(ஸல்) அவர்கள், இதை இப்படி செய்ய சொன்னார்கள் என்றும் துணிச்சலாகக் கூறிவிடுவார். அல்லது இவை குர்ஆனிலும், ஹதீஃதுகளிலும் இருப்பதாகக் கூறிவிட்டு, தமது கூற்றிற்கு ஆதாரமாக இன்னின்னார் இன்னின்ன விதமாக இன்னின்ன நூல்களில் எழுதி இருக்கிறார்கள் என்று. அனாமதேயங்களின் கூற்றுக்களை தமது பொய்க்கு ஆதரமாக மேற்கோள் காட்டுவார். அதையும், நவீன சாதனங்களின் இன்றைய வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்து விடக்கூடிய காலம் வரும் என்ற எண்ணம் ஏற்படாத காலகட்டத்தில், அவரது எல்லா தகிடுதத்தங்களையும், (பித்தலாட்டங்களையும்) அரங்கேற்றி முடித்து விட்டார். இவ்வாறாக இவர் இவரது பொய்யை இறை வசனம் என்றோ ஹதீஃது என்றோ சர்வசாதாரணமாகக் கூறிவிடுவார். இப்போது தமது பொய்யை பிரகடனப்படுத்த “இப்ராஹீம் நஃகஈ” என்ற தாபியீன்களில் ஒருவரான இறந்து போன நல்லடியாரின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார். இவரின் இந்த “ஹைடெக் மோசடியை இப்போது பாருங்கள்! ஆச்சரியமடைவீர்கள்!
அசி புத்தக பக்கம் 399ல் கடைசி பத்தியிலுள்ள செய்திகள் :
ஹஜ்ரத் இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள், காலையிலும் மாலையிலும் தங்கள் இரட்சகனை அழைப்பவர்கள்” என்ற ஆயத்திற்கு திக்ர் செய்பவர்கள் என்பதாக விளக்கம் கூறியுள்ளார்கள். இதுபோன்ற கட்டளைகளில் இருந்துதான் ஷைகுமார்களும்….
எமது ஆய்வு!
மேற்கண்ட செய்தி அதே 18:28வது ஆயத்தில், “துஆ செய்பவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! என்று அல்லாஹ் கூறி இருப்பதை “திக்ர் செய்பவர்களுடன்” என்று கூறி இவர்கள் செய்யும் தவறான திக்ர் முறையை வலியுறுத்துகிறார்கள். இது தவறு என்பதை நாம் கடந்த இதழ்களில் விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியை இப்போதும் கூட காண்போம்.
அசி புத்தகம் இன்னும் தொடருவதைப் பாருங்கள்!
இதுபோன்ற கட்டளைகளில் இருந்துதான், ஷைகுமார்களும், முரீதுகளுடைய சபைகளுக்கு சென்று அவர்களுடன் சேர்ந்து உட்காருவது அவசியம் என்பதாக சூபியாக்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர் என்றும் அசி புத்தகம் எழுதி இருக்கிறது.
எமது ஆய்வு !
சூபியாக்கள் ஆய்வு செய்தார்களாம்! நபி(ஸல்) அவர்களின் ஜீவித காலத்தில், மனிதர்களில் சூபியாக்கள் என்று யாரும் இருந்ததில்லை, இல்லாதவர்கள், மார்க்கத்தில் எப்படி ஆய்வு செய்ய முடியும்? நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு, எந்த கிறுக்கனும் மார்க்கத்தில் நுழைந்து எதையும் மார்க்கமாக்க முடியாது என்பதுதான்ட உண்மை. அடுத்து, “கட்டளை” என்று கூறுகிறது அசி புத்தகம்? எதைக் கட்டளை என்கிறது? மேலே கூறிய அதே 18:28வது இறை வசனத்தில், “துஆ” என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை (இவர்கள் செய்யும்) திக்ர் என்று தவறாக சித்தரித்துக் காட்டுகின்றார். அசி ஆசிரியர்.
தான் கூற விரும்பும் பொய்யை தாபியின்களின் காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லடியார் இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர் கூறிய கட்டளையாக காட்டுகிறார் அசி ஆசிரியர்! தமக்குப் பின்னால் பிறக்கப்போகும் அசி ஆசிரியரின் தவறான கொள்கைக:கு இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள் தப்லீக் ஜமாஅத் என்ற ஒரு பிரிவு ஏற்படுவதற்கு முன்பே, அந்த ஜமாஅத்திற்காக ஒருபோதும் வக்காலத்து வாங்கி இருக்க முடியாதல்லவா? குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமாக இப்படி ஒரு தவறானதை அவர் கூறி இருக்கவும் இல்லை. ஹதீதுகளின் அறிவிப்பாளர் வரிசையில் இபராஹீம் தஃகஈ(ரஹ்) அவர்கள் இடம் பெற்றுள்ள ஹதீஃத்களில் ஒன்றை மட்டும் அவரின் கொள்கை உறுதிக்கு சான்றாக கீழே தந்துள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்த சம்பவம் ஒன்றை இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஃது ஒன்று தெரிவித்திருப்பதை காண்போம். (முஸ்லிம் : 1465)
அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு குர்ஆனை ஓதி காட்டுங்கள்” என்று சொன்னார்கள். “தங்களட் மீதே குர்ஆன்ட அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிஸா” எனும் அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய நபியின்) சாட்சியுடன் நாம் (மறுமையில்) கொண்டு வரும்போது, (நபியே) நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டுவந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்தபோது “தலையை உயர்த்தினேன்” அல்லது “எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னை தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்” அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். (இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது)
இந்த ஹதீதுக்கு அடுத்ததாக, முஸ்லிம் ஹதீத் எண் : 1466ல், நபி(ஸல்) அவர்கள் அழுத சம்பவம் பதிவு செய்யப்பட்டு, இந்த ஹதீதின் அறிவிப்பாளர்களில் ஒருவராக இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள் இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமது சமுதாயத்தினரில் தம்மை நிராகரித்தவர்களின் மறுமை நிலைமையை எண்ணி கண்ணீர் வடித்த சம்பவம், நபி(ஸல்) அவர்கள் அகிலத்தாருக்கெல்லாம் ரஹ்மத்தாக – அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் என்று உயர்ந்தோன் அல்லாஹ் 21:107 வசனத்தில் கூறியிருப்பதை நினைவுப்படுத்துகிறதல்லவா? இந்த நிகழ்வை அறிவித்த இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள், அல்லாஹ் இட்ட கட்டளையை, தாம் இட்ட கட்டளை என்று அறிவித்திருப்பாரா என்று சிந்தித்துப் பாருங்கள். எமது ஆய்வில், அப்படி அறிவித்ததாக எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
அசி ஆசிரியர் ஜக்கரியா மிகக் பெரிய அபாண்டத்தை இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள் மீது சுமத்துவதைப் பார்த்தீர்களா? இஸ்லாத்தின் எதிரிகளில் யாரை திருப்திப்படுத்த ஜக்கரியா தம்மை அந்த எதிரியிடம் சமர்ப்பித்துக் கொண்டாரோ? எமக்குத் தெரியவில்லை. அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
இதை எல்லாம் தப்லீக் ஜமாஅத்தினர் படித்துக் கொண்டு, படிப்பதைக் கேட்டுக் கொண்டு வாய்மூடி மவுனிகளாக இருப்பது தான் எம்மை ஆச்சரியப்பட வைக்கிற ஹைலைட் மூளைச் சலவை, மனிதர்களை அடிமுட்டாள்களாகச் செய்துவிடும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
மொட்டைத் தலையை முழங்காலுடன் முடிச்சி போட யாராலும் முடியாதல்லவா? தப்லீக் ஜமாஅத் தோன்றும் முன் வாழ்ந்த ஒருவர் தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைக்கு குரல் கொடுத்துள்ளதன் மூலம், மொட்டைத் தலையை முழங்காலுடன் முடிச்சி போட முடியும் என்று அசி புத்தகம் உணர்த்துவது தெரிகிறது.
அடுத்து ஒன்றையும் தெரிவித்து விடுவோம். ஐவேளை தொழுகைகளில், ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பிறகும் செய்யவேண்டிய அமல்களை நபி(ஸல்) அவர்கள் பற்பல ஹதீதுகளில் அறிவுறுத்தி இருப்பதை தொழுகையாளிகள் அனைவரும் அறிந்ததே, உதாரணத்திற்கு சில அமல்கள், அஸ்தஃபிருல்லாஹ் 3 தடவை, அல்லாஹும்ம அன்த்தஸ்ஸலாம், வ மின்கள் ஸலாம், த பாரக்த்த யாதல் ஜலாலி வல் இக்ராம் (முஸ்லிம் : 1037) ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லலாஹ், அல்லாஹு அக்பர் ஒவ்வொன்றும் 33 தடவை, லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹுலாஷரி கலஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷை இன் கதீர்(முஸ்லிம் : ஹ048), ஆயத்துல் குர்ஸி, குல்ஹுவல்லாஹு அஹத்(112வது சூரா), குல் அபவூது பி ரப்பில் ஃபலக்(113வது சூரா), குல் அவூது பி ரப்பினாஸ்(114வது சூரா) (1 தடவை) (ஃபஜ்ரிலும், இஷாவிலும் மட்டும் 3 தடவை) (புகாரி: 842,843) இன்னும் இது போன்ற சிலவற்றை ஓதுதல் (புகாரி : 2822), இவற்றை எல்லாம் முடித்துவிட்டு, தமது தேவைகளுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்டு முடித்த பிறகு, பெண்கள் முதலிலும், ஆண்கள் அதன் பிறகு, பெண்கள் முதலிலும், ஆண்கள் அதன் பிறகும் களைந்து செல்லும் வரை நபி(ஸல்) அவர்கள் தமது இருப்பிடத்திலேயே அமர்ந்திருப்பார்கள் என்று பகாரி ஹதீத் எண். 875 கூறுகிறது.
காலையிலும், மாலையிலும் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருப்பவர்களுடன் (நபியே) நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக என்பது அல்லாஹ்வின் கட்டளையாக (18:28) இருப்பதால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதன்படி அமர்ந்து இருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
அசி புத்தகம் இன்னும் தொடருவதைப் பாருங்கள் :
அதன் மூலம் முரீதுகளுக்கு பலவித பலன்களை ஏற்படுத்துவதுடன், அவருடைய நஃப்சும் பரிபூரண பக்குவம் பெறுகிறது. அதாவது பக்குவம் பெறாதவர்களுடைய தீய நடவடிக்கைகளை சகித்துக் கொள்வதன் மூலம், ஷைகுடைய நஃப்சில் அல்லாஹ்வுக்கு வழிபடும் தன்மை உருவாகி நஃப்சுடைய வேகத்தன்மை அடங்கி, அது பலவீனம் அடைகிறது. இவை தவிர உள்ளங்கள் ஒன்று சேர்வதில் அல்லாஹுத்த ஆலாவுடைய ரஹ்மத் வந்து சேருவதற்கு விசேஷமான தொடர்பும் உண்டு.
எமது ஆய்வு :
அதன் மூலம், அதாவது அல்லாஹ்வின் கட்டளையைக் கேளாமல், இப்ராஹீம் நஃகஈயின் கூற்றை பின்பற்றுவதன்(?) மூலமாக, அதாவது திக்ர் செய்யும் முரீதுகளுடன் ஷைகு அமர்ந்திருப்பதால் பலவித பலன்கள் ஏற்படுகிறதாம்! மட்டும் இல்லாமல், ஷைக்கினுடைய நப்சும் பரிபூரண பக்குவம் பெறுகிறதாம். அப்படி என்றால், பக்குவம் பெறுகிறதாம். பக்குவம் இல்லாத ஆட்கள்தான் ஷைகுகளாக இருப்பார்கள் போலத் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், பக்குவம் பெறாத முரீதுகளுடைய தீய நடவடிக்கைகளை ஷைகு சகித்துக் கொள்கிறாராம். ஆக திக்ர் சபைகளுக்கு வருகின்ற முரீதுகள் தீய நடவடிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார். அந்த தீய நடவடிக்கைகளை ஷைகு சகித்துக் கொள்கிறாராம். முரீதுகளின் தீய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தானே சகித்துக் கொண்டு, முரீதுகளை மன்னிக்க வேண்டும். அதை விடுத்து ஷைகு ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்?
அப்படியானால், ஷைகுகளுக்கு முரீதுகள் தீயது செய்திருப்பார்கள் போல் தெரிகிறது. இந்த தீயதால் ஆக்ரோஷம் அடைவதற்கு பதிலாக ஷைகுகள் அந்த தீயதை சகித்துக் கொள்வார்கள் போலத் தெரிகிறது. அதாவது வலுவடைந்திருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிர்பார்க்கப்பட்ட திசையில் செல்லாமல் புயலின் வேகத்தன்மை அடங்கி, பலவீனம் அடைந்து வேறு திசை நோக்கி சென்றதால் குறிப்பிட்ட ஊர் பாதிப்பிற்கு உள்ளாகாததைப் போல, முரீதுகளின் தீய நடவடிக்கையை ஷைகு சகித்துக் கொள்வதால், ஷைகின் நஃப்சுடைய வேகத்தன்மை அடங்கி, பலவீனம் அடைந்து, அல்லாஹ்வுக்கு வழிபடும் தன்மை உருவாகும் போல் தெரிகிறது.
இந்த சைக்கோத்தனமான ஷைகுகளைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அடையாளம் காட்டுகிறார் ஜக்கரிய்யா.
இவற்றைவிட பெரிய பாக்கியம் ஷைகுடைய உள்ளமும், முரீதுகளுடைய உள்ளங்கள் ஒன்று சேர்ந்து விடுகிறதாம். ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்? அன்பு உண்டாகும் பிறகு என்ன? மாறாக உண்மைக் காதல் ஏற்பட்டுவிடும் அல்லவா? இந்த விஷேசத் தொடர்பால்தான் முரீதுகள் ஷைகுகளிடம் அசி ஆசிரியர் கூறுவது போல, தீயது செய்திருப்பார்கள் போல் தெரிகிறது. அசி ஆசிரியரோ அல்லாஹ்வுடைய ரஹ்மத் இவர்களுடன் வந்து சேருகிறது என்கிறார். மொத்தத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என்று அசி ஆசிரியர் கூறுகிறார் என்பது தெரிகிறது.
பக்கம் 400 முதல் பத்தியில் இன்னும் தொடர்கிறது :
இதன் காரணமாகவே, ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. ஹாஜிகள் அனைவரும்ட அரஃபாத் மைதானத்தில் ஒரே இடத்தில், ஒரே நிலையில் அல்லாஹ்வை முன்னோக்கி இருக்கவேண்டும் என்ற நியதியும் இதனால் தான் ஏற்படுத்தப்பட்டது. ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவீ(ரஹ்) அவர்களும் தங்களுடைய ஹஜ்ஜத்துல் லாஹில் பாலிகா என்ற நூலில் இக்கருத்தைப் பல இடங்களில் முக்கியத்துவத்துடன் கூறியுள்ளார்கள்.
எமது ஆய்வு :
…..ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்” என்று அல்லாஹ் நாடியதை 2:43 வசனத்தில் கட்டளையிடுகிறான். ஆனால் ஜக்கரிய்யாலோ “இதன் காரணமாகவே” அதாவது அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றாமல் ஜக்கரிய்யாவின் கூற்றுப்படி இப்ராஹீம் நஃகச அவர்களின் கட்டளையைப் பின்பற்றிய காரணத்தால்தான், அல்லாஹ் ஜமாஅத் தொழும்படி கட்டளை இட்டிருக்கிறானாம். அதாவது ஜக்கரிய்யாவின் எண்ணத்தை இப்ராஹீம் நஃகஈ சொன்னதாக அவர் மீது அவதூறு சுமத்துகிறார். அல்லாஹ் எதை நாடுகிறானோ அதைக் கட்டளையிடுகிறான் என்கின்ற அடிப்படை அறிவு கூட ஜக்கரிய்யாவுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.
“மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி (சுயமாக) ஒரு சான்றைக் கொண்டு வரும் ஆற்றல் எந்த தூதருக்கும் இருக்கவில்லை” என்று அல்லாஹ் 13:38இறை வசனத்தில் கூறி, நபிமார்களின் நிலையே இதுதான் என்று தெளிவுபடுத்திய பின்னும், அரஃபா மைதானத்தின் அமல்கள் ஏற்பட்டதற்கு காரணம் ஜக்கரியாவின் கூற்றுப்படி இப்ராஹீம் நஃகஈ அவர்களின் கட்டளை என்று தான்தோன்றித்தனமாக எதையெதையோ பிதற்றியுள்ளார் ஜக்கரிய்யா, இந்த நிலையில், போலிகளைக் கண்டு ஏமாந்து விடுவதற்காக, ஜக்கரிய்யா தமது மோசடி செயலுக்கு ஆதாரமாக, ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவியையும்(?) ஹஜ்ஜத்துல் லாஹில்பாலிகா என்ற புத்தகத்தையும்(?) கொண்டு வருகிறார்.
தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் இன்னும் ஜக்கரியாவை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. அல்லாஹ்வின் அச்சம் அவர்களுக்கு இருந்தால், அவர்கள் அந்த ஜமாஅத்திலிருந்து வெளியேற கீழ்க்கண்ட இறைவசனங்கள் போதுமானவையாக இருக்கும் என்று நம:புகிறோம்.
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை சொல்பவனை விட பெரும் அக்கிரமக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி சொல்வோர் கூறுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அல்குர்ஆன் : 11:18
நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கமாட்டான். அன்றி அவர்களை நேர்வழியிலும் செலுத்தமாட்டான். 4:168.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…