அமல்களின் சிறப்புகள்….

in 2021 பிப்ரவரி

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 66

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :

பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில்…!

அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தக ஆசிரியர் ஜக்கரிய்யா அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகளுக்கு எதிராக, தமது மனதில் தோன்றிய பொய்களை, மறைந்த நல்லடியார்கள் கூறியதாக சொல்லி அவைகளை மார்க்க அமல்களாக்கி இருக்கிறார். தாபியீன்களில் ஒருவரான இறந்து போன நல்லடியார் “இப்ராஹீம் நஃகஈ” அவர்கள் கூறியதாக எழுதி இருந்த செய்தி ஒன்றை சென்ற இதழில் ஆய்வு செய்து அவர் அப்படி சொல்லியிருக்கவில்லை என்பதை விளக்கியிருந்தோம்.

இந்த இதழில்..!

இந்த இதழில் ஆய்வு செய்யப்படும் செய்தி, அசி புத்தகம், பக்கம் 401ல் கடைசி பாராவில் எண் 19ல் ஹதீது என்று எழுதப்பட்டிருப்பது யாதெனில், “ஹஜ்ரத் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதமுடைய மகனே) அஸ்ருத் தொழுகைக்குப் பிறகும், பஜ்ர் தொழுகைக்குப் பிறகும் சிறிது நேரம் என்னை திக்ரு செய்வாயாக, இடையிலுள்ள நேரத்தில் உன்னுடைய காரியங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று அல்லாஹு தஆலா கூறியதாக ரசூலே கரீம்(அலை) அவர்கள் அருளினார்கள். (நூல் : துர்ருல் மன்ஃதூர்)

எமது ஆய்வு :

இறைவனை காலையிலும், மாலையிலும் நினைவு கூறும்படி புனித குர்ஆன் பல ஆயத்துக்களில் வலியுறுத்தி இருப்பதை ஏற்கனவே நிறைய தெரிவித்து இருக்கிறோம். அல்லாஹ்வைப் பெருமைப்படுத்த போற்றிப் புகழ்வதற்காகவென்றே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கொண்டு திக்ர் செய்யக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த வழிமுறைகளில் அல்லாஹ்வை திக்ர் செய்வது மற்றும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்டற கடமையான அமல்கள் செய்வது, அளவு நிறுவைகளில் மற்றும் எல்லா ஒழுக்க நெறிகளையும், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளின் பிரகாரம் நிலைநாட்டுவது, ஏவல்களை செயல் படுத்துவது, ஹராமானவைகளைத் தடுத்துக் கொள்வது, அல்லாஹ்விடம் பிரார்த்தனை (துஆ) செய்வது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, அல்லாஹட்விடம் பாவமன்னிப்பு கோருவது, இப்படியாக வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் செய்யக்கூடிய எல்லா நற்செயல்களுமே அல்லாஹ்வை திக்ர் (அல்லாஹ்வை நினைவு) செய்தல் ஆகும் என்பதை பல இறைவசனங்களின் உதவியுடன் ஏற்கனவே விவரித்துள்ளோம்.

திக்ர் என்பது இவ்வாறு இருக்க, தப்லீக் ஜமாஅத்தினர் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும், காட்டித் தந்த கட்டளைகளுக்கு மாற்றமாக, திக்ர் மஜ்லிஸ்கள் (சபைகள்) என்ற பெயரில் கூட்டமாக சேர்ந்து கொண்டு அவர்களுடைய ஷேக்குகள்(?) தயாரித்துத் தந்துள்ள சில பல வார்த்தைகளை உச்சரிப்பு செய்து வருவது திக்ர் அல்ல என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்.

மேலே காட்டியுள்ளபடி, அசி புத்தகம் பக்கம் 401ல் கடைசி பாராவில் ஹதீஃத் எண். 19ன் ஹதீதில் “அஸ்ருத் தொழுகைக்குப் பிறகும், பஜ்ர் தொழுகைக்குப் பிறகும் சிறிது நேரம் என்னை திக்ரு செய்வாயாக. இடையிலுள்ள நேரத்தில் உன்னுடைய காரியங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹ வாக்களித்து இருப்பதாக கூறியிருப்பது உண்மையா என்பதைக் கண்டறிவோம்.

பொறுப்பேற்றுக் கொள்வதாக அல்லாஹ் சொல்லியிருந்தால், அது குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், குர்ஆனில் இடம்பெறவில்லை, ஹதீதுகளிலும் இச்செய்தி இடம் பெறவில்லை. துர்ருல் மன்ஃதூர்” என்ற ஹதீத் நூலில் இச் செய்தி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது அசி புத்தகம். உமது தேடலில், பொய் செய்திகள் மண்டிக்கிடக்கும் அந்த நூலிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை. எனவே, இது பொய்யான செய்தி என்பதை அறிந்து கொள்வோமாக.

குறிப்பாக, பொறுப்பேற்றல் (தவக்கல்) பற்றி குர்ஆன், ஹதீது என்ன சொல்கிறதென இனி பார்ப்போம். கடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது அதை எழுதிக் கொள்ளவேண்டும். எழுதவேண்டிய வாசகத்தை கடன் வாங்கிய பொறுப்பு யாருக்குள்ளதோ அவர் கூறவேண்டும். (2:282). மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொண்டார் (3:37). அநாதைகளைப் பரிபாலிக்க பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் (4:6) இனனும் இது போன்ற ஆயத்துக்களில் ஒவ்வொரு மனிதருக்குமுள்ள குறிப்பிட்ட காரியங்களுக்கான பொறுப்புகள் பற்றி மட்டும் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். இதுபோன்ற ஆயத்துக்களுக்கு பொதுவான விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தந்திருப்பதை இப்போது பார்ப்போம்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பானவராவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஆண், தன்  குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவான். அவர்களைக் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள், ஒருவரின் பணியாள் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அது குறித்து அவன் விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி: 7138)

பொறுப்பு பற்றியுள்ள சில ஹதீஃதுகளை இப்போது காண்போம் :

  1. இறைத் தூதர்(ஸல்) அவர்கள், அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த தோழர்களில் ஒரு குழுவினரிடம், “அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை, திருடுவதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை, நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் பிறர் மீது அவதூறு கூறுவதில்லை. எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட எதையாவது ஒருவர் செய்து இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், அது அவருக்கு பரிகாரமாகிழ விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அதனை (யாருக்கும் தெரியாமல்) அல்லாஹ் மறைத்டது விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன்ட நாடினால் அவரை மன்னிப்பான், அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான் என்று கூறினார்கள். (பகாரி: ஹதீத் எண். 18)
  2. “நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம், அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விசயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்” (அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரழி), புகாரி எண். 391)
  3. அபூ மூஸா(ரழி) அவர்கள் மரணப் படுக்கையில் மயக்கம் அடைந்துவிட்டார். அப்போது அவரின் துணைவியார் உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரி வைத்து) அழுது கொண்டே வந்தார். பிறகு மயக்கம் தெளிந்தபோது, “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (துக்கத்) தலையை மழித்துக் கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக் கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலக்கிக் கொண்டேன்” (எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) என்று கூறியது உனக்குத் தெரியாதா? என்று அபூ மூஸா(ரழி) அவர்கள் (மரணத்தருவாயிலும்) கேட்டார்கள். (முஸ்லிம் : 167)
  4. “எந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், “இந்த நபி நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார் என்ற (33:6) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் செல்வரத்தை விட்டு சென்றால், அவரின் தந்தை வழி உறவினர்கள் அவர்கள் எவ்வகையினராயினும் சரி, அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! ஒரு கடனை விட்டுச் செல்கிறவர்கள், அல்லது மனைவிழ மக்களை விட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய பொறுப்பாளன் ஆவேன்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 4781)
  5. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குறைஷிகளும், அன்சாரிகளும், ஜுஹைனா, முசைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்தியேக உதவியாளர்கள் அவர்களுக்கு அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை” (முஸ்லிம்: 3504, அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி).

பொறுப்பு (தவக்கல்) பற்றி உயர்வான அல்லாஹு தஆலா அருளியுள்ள ஆயத்துக்களையும், எச்சரித்துள்ள ஆயத்துக்களையும் இப்போது காண்போம்.

நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை (தலக்கல் வைப்போரை) நேசிக்கிறான். (குர்ஆன் : 3:159) எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்திக் கொள்ளுங்கள். (தவக்கல் வையுங்கள்) (3:160). (நபியே!) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. பொறுப்பேற்பதில் (தவக்கல்) அல்லாஹ்வே போதுமானவன். (4:81)

அல்லாஹ்விடம் தான் பொறுப்ப வைக்க வேண்டும் என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகிறதேயல்லாமல், அஸ்ருத் தொழுகைக்குப் பிறகும், பஜ்ர் தொழுகைக்குப் பிறகும் சிறிது நேரம்ட அசி ஆசிரியர் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களின் காரியங்களுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறவில்லை.

பொறுப்பு (தவக்கல்) வைக்க வேண்டியது. அல்லாஹ்விடம் மட்டுமே என்ற ஏகத்துவத்தை கீழ்க்கண்ட இறை வசனம் தெளிவாக எச்சரித்திருப்பதைப் பாருங்கள். “நாம் நாடினால், உமக்கு வஹீயாக நாம் அறிவித்ததை போக்கிவிடுவோம். பின்னர் நமக்கு எதிராக பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர். (17:86)

கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை அல்லாஹ் நிச்சயமாக நேசிப்பதில்லை (4:107). அவர்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான் (4:108), நியாயத்தீர்ப்பு நாளில் பிறருக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்? அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவனட் யார்? (4:109) என்று அல்லாஹட் பொறுப்புகள் பற்றி கடுமையாக எச்சரிக்கின்றான்.

அல்குர்ஆன் இவ்வாறு அறிவித்திருக்கும் போது, குர்ஆனும், ஹதீஃதும் காட்டித்தராத தப்லீக் ஜமாஅத்தினரின் திக்ருகளுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்வதாக அசி புத்தகம் அசாதாரண துணிச்சலுடன் தெரிவித்திருக்கும் செயல் முஸ்லிம்கள் மார்க்கம் பற்றி ஒன்றும் தெரியாத முட்டாள்கள், மார்க்கம் என்று எதை சொன்னாலும் ஏற்றுக்  கொள்பவர்கள் என்று அசி ஆசிரியர் கணித்து செயல்படுகிறார் எனத் தெரிகிறது.

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை (11:6) மேலும், வானங்களிலும், பூமியிலுமுள்ள எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பில் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை கீழுள்ள இறை வசனங்கள் தெரிவிக்கின்றன.

“வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் அல்லாஹ்விடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன்(அந்த) காரியத்திலேயே இருக்கின்றான்(55:29). ஆகவே, நீங்கள் இரு சாராரும், உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:30)

பொறுப்புகள் பற்றி இப்படிப்பட்ட கடுமையான எச்சரிக்கைகள் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அசி புத்தக ஆசிரியர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி பொய்யான செய்திகளை மார்க்கமாக்கும் அவரின் தப்லீக் ஜமாஅத்திலிருக்கும் சகோதரர்கள் கீழ்க்கண்ட இறைவசனங்களைக் கண்ணுற்று அங்கிருந்து வெளியேறி அல்லாஹ்விடமம் அல்லாஹ்வின் தூதரிடமும் விரைவில் திரும்பி விடுவீர்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை பிறருக்கு சொல்பவனை விட பெரும் அக்கிரமக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி சொல்வோர் கூறுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் : 11:18)

நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கமாட்டான், அன்றி அவர்களை நேர்வழியிலும் செலுத்தமாட்டான். (4:168)

அசி ஆசிரியர் ஹதீதாகத் தந்துள்ள ஆதமுடைய மகனே! என்று ஆரம்பித்திருந்த செய்தியைப் படித்தவுடன்  ஹதீதுக்குண்டான எல்லா அம்சங்களும் பொருந்தி இருப்பதால் இதை ஹதீது என்று நம்ப முடிந்தது. “உன்னுடைய காரியங்களுக்கு அசி புத்தகம் காட்டும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக உள்ள வாசகம் எமக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. எனவே, இந்த ஹதீதை ஆய்வு செய்யவேண்டி இருந்தது.

நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீதுகளில், பொதுவாக வார்த்தைப் பிரயோகம் எப்படி அமைந்திருந்ததாக சஹாபாக்கள் அறிவித்தார்களோ, அதுபோன்ற வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து தமது பொய் செய்திகளை ஹதீஃத் போல ஜோடனை செய்து, படித்த மாத்திரத்தில் படிப்பவர்களை ஹதீத் என்று நம்ப வைத்து விடுவார் அசி ஆசிரியர் ஜக்கரிய்யா அவர்கள், அதனால் தான் அவரை நாம் “ஜெகஜால கில்லாடி” அதாவது உலகிலுள்ள தந்திரங்களை (ஜாலக்) எல்லாம் கற்றுத் தேர்ந்தவர் என்று கூறி வருகிறொம்.  இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Previous post:

Next post: