அறிந்து கொள்வோம்!

in 2021 பிப்ரவரி

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்.

 1. காய்ச்சல் எதனால் உண்டாகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நரகத்தின் வெப்பக்காற்றால் உண்டாகிறது. அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), புகாரி : 5723
 2. தொற்று நோய் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன?
  தொற்று நோய் என்பது கிடையாது என கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி : 5717
 3. சொர்க்கச் சோலைகளை யாருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்?
  நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் சுவனங்களை வாக்களித்துள்ளான். அல்குர்ஆன் : 9:72
 4. எது சிறந்த தர்மம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த  தர்மம் ஆகும். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 5356)
 5. தர்மத்தை யாரிடமிருந்து ஆரம்பம் செய்யவேண்டுமட் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  முதலில் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யவேண்டும். ஆபூஹுரைரா(ரழி), புகாரி: 1426
 6. ஈஸா நபி குழந்தையாக இருந்தபோது என்ன பேசினார்?
  நான் அல்லாஹ்வுடைய அடியான் என்னை நெறிநூல் கொடுத்து நபியாகவும் ஆக்கி இருக்கின்றான். அல்குர்ஆன்:19:30
 7. யார் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாமல் மறுமை நாளில் வருவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன். இப்னு உமர்(ரழி), புகாரி :1474
 8. யார் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள். கவுத்(ரழி), புகாரி: 1877
 9. இதுவும் ஒரு தர்மம் என எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு சரியான வழி தெரிவிப்பதும் கூட ஒரு தர்மமாகும். அபூஹுரைரா(ரழி), புகாரி : 2891
 10. இஸ்லாத்தில் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது. அபூஹுரைரா(ரழி), பூகாரி : 11.
 11. நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாக பயன்படுத்திய வார்த்தை எது?
  உள்ளங்களை புரட்டுபவன் மீது ஆணையாக என்பதாகவே இருந்தது.  அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), புகாரி : 7391
 12. யார் அநீதி இழைத்தவன் என அல்லாஹ் கூறுகிறான்?
  அல்குர்ஆனின் வசனங்கள் மூலம் அறிவுரையை புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவன்.  குர்ஆன் : 18:57
 13. இஸ்லாமிழய பண்புகளில் சிறந்தது என என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  பசித்துவருக்கு உணவளிப்பதும், நீர் அறிந்தவர்க்கும், அறியாதவர்க்கும் ஸலாம் கூறுவதுமாகும்.  அப்தில்லாஹ்(ரழி), புகாரி: 12
 14. யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்பவன்.  இப்னு உமர்(ரழி), அபூதாவூது : 2629
 15. யார் காலமெல்லாம் நோன்பு நோற்றவர் போன்றவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  ரமழான் மாத நோன்பும், அதனை பின்தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நோன்பும் நோற்றவர்.  அபூ அய்யூப் அல் அன்சாரி(ரழி), முஸ்லிம் : 2159
 16. அந்நாளில் பொய்பிப்போருக்கு கேடுதான் என 10 முறை அல்லாஹ் எச்சரிக:கும் வசனங்கள் வரும் சூரா எது?
  அத்தியாயம் : 77, அல்முர்ஸலாத்(அனுப்பப்படுபவை) 77:15,19:24,28,34,37,40,45,47,49
 17. அல்குர்ஆனை எவ்வாறு இறக்கி வைத்ததாக அல்லாஹ்  கூறுகிறான்?
  சிறிது சிறிதாக உம்மீது இறக்கி வைத்தோம். அல்குர்ஆன் : 76:23
 18. மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியன என்று கூறும் வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது?
  அல்ஜின்(ஜின்இனம்) அல்குர்ஆன் : 72:18
 19. எனது இரட்சகனே! நிராகரிப்பாளர்களில் எவனையும் இப்பூமியில் வசிக்கவிட்டு விடாதே என பிரார்த்தனை செய்த நபி யார்?
  நூஹ்(நபி). அல்குர்ஆன் : 71:26

Previous post:

Next post: