இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?
அபூ அப்துல்லாஹ்
தொடர் – 6
மறு பதிப்பு :
பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலப்பது போல் இந்தப் புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீதுக்கு முரணான மார்க்க முரணான மூடச்சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், உஸ்தாது(ஆசிரியர்) குருட்டு பக்தியையும் வஞ்சகமாக சிறுவர், சிறுமியர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதித்து விடுகிறார்கள் என்ற விபரத்தைத் தொடர் ஐந்தில் விளக்கி இருந்தோம். அவர்களின் வஞ்சகப் புத்தி அத்துடன் முடிந்து விடுவதில்லை. மேலும் தொடர்கிறது.
இவர்களின் அரபி கல்லூரிகளுக்கு(?) சென்று பயிலும் மாணவர்களிடம் மேலும் உஸ்தாது – குருபக்தியை வளர்க்கும் கெட்ட நோக்கத்துடன் சில கட்டுக்கதைகள் நடந்த உண்மைகளாக மாணவ உள்ளங்களில் பதிய வைக்கப்படுகின்றன. இவர்கள் தங்களின் சாதாரண மதரஸாக்களை – அதிலும் குர்ஆன், ஹதீதை போதிக்காமல் மனிதக் கற்பனைகளை பிக்ஹு – மார்க்கச் சட்டம் என்ற பெயரால் போதிக்கும் மதரஸாக்களை கல்லூரிகள் என்று அழைத்துக் கொள்வதே பெரிய ஏமாற்று வேலைதான்.
இன்று தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் பாடசாலைகளை உற்றுநோக்குங்கள், எல்.கே.ஜி. யூ.கே.ஜி. ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி என வகைப்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம். ஒரு மாணவன் ஒரு கல்லூரிக்குள் நுழைவதாக இருந்தால் எல்.கே.ஜி., யூகே.ஜி. போன்ற மழலைகளின் பள்ளிகளில் ஓரிரு ஆண்டுகளைக் கழித்த பின் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரைப் படித்து அரசுப் பரீட்சையில் தேறி அதன் பின்னர் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு என இரண்டு ஆண்டுகள் படித்து அதிலும் அரசுத் தேர்வில் தேறிய, பின்னரே கல்லூரிக்குள் நுழைய முடியும். எல்,கே.ஜி., யூ.கே.ஜி. சேர்க்காமலேயே 12 ஆண்டுகள் செலவிட்டாக வேண்டும்.
ஆனால் அரபி கல்லூரிகளிலுள்ள அதிசயம் ஒரு மாணவன் எல்,கே.ஜி. யூ.கே.ஜி.க்கு ஒத்த பொருள் அறியாமல் குர்ஆன் ஓதி முடித்தவுடன் இவர்களின் அரபி கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அங்கு அவன் ஏழு ஆண்டுகள் குப்பை கூட்டினாலும் போதும், அவனுக்கு மவ்லவி பட்டம் கிடைத்து விடும். மற்றபடி பாடங்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மாணவர்கள் திறமை மிக்கவர்களாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் போன்ற நல்ல முயற்சிகள் பெரும்பாலான அரபி கல்லூரிகளில் இருப்பதில்லை. தலைகளைக் காட்டி மக்களிடம் வசூல் செய்து தங்களின் பிழைப்பை ஒட்டவேண்டும் என்ற தவறான எண்ணமே மேலோங்கிக் காணப்படும். எனவே தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரபி கல்லூரிகளையும் ஒன்றிணைத்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை வகுத்து, ஒரே விதமான முறையில் பரீட்சைக்குரிய கேள்விகளை தயாரித்து, அவற்றை முறையாக எழுதிழ தேர்வு பெறுகிறவர்களுக்கு மட்டுமே மவ்லவி பட்டம் கொடுக்க வேண்டுமட் என்ற நியாயமான கோரிக்கையை பெரும்பாலான அரபி கல்லூரிகள் ஏற்கமாட்டார்கள். இது நாம் 1978ல் நம் சொந்த அனுபவத்திலேயே கண்ட உண்மையாகும்.
இப்படிப்பட்ட அரபி கல்லூரிகளில் படித்து வெளிவரும் மவ்லவிகளி்ன் தரம் எத்தரமாக இருக்கும் என்பதைச் சொல்லியா விளங்க வேண்டும். அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் பாட நூல்களில் ஒன்றுதான் “தஃலீமுல் முத்த அல்லிம்” என்ற பாட நூல், இதில் ஒரு கட்டுக்கதை மூலம் மாணவர்களின் உள்ளங்களில் உஸ்தாது – குரு – குருட்டுப் பக்தி திணிக்கப்படுகிறது. அது வருமாறு :
ஒரு உஸ்தாது வகுப்பறையில் பாடம்ட நடத்திக் கொண்டிருந்தார். அப்படிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒருபோதும்ட இல்லாத வகையில் அவர் உட்காருவதும் எழுவதுமாக டிரில் செய்து கொண்டிருந்தார். இது மாணவர்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனவே மாணவர்கள் தங்கள் உஸ்தாதிடம், “உஸ்தாத் அவர்களே பாடம் நடத்தும் போது, வழக்கத்துக்கு விரோதமாக நீங்கள் உட்காருவதுமட், எழுவதுமாகப் பாடம்ட நடத்துகிறீர்களே? ஏஎன்? என கேள்விக் கணை தொடுத்தார்களாம். அதற்குப் பதிலாக அந்த உஸ்தாது, “எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உஸ்தாது – ஆசிரியர் அவர்களின் மகன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்தப் பக்கம் வந்து எனது பார்வையில் பட்டவுடன், நான் மரியாதையின் நிமித்தம் எழுந்து நிற்கிறேன். அவர் அந்தப் பக்கம் சென்று என் கண்ணிலிருந்து மறைந்தவுடன் உட்கார்ந்து கொள்கிறேன். இப்படி நான் என் உஸ்தாதின் மகனுக்கு மரியாதை செய்வது எனது உஸ்தாதுக்கு மரியாதை செய்வதாக ஆகும்” என்று விளக்கம் கூறினாராம்.
கற்பனை எந்த அளவு வளமாக இருக்கிறது பார்த்தீர்களா? இப்படி எல்லாம் மூளைச்சலவைச் செய்யப்பட்டு மவ்லவிகளாகி வெளியே வருவதால்தான், இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன், நான் நூறு கிதாபைப் பார்ப்பதைவிட அது மிழக் பெரிய ஆதாரமாகும்” என்று தமிழகத்தின் மிகப் பெரும் பேச்சாளராகவும், பேரறிஞராகவும் முஸ்லிம்களால் மதிக்கப்படக் கூடிய மவ்லவி ஒருவரே சொல்லும் அவல பரிதாப நிலை ஏற்படுகிறது.
இப்படிக் குருட்டு உஸ்தாது குரு பக்தியோடு மதரஸாவை விட்டு வெளிவரும் மவ்லவிகள் தாங்கள் இமாம்களைப் பணிபுரியும் பள்ளிகளுக்குத் தொழவரும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் இந்தக் குருட்டு உஸ்தாது – மவ்லவி பக்தியை தந்திரமாக வளர்த்து விடுவதால், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியராக இந்த மவ்லவிகளிடம் பொருள் அறியாமல் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளும்போது தந்திரமாகப் பசுமரத்தாணிபோல் பதித்து விடுவதால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்களும் இந்த மவ்லவிகளுக்கு அடிமைப்பட்டு, அவர்களின் தவறான – ஷிர்க்கான – பித்அத்தான செயல்களையும் வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டு வழிகெட்டுச் செல்கிறார்கள்.
இப்படி ஒருபுறம் முஸ்லிம் சமுதாயத்தை வழிகேட்டில்ட இட்டுச் செல்வது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த மவ்லவிகளின் வாயில் விழுந்து விடக்கூடாது. அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள், அவர்கள் நம்மீது கோபப்பட்டால் அல்லாஹ்வும் நம்மீது கோபப்படுகிறான். அவர்கள் சாபமிட்டால் அது உடனே பலித்துவிடும் என்றெல்லாம் மூட நம்பிக்கையை முஸ்லிம்களிடையே வளர்த்து அவர்களைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்தப் புரோகித முல்லாக்கள், உணர்வு ஜூலை 9:15,2004 இதழ் பக்.15ல் சாமியார்களை தோலுரிதுக் காட்டும் பதிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
சாமியார்களிடம் மனிதர்கள் ஏமாறுவதற்கு காரணங்கள் இரண்டுதான்.
சாமியார்களாக நடமாடுபவர்களுக்கு கடவுள் தன்மை உள்ளது. கடவுள் செய்வதையெல்லாம் அவர்களும் செய்வார்கள் என்று மக்களை நம்புவது முதல் காரணம்.
சாமியார்களிடம் கடவுள் தன்மை கிடையாது. ஆயினும் அவர்கள் கடவுளின் அன்பைப் பெற்றவர்கள். எனவே அவர்களின் விருப்பத்தை கடவுள் பூர்த்தி செய்து கொடுப்பார் என்று மக்கள் நம்புவது மற்றொரு காரணம்.
இந்த இரண்டு நம்பிக்கைகளையும் இஸ்லாம் தவறு என்று பிரகடனம் செய்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.
அவர்கள் எழுதி இருப்பது போல் இஸ்லாம்தான் இது தவறு என்று பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினரும், புரோகித முல்லாக்களும் இந்த நம்பிக்கையில்தான் இருக்கிறார்கள்.
மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என்றெல்லாம் இந்தப் புரோகிதர்கள் தங்களை அழைத்துக்கொள்கிறார்களே இவற்றில் அவர்கள் மறைமுகமாக எதை உணர்த்துகிறார்கள்.
மவ்லவி என்றால் கடவுளைச் சேர்ந்தவன். (அல்குர்ஆன் : 8:40, 22:78)
மவ்லானா என்றால் கடவுளையே குறிக்கிறது. (அல்குர்ஆன் : 2:286)
ஹஜ்ரத் – ஹழரத் – சந்நிதானம் இதுவும் கடவுளைச் சேர்ந்தவர் என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.
இவற்றின் பரிணாம வளர்ச்சியே இன்று ஹிந்துக்களிடம் காணப்படும். மேலே உணர்வு இதழில் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் தவறான நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கையை புரோகித முல்லாக்கள் முஸ்லிம்களிடையேயும் புகுத்தி விட்டார்கள். அதனால்தான் இநதப் புரோகித மவ்லவிகள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே வேதவாக்காகக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுச் செயல்படுகிறார்கள் முஸ்லிம்கள். அதனால் குறைஷ்களைப் போல் நரகின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.
இதைவிட இன்னும் பெரிய கொடுமை, இந்தப் புரோகித முல்லாக்களில் சிலர் தட்டு, தாயத்து, மந்திரம், தந்திரம் என சில சித்து வேலைகளைச் செய்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். சூன்யம் செய்வதாகவும், எடுப்பதாகவும் சொல்லி மக்களை மயக்கி ஏமாற்றி வருகிறார்கள் மக்களும் அவர்களைக் கொண்டு தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் செய்வது மிகத் தவறான செயல், பாவமான செயல் என்று தெளிவாக அறிந்திருந்தாலும் அதைக் கண்டிக்கத் துணிவதில்லை. சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபல மவ்லவிகளும் அப்படிப்பட்டவர்களு்ககு அஞ்சுவதையே பார்க்க முடிகிறது.
அந்நஜாத்தின் ஆரம்ப காலத்தில் நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த “ஹம்ஸா தங்கள்” என்ற மவ்லவழி இந்த மந்திந தந்திரங்களில் பெயர் போனவர். ஒருமுறை ஒரு ஊரில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக இறந்து கபுருகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் நம்முடைய தேவைகளைக் கேட்டுப் பெறலாம் என்று பேசியதாக செய்தி வந்தது. எனவே அதைக் கடுமையாகக் கண்டித்து அந்நஜாத்தில் எழுதினோம். அதற்கு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அவர் அனுப்பினார். வழக்கைச் சந்திக்கத் தயார் என்று பதில் நோட்டீஸ் அனுப்பினோம். அத்தோடு கப்சிப், பேச்சு மூச்சைக் காணோம். இது பற்றி ஒரு சமயத்தில் தர்கா சடங்குகளைத் தவறு என்று கண்டிக்கும் நெல்லையைச் சேர்ந்த ஒரு மவ்லவியிடம் பேசும்போது, இப்படிப்பட்டவர்களை எல்லாம் எப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? அவர் ஒரு மாந்திரீகர், அவர் வாயில் விழுந்து வம்பை விலைக்கு வாங்க முடியுமா? என்று கேட்டார். ஒரு மவ்லவியே இந்த அளவு மாந்திரீக மவ்லவிகளைக் கண்டு அஞ்சும்போது, சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
இப்படி உண்மையிலேயே அந்த மாந்திரீகளிடம் அந்த மவ்லவி பயந்துகொண்டும் இருக்கலாம். அல்லது தங்களின் புரோகித இனத்தைக் காட்டிக் கொடுக்காமல் தக்கவைத்துக் கொள்ளும் தவறான எண்ணத்திலும் அவ்வாறு கூறி இருக்கலாம். எது எப்படியோ புரோகித முல்லாக்கள் குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முரணாக மக்களை ஏமாற்றி வஞ்சிப்பவர்களே, நரகில் கொண்டு தள்ளுபவர்களே.
இந்த இடைத்தரகர்களாகிழ புரோகித மவ்லவிகளின் உடும்புப் பிடியிலிருந்து இந்த முஸ்லிம் சமுதாயம் விடுபடாதவரை, மற்ற மதத்தினருக்கு மறுமையில் என்ன கூலி கிடைக்குமோ அதே கூலியைத்தான் இந்த முஸ்லிம் மதத்தினரும் பெறுவார்கள். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்வதாலோ, குர்ஆன், ஹதீதைத்தான் பின்பற்றுகிறோம் என்று வாயளவில் சொல்வதாலோ மறுமையில் எப்பயனுமில்லை. அவர்கள் குர்ஆன், ஹதீதை பின்பற்றுகிறோம் என்று சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், அவர்கள் இறைவனின் இறுதி நெறிநூலான – மானிட வழிகாட்டியான அல்குர்ஆன் 7:3ல் கட்டளையிட்டிருப்பது போல், இந்த புரோகித மவ்லவிகளை தங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்கள் சொல்வது போல் செயல்படக்கூடாது. அவர்களுக்கு மார்கத்தில் எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
அதிலும் குறிப்பாக மார்க்த்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்கள், தொண்டைத் தொழிலாக்கித் தங்களின் தொப்பைகளை நரக நெருப்பால் நிரப்பும் புரோகிதப் பண்டாரங்கள் ஒருபோதும் நேர்வழியில் இருக்கமுடியாத. அவர்கள் நேர்வழியைத் திரித்துக் கோணளாக்குவார்கள். மக்களை வழிகெடுப்பார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுவார்கள் என்பதை இறுதி நெறிநூல் அல்குர்ஆனின் 2:41, 79,159,160,161,162,174 இறைவாக்குகளை படித்து விளங்கிக் கொள்பவர்கள் மறுக்காமல் ஒப்பக் கொள்வார்கள்.
மார்க்கத்தைப் பிழைப்பாக்கி – தொண்டை தொழிலாக்கி தொப்பையை நிரப்பும் புரோகித மவ்லவிகள், தங்களின் சுயநலனுக்காக – அற்ப உலக ஆதாயத்திற்காக, அல்லாஹ் தனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக – நேரடியாக அனைத்து மனிதர்களுக்கும் விளக்கி இருக்கும் நிலையில், அந்த இறைவாக்குகளை திரித்து, வளைத்து, மறைத்து சுயவிளக்கம் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். மார்க்கத்தைப் பிழைப்பாக்கியவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. தாங்கள் மறைத்த உண்மையை அல்லாஹ்வுக்குப் பயந்து மன்னிப்புக் கேட்டு உள்ளது உள்ளபடி சொல்லவும் முன்வரமாட்டார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபத்திற்குரியவர்கள் என்று அல்குர்ஆன்: 2:161 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறுகிறது. எனவே இந்த மவ்லவி புரோகிதர்களை எந்த அளவு கடுமையாகத் திட்டினாலும், சபித்தாலும், அவர்களது தில்லுமுல்லுகளை தோலுரித்துக் காட்டினாலும், அம்பலப்படுத்தினாலும் இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பிரியமான செயல்களே அவனிடம் நற்கூலி பெற்றுத்தரும் நன்மையான செயல்களே என்பதை புரோகிதர்கள் அல்லாத முஸ்லிம்கள் உணரவேண்டும் இது காலத்தின் கட்டாயமாகும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)