முஸ்லிம்களில் தூய்மையாளர் யார்?

in 2021 பிப்ரவரி

முஸ்லிம்களில் தூய்மையாளர் யார்?

அபூ உஸ்மான், சென்னை.

உலகத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் தங்களை முஸ்லிம் என்று மட்டுமே அழைத்துக் கொள்ளவேண்டும். வேறு எந்தப் பெயரையும் வைத்து இந்த உலகத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு வசனம் பாருங்கள்.

எவர் அல்லாஹ்வின் பாதையில் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார்?”  (அல்குர்ஆன் : 41:33)

குறிப்பாக, தமிழக முஸ்லிம்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம். தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை எல்லோருமே அல்லாஹ்வை முழுமையாக விளங்கி வழிபடக்கூடியவர்களா? என்று ஆராய்ந்து பார்த்தால் “இல்லை” என்ற பதில் தான் வரும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? மார்க்க அறிஞர்கள் (7 வருஷமோ, 5 வருஷமோ, 4 வருஷமோ) தவறான விளக்கங்களின் அடிப்படையில் போதிக்கப்பட்டு, “விளக்கம் சொல்கிறேன்” என்ற போர்வையில் குர்ஆன் வசனங்களுக்கு தன் மனோ இச்சைப்படி விளக்கம் கொடுத்ததே காரணம் என்பதை உறுதியிட்டு சொல்லமுடியும்.

மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிழய மார்க்கத்தை குர்ஆனின் வழிமுறையிலும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலும் போதிக்காத காரணத்தினால்தான் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களில், வணக்க வழிபாடுகளில் மாற்றுமத கலாச்சாரங்கள் புகுந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. மக்களைப் பொறுத்த வரை (முஸ்லிம்கள்) உலகத்தின் மீது அதிகமான ஆசை உடையவர்களாகவும், மறுமையைப் பற்றிய சிந்தனை குறைவாக உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்தத் தகுதி உடையவர்களைத்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையினராகப் பார்க்க முடிகின்றது.

இந்த நிலைமையில், ஜும்ஆவுக்கு மட்டும் பள்ளிவாசலுக்கு வரக்கூடிய மக்களிடத்தில் “உண்மையான ஏகத்துவத்தை” போதிப்பதற்குப் பதிலாக மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் பட்டம் வழங்கியவர்கள். தன்னுடைய வயிற்றுப் பிழைப்பின் காரணத்திற்காக மார்க்கத்தில் இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி, தூய்மையான மார்க்கத்தில் தொழிலை கலந்து மார்க்கத்தில் சாக்கடையைக் கலந்து விட்டார்கள். இந்த சாக்கடையைக் கலந்து விட்டார்கள். இந்த சாக்கடையைக் கலந்ததன் காரணத்தினால், இன்று முஸ்லிம்கள் என்றால் யார்? மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் யார்? என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒன்றிப்போய் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் “மார்க்கத்தைப் போதிக்க நாங்கள்தான் தகுதியானவர்கள்” என்று மார்தட்டிக் கொண்டு, தொப்பையை நிரப்ப மார்க்கத்தை பலியாக்கிய இந்த “புரோகிதர்கள்” என்றால் அது மிகையாகாது.

இதற்கு ஏராளமான சான்றுகள் சொல்ல முடியும். விருப்பமுள்ள புரோகிதர்கள் கட்டுரையாளரின் முகவரியோடு தொடர்பு கொள்ளலாம். மக்கள் பாவம்! முஸ்லிம்கள் ரசூல்(ஸல்) அவர்கள் மீது அதிகமான பாசம் வைத்திருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொண்ட இந்த மார்க்கப் புரோகிதர்கள் நபி(ஸல்) அவர்களை புகழ்வது என்று பொய்யுரைத்து ‘ஷிர்க்’கை தூண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை “மெளலூது மூலம்” தூண்டுகிறார்கள் என்பது உணர்ந்தவர்கள் அறிகின்ற விஷயம். முஸ்லிம் சமுதாய மக்களைப் பொறுத்தவரை அல்லாஹ் நன்மையைத் தருவான் என்று “மார்க்க அறிவிலிகள்” போதித்த காரணத்தினால், அதை அப்படியே நம்பி செயல்பட்டார்கள். செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சிந்திப்பவர்கள் குறைவு. சிந்தித்தவர்கள் இன்று “மார்க்க அறிவிலிகள்” கருத்தை உணர்ந்து திருந்தி உள்ளார்கள். திருந்திக் கொண்டும் இருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாய மக்களைப் பொறுத்தவரை சிலர் அல்லாஹ்வை முழுமையாக ஏற்று செயல்படுவார்கள். மற்றொரு சாரார், இன்னும் மார்க்க அறிவிலிகளின் போதனையில் கட்டுண்டு தன் வாழ்நாளையும், வணக்க வழிபாடுகளையும் கழித்துக் கொண்டு இருப்பார்கள். கத்தம், ஃபாத்திஹா ஓதினால், மலத்துக்குப் பிறகு ஓதிழனால் மெளலூது ஓதினால், தாயத்து கட்டினால், ஓதி ஊதி குடித்தால் நன்மை ஏற்படும் என்று மார்க்க அறிவிலிகள் போதித்த காரணத்தினால், இந்த முஸ்லிம் மக்கள் அதை அப்படியே நம்பி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

7 வருடம், 5 வருடம், 4 வருடம் ஓதிப் படித்து, ஸனது வாங்கியவர்களில் பிரச்சாரத்தால் வழிகெட்டு, முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து இறைவனுக்கு இணை வைக்கும் செயலை செய்து வருகின்றார்கள். இது  கிட்டத்தட்ட 1000 வருடத்துக்கு மேலாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம்.

சிலர் இன்று 2021ல் வந்து, யார் யாரெல்லாம் தாயத்து கட்டுகிறார்களோ, தர்காவுக்குப் போகிறார்களோ, இன்னும் பல அநாச்சாரங்கள் செய்கிறார்களே, அவர்களெல்லாம் “முஸ்லிம்” கிடையாது நாங்கள் மட்டும்தான் “பியூர் முஸ்லிம்” என்று ஃபத்வா கொடுப்பதன் மூலம் சமுதாயத்தைப் பிரித்து விடுகிறார்கள். உண்மையை உணர்ந்தவன் உணராதவர்களுக்கு உணர்த்துவது கடமை என்ற எண்ணம் போய், “தான் தான் சிறந்தவன்” என்ற எண்ணம் தலைதூக்கி இன்று சமுதாயம் கூறுபோடப்பட்டுள்ளது. இங்கே தவறு நடந்ததெல்லாம் மார்க்கத்தைப் பிழைப்பாக்கியவன் செய்த வேலையால் ஏற்பட்டது.  முஸ்லிம்களில் இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தவறு என்று விளங்கியவர்கள், “நான்தான் முஸ்லிம் மற்ற அனைவரும் காஃபிர், அவர்களோடு சேரமாட்டேன், சேர்ந்து தொழமாட்டேன். அவர்கள் பின்னால் தொழமாட்டேன் என்று கூறிக்கொண்டு செல்வது குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான செயல் என்பதை குர்ஆனையும், ஹதீதையும் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். “மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக” மூட்டைப் பூச்சியாக இருக்கின்ற மார்க்க அறிவிலிகளை கொளுத்தாமல், வீடாக இருக்கின்ற முஸ்லிம்களை கொளுத்துவது எந்த விதத்தில் நியாயம்? உண்மையை உணர்ந்தவர்கள், உணராதவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி தவ்பா செய்தார்களோ அப்படிச் செய்யாமல், தான் மட்டும் சிறந்தவன் என்று கூறித் திரிவதும், அறியாமையில் இருக்கும் மக்களை “காஃபிர்” என்று ஃபத்வா கொடுப்பதும் எவ்விதத்தில் நியாயம்? முஸ்லிம்களில் தானட் மட்டும் “தூய்மையாளர்’ – “ஏகத்துவவாதி என்று சொல்லுவது எவ்விதத்தில்ட நியாயம்”. முஸ்லிம் சமுதாயமே! நீ என்றைக்கு சிந்திக்கப் போகிறாய்?  அல்லாஹட் சொல்வதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்.

“நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள். யார் பயபக்தியாளன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்” (அல்குர்ஆன்:53:22)

இந்த ஆயத்தை சிந்திப்பீர்களா? ஏகத்துவவாதி” என்று சொல்பவருக்கே தனக்கு நரகமா? சொர்க்கமா? என்று தெரியாதே?

Previous post:

Next post: