இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2021 மார்ச்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

அபூ அப்துல்லாஹ்

தொடர் – 7

மறு பதிப்பு :

புரோகிதத்தை குருபக்தியை வளர்ப்ப தன் மூலம் மவ்லவிகளின் மூளை சலவை செய்யப்பட்டு, மனிதக் கற்பனைகள் நிறைந்த பிக்ஹு – சட்ட நூல்களை வேத வாக்குகளாக நம்பி தாமும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுக்கும் மிகமிக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் அவலத்தைச் சென்ற தொடரில் பார்த்தோம்.
அனைத்து வழிகேடுகளுக்கும் காரணம் புரோகிதமே!

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து சீர்கேடுகளுக்கும் அடிப்படைக் காரணம், மார்க்கத்தில் அனுமதி இல்லாத இந்தப் புரோகிதர்கள் கொல்லைப்புற இடுக்கு வழியாகச் சட்டவிரோதமாக இந்த சமுதாயத்தில் நுழைந்துகொண்டு, தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிரப்புவதேயாகும் என்பதை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திச் சொல்லி வருவதை இந்தப் புரோகிதர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களை அப்படியே குருட்டுத்தனமாக நம்பி அவர்கள் பின்னால் செல்லும் செல்வந்தர்கள், படித்தவர்கள், பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சட்ட வல்லுநர்கள், இன்னும் பலதரப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களிலிருந்து படிப்பறிவற்ற சாதாரண மக்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்தப் புரோகிதர்கள் இல்லை என்றால் இந்த முஸ்லிம் சமுதாயம் இப்போதிருக்கும் அதலபாதா ளத்திலிருந்து மேலும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். இந்தப் புரோகிதர்களே அதைத் தடுத்து நிறுத்தி வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் இன்று அடைந்திருப்பதைவிட ஒரு கீழான நிலை

இதற்கு கீழும் இல்லை என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.

புரோகிதர்கள் மானம், ரோஷம், சூடு சொரணை அற்றவர்கள் :

தொண்டை தொழிலாக்குவதன் மூலம் இந்தப் புரோகிதர்கள் எந்த அளவு மானம், ரோஷம், சூடு சொரணை அனைத்தையும் இழந்துவிட்டு மிகமிக அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு, இன்று தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கும், தொண்டை தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் புரோகிதர்களே உதாரணம்.

மார்க்கப்பணி தொழிலாக்கப்படாததற்குக் காரணம் இதுதான்?

எனவே தான் மனிதனைப் படைத்த இறைவன், மக்களுக்கு சத்திய மார்க்கத்தை – நீதி நெறியைப் போதிக்கும், இறைத்தூதர்கள் செய்த பணியை, அவர்கள் செய்து காட்டியது போல், மக்களிடம் கூலியை எதிர் பார்க்காமல் தொண்டுள்ளத்தோடு செய்யவேண்டும். மார்க்கப் பணியைப் பிழைப்பாக்கக் கூடாது. தொண்டைத் தொழிலாக ஆக்கக்கூடாது என்று இறுதி நெறிநூலில் பல இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான். காரணம் கூலிக்கு மாரடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் மனிதன் மானம், ரோஷம், சூடு சொரணை அனைத்தையும் இழந்துவிடுவான். பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்துவிடுவான். மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளத் தயங்கமாட்டான். இப்படிப்பட்ட எண்ணற்ற பாதகங்களை துணிந்து செய்வான்.

அதனால்தான் இவை அனைத்தையும் துள்ளியமாக அறிந்து வைத்துள்ள ஏகன் இறைவன், மார்க்கத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவதை மிகக் கடுமையாகத் தடுத் துள்ளான். மார்க்கத்தைப் பிழைப்பாக்கியவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் விலாவாரியாக விவரித்துள்ளான் இறுதி நெறிநூல் அல்குர்ஆனில்.

இறைவனது தெளிவான இந்த எச்சரிக்கைகளுக்கு முரணாக எப்படியோ, கொல்லைப்புற இடுக்கு வழியாக இந்தப் புரோகிதர்கள் இந்த முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டார்கள். நீண்ட நெடுங்கால மாகத் தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிறைத்து வருகிறார்கள். ஆண்டு அனுபவித்து வருகிறார்கள். இந்த அனுபவ உரிமையை இப்போது விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அவர்களது மனம் அதை ஏற்குமா? சமீபமாக அனுபவித்து வரும் உரிமையை இழக்க மனிதன் தயாரில்லை எனும்போது, இந்தப் புரோகிதர்கள் சுமார் (10) பத்து நூற்றாண்டுகள் (1000 ஆண்டுகள்) காலமாக ஆண்டு, அனுபவித்து வரும் உரிமையை இழக்கத் தயாராவார்களா? விட்டுக் கொடுக்க முன் வருவார்களா? சிந்தித்துப் பாருங்கள்.

ஒட்டுமொத்த சமுதாயத்தில் 3 சதவிகிதம் கூட தேறாத வழக்குரைஞர்களின் சொந்த இலாபத்திற்காக 97 சதவிகித மக்களின் பணத்தையும், நேரத்தையும் இழக்க வேண்டுமா? அதேபோல் முஸ்லிம் சமுதாயத்தில் 3 சதவிகிதம் கூட தேறாத இந்தப் புரோகித முல்லாக்களின் வயிற்றுப் பிழைப்புக்காக 97 சதவிகித முஸ்லிம்கள் தங்களின் பணத்தையும் இறை விசுவாசத் தையும் இழந்து வழிகெட்டு நரகில் போய் விழவேண்டுமா? சிந்தியுங்கள்.

செல்வத்தை மட்டுமல்ல, இறை விசுவாசத்தையே அபகரிக்கும் தீச்செயல்!

வழக்குரைஞர்களாவது மக்களின் அற்பமான இவ்வுலக செல்வங்களில் மட்டுமே நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப் புரோகித முல்லாக்களோ முஸ்லிம்களின் இவ்வுலக செல்வங்களில் மட்டுமல்ல, அழிந்துபடாத எல்லையே இல்லாத மறு உலக வாழ்க்கைக்கே வேட்டு வைக்கிறார்கள். இதை இறைவனின் இறுதி நெறிநூல் இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது.

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் , ஆ! கை சேதமே! நாங்கள் இறைவனை வழிபட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே” என்று கதறுவார்கள்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரி யார்களுக்கும் (அதாவது புரோகித முல்லாக் களுக்கு) வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப் பாயாக” என்பார்கள்.
அல்குர்ஆன் : 33:66,67,68

மறுமையில் முஸ்லிம்கள் இப்படிச் சாபம் இட்டாலும், இடாவிட்டாலும் புரோகித முல்லாக்கள் மிகக் கடுமையான தண்டனைகளை அனுபவிக்கப்போவது உறுதி என்பதை 2ம் அத்தியாயம் அல்பகரா 159 முதல் 162 வரையுள்ள இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

“யார் (சத்தியத்தை மறைத்து) நிராகரிக்கிறார்களோ, இன்னும் அதே நிலையில் மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள்மீது, இறைவனதும், மலக்குகள தும், மனிதர்களதும் ஆக அனைவர்களதும் சாபம் உண்டாகும்”

“அவர்கள் அ(ச்சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள், அவர்களது வேதனை எளிதாக்கப்படாது, மேலும் அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்பட மாட்டாது”. (2:161,162)

புரோகிதர்கள் நாளை தப்ப முடியாது !

மார்க்கத்தை மறைத்து வயிறு வளர்க்கும் இந்தப் புரோகித முல்லாக்கள் நாளை தப்பமுடியாது. அனைவரது சாபத்துடன் மிகக் கடுமையான வேதனையும் காத்திருக் கிறது என்பது அப்பட்டமான உண்மைதான். அதே சமயம் இவ்வுலகில் அவர்களை நம்பி கண்மூடிப் பின்பற்றிய முஸ்லிம்களும் நாளை நரக வேதனையிலிருந்து தப்பமுடியாது என்பதையே 7:3,33:66,67,68 இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அங்கு போன பின்னர் அழுது புலம்புவதாலோ, புரோகிதர்கள் மீது சாபமிடுவதாலோ இவர்களுக்கு எவ்வித இலாபமும் இல்லை, இவர்களுக்கு நரகிலிருந்து விடுதலையும் கிடைக்காது. நரக வேதனைகளிலிருந்து தப்பவேண்டும் என்றால், இவ்வுலகிலேயே இப் புரோகிதர்களை அடையாளம் கண்டு, அவர்களின் மாய வசீகர வலையிலிருந்து விடுபட்டு விடவேண்டும். சுய சிந்தனையுடன் குர்ஆன், ஹதீஃதை நேரடியாக விளங்கிப் பின்பற்ற வேண்டும்.

புரோகித தந்திரம்!

இந்தப் புரோகித முல்லாக்கள் இறை வனது இறுதி நெறிநூலான அல்குர்ஆனில் தங்களின் கைவரிசையைக் காட்டும் கெட்ட எண்ணத்துடன் அல்குர்ஆனில் அடிப்படை வசனமான மூன்றாம் அத்தியாயம் – ஆலஇம்ரான் 7ம் வசனத்தைத் தங்கள் மனம் போன போக்கில் திரித்து வளைத்துப் பொருள் எழுதுகிறார்கள். அல்குர்ஆனின் அடிப்படை வசனங்களான “முஹ்க்கமாத்” வசனங்களை முகல்லிது புரோகித மவ்லவி கள் விளக்கமான வசனங்கள் என்றும் தவ்ஹீது புரோகித மவ்லவிகள் உறுதியான வசனங்கள் என்றும் மொழி பெயர்த்து எழுதி வருகின்றனர். சிலர் தெளிவான வசனங்கள் என்று மொழி பெயர்த்துள்ளனர். இப்படி மொழிபெயர்ப்பதால், அந்த “முஹ்க்கமாத்” வசனங்களுக்கு இந்தப் புரோகித மவ்லவிகள் அவர்கள் விரும்பியவாரெல்லாம் பொருள் எழுத நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

இப்படி மொழி பெயர்ப்பது கொண்டு அல்குர்ஆனில் முத்தஷாபிஹாத் விளக்கமற்ற உறுதியற்ற, தெளிவற்ற வசனங்களும் இருக்கின்றன என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இப்படி ஒரு கற்பனையை இவர்களாக ஏற்படுத்தியுள்ளதால், தவ்ஹீத் மவ்லவி அல்குர்ஆனில் விளக்கமற்ற, விளங்க முடியாத வசனங்களும் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி “முத்தஷாபிஹாத்” வசனங்களின் விளக்கத்தை கல்வி அறிவில் சிறந்தவர்களும் அறிவார்கள் என்று மனம் போன போக்கில் மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புரோகிதர்கள் அனைவரது அசல் நோக்கமும் அல்குர்ஆனுக்கு தங்கள் மனம் போன போக்கில் விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றி இவர்கள் வயிறு வளர்க்க வேண்டும் என்பதே.

3:7 இறைவாக்கின் உண்மையான பொருள்!

ஆனால் இந்த 3:7 இறைவாக்கின் உண்மையான பொருள் என்னவென்றால் “முஹ்க்கமாத்’ வசனங்கள் என்றால் குறிப்பான ஒரே பொருளைத்தரும் நேரடி வசனங்கள். அவற்றில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை என்பதேயாகும். எனவே தங்களை மவ்லவிகள்-ஆலிம்கள்-அறிஞர்கள் என்று பீற்றிக் கொள்ளும் இந்தப் புரோகித முல்லாக்கள், தஃப்ஸீர் என்ற பெயரால் அல்குர்ஆனின் “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு வெவ்வேறு விளக்கங்கள் எழுதி ஏட்டை நிரப்பி இருப்பது அத்தனையும் கடைந்தெடுத்த வழிகேடுகளேயாகும். மாறாக “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு விளக்கங்கள் அவற்றின் நேரடி, மொழி பெயர்ப்புகள் எவையோ அவை மட்டுமே யாகும். அவற்றில் ஒருசில வசனங்களுக்கு வேறு விளக்கம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்தும் அதிகாரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாருக்கும் இல்லவே இல்லை என்பதை 5:67, 16:44,64, 33:36 இறைவாக்குகள் நெத்தியடியாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. முஹ்க்கமாத் வசனங்களுக்கு வேறு வேறு விளக்கங்கள் கொடுக்கும் அனைவரும் ஆணோ, பெண்ணோ பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை 33:36 இறை வாக்கு கனகச்சிதமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஒரு பொருளுக்கு மாறாக ஒன்றுக்கு மேல் பொருள்கள் “முத்தஷாபிஹாத்”

அல்குர்ஆனிலுள்ள இரண்டாவது வகை “முத்தஷாபிஹாத்” வசனங்களாகும். முத்தஷாபிஹாத் வசனங்கள் என்றால் ஒன்றுக்குமேல் பொருள்கள்படும் வசனங் களாகும். தவ்ஹீத் மவ்லவி இரு கருத்தைத் தரும் வசனங்கள் என்று மொழி பெயர்த்திருக்கிறார். பிற எல்லா மொழிகளிலும் ஒருமை, பன்மை என்று மட்டுமே இருக்கும் நிலையில் அரபியில் மட்டுமே ஒருமை, இருமை, பன்மை என மூன்று நிலைகள் உள்ளன. ஆனால் இந்த 3:7 இறைவாக்கின் முத்தஷாபிஹாத் பற்றிச் சொல்லும் வசனத்தில் இருமைக்குரிய அரபி பதமே இல்லை. இந்த நிலையில் அரபி பண்டிதர் என பீற்றிக் கொள்ளும் அவர் இரு கருத்தைத்தரும் வசனங்கள் என்று எப்படி மொழி பெயர்த்தாரோ? அவருக்கே வெளிச்சம்.

அது மட்டுமல்ல, இந்த முத்தஷா பிஹாத் வசனங்கள் விளங்க, அறிய முடியாது என்று யாரோ சொல்வது போல் அவராகக் கற்பனை செய்து கொண்டு, அப்படிப்பட்ட வசனங்கள் குர்ஆனில் இருக்க முடியுமா? என்று அவராகவே கேள்வி எழுப்பிக் கொண்டு, எனவே கல்வி அறிவுடையோரும், முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை அறிவார்கள் என்று அபத்தமான – வழிகேட்டிலும் பெரிய வழிகேடான ஒரு மொழி பெயர்ப்பைத் தந்துள்ளார். அல்லாஹ்வும், அறிவுடையவர்களும் சமம் என பிதற்றியுள்ளார்.

ஏனிந்த  குழப்ப  நிலை?

நாம் முன்னரே குறிப்பிட்டிருப்பது போல் இந்த 3:7 வசனத்தில் விளக்கமான-விளக்கமற்ற, தெளிவான – தெளிவற்ற, உறுதியான-உறுதியற்ற, அறிய முடிந்த-அறிய முடியாத போன்ற கருத்துக்களில் முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத் வசனங்கள் இல்லவே இல்லை. மாறாக முஹ்க்கமாத்-ஒரே பொருளைத்தரும் குறிப்பான வசனங்கள் என்றும் முத்தஷாபிஹாத்-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைத் தரும் வசனங்கள் என்றுமே சொல்லப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தரும் வச னங்களை ஒரே பொருளைத்தரும் வசனமாக்கி அதைப் பின்பற்றும் செயலை, உள்ளத்தில் வழிகெட்ட எண்ணமுள்ள வழிகேடர்களே செய்வார்கள் என்றும் இந்த 3:7 இறைவாக்கு கூறுகிறது. இன்னும் அப்பட்டமாகச் சொன்னால் “முத்தஷாபிஹாத்” வசனங்களை முஹ்க்கமாத் வசனமாக்கும் அல்லாஹ்வுடைய அந்த தனி அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு வழிகேட்டில் செல்வார்கள் என்று இந்த 3:7 இறைவாக்கு கூறுகிறது. இந்த நிலையில் ஒன்றுக்கு மேல் பொருள்தரும் வசனங்களை முத்தஷாபிஹாத் வசனங்களை குறிப்பான ஒரே பொருளைத்தரும் முஹ்க்கமாத் வசனங்களாக்கும் தகுதி கல்வியறிவுடை யோருக்கும் உண்டு. அதாவது அல்லாஹ்வுடைய இந்தத் தனிஅதிகாரம் கல்வியறிவு உடையவர்களுக்கும் உண்டு என்று இந்த தவ்ஹீத் மவ்லவி வாதிடுவதின்-வழிகேட்டின் கன பரிமாணத்தை வாசகர்களே விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆனின் அடிப்படையான, தெள்ளத் தெளிவான நேரடியான பொருளைத் தரும் இந்த 3:7 இறைவாக்கில் முகல்லிது புரோகித முல்லாக்களும், தவ்ஹீத் புரோகித முல்லாக்களும் இந்த அளவு குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் ஏன் எற்படுத்துகிறார்கள் தெரியுமா? அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது.

சூழ்ச்சியின் அசல் நோக்கம்!

முன்னய நபிமார்களின் போதனைப்படியே நடக்கிறோம் என்று கூறிக்கொண்டு அந்தந்த சமுதாயங்களில் சட்டவிரோதமாகப் புகுந்து கொண்ட புரோகிதப் பண்டாரங்கள், அந்த நபிமார்களுக்கு இறக்கி அருளப்பட்ட நெறி நூல்களிலும், அந்த நபிமார்களின் போதனைகளிலும், அவர்கள் மனம் போன போக்கில், அவர்களின் தொப்பையை நிரப்ப வசதியாக கூட்டினார்கள். குறைத்தார்கள், வளைத்தார்கள், திரித்தார்கள், மறைத்தார்கள். எனவே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்கள் அனைவருக்கும் இறக்கியருளப்பட்ட நெறிநூல்கள் இப்புரோகிதர்களின் கரம்பட்டு மாசு பட்டுவிட்டன. திரிபடைந்து விட்டன. அவற்றை இறக்கியருளிய இறைவனும், அந்த நெறிநூல்கள் அனைத்தையும் அவை தற்காலிகமாக கொடுக்கப்பட்டவையாததால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவில்லை. மாறாக அவற்றை ரத்து செய்து செல்லாதவையாக ஆக்கி நிராகரித்துவிட்டான்.

இறுதி நெறிநூல் அல்குர்ஆனுக்கு இறைவனின் பாதுகாப்பு!

ஆனால் அல்குர்ஆன் இறுதி நெறி நூலாக இருப்பதாலும், உலகம் அழியும் வரை, மக்கள் அதையே நெறிநூலாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியிருப்பதாலும், அந்த இறுதி நெறிநூலான அல்குர்ஆனை புரோகிதர்களின் கரம் பட்டு மாசுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏகன் இறைவனே ஏற்றுக் கொண்டான். (பார்க்க அல்குர்ஆன்:15:9) 1425 ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறான். உலகம் அழியும் வரை பாதுகாப்பான். இது உறுதி, அந்த குர்ஆனிலுள்ள ஒரு வசனத்தை அல்ல, ஒரு வார்த்தையை அல்ல, ஒரு புள்ளியைக்கூட மாற்றும் திறமை இந்தப் புரோகிதப் பண்டாரங்களுக்கு இல்லவே இல்லை.

ஆனால் மார்க்கத்தைத் திரித்து வளைத்து மறைக்காமல் அவர்களின் புரோகிதத் தொழிலை நடத்த முடியாது. எனவே என்ன செய்யலாம் என்று இந்தப் புரோகித முல்லாக்கள் தங்கள் மூளையைக் கசக்கி, கசக்கிக் கண்டுபிடித்த தந்திரம்தான், இந்த 3:7 இறை வாக்கில் மொழி பெயர்ப்பு என்ற பெயரால் இவர்கள் செய்யும் திருகுதாளங்கள், தில்லு முல்லுகள், பித்தலாட்டங்கள் அனைத்தும் அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களில் இப்படியும் பொருள் எடுக்கலாம். அப்படியும் பொருள் கொள்ளலாம். அவற்றிற்கு அந்தரங்க (பாத்தின்) அர்த்தம் உண்டு. வெளிரங்க (ழாஹிர்) அர்த்தம் உண்டு என்று இந்தப் புரோகித முல்லாக்கள் பிதற்றுவதெல்லாம் மக்களை ஏமாற்றி, வழிகெடுத்து தங்களின் ஒரு ஜான் வயிற்றை நரக நெருப்பால் நிரப்பத்தான். இதையே அல்லாஹ் தனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் இவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான்.

அல்குர்ஆனின் கடுமையான எச்சரிக்கை!

“எவர்கள் இறைவன் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான், அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” (குர்ஆன்:2:174) என்று நெத்தியடியாகக் கூறி எச்சரிக்கிறான்.

புரோகிதர்கள் உணர்வு பெறமாட்டார்கள்!

ஆனால் இந்தப் புரோகித முல்லாக்களுக்கு இந்த எச்சரிக்கையும் உறைக்காது. அவர்களின் உள்ளங்கள் அல்குர்ஆன் 5:13ல் இறைவன் எச்சரித்திருப்பது போல் இறுகி விட்டன. இறைவனது சாபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். எனவே “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு இவர்கள் தஃப்ஸீர் என்ற பெயரால் எழுதி வைத்திருக்கும், அந்த வசனங்கள் நேரடியாகக் கூறாத கருத்துக்கள் அனைத்தும் வழிகேடேயாகும். நெருப்பில் போட்டு எரிக்கப்பட வேண்டியவையாகும்.
பொருள் விரியும் “முத்தஷாபிஹாத்’ வசனங்கள்!

ஆனால் அதற்கு மாறாக முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு காலத்திற்கு காலம் பொருள்கள் விரிந்து கொண்டே செல்லும். மனித அறிவு முதிர்ச்சி-விஞ்ஞான வளர்ச்சி இவை காரணமாக விதவிதமான புதியபுதிய விளக்கங்கள் பெறமுடியும். பல அரிய விஞ் ஞான கண்டுபிடிப்புகளுக்கு அவை வழிகாட்டும். உலகியல் இரகசியங்களை வெளிக்கொணர அவை உதவும். ஆனால் ஒன்றுக்குமேல் பொருள்தரும் இந்த முத்த ஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருள்களில் அடக்கி அதாவது அவற்றை “முஹ்க்கமாத்’ வசனங்களாக்கி அவற்றைப் பின்பற்றுவது வழிகேடு, உள்ளத்தில் நோயுள்ள வழி கேடர்களே அதில் முனைப்புக் காட்டுவார் கள். இந்த “முத்தஷாபிஹாத்’ வசனங்கள் மார்க்கச் சட்டங்களைச் சொல்பவயோ, ஏவல், விளக்கல்களை கூறுபவையோ அல்ல, எனவே மறுமை வெற்றிக்காக எடுத்து நடக்கவேண்டிய எதுவும் இந்த முத்தஷா பிஹாத் வசனங்களில் இல்லை. அவை அனைத்தும் “முஹ்க்கமாத்’ வசனங்களில் அடங்கிவிட்டன. எனவேதான் ஏகன் இறைவன் “முஹ்க்கமாத்’ வசனங்களே இந்நெறிநூலின் தாய்-அடிப்படை என அப்பட்ட மாகக் கூறி இருக்கிறான். ஒருவன் இந்த முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றி சிறிதும் சிந்திக்காமல், முஹ்க்கமாத் வசனங்களை மட்டும் படித்து சிந்தித்து, விளங்கி அதன் படி நடப்பானேயானாலும் நிச்சயமாக அவன் மறுமையில் வெற்றி பெற முடியும்.

ஆக முஹ்க்கமாத் வசனங்கள் குறிப்பாக ஒரே பொருளை மட்டுமே தரும். ஒன்றுக்கு மேல் பொருள் எடுக்கவே முடியாது. முஹ்க்கமாத் வசனங்களில் அவற்றிலுள்ள பொருளை விட்டு வேறு பொருள் எடுப்பவர்கள். அல்குர்ஆனில் இறைவன் மனிதர் களுக்காக விளக்கியுள்ளதை மறைப்பவர்களே, வழிகேடர்களே! அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்திற்கும் உரியவர்களே. நரகத்திலிருந்து அவர்க ளுக்கு மீட்சியே இல்லை. அதற்கு மாறாக முத்தஷாபிஹாத் வசனங்களில் ஒன்றுக்கு மேல் பொருள்கள் எடுக்க முடியும். அவற் றின் விளக்கங்கள் விரிவடைந்து கொண்டே செல்லுமே அல்லாமல் குறுகாது. அவற்றில் ஒரே பொருளைத் தேடி முடிவு செய்து அதன்படி நடப்பவர்களும் வழிகேடர்களே – நரகிற்குரியவர்களே. எல்லாம் வல்ல ஏகன் இறைவன் இந்த இரண்டு வகை வழி கெட்ட கூட்டத்தாரிடமிருந்தும், மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்ட புரோகித முல்லாக்களிடமிருந்தும் உண்மை விசுவாசி களைக் காப்பாற்றி அவர்களை அவனது ஒரே நேரான வழியில் செலுத்தி அருள் புரிவானாக. (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: