தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2021 ஏப்ரல்

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 68

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் :  அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற  இதழில்…!

உலகமும்ட, உலகிலுள்ள பொருட்களும் சபிக்கப்பட்டவை! அல்லாஹ்வுடைய திக்ர், அதற்கு நெருக்கமாயிருக்கின்ற பொருட்கள், இல்மை  கற்றுக்கொண்ட ஆலிமும், இன்னும் இல்மைக் கற்றுக்கொள்ளும் முதஅல்லிமும் சபிக்கப்படாதவர்கள்! என்ற இந்த விஷயத்தை அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகம், 404வது பக்கத்தின் கடைசி பாராவில் 20வது எண்ணில் எழுதிவிட்டு, இந்த செய்தியை ஹதீது என குறிப்பிட்டிருக்கிறது. இந்த விஷயத்தை ஆய்வு செய்து, அது ஹதீது அல்ல, அப்பட்டமான பொய் என்பதை சென்ற இதழில் நிரூபித்தோம்.

இந்த  இதழில்….!

நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீதுகள் ஸஹீஹானதா இல்லையா என்பதை எவரும் ஆராயத் தேவையில்லை. ஏனெனில், “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும் என்று அல்லாஹ் தமது இறுதி நபியை அல்குர்ஆன் 21:45 இறைவசனத்தின் மூலம் உலகிற்கு அறிவிக்கச் சொல்லிவிட்டான்.

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு இஸ்வாத்தைக் களங்கப்படுத்த நினைத்த எதிரிகள், ஹதீதுகளுக்குள் ஊடுருவழி பொய்யான செய்திகளை நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீது எனக் கூறி கலந்துவிட்டனர். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில்தான், குர்ஆன், ஹதீதை மட்டும் பின்பற்றி வாழ்ந்து வந்த ஹதீது கலைவல்லுநர்கள் ஒவ்வொரு ஹதீதையும் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி, எவரும் திரும்ப பரிசோதனை செய்யத் தேவையற்ற நிலையில், ஹதீதுகள்  அனைத்தும் ஸஹீஹானதா இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்து உலகிற்குத் தந்துவிட்டனர். இப்படிக் கூறுவது ஹதீது கலைவல்லுநர்களை தக்லீது செய்வதாகும் என்று எவரும் எம்மீது குற்றம் சாட்ட முன்வருவார்களேயானால், அவர்கள் மேலே குறிப்பிட்ட 21:45 இறைவசனத்தை அதாவது “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும் என்ற இறை வசனத்தை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பார்த்து, இது அல்லாஹ் செய்த ஏற்பாடு என்பதை அறிந்துகொள்ளட்டும்.

இதற்குப் பின்னால், பொய் செய்தியை ஹதீது என்று கூறுவதற்கு தனி மனிதன் எவனும் துணிந்து முன்வரவில்லை. ஆனால், (இறைவா) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும்  வழிகெடுப்பேன் என்று இப்லீஸ் கூறியதாக 38:82வது வசனம் தெரிவிக்கிறதல்லவா? அந்த அடிப்படையில் இப்லீஸின் வலையில் வீழ்ந்த வழிகெட்டவர்களின் மூலமாக பொய்ச் செய்திகளை ஹதீதுகள் என்றும், ஹதீதுகளைப் பின்பற்றத் தேவையில்லை குர்ஆன் மட்டும் போதும் என்று மார்க்கத்தில் புதிய சிந்தனைகளையும் மக்களுக்கு மத்தியில் பரப்பி வருகின்றான்.

இறைவனுக்கு எதிரான இந்த செயல் உலகம் உள்ளளவும் நடைபெற்றுக் கொண்டிருக்க, அல்லாஹ்விடமே கால அவகாசம் பெற்று வந்துள்ளான் இப்லீஸ்! இதன்மூலம் இப்லீஸ் வென்றுவிட்டதான ஒரு மாயை மனிதர்களுக்குத் தோன்றலாம். அல்லாஹ் எப்படி இவ்வாறான அனுமதியை தந்திருக்கக்கூடும்ட என்று பலரும் ஆச்சரியப்படலாம்! இதில் ஆச்சரியப்படத் தேவையே இல்லை என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். எவ்வாறென்றால், தனது அருளால்ட நல்லடியார்களை ஷைத்தானால் வழிகெடுக்க முடியவே முடியாது என்ற நற்செய்தியை அல்லாஹத தனது நெறிநூல் குர்ஆனில் தெரிவித்துவிட்டான். பாருங்களேன்! பார்த்து மகிழுங்களேன் 15வது அத்தியாயத்தின் 39,40,41,42,43 இறைவசனங்களை அல்ஹம்துலில்லாஹ்!

என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படிச்செய்து(அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

அவர்களில் அந்தரங்க கலப்பற்ற பரிசுத்த உள்ளத்தை உடைய உன் நல்லடியார்களைத் தவிர” என்று இப்லீஸ் கூறினான். (15:40)

“(அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் நேரான வழியாகும்” (என்றும்) (15:41)

(மேலும்), “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” (என்றும்) (15:42)

“நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும், நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்” என்றும் இறைவன் கூறினான். (15:43)

இப்போது சொல்லுங்கள்! ஷைத்தான் வென்றுவிட்டதான ஒரு நினைப்பு எப்படி பலரின் நினைவுகளில் உதிக்கலாம்? அந்த அனவுக்கு நம் ஈமான் பலவீனத்தில் இருக்கிறதா? வெட்கப்பட வேண்டிய விஷயம்! அமல்களின் சிறப்புகள் போன்ற கண்ட கண்ட புத்தகங்களையும் படித்து ஈமானை வலுவிழக்கச் செய்வதைத் தவிர்த்துக் கொள்வோமாக! பரிசுத்த நெறிநூல் குர்ஆனையும், அல்லாஹ்வின் தூதரின் ஹதீதுகளை மட்டும் படித்துப் படித்து ஈமானை வலுப்பெறச் செய்வோமாக!

இப்போது அசி புத்தகம் தெரிவிக்கும் செய்தியைப் பார்ப்போம். “உலகமும், உலகிலுள்ள பொருட்களும் சபிக்கப்பட்டவை! அல்லாஹ்வுடைய திக்ர், அதற்கு நெருக்கமாயிருக்கின்ற பொருள்கள், இல்மை கற்றுக்கொண்ட ஆலிமும், இன்னும் இல்மைக் கற்றுக் கொள்ளும் முதஅல்லிமும் சபிக்கப்படாதவர்கள்!” என்று தெரிவித்த அசி புத்தகம், இக்கருத்துக்கு விளக்கம் என்ற பெயரில் பக்கம் 405ன் முதல் பத்தியில் கூறி இருப்பதாவது.

“அதற்கு நெருக்கமாயிருக்கும் பொருளென்பது திக்ருக்கு நெருக்கமாக இருக்கக் கூடியது எனக் கருத்துக் கொண்டால், திக்ரு செய்வதற்கு உதவியாக இருக்கக்கூடிய போதுமான அளவு உணவு, தண்ணீர், மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருட்கள் அதில் சேர்ந்து விடும். இக்கருத்தின்படி வணக்க வழிபாட்டைச் சார்ந்த அனைத்துமே திக்ரில் சேர்ந்தவையாகவே கருதப்படும். அல்லது அல்லாஹ்வுக்கு நெருக்கமாயிருப்பது எனக் கருத்துக் கொள்ளப்பட்டால், அப்பொழுது வணக்கங்கள் அனைத்துமே அதில் சேர்ந்து விடும் என்ற ரீதியில் தமது மனதில் தோன்றிய எதை எதையோ எழுதிக்கொண்டே  போய், அவற்றுக்குள் வழக்கம்போல் தமது பொய்யை உண்மை என்று மக்களை நம்பவைக்க சில பெயர் தெரியாதவர்களின் கருத்துக்களையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறது அசி புத்தகம்.

அப்படிப்பட்ட கருத்துக்களில் ஒன்றை பக்கம் 407ன் முதல் பத்தியில் எழுதியிருக்கிறது அசி புத்தகம் எழுதியுள்ள விஷயத்தைப் பாருங்கள்! “பிரபல முஹத்திஸ் ஹாபிஸ் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள், “அல்வாபிலுஸ் ஷய்யிப்” என்ற பெயரில் திக்ரின் சிறப்புகள் பற்றி விரிவான நூல் எழுதியுள்ளார்கள். அதில் திக்ரு செய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைப்பதாக எழுதியுள்ளார்கள். அவற்றிலிருந்து எழுபத்தொன்பது சிறப்புகளை வரிசையாக எழுதப்படுகிறது. அவற்றில் சில தம்மில் பல பலன்களை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இந்த அடிப்படையில் நூற்றுக்கு மேற்பட்ட பலவிதமான பலாபலன்களை அவை பொதிந்துள்ளன.

எமது ஆய்வு!

அல் வாபிலுஸ் ஸய்யிப்! இது ஒரு நூல் என்று அசி புத்தகம் கூறுகிறது. குர்ஆன் மற்றும் ஹதிஃதுகளுக்கு மாற்றமாக இருக்கும் அசி புத்தகத்தை மக்கள், “புத்தகம்” என்கிறார்கள். ஆனால் குர்ஆன் மற்றும் ஹதீதுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் தப்லீக்காரர்கள், அசி புத்தகத்தை “நூல்” என்கின்றனர். அல் வாபிலுஸ் ஸய்யிப் என்பதும் இதுபோலத்தான் இருக்குமோ? ஆய்வு செய்வோம்.

இதன் ஆசிரியர் “பிரபல முஹத்திஸ் ஹாபிஸ் இப்னுல் கய்யிம்(ரஹ்) என்று அசி புத்தகம் பிரபலப்படுத்துகிறது. உண்மையில் இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் பிரபலமானவர்தான். சிறந்த மார்க்கப் பற்றாளர், ஒழுக்க சீலர், சிந்தனையாளர், மதாஹிஜுஸ் ஸாலிஹீன், ரவ்ழத்துன் முஹிப்பின் போன்ற நூல்களை எழுதிய பன்னூல் ஆசிரியர், அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்த கிருத்துவர்களிடம் ஏக இறைக்கொள்கையை நளினமாக எடுத்துரைத்த விதம் மக்களிடம் புகழ் பெற்றது.

அசி புத்தகம் கூறுவதுபோல் இப்னுல் கய்யிம் அவர்கள் ஒரு முஹத்தின் தான் (ஹதீத் கலை வல்லுநர்தான்) அல்மனாருல் முனீஃப் என்ற நூலில் 80வது பக்கத்தில் இமாம் இப்னுல் கய்யிம் அவர்கள் கூறியிருப்பதாவது:

“இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று, ஹதீத் குர்ஆனுடைய தெளிவான வசனத்திற்கு முரண்படுவதாகும்” என்று தெளிவாலக எடுத்தரைத்த பல முஹத்திஸீன்களில் இவரும் ஒருவர். இப்படியாக இவரின் நறபண்புகளை  அடுக்கிக்கொண்டே போகலாம்.

குர்ஆன், ஹதீத் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு பேர் பெற்ற இப்னுல் கய்யிம் அவர்களை அசி ஆசிரியர் ஏன் புகழவேண்டும்? எலி அம்மணமாக ஓடுவது எப்படி யாருக்கும் ஆச்சரியத்தைத் தராதோ? அதுபோல் நல்லவர்களை அசி ஆசிரியர் புகழ்வதும் எமக்கு ஆச்சரியத்தைத் தராது. ஏனென்றால், அசி ஆசிரியர் தாம் கூறும் பொய்களை இப்படிப்பட்ட நல்லவர்கள் கூறியதாகச் சொல்லி அதன் மூலமாக அவைகளை ஹதிதுகள் என்று துணிந்து கூறிவிடுவது அசி ஆசிரியரின் வழக்கம் என்பதைத் தொடர்ந்து இத்தொடரில் பார்த்து கொண்டுதானே இருந்து வருகிறோம்.

இப்னுல் கய்யிம் அவர்களின் பெயரில் எதை சொன்னாலும், மார்க்கம் தெரிந்தவர்கள் கூட அதை ஒப்புக் கொள்வார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார். அசி ஆசிரியர். அதாவது இமாம் இப்னுல் கய்யிப் என்ற நூலை எழுதினாராம். அந்த நூல் திக்ரின் சிறப்புகள் பற்றி விரிவான நூல் என்றும்,  திக்ரு செய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைப்பதாக இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் அந்நூலில் எழுதி இருப்பதாக அசி புத்தகம் எழுதித் தள்ளி இருக்கிறது. ஆனால் உண்மை என்ன? அதைக் காண முயல்வோம்.

அல் வாபிலுஸ் ஸய்யிப் என்றொரு ஒரு புத்தகம் உலகில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நாம் வாழ்ந்து வரும் ஊரிலுள்ள அரபிக் கல்லூரிகளிலோ(?) அல்லது இந்தியாவிலுள்ள ஆகப் பெரிய அரபிக் கல்லூரிகளிலோ அல்வாபிலுஸ் ஸய்யிப் என்ற புத்தகம் இருக்கிறதா என்று நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடுகளில் பணி புரிந்து வரும் முஸ்லிம் சகோதரர்கள்ட அங்குள்ள அருங்காட்சியகத்திலோ அல்7லது நூலகங்களிலோ அல் வாபிலுஸ் ஸய்யிப் என்ற புத்தகம் இருக்கிறதா என்று நீங்களே கேட்டுத் தெரிந்து கொண்டு அதை அந்நஜாத்திற்கும் தெரிவியுங்கள்.

திக்ரில் கிடைக்கும் பலாபலன்களில் 79 சிறப்புகளை இப்னுல் கய்யிம் கூறியதாக அசி புத்தகம் இதில் எழுதி இருக்கிறது. சிலநல்ல பலன்களை எழுதிவிட்டு சந்தடி சாக்கில் அத்துடன்ட தமது கப்சாக்களையும் நுழைத்திருக்கிறது அசி புத்தகம். அசி புத்தகம் கூறும் 79லிருந்து ஒருசில பொய்களை மட்டும் அடுத்த இதழில் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்!             (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: