தேர்தல் வருது!  தேர்தல் வருது!  ஓட்டுப்போடுங்க!!

in 2021 ஏப்ரல்

தலையங்கம்!

தேர்தல் வருது!  தேர்தல் வருது!  ஓட்டுப்போடுங்க!!

சட்டசபைக்கான தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை பயன்படுத்தும் நாள் இது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியைத் தொடரச் செய்யலாமா? அல்லது தேர்தலில் களம் காணும் பிரதான எதிர்கட்சி திமுகவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியையோ ஆட்சியில் அமர்த்தலாமா என்று மக்கள் முடிவெடுக்கும் நாள் இது!

மாநிலத்தின் இதுபோன்ற ஒவ்வொரு தேர்தலும் அந்தந்த மாநிலத்தை ஆளும் அரசின் வலிமையைக் கொண்டு வழக்கமாக நடைபெறும் தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்தியிலுள்ள பாஜக ஆட்சி தமது ஆளுமையின் மூலம் இம்முறை அதிமுகவை தமக்கு இணக்கமான கட்சியாக்கிக் கொண்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மத்திய பாஜக அரசு CAA சட்டத்தை நாட்டில் சட்டமாக அதிமுகவின் ஆதரவைப் பெற்றதிலிருந்து, இந்த உறவு இரு கட்சிகளுக்கிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கட்சிகளும் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சியைக் கொடுத்துள்ளார்களா என்பதை நாம் சொல்ல வேண்டிய தேவை இல்லை. மக்களுக்கு அது மிகவும் நன்றாகவே தெரியும்.

இந்த நிலையில் நாம் யாருக்கு வாக்களிப்பது? அதிமுகவிற்கா? அல்லது பிரதான எதிர்கட்சி திமுகவிற்கா? அல்லது புதிதாகத் தோன்றிய கட்சிகளுள் ஏதேனும் ஒரு கட்சிக்கா? ஓரளவுக்கேனும் பலம் இருப்பதாக மாயையை ஏற்படுத்திய புதிதாகத் தோன்றிய கட்சிகள், ஓரிரு சிறிய கட்சிகளை அணைத்துக்கொண்டு கூட்டணி ஏற்படுத்தி களத்தில் குதித்துள்ளது. இவர்கள் தேர்தலில் நிச்சயமாக கணிசமாக வெற்றி பெறமுடியாது என்ற நிலை தெரிந்திருந்தும், எல்லாத் தொகுதிகளிலும் இவர்கள் ஏன் போட்டியிடுகின்றார்கள்? மிகவும் சிந்திக்க வேண்டிய முக்கிய விஷயம் இது! ஓட்டுக்களைப் பிரிப்பதற்கான சதி என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்பதை சிந்திக்கும்போதுதான் உணரமுடிகிறது.

யாருடைய ஓட்டைப் பிரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது? கட்சிகளை சாராத எல்லா மக்களின் ஓட்டுக்களையும்தான்! குறிப்பாக நடுநிலை மக்களின் ஓட்டுக்களையும், முஸ்லிம்களின் ஓட்டுக்களையும் குறி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு தரப்பை ஏன் தேர்வு செய்தனர்? மத்தியிலும் மாநிலங்கிலும் நல்லாட்சி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாலும் மற்றும் CAA  சட்டத்தால் வெறுத்துப் போனதாலும், இவர்களின் வாக்குகள் நமக்கு கிடைக்காது என்ற எண்ணத்தாலும், இந்த இரு தரப்பையும் தேர்வு செய்துள்ளனர். அது மட்டும் அல்ல! பரவலாக இருக்கும் நாட்டிலுள்ள 7 சதவீத முஸ்லிம்களின் ஓட்டுக்கள், அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஓதளவு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, முஸ்லிம்களின் ஓட்டைப் பிரிப்பதற்கான சதி இது!

ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியால் திமுகவிற்கு செல்லவேண்டிய இந்த வாக்குகள், சில்லறைக் கட்சிகளுக்கு சென்றுவிடும். இதனால் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து, ஆளும் கட்சிகள் வெற்றி வாய்ப்பைப் பெற்று விட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். பிற சில்லறைக் கட்சிகளில் முஸ்லிம்கள் போட்டி இட்டாலும், அல்லது முஸ்லிம்களாகி நீங்களே அந்தக் கட்சியின் அனுதாபியாக இருந்தாலும், தயவுசெய்து பிற கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் ஓட்டை வீணாக்கி விடாதீர்கள். அப்படிச் செய்தால், இதன் மூலம் நீங்கள் அதிருப்தி கொண்ட ஆளும் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வழி ஏற்பட்டுவிடும்.

ஆளும் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பிற கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாது என்றால் பிரதான எதிர்கட்சி திமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமா? ஆம் என்ற ஒற்றை பதில்தான் எல்லா மக்களுக்கும் பலன் அளிக்கும். எவ்வாறென்றால் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் துணிச்சலுடன்ட CAA சட்டத்திற்கு எதிராகவும், அக்கி்ரமங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி இப்போதைக்கு திமுக மட்டுமே1 மற்றபடி திமுக தலைமையும் முஸ்லிம்களு்ககு ஒரு சீட்டு இரண்டு சிட்டு கொடுப்பவர்கள் தான். முஸ்லிம்களிடமே ஓட்டு வாங்கி வென்றுவிட்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதி என்று லேபிளிட்டு, முஸ்லிம்களின் தெருக்களில் போலீஸ் செக்போஸ்ட் வைத்து, தெருவில் வசிக்கும் சாதாரண முஸ்லிம்கள் தினசரி போலீசால் சோதனை செய்யப்பட்டது திமுகவின் முந்தைய தலைமையால்தான்.

எது எப்படியிருந்தாலும், பொது மக்களாகிய நீங்கள், குறிப்பாக முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும்? முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டுப்போடவேண்டும்? முஸ்லிம்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதன் நோக்கம், பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்கள் கொல்லப்படுகின்றனர். தீ வைக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் பாழ்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள் உட்பட பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களைத் தவிர வேறெவரும் இந்தளவுக்கு கொடுமைகளை இன்றைய ஆட்சியாளர்களால் சந்தித்ததில்லை. இன்னும் விரிவாக என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை. ஏனெனில் CAA மூலம் அதிமுகவும், பாஜகவும் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்ன செய்தது என்பதை யாரும் பிறருக்கு சொல்லித் தராமலேயே உலகம் தெரிந்து வைத்திருக்கிறது.

எனவே எந்த கட்சி வெற்றி பெற்றால் மக்கள் நலம் பெறுவார்கள் அல்லது கேட்டை சந்திப்பார்கள்ட என்பதை மதிப்பிட முடியாத உங்களின் கடந்தகால அனுபவத்திலிருந்து பெற முயலுங்கள். இப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்ற அரசியலாளர் ஒருவர் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதைக் கேளுங்கள்.

அவர் கூறி இருப்பதாவது, “முஸ்லிம் தலைவர்கள் மீது நான் வைக்கின்ற குற்றச்சாட்டு என்னவென்றால், 7 சதவீத முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கிட்டதட்ட 20 சட்டமன்ற தொகுதிகள் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் ஒருபோதும் முஸ்லிம்கள் 20 தொகுதிகளை பெற்றது கிடையாது. இங்கிருக்கக் கூடிய இஸ்லாமிய கட்சிகள் அதற்குக் குரல் கொடுக்கத் தயாராக இல்லை. நான் எம்.எல்.ஏ. ஆகனும், நான் எம்.பி. ஆகனும், ஒரு சீட்டு கொடு இரண்டு சீட்டு கொடு என்கிறார்கள். முஸ்லிம் லீகில் 1946லிருந்து 1952 வரை 29 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். காயிதேமில்லத் தான் எதிர்கட்சி தலைவர், இன்றைய  தலைவர்களால் அந்த எண்ணிக்கை யைத் தொடக்கூட முடியவில்லை. இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக, சமுதாயத்தை ஏமாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு கருத்தைக் கூட சொல்கிறேன். அந்த கருத்துக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு இஸ்லாமிய தலைவர்கள் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். அந்த கட்சியின் தொண்டர்கள் அப்பாவிழகளாக இருக்கிறார்கள்.

இந்த சகோதரர் புள்ளி விவரங்களோடு கூறுவதைக் கேட்கும்போது, நமது நிலையை எண்ணி வருந்துகிறோம்.

அதிமுக உதவியுடன் பாஜக CAA சட்டத்தை இயற்றியபோது சாட்டிலுள்ள முஸ்லிம்கள் கொந்தளித்தனர். தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்தனவா?  ஓரிரு நிகழ்வுகள் நடந்தாலும் எல்லா அமைப்புகளும் தனித்தனியாக செயல்படுவதில் ஆர்வம் காட்டியது மட்டும் பச்சையாகத் தெரிந்தது. பாகுபாடில்லாத இந்த முஸ்லிம் சமுதாயத்தில் உலமாக்கள்(?) என்றொரு அணி உலமாக்களின் இந்த மேடையில் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்றொரு எச்சரிக்கை வேறு!

TNTJவினரின் அழைப்பை ஏற்று ஒவ்வொரு இடத்திலும் ஆச்சரியப்படும் அளவுக்கு மக்கள் குவிந்தனர். வேறெந்த அமைப்புகளாலும் அந்த அளவுக்கு மக்களை குவிக்க முடியவில்லை. எந்த கூட்டத்தையும் அவர்கள் சுலபமாக சேர்த்து விடுகின்றனர். ஆனாலும் அவர்களும் தனித்தே செயல்பட்டனர்.

இதற்குப் பிறகு நடந்த அதிசயத்தை யாரேனும் கவனித்தீர்களா? போராட்ட நாட்கள் நீடித்துக் கொண்டே போகிறது. நீடிக்க நீடிக்க மக்கள் கூட்டம் இன்னும் இன்னும் என்று மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் குவிந்து கொண்டிருந்தனர். வந்து கொண்டிருக்கும் கூட்டத்தினர் பெரும்பாலும் எந்த இஸ்லாமிய கட்சியையும் சாராமல் தாமாகவே வர ஆரம்பித்தக் கூட்டம் அது எவரும் சோர்வடைந்துவிடவில்லை. உற்சாகத்துடன்ட இருந்தனர். முஸ்லிம் கட்சிகளுக்குப் பின்னார் அணிவகுத்த கூட்டம். அந்த மக்களுக்குப் பின்னே கட்சிகள் செல்லவேண்டிய சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான். அல்ஹம்துலில்லாஹ்! அப்போதும் கூட வேறு வேறு பேனர்களில் வேறு வேறு இடங்களில் வெவ்வேறு முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். எந்த சூழலிலும் ஒன்றுசேரமாட்டோம் என்பதை படம் பிடித்துக் காட்டினர். பொறாமை குணம் கொண்ட கட்சித் தலைவர்கள் இறுதிவரை ஒன்றுபடவில்லை.

“ஒற்றுமைக்கு நாங்கள் தயார்” என்று இஸ்லாமிய பெருங்குடி மக்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டனர்.

அல்குர்ஆன் 8:46 கூறுவதை மனதில் நிறுத்துங்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். உங்களுக்குள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்) அவ்வாறாயின், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள், உங்கள் பலம் போய்விடும். ஆகவே, நீங்கள் பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

இவ்வாறாக பெரும்பான்மையாகக் கலந்து கொண்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாட்டிலுள்ள காங்கிரஸ் கட்சழ கேரளாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்காளத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலுள்ள திமுக. பஞ்சாபிலுள்ள அகாலிதளம், மற்றும் பலர் மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பை இன்றுவரைத் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் களம் காணும் இந்த நேரத்தில், மேற்கு வங்கம், கேரளாவில் மட்டுமே முஸ்லிம்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் திருப்தியான நிலை இல்லாததற்கு காரணம் அவர்கள் என்ன பெரிய ஆளா? என்ற பெரிய அண்ணன் மனப்பான்மை தமிழகத்தில்  பெரிய கட்சிகளிடம் மேலோங்கி இருக்கிறது. முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அவல நிலை? மிக சுலபமாக சொல்லிவிடலாம்! முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை.

ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பும், அது சுண்டைக்காய் அமைப்பாக இருந்தாலும், அதிலும் பெரிய அண்ணன் மனப்பான்மை மேலோங்கி இருக்கிறது. இந்த அமைப்புகள் என்றாவது ஒரு நாள் ஒன்று சேரும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தால், நிச்சயமாகத் தோற்றுவிடுவோம் என்ற பயம் அரசியல் கட்சிகளிடம் பரவலாக இருந்து வருகிறது. இது உண்மை என்பது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்தே தெரிந்து கொள்ளவும் முடிகிறது எப்படி? மேலே நாம் விவரித்தபடி முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பிரிக்கும் சதிவேலை பயத்தினால்தான்.

ஒற்றுமைக்கு வரவேமாட்டோம் என்று தங்களின் செயல்களால் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இன்றைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை முதலில் புறக்கணியுங்கள். அவர்களின் பின்னே போகாதீர்கள். ஏனென்றால் மறுமையின் வெற்றியிலும் நம்மைக் கெடுத்துவிட்டார்கள். இம்மையின் வெற்றியிலும் நம்மை கெடுத்து விட்டார்கள் எப்படி என வினவுகிறீர்களா?

“நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து பல பிரிவினர்களாக பிரிந்து விட்டனரோ, அவர்களுடன் உமக்கு எவ்விரத சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:159) என்றும்,

“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பிரிவுகளாகப் பிரித்து விட்டனரோ, ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.” (அல்குர்ஆன் : 30:32) என்றும், அகிலங்களைப் படைத்த இறைவன், சிறந்தோன் அல்லாஹ் கூறிய பிறகும், பிரிவுகளை அறிமுகப்படுத்தித் தந்தார்கள். இந்த தலைவர்கள், அந்த சாக்கடையில் எம் மக்களை மூழ்கச் செய்தனர்.

இவ்வளவு காலமாக இந்த இறை வசனங்களைப் புறக்கணித்துவிட்டு உலமாக்கள் என்று நினைத்து இவர்கள் பின்னால் போய், கடைசியில் பிரிவுகளில் சிக்கிக் கொண்டோமே என்று வருந்துகிறீர்களா? உலமாக்கள் என்று நினைத்த இவர்கள் கட்சித் தலைவர்கள் என்ற வேஷத்தைக் கையில் எடுத்த பின்பும் கூட இவர்கள் பின்னால் போய், கடைசியில் குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்குள்ளேயே ஒற்றுமையாய் வாழத் தெரியாமல் சிக்கிக் கொண்டோமே என்று வருந்துகிறீர்களா?

தேர்தல் நாள் நெருக்கத்தில் இருப்பதால், இன்ஷா அல்லாஹ் உடனடியாக அரசியல் அனுபவம் இல்லாத அதே நேரத்தில் அல்லாஹ்வின் அச்சம் மட்டும் உள்ள ஒருவரை உங்களுக்குள் நிரந்தர அமீராக ஏற்படுத்திக் கொண்டு ஒற்றுமையாய் வாக்களித்து திமுகவை ஆட்சியில் அமர வையுங்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் உதவியுடன் செயல்திட்டங்களை வரைந்தெடுத்து புதிய அரசியலில் பயணியுங்கள். அல்லாஹ் நாடினால், நீங்களும் விரும்பினால் நாங்களுடன் உங்களுடன் பயணிக்கிறோம்.

Previous post:

Next post: