மனிதனின் மறுபக்கம்….

in 2021 ஆகஸ்ட்

குர்ஆனின் நற்போதனைகள்…

மனிதனின் மறுபக்கம்….

Dr. A. முஹம்மது அலி, Ph.D.,

  1. நிச்சயமாக நாம் மனிதனைப் படைத் தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன் 50:16)
  2. நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்கார னாகவும் மிக்க நன்றி கெட்டவனுமாயி ருக்கிறான்.
    (அல்குர்ஆன் 14:34,100:6)
  3. மனிதன் மகா நன்றி மறந்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67,22:66)
  4. நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து பின்பு அதனை அவனை விட்டும் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப் பட்டு பெரும் நன்றி கெட்டவனாகிறான்.(அல்குர்ஆன் 11:9,42:48)
  5. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் படுத்துக்கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான், ஆனால் நாம் அவனை விட் டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடு வோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாக நன்றி மறந்து) சென்று விடுகிறான்.  (அல் குர்ஆன் 10:12, 39:8)
  6. அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் (மனிதன்) இருக்கிறான். (அல்குர்ஆன் 80:17)
  7. நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 43:15)
  8. நிச்சயமாக மனிதன் (தனக்குத் தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)
  9. நான் இறந்தால் மீண்டும் உயிருள்ள வனாக எழுப்பப்படுவேனா? என மனி தன் கேட்கிறான். (அல்குர்ஆன் 19:66)
  10. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத் தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமையடிக்கிறான், அவனை (ஏதேனுமொரு) தீங்கு தீண்டுமானால் அவன் நிராசைக் கொண்டவனாகிறான். (அல்குர்ஆன் 17:83)
  11. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான், பிறகு நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத் தைக் கொடுத்தோமானால் அவன், “இது எனக்குக் கொடுக்கப்பட்ட தெல்லாம் என் அறிவின் மகிமையால்தான்’ என (பெருமையுடன்) கூறுகிறான்.(அல்குர்ஆன் 39:49)
  12. மனிதன் (நம்மிடம் பிரார்த்தித்து) நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை, ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகி விடுகிறான்.(அல்குர்ஆன் 41:49)
  13. மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து விலகிச் செல்கிறான். ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனைச் செய்கிறான். (அல்குர்ஆன் 41:51)
  14. இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி பாக்கியமளித்து அவனைச் சோதிக்கும்போது அவன், “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான். எனினும், அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை சோதித்தாலோ அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்” எனப் பிதற்றுகிறான். (அல்குர்ஆன் 89:15,16)

Previous post:

Next post: