யூகம் உண்மைக்கு உதவாது!

in 2021 ஆகஸ்ட்

யூகம் உண்மைக்கு உதவாது!

ஷரஹ் அலி, உடன்குடி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

அவர்களில் பெரும்பாலோர் யூகத் தைத் தவிர (வேறெதையும்) பின்பற்று வதில்லை. நிச்சயமாக யூகம் உண்மைக்கு ஒருபோதும் உதவாது. அவர்கள் செய் கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 10:36)

நீங்கள் செய்யாததை (பிறருக்கு) ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் (பிறருக்கு) கூறுவது அல்லாஹ் விடம் வெறுப்புடையதாக இருக்கிறது.  (இறைநூல்: 61:2,3)

உலகில் உயர்ந்து நிற்கின்ற ஒன்றை ஒரு நாள் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் “அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது ஓட்டப் பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு மிக மிக வேகமாக ஓடக்கூடியதாக இருந்தது.

ஒரு பயணத்தின் போது, கிராமவாசி ஒருவர் தம் ஆறு வயதுக்குட்பட்ட வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார்.

இந்த செயலை பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.

மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஒட்டகமான “அள்பா’, கிராமவாசியின் ஒட்டகத்திடம் தோற்றுவிட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித் தார்கள்.

இந்த செய்தியை அறிந்த அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் உலகில் உயர்ந்து நிற்கின்ற எந்த ஒன்றாயினும் நிச்சயமாக ஒரு நாள் அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் வழிமுறையாகும். அல்லாஹ்வின் நடைமுறை “சுன்னத்துல்லாஹி” என்பதை அம்மக்களுக்கு தெளிவுபடுத்தி காட்டினார்கள்.

நபிவாழ்வியல் தகவலாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி), நபிமொழி ஆய்வாளர்: புகாரீ, நபிமொழி எண். 6501.

எவர்கள் தாங்கள் செய்த(சொற்ப மான)தைப் பற்றி (பிறர்) புகழ வேண்டுமென்றும், தாங்கள் செய்யாததை (செய் ததாகக் காட்டி)க் கொண்டு (பிறர் தங்களை) புகழ வேண்டும் என்றும் விரும்பு கிறார்களோ அவர்கள் வேதனையில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டார்கள் என்று (தூதரே) நீர் ஒருபோதும் நினைத்துவிடாதீர். அவர்களுக்கு நிச்சயமாக நோவினை தரும் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:188)

படைக்கின்றவனும், படைக்காத வனும் சமமாவார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 16:17)

Previous post:

Next post: