விமர்சனமும்! விளக்கமும்!!

in 2021 ஆகஸ்ட்

விமர்சனமும்! விளக்கமும்!!

விமர்சனம் : அந்நஜாத் ஜூன் 21 இதழ். பக்கம் 30ல், திருமணத்திற்கு முன் மணமக்கள் ஒரு முறையோ இரண்டு முறையோ சந்திப்பதால் மட்டும் நல்ல பெண், மார்க்க அறிவுள்ள பெண், இறையச்சமுள்ளவள் என்று முடிவுக்கு வரமுடியாது. இந்நிலையில் மார்க்கம் சந்திக்க அனுமதிப்பது ஏன்?

எங்கள் பகுதிகளில் இக்காலத்தில் தான் மணமக்களை சந்திக்க அனுமதிக்கின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இது நடைமுறையில் இல்லாதிருந்தது.  அபூ நபீல்,தேங்காய்பட்டணம்.

விளக்கம் : தாங்கள் கூறுவது போல, சில ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில் மணமக்கள் ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வழக்கம் இல்லாமலே திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன. ஏனெனில், அந்த காலகட்டங்களில் முஸ்லிம்கள் மத்ஹபுகளின் பிடியில் சிக்கியிருந்தனர். ஆனால், அந்நஜாத் பத்திரிகை வெளிவர ஆரம்பித்த பிறகு அதாவது தவ்ஹீத் என்ற பெயரில் பல பிரிவுகள் ஏற்படுவதற்கு முன்பு தான். திருமணத்திற்கு முன்பாக மணமகளை மண மகன் பார்த்துவிட்டு, இருவருக்கும் பிடித்திருந் தால் மட்டுமே திருமணம் நிச்சயிக்கும் வழக்கம் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

வினாவில் தாங்கள் தெரிவித்திருப்பது போல நல்ல பெண், மார்க்க அறிவுள்ள பெண், இறையச்சமுள்ளவள் என்று தெரிந்து கொள்வ தற்காக மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. இந்த வி­யங்களைத் தெரிந்துகொள்ள, இருவரும் வசிக்கும் இடங்களின் அருகில் வாழ்ந்து வருபவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்படி மார்க் கம் வலியுறுத்துகிறது. இதற்கான அனுமதியை இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வழங்கியிருப்பதை கீழே கொடுத் துள்ள ஹதீஃதில் காணுங்கள். திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணமும் இந்த ஹதீஃதில் தெரியப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்ணுறுங்கள்.

ஹதீஃத்! ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது பற்றிய எனது திருமணத் திட்டத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முன் வைத்தேன் அதற்கு அவர்கள், “நீங்கள் பெண்ணை நேரில் பார்த்து விட்டீர்களா?’ என்று என்னிடம் வினவினார்கள். நான், “இல்லை’ என்றேன். “நீங்கள் அவளைப் பாருங்கள்; அது உங்கள் இருவருக்குமிடையிலும் அன்பை ஏற்படுத்தும்’ என்று கூறினார்கள்.  (அறிவிப்பாளர்: அல்முகீரா பின் சுபா(ரழி), நஸயீ 3235)

அனஸ் பின் மாலிக்(ரவி) அறிவிக்கிறார். முகீரா பின் சுபா, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினார். “போய் அவளைப்பார்; உங்களிடையே அது அன்பை ஏற்படுத்தும்” என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். ஆகையால், அவர் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்தார். திருமணம் செய்தார்; அவளை அடைந்து மிக நன்றாக அவளுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.  (நூல்: இப்னு மாஜா 1865)

முகீரா பின் சுபா(ரழி) அறிவிக்கிறார்; நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணைப் பற்றி கூறினேன். “நீங்கள் சென்று அப்பெண்ணைப் பாருங்கள்; உங்களிடையே அது அன்பை ஏற்படுத்தும்’ என்று சொன்னார்கள்.

நான் அன்சாரி குலத்திலுள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் எனது திருமணத்தைப் பற்றி கூறினேன். நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் அவர்களிடம் கூறினேன்; அவர்கள் அதை விரும்பவில்லை என்பது போலத் தெரிந்தது.

“இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு தாங்கள் செய்யுமாறு தங்களிடம் கூறியிருந்தால், அவ்வாறே செய்யுங்கள்; இல்லையயன் றால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் (அல்லாஹ்வுக்கு பயந்து திரும்பிப் போய்விடுங்கள்)’ என்று திரைக்குப் பின் இருந்து கொண்டு அந்தப் பெண் சொன்னதைக் கேட்டேன். அந்தப் பெண் அதை மிக முக்கிய விஷயமாகக் கருதியது போல இருந்தது.

ஆகையால் நான் அந்தப் பெண்ணை (நேரில்) பார்த்தேன். திருமணம் செய்து கொண்டேன்; அவளை அடைந்து மிக நன்றாக அவளுடன் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.   (நூல்: இப்னு மாஜா 1866)

Previous post:

Next post: