நாம் ஏன் அதில் இல்லை?

in 2021 செப்டம்பர்

தலையங்கம்!

நாம் ஏன் அதில் இல்லை?

உலகெங்கும் பாராட்டு! குறிப்பாக இந்தியாவில் ஓர் இளைஞர் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார். நம் பாரதப் பிரதமரும் அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டுகிறார்.

அந்த இளைஞரின் சாதனை என்ன? டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்து விட்டார்! ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அதற்கான சாதனை புரிந்துவிட்டார். யார் அந்த இளைஞர்? அவரின் பெயர் நீரஜ் சோப்ரா. இவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் ஏழாம் தேதியை, இனி வரும் ஆண்டுகளில் “”தேசிய ஈட்டி எறிதல் தினமாகக்” கொண்டாடப்படும் என் றும், ஈட்டி எறிதல் விளையாட்டை தேசிய நிகழ்வாக மாற்றுவோம் என்றும் கூறுகிறார்,

இந்திய தடகள சம்மேளனத்தின் திட்டக் குழு தலைவர்.

இந்த இளைஞரையும் இன்னும் பிற விளையாட்டுக்களிலும் வெவ்வேறு பதக் கங்களைப் பெற்றவர்களையும் நாமும் பாராட்டுகிறோம்.

ஈட்டி எறிதல் விளையாட்டில் முஸ்லிம் களாகிய நாம் ஏன் இல்லை என்று ஆதங்கம் எமக்கு உண்டு. மதத்தை ஏன் இதில் திணிக் கிறோம் என்று நினைக்கிறீர்களா? நிச்சய மாக இதில் மத சாயம் பூச முன்வரவில்லை.

ஈட்டி எறிதல் மற்றும் அம்பு எறிதல் என்ற பெயர்களிலான விளையாட்டு வீரர் களை, இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர் கள் 1443 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆர் வப்படுத்தி வந்தார்கள் என்பதை பல ஹதீது களிலிருந்து பெற முடிகிறது. இந்த ஹதீது கள் விளையாட்டுக்களை சார்ந்து இருக்கும் அல்லது முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட போர்களை சார்ந்து இருக்கும்.

உதாரணத்திற்கு சில ஹதீதுகளின் சுருக் கத்தை இப்போது பார்ப்போம்.

பண்டிகை தினத்தன்று விளையாட்டுக்கள்:

“அன்று ஈத் பெருநாள் தினமாக இருந்தது. நீக்ரோக்கள் தோல் கேடயத்தாலும், ஈட்டிகளாலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னை தமக்கு பின்னால் நிற்க வைத்து எனக்கு அந்த விளையாட்டைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அந்த விளையாட்டு வீரர்களை நோக்கி, “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தி யோப்பியர்களே) “”விளையாட்டைத் தொடங்குங்கள்” என்று கூறினார்கள்.  (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), புகாரி: 2907)

நபி(ஸல்) அவர்கள் வீரர்களுக்கு ஆர்வமூட்டுகிறார்கள்:

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரழி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக, நபி(ஸல்) அவர்கள் சொன்னதில்லை. ஸஅத்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், “”அம்பெய்யுங்கள், உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதைக் கேட்டேன்.
(அறிவிப்பாளர்: அலீ(ரழி), புகாரி : 2905)

உஹத் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து எனக்காக உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்) “அம்பெய்யுங்கள், என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி), புகாரி : 4055)

அபூதல்ஹா(ரழி) அவர்கள் நன்றாக அம்பு எய்யக்கூடியவராக இருந்தார். அபூ தல்ஹா அம்பெய்தால் நபி(ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி அம்பின் இலக்கைப் பார்ப்பார்கள்” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி), புகாரி, 2902)

நபி(ஸல்) அவர்கள் வீரர்களுக்கு அறிவுரை பகர்கிறார்கள்.

பத்ரு போரின்போது நபி(ஸல்) அவர் கள் எங்களிடம், “எதிரிகள் உங்களிடம் நெருங்கி வந்தால், (குறிவைத்து) அவர்கள் மீது அம்பெய்யுங்கள். உங்கள் அம்புகளை (வீணாக்காமல்) மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: உஸைத் (மாலிக் இப்னு ராபிஆ) (ரழி), புகாரி, ஹதீத் எண்: 3984)

மக்களைக் காக்க நபி(ஸல்) அவர்கள் முன்னின்று எச்சரித்தார்கள் :

“நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழ கானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந் தார்கள். (எதிரிகள் படையுடன் வருவதாக வதந்தி பரவியதால்) மதீனா நகர மக்கள் பீதிக்குள்ளானார்கள். எனவே, சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்கள் செய்தியை தீர விசாரித்து விட்டு, அபூதல்ஹா அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரையின் மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந் தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் தொங் கிக் கொண்டிருந்தது. “பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்’ என்று கூறிக் கொண்டி ருந்தார்கள். பிறகு, “இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக இருக்கிறது’ என்று கூறினார்கள். (அறிவிப் பாளர்: அனஸ்(ரழி), புகாரி, ஹதீத் எண். 2908)

மூத்தா போரின்போது, நான் ஜஅஃபர் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டு கிடக்க, அவர்கள் அருகே நின்று (அவர்களுக்கு ஏற் பட்ட) ஈட்டிக் காயங்களும், வாட்களின் காயங்களுமாக ஐம்பது காயங்களை எண் ணினேன். அவற்றில் ஒன்று கூட அவர்களின் முதுகில் இருக்கவில்லை. (அதாவது அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை) (அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி), புகாரி, 4620)

நிச்சயமாக வலிமை அம்புகளில் இருக்கிறது :

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மிம்பர் மேடையில் 8:60வது இறைவசனத்தை ஓதி னார்கள். பிறகு, “நிச்சயமாக வலிமை அம்பு களில் இருக்கிறது; நிச்சயமாக வலிமை அம்புகளில் இருக்கிறது” என்று கூறினார் கள். (அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரழி), புலுகுல் மராம், ஆங்கிலம் எண். 1358)

எனவே, இஸ்லாமிய இளைஞர்களே! நாம் ஏன் இதில் இல்லை என்ற நிலையை மாற்றி, இதுபோன்ற விளையாட்டுக்களை முறையாக கற்று, எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெற்று நம் நாட்டிற்கு பெயரும், புகழும் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Previous post:

Next post: