37வது வருடத்தில் பயணிக்கும் அந்நஜாத்

in 2021 செப்டம்பர்

37வது வருடத்தில் பயணிக்கும் அந்நஜாத்

ஹிஜ்ரி 1406ம் வருடம் ஸஃபான் மாதம் (ஏப்ரல் 1986) ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதரர்களால் துவக்கப்பட்ட “அந்நஜாத்” மாத இதழ் சத்தியப் பாதையில் அது மேற்கொண்டுள்ள இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வின் நாட்டத்தினால் 36 வருடம் முடிந்து 37வது வருடத்தில் பயணிக்கின்றது. வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங்கிருபையினாலும், இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

“அந்நஜாத்” மேற்கொண்டுவிட்ட இலட்சிய பயணத்தில் அல்லாஹ்வுக்காக சத்தியத்தை நிலைநிறுத்தும். உண்மைக்கு சாட்சி சொல்லும். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சும். அதே நேரத்தில் தன்னையும் அறியாமல் நிகழ்ந்துவிடும் தவறுகள் தக்க ஆதாரத்துடன் சுட்டி காட்டினாலும், விமர்சித்தாலும் அவற்றை வெளியிட்டு தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க தயங்காது.

உங்கள் கைகளில் தவழும் இந்த 425வது இதழ் (இந்த மாத இதழ்) “அந்நஜாத்’ தொடர்ந்து உலகம் உள்ளவரை வெளிவர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்களது அந்நஜாத் சந்தாக்களை அவசியம் புதுப்பித்து அந்நஜாத் பணி தொய்வில்லாமல் தொடர உதவுங்கள், மேலும் அந்நஜாத் வளர்ச்சி நிதியாகக் கொடுத்து அந்நஜாத்தைப் பலப்படுத்துங்கள். உங்களது ஜகாத் பணத்தை தாராளமாக அனுப்பி, ஏழை, எளிய மக்களின் நியாயமான, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கொடுத்து உதவும் அரிய சேவைக்கு ஒத்துழைப்புத் தருமாறு மிக்க அன்புடனும், ஆதரவு வைத்தும் வேண்டுகிறோம். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: