நாம் முஸ்லிம்களே!

in 2021 நவம்பர்

நாம் முஸ்லிம்களே!

முஹம்மத் மதார், அபுதாபி

“முஸ்லிமீன்”

“அவனுக்கு யாதோர் இணையுமில்லை” இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். (இறைவனை) வழிப்பட்டவர்களில் (முஸ்லிம்களில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறும்) (அல்குர்ஆன் 6:163)

“எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்)  (அல்குர்ஆன் 7:126)

“ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).  (அல்குர்ஆன் 10:72)

மூஸா (தம் சமூகத்தாரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே (அவனை முற்றிலும் வழிபடுபவர்களாக) முஸ்லிம்களாக இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் 10:84)

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர் அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்த கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்க) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் (அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில்) முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.  (அல்குர்ஆன் 10:90)

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.  (அல்குர்ஆன்15:2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இந்நெறி நூல் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன் மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கிவைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 16:89)

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குத்துஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார் என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 16:102)

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(ந்த நெறிநூலில்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்கள் பாதுகாவலன்; பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன்; மிகச் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் 22:78)

“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது.) (அல்குர்ஆன் 27:31)

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் (வழிபட்டவர்களாக) முஸ்லிம்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். (அல்குர்ஆன் 27:38)

ஆகவே, அவள் வந்தபொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்). (அல்குர்ஆன் 27:42)

“இந்த ஊரை எவன் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிட்டுள்ளேன். எல் லாப் பொருட்களும் அவனுக்கே உரியன: அன்றியும் (அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக) முஸ்லிமாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்”(என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் 27:91)

மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும். இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 28:53)

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும், நன்னம்பிக்கை! கொண்ட ஆண்களும், பெண்களும்; இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்: (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்: தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்: நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்: தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்: அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன் னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் 33:35)

“அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முத லாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக) (அல்குர்ஆன் 39:12)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கிறார்?) (அல்குர்ஆன் 41:33)

இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.  (அல்குர்ஆன் 43:69)

மனிதனுக்கு தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாளிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (அல்குர்ஆன் 46:15)

எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை. (அல்குர்ஆன் 51:36)

நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல்குர்ஆன் 68:35)

“முஸ்லிமூன்”

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்”.  (அல்குர்ஆன் 2:132)

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை – உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை ஒரே நாயனையே வணங்குவோம்; (அவனுக்கே முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.  (அல்குர்ஆன் 2:133)

(முஃமின்களே!) “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும்; இப்ராஹீம். இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் (அவனுக்கே முற்றிலும் வழிபடும்) முஸ்லிம்களே” என்று கூறுவீர்களாக.  (அல்குர்ஆன்2:136)

அவர்களின் குஃப்ரு இருப்பதை (அதா வது) அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்தபோது:

“அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர். (அல்குர்ஆன் 3:52)

(நபியே! அவர்களிடம்) “நெறிநூலுடையோரே நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ் வைத்தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்தக் கொள்ளமாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)

மேலும் அவர், “மலக்குகளையும் நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிட மாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆய்விட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகிவிடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா? (அல்குர்ஆன் 3:80)

“அல்லாஹ்வையும் எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 3:84)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (அல்குர்ஆன் 3:102)

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 5:111)

அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும்) முஸ்லிம்களாகமாட்டீர்களா? (என்று கூறவும்)  (அல்குர்ஆன் 11:14)

“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்ப தெல்லாம்; “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்’ என்பதுதான்; ஆகவே நீங்கள் (அவனுக்கு வழிப்படும்) முஸ்லிம்களாக மாட்டீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!  (அல்குர்ஆன் 21:108)

இன்னும்; நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர்வழியில் செலுத்த முடியாது.

எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்களே முஸ்லிம்கள். (அல்குர்ஆன் 27:81)

இன்னும் நீங்கள் வேதத்தையுடையவர்களுடன், அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன் அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும், நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே. மேலும் நாங்கள் (அவனுக்கே முற்றிலும் வழிபட்டு நடப்போர்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 29:46)

இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; (முற்றிலும் வழிபட்டவர்களாக) முஸ்லிம்களாக நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன் 30:53)

“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். (அல்குர்ஆன் 72:14)

Previous post:

Next post: