சிந்திப்பவர்களுக்காக!

in 2021 டிசம்பர்

சிந்திப்பவர்களுக்காக!

அப்தில்லாஹ் இப்னு அருணாச்சலம்

அது சுருக்கமானது, விரிவானதும் அல்ல… நிரந்தரமானதும் அல்ல…

ஆம்! நாம் வாழும் இந்த வாழ்க்கை… பூமி யின் மீது மனிதர்கள் நாம் வாழும் வாழ்க்கை நீர்க்குமிழி உருவாகி மறைவது போல மிகச் சுருங்கிய காலம் உடையது.

ஆனால், நினைத்துப் பாருங்கள்… வானி லிருந்து இறைவன் மழையை இறக்குகிறான். நிலங்களின் மீது பச்சைப் போர்வை போல மரம், செடி, கொடிகள் என எல்லாமும் பரவச் செய்கிறான்.

மனிதனோ, தானே அந்த மழையை இறக்கி எல்லாவற்றையும் முளைக்கச் செய்ததாகவும், அவற்றின் மீது முழு அதிகாரமும் தனக்கு மட்டுமே இருப்பதாகவும் எண்ணி கர்வம் கொள்கிறான்.

இதனை இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாக இறைவன் கூறி, …இரவிலோ, பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்துவிட்டோம்) அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று ஆக்கி விட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு(நம்) அத்தாட்சிகளை விவரிக் கின்றோம். (10:24) என அற்பமான, நிலையில்லாத வாழ்வைப் பற்றி எச்சரிக்கிறான்.

ஒரு மனிதன் பொருளீட்டி வீடு கட்டி விட்டாலோ, வாகனங்கள் வாங்கிவிட்டாலோ, தான் ஒரு மிகப் பெரும் சாதனை படைத்ததாக எண்ணி, தான் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று இறைவனை, அவற்றை யயல்லாம் கொடுத்தவனை மறந்துவிடுகிறான். இதற்கே இப்படியயன்றால், ஆட்சி அதிகாரம் கிடைத்தவர்களை சொல்லவா வேண்டும்.

இறைவன் மேலும் எச்சரிக்கிறான்…

“(நபியே) நீர் கூறுவீராக! அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ, பகலிலோ வந்து விடுமானால், (அதைத் தடுத்து விட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்? (குர்ஆன் 10:50)

நிச்சயமாக அவர்கள் தேடுவதெல்லாம் அற்பமான மிகச் சுருங்கிய காலம் மட்டுமே வாழும் இந்த உலக வாழ்க்கையைத்தான்.

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். (57:20)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆகவேண்டும்…. (அல்குர்ஆன்3:185)

மேலும் இந்த இறைவசனத்தின் இறுதியில் “இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்க வல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை’ எனக் கூறுகிறான். வானங்களையும், பூமியையும் அவற்றிற்கு இடைப்பட்டவைகளையும் படைத்தவன்.

எவனால் உங்களுக்கும் நீங்கள் கண்டவர்களுக்கும் உயிர் கொடுக்கப்பட்டதோ, அவனே உங்கள் உயிரைக் கைப்பற்றுவான்.

நீங்கள் விரும்பியவர்களின் ஆன்மாவை எவன் எடுத்தானோ, அவனே உங்கள் ஆன்மாவையும் எடுப்பான். நிச்சயமாக நீங்களும் அழிந்து போவீர்கள். அன்று… உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களால் பதிலளிக்க முடியாது. உங்கள் அதிகாரம், செல்வம், பிள்ளைகள் எதுவும் பயனளிக்காது.

உங்களுக்குச் சொந்தமானது என எதையும் இங்கிருந்து நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது.

அன்புச் சகோதர, சகோதரிகளே… உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள். இரவும், பகலும் சுழல்கிறதே… நிச்சயமாக அதில் நீங்கள் வாழும் நாட்கள் எண்ணப்படுகிறதே. உங்கள் மரணத்தை நோக்கி பயணிக்கிறீர் களே! அதில் அத்தாட்சி இல்லையா?

பிறகு ஏன் இந்த அற்ப வாழ்வின் இன்பங் களுக்காக இவ்வளவு சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், வஞ்சம் கொலைகள்?

இவ்வுலகில் உங்கள் நேரம் வரும் முன்னர் நீங்கள் பதிவு செய்த பாவங்களை அழிக்க முயற்சி செய்யுங்கள். இறைவனிடம் தவ்பா தேடுங்கள். இவ்வுலகின் இன்பங்களுக்கு மத்தியில் உங்களுக்கு இந்த வாழ்வைக் கொடுத்த அந்த ஒரே இறைவனின் பக்கம் திரும்புங்கள்.

“லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவின் அடிப்படையில் வாழ்ந்து அதே அடிப்படையில் மரணிப்பவர்களாக நாம் இருந்தால், நிச்சயமாக இறைவன் நம் பாவங்களை மன்னித்து மறு உலக இன்பங்களை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: