அறிந்து கொள்வோம்!

in 2022 ஜனவரி

அறிந்து கொள்வோம்!

 மர்யம்பீகுண்டூர்

1.   அல்லாஹ்வால் பெயர் சூட்டப்பட்ட இரண்டு நபிமார்கள் யார்?
யஹ்யா(அலை) 19:7, ஈஸா(அலை) 3:45

2.  வயது முதிர்ந்த நிலையில் குழந்தை பேறுக்கான நன்மாராயம் கூறப்பட்ட இருவர் யார்?
இப்ராஹீம் நபி அவர்களின் மனைவி (11:72)
ஜக்கரியா(அலை) அவர்கள். ( 19:8)

3.  பத்ரு போரில் அல்லாஹ் எத்தனை வானவர்களை இறக்கி உதவி செய்தான்?
மூவாயிரம் வானவர்கள். (3:124)

4.  அல்லாஹ் காரூனையும், வீட்டையும் எவ்வாறு அழித்தான்?
பூமியில் விழுங்கச் செய்து அழித்தான். (28:81)

5.  அல்லாஹ் அல்குர்ஆனை யார் மூலம் இறக்கினான்?
ரூஹுல் குதுஸ் என்னும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் இறக்கினான். (16:102)

6.  அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை கஃபத்துல் லாஹ்விலிருந்து பைத்துல் முகத்தஸி லுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு எத் தனை நாளில் அழைத்துச் சென்றான்?
ஓர் இரவில். (17:1)

7.  நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யார் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.
நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (புகாரி 1043)

8.  நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின் போது இஸ்லாமிய கொடியை யாரிடம் கொடுத்தார்கள்?
அலி(ரழி) அவர்கள். (புகாரி 3009)

9.  பத்ரு போரின் போது அப்பாஸ்(ரழி) அவர்கள் எந்த அணியில் இருந்தார்கள்?
எதிர் அணியில். (புகாரி : 3008)

10.  நெருப்பினால் வேதனை செய்யக்கூடிய தகுதியுடையவர்கள் யார்?
அல்லாஹ். (புகாரி : 3016)

11.  எமன் நாட்டு கஅபா என்றழைக்கப் படும் ஆலயம் எது?
துல்கலஸா. ( புகாரி : 3020)

12.  போரின் போது ஏற்படும் துன்பங்களை எவ்வாறு கையாளவேண்டும்.
பொறுமையாக. (புகாரி: 3026)

13.  முஹம்மத் இப்னு மஸ்லமா(ரழி) அவர் கள் யாரை கொன்றார்கள்?
கஅப் இப்னு அஷ்ரஃப். (புகாரி: 3031)

14.  நபி(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதை கொண்டு மருந்திட்டார்கள்?
எரிக்கப்பட்ட ஈச்சம் பாயின் சாம்பல். (புகாரி : 3037)

15.  நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லாஹ் வின் பூமியிலேயே அதிகமான நோய் நொடிகள் கொண்ட பிரதேசம் எது?
மதீனா. (புகாரி: 1889)

16. அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை எந்த பள்ளத்திற்கு அழைத்தான்.
துவா. (79:16, 20:12)

17.  நூஹ்(அலை) அவர்களின் கப்பல் எந்த மலையில் தங்கியது?
ஜூதி மலையில். (11:44)

18.  மதீனா நகரத்தின் பெயரை அல்லாஹ் எப்படி கூறுகிறான்?
யஸ்ரிப்” (33:13)

19.  உறுதி மிக்க காரியம் எது என அல்லாஹ் கூறுகிறான்?
பொறுமையாகவும், மன்னித்து விடுதலும். (42:43)

20.  மூஸா(அலை) அவர்களின் சமூகத்திற்கு அல்லாஹ் எத்தனை ஊற்றுகளை கொடுத்தான்?
12 (
பன்னிரண்டு) (7:160)

Previous post:

Next post: