இணை வைக்கும் முஸ்லிம்கள்!

in 2022 ஜனவரி

இணை வைக்கும் முஸ்லிம்கள்!

அபூ ஹனிபா, புளியங்குடி

இணை வைக்கும் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மனம் வருத்தப்பட்டாலும் உண்மையை சொல் லித்தான் ஆகவேண்டும். ஏன் என்றால் இன்றைக்கு ஏதோ சில முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அல்லது மாற்று மத சகோதர, சகோதரிகள் இணைவைக்கும் செயல்களில் ஈடுபட்டு அதைப் பற்றி எச்சரிக்கை செய்யாமல், கண்டும் காணாமல் போனால், நாளை நமது சந்ததிகளும் இணைவைக்கும் செயல் களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் கொடுக்க முடியும்? இன்றைக்கு பக்கத்து வீடு நெருப்பால் எரிந்து கொண்டிருக்க அதனை அணைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த நெருப்பு விரைவில் எனது வீட்டையும் சேர்த்து எரித்து அழித்து விடும். அதனால் எனக்குத்தான் நஷ்டம் என்ற அடிப்படையில் இணை வைப்பு என் னும் நெருப்பை அணைக்க தண்ணீர் என்ற உபதேசத்தை கொண்டு அணைக்க முயற்சிக்கிறேன் அல்லாஹ் நாடினால் நிச்சயமாக அணைத்துவிடுவான். இணை வைப்பு என்னும் நெருப்பை பரவாமல் தடுத்துவிடுவான் எனது சந்ததிகளும் பாதுகாக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ். இந்த பதிவில் இணை வைத்தல் என்றால் என்ன? இணை வைத்தால் என்ன நடக்கும்? இணை வைத்த முதல் முஸ்லிம் யார்? இன் றைக்கு முஸ்லிம்கள் என்ன என்ன இணை வைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

இணைஷிர்க்) வைத்தால் என்ன நடக்கும்?

இணை வைப்பு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் இணை(ஷி´ர்க்) வைத்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீர் இணை வைத்தால், உம் நன்மைகள் அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்”. அல்குர்ஆன் 39:65

முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கும் அல்லாஹ் அறிவித்தது என்னவென்றால், இணைவைத்தால் உங்களுடைய நன்மைகள் அழிந்து நஷ்டம் அடைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள். மனிதர்களில் எந்த கொள்கையை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டால் அவர்கள் செய்யக்கூடிய எந்த நல்ல செயல்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ் வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள். மேலும் மிகச் சோம்பல் அடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
அல்குர்ஆன் 9:54

முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மறுத்து அல்லது அல்லாஹ் விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப் படாமல் இருந்து பெயரளவில் நன்மைகள் செய்வார்களாயின் அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இன்னும் இந்த உலகத்திற்காக, பிற மனிதர்களுக்காக அவர்கள் செய்யக்கூடிய எந்த நன்மைகளும் அவர்களிடம் இருந்து ஏற்றுக் கொள்ளப்படாது என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இணை வைப்பதைத் தவிர மன்னிப்பு உண்டு :

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். அல்குர்ஆன் 4:48

அல்குர்ஆன் 4:48 வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான். இதர பாவங்களை மன்னிப்பதாக சொல்கிறான். இணை வைக்கும் செயல்களை மட்டும் நாம் தவிர்த்துக் கொண்டால் இன்ஷா அல்லாஹ்! நாம் சொர்க்கம் செல்வது உறுதி.

எதுவெல்லாம் இணை வைக்கும்ஷி´ர்க்) செயல்கள் என்று தெரிந்தால் மட்டுமே, அதை செய்யாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் தர்கா வழிபாடும், சிலை வணக்கமும் மட்டுமே இணைஷி´ர்க்) வைப்பு என்று போதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவை இரண்டு மட்டுமே இணை வைப்புஷி´ர்க்) அல்ல. மேலும் என்ன என்ன இணை வைப்பு இருக்கிறது என்பது பற்றி இன்ஷா அல்லாஹ்! இந்தக் கட்டுரையின் வாயிலாக பார்ப்போம்.

இணை வைப்பு என்றால் என்ன?

\படைத்தவனை (அல்லாஹ்வை) வணங்குவதை விட்டு படைப்புகளை வணங்குவதும் படைத்தவனின் (அல்லாஹ் வின்) சொல்லுக்கு கட்டுப்படாமல், படைப்புகளின் சொல்லுக்கு கட்டுப்படுவதும் ஆகிய இரண்டு செயல்களே இணை வைப்புஷி´ர்க்) ஆகும். படைத்தவனான அல்லாஹ்வை வணங்காமல் அவன் படைத்த வானம், பூமி, நீர், காற்று, சூரியன், சந்திரன் போன்றவற்றையும் மனிதர்களில் சிலரையும் கடவுளாக வணங்குவது இணை வைப்பின் ஒரு பகுதியாகும். அதுபோல படைத்தவனான அல்லாஹ்வின் சொல்லுக்குக் கட்டுப்படாமல் அவன் படைத்த படைப்புகளான மனிதர்களில் பாதிரிகள், சந்நியாசிகள், மதகுருக்கள், ஆலிம்கள், உலமாக்கள், இயக்கத் தலைவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது இணை வைப்பின் இரண்டாவது பகுதியாகும். இவை இரண்டையும் இன்றைக்கு மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு செயல்களை தவிர்த்துக் கொண்டால் இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக நேர்வழி பெற முடியும்.

இணை வைப்பு எப்படி உருவாகிறது?

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன் மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச் சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண் மையுடைய நெறிநூலையும் இறக்கி வைத்தான்; எனினும் அந்நெறிநூல் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழிகாட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்அல்குர்ஆன் 2:213

இணைவைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதை அல்குர்ஆன் 2:213 வசனத்தை நன்கு கவனித்தால் நிச்சயமாக நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ் நன் மாராயங் கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கையை செய்யவும் நபிமார்களை அனுப்பி வைத்துள்ளான். மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக தூதர்களுடன் உண்மை உடைய நெறிநூலையும் இறக்கி வைத்திருக்கிறான். அப்படி இருந்தும் அவர்களுக்குள் உண்டான பொறாமையின் காரணமாக மாறுபட்டு புறக்கணித்து இருக்கிறார்கள். பொறாமையின் வெளிப்பாடு ஆணவம், ஆக இணைவைப்பிற்கு அடிப்படை காரணம் பொறாமை. இந்த பொறாமையின் காரணமாகத்தான் ஒரு வி­யத்தில் உண்மை இருந்தும் அந்த உண்மையை பெரும்பான்மை மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த பொறாமை உண்மையை ஏற்பதை விட்டும் தடுக்கிறது.

அதனால் தான் உண்மைக்கு எதிராக தவறான ஒன்றை வைத்து உண்மை என்று வாதாடுகிறார்கள். அதனால் தான் ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டமாக இருந்த போதும் பிற்காலத்தில் பொறாமையின் காரணமாக பல பிரிவினர்களாக, கோத்திரங்களாக, மதத்தினர்களாக, சாதியினர்களாக, மத்ஹப்களாக, இயக்கங்களாக பிரிந்து இருக்கிறார்கள். அப்படி இணை வைத்து பிரிந்தவர்களைத்தான் அல்லாஹ் நேர்வழியான ஒரே சமுதாயத்தின் பக்கம் அழைக்கிறான். அல்குர்ஆன் 2:213 அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் நடத்துகிறான். இணை வைத்த முதல் முஸ்லிம் யார்? இன்றைக்கு முஸ்லிம்கள் என்ன என்ன இணை வைப்புகளில் ஈடுபடுகிறார்கள்? என்பதை அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்! பார்ப்போம்.

Previous post:

Next post: