என்று மாறும் இந்த இழிநிலை?

in 2022 ஜனவரி

என்று மாறும் இந்த இழிநிலை?

அபூ உஸ்மான்,   சென்னை

எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானவத ஆலா குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப் பட்ட (சமுதாயத்தில்)சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங் கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்…”  அல்குர்ஆன் 3:110

நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண் டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும். அது இயலாவிட்டால் தமது நாவினால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் வெறுக்கட்டும்! அதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்: அபூஸயீத்(ரழி), நூல்:முஸ்லிம்

மேற்கண்ட அல்லாஹ்வின் கூற்றையும், நபி(ஸல்) அவர்களின் அறிவுரையையும் பார்க்கும்போது, இந்த உலகத்தில் நடக் கின்ற தீமைகளை பார்த்துக்கொண்டு, கண்டும் காணாமல் இருப்பது ஒரு உண்மையான, முஸ்லிமான மனிதனுக்கு ஆகுமானது அல்ல என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. இந்த உலகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களால் அதிகமாகப் பேசப்படும் ஒரு தீமை ஓரினப்புணர்ச்சி என்ற கொடுஞ்செயல். இந்தத்தீமைகள், அதிகமாக ஹாஸ்டல்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், சர்ச்சுகளிலும் இன்னும் மார்க்கக் கல்வி போதிக்கிறோம் என்று சொல்லக்கூடிய அரபி மதரஸாக்களிலும் தலைவிரித்தாடுவதை செய்திகள் மூலம் அறிகின்றோம்.

நாளிதழ்களில் லெஸ்பியன் உறவுக்கு அடிமைப்பட்ட ஒரு பெண், வேறொரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு சம்மதிக் காததால், கொலை செய்து விட்டாள். இந்தப் பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவள் என்று செய்தியைப் படிக்கும்போது, இந்தத் தீமையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் சமுதாய நலனில் கொஞ்சம் அக்கறை உள்ளவர்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோல, நாகர்கோவிலில் கிருஸ்தவப் பாதிரியார் ஒருவர், பள்ளி மாணவனுடன் தகாத உறவு கொண்டார் என்ற செய்தியும் வந்தது.

இதுபோன்று, மிகவும் பிரபலமானவர்கள் கூட இந்தக்கொடுமையான தீமைக்கு அடிமைப்பட்டு, மனிதனின் எதார்த்த பண்பை மீறி செயல்படுகிறார்கள் என்று நினைக்கும்போது, இந்த மனித சமுதாயம் எவ்வளவு விஞ்ஞானத்தில் வளர்ந்து இருந்தாலும் ஒழுக்கத்தில் உயரவில்லை என்பது தெளிவாகின்றது. நேர்மறையும், எதிர்மறையும் சேரும்போது மின்சார சக்தி உண்டாகிறது. நேர்மறையும், நேர்மறையும் சேர்ந்தால் எதிர்ப்பு, மோதல் ஏற்படுகிறது. இது சாதாரணஅறிவியல் உண்மை”. ஆனால், மனிதன் இதைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தன் மனம் போன போக் கில் செயல்படுவதை விட்டும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் என்று கேட்டால், இந்தக் கொடுந்தீமையைப் பற்றி குர்ஆன் எச்சரிக்கிறது. மேலும், இந்தக் கொடு மையை செய்த சமுதாயத்தையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு, அல்லாஹ் அழித்ததாக குர்ஆன் உலக மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்த உலகத்தில் அல்லாஹ், மனிதனையும் அவனுக்குத் தேவையான அனைத்தையும் படைத்துவிட்டு, மனிதன், “மனிதனாகஎப்படி வாழ்வது என்பதனையும், எப்படி வாழ்ந்தால், அவன் சிறந்தமனிதனாகவாழ்ந்துசிறந்த மனிதனாகமரணிக்க முடியும் என்பதனையும் விளக்குவதற்காக, அல்லாஹ் தன் தூதர்களை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தான். இந்த உலகத்தில் உள்ள எல்லா சமுதாயத்துக்கும் தூதுவர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக எல்லா சமுதாயத்துக்கும் நாம் தூதுவர்களை அனுப்பி உள்ளோம்அல்குர்ஆன் 16:36

இப்படி அனுப்பப்பட்ட தூதுவர்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற உண்மைக் கூற்றை மக்களுக்கு எடுத்து வைத்தார்கள். அதுபோல, மனிதர்களிடம் இருக்கின்ற தீய பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்டு அதை நீக்கிக் கொள்வதற்கும் ஏவினார்கள். நன்மையை ஏவி, அதற்குப் பரிசாக நன்மாராயங்களையும், தீமையைத் தடுத்து அதற்குத் தண்டனை யையும் விளக்கி, மக்கள் மத்தியில் தெளிவான அத்தாட்சிகளையும், சான்றுகளை யும் எடுத்து வைத்துஅல்லாஹ் ஒருவன் மட்டும்தான் வணக்கத்திற்குரியவன்என்ற உண்மையை உணர்த்தினார்கள். அந்த வரிசையில் வந்த நபிமார்களில் ஒருவர் தான் லூத்(அலை) அவர்கள்.

அவர்கள் சமுதாயத்தில், ஆண்களும், ஆண்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட விஷயத்தை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்:

மேலும், லூத்தை(அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார். “உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”  அல்குர்ஆன் 7:80

மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள்; நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின் றீர்கள்.” அல்குர்ஆன் 7:81

லூத்தையும்(நினைவுகூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்: “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்கள்.”  (என்றும் கூறினார்)
அல்குர்ஆன் 27:50

நீங்கள் பெண்களை விட்டு விட்டு மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறி வில்லாதவர்களாக இருக்கிறீர்கள்.
அல்குர்ஆன் 27:55

மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார். நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்ய முயன்று விட்டீர்கள்”.  அல்குர்ஆன் 29:28

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகின்றீர்களா? வழி மறிக்கவும் செய்கின் றீர்கள்? உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்”. அல்குர்ஆன் 29:29

மேலே குறிப்பிட்டுள்ள ஆயத்துக்களுக்கு விளக்கம் அளிக்க அவசியமில்லை. படித்தாலே தெளிவாகப் புரிகின்றது. லூத் (அலை) அவர்கள் சமுதாய மக்களிடம், இந்த கேடு கெட்ட தீமையைப் பற்றிச் சொல்லி திருத்த நினைத்து உள்ளார்கள். ஆனால், சமுதாய ஆண்களோ இதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தொடர்ந்து இந்தத் தீச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் லூத்(அலை) அவர்களி டத்தில் என்ன கேட்கிறார்கள் பாருங்கள்! குர்ஆன் தெளிவாக விவரிக்கின்றது.

அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்நீர் உண்மையாளர்களில் (ஒருவராக) இருப்பின், எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்பது தவிர வேறு எதுவுமில்லைஅல்குர்ஆன் 29:29

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!’ என்று பிரார்த்தித்துக் கூறினார். அல்குர்ஆன் 29:30

இந்த நேரத்தில் அல்லாஹு தஆலா அந்த ஊரை அழிப்பதற்காக வேண்டி, மலக்குகளை ஆண்கள் உருவில் அனுப்புகிறான். அந்த மலக்குகளிடமே தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள் என்று குர்ஆனே கூறுகிறது.

நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்காக அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக, “இது நெருக்கடி மிக்க நாளாகும்என்று கூறினார்அல்குர்ஆன் 11:77

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னி ருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டு இருந்தவர்கள் (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்குப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன் னும் என் விருந்தினர் விசயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர்(கூட) உங்களில் இல்லையா?’ என்று கூறினார். அல்குர்ஆன்: 11:78

அதற்கு அவர்கள்உங்களுடைய புதல் வியரில் எங்களுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை என்பதை திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்என்று கூறினார்கள். அல்குர்ஆன் 11:79

அதற்கு லூத்(அலை) அவர்கள், “உங்களைத் தடுக்கபோதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின் பால் நான் ஒதுங்க வேண்டுமேஎன்று (விசனத்துடன்) கூறினார். அல்குர்ஆன் 11:80

(அழிப்பதற்காக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே, நாம் உம் முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும் பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்று விடும்! உம்முடைய மனைவியைத் தவிர; உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலை யாகும்; விடியற்காலை நெருங்கிவிடவில்லையா?’ அல்குர்ஆன் 11:81

எனவே, (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்டபோது, நாம் (அவ் வூரின்) அதன் மேல் தட்டைக் கீழ் தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிய வைத்தோம்‘. அல்குர்ஆன் 11:82

அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. அல்குர்ஆன் 11:83

மேலே நினைவூட்டப்பட்ட ஆயத்துக்கள் அனைத்திலும் ஒரு சமுதாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்தத் தீச்செயல் என்பது குர்ஆன் நமக்குப் படம் பிடித்துக் காட்டும் நிகழ்வுகள் ஆகும். இந்த குர்ஆனின் வசனங்கள் மூலமாக, நாம் சிந்திக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இன்று இந்த உலகத்தில், அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இத்தீச்செயலை, ஆதரித்து ஒரு கூட்டமும், எதிர்த்து ஒரு கூட்டமும் செயல்பட்டு வருவதை நாம் கேள்விப்படுகிறோம். லெஸ்பியன் உறவை சட்டமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சில பெண்கள் கோர்ட்டில் கேஸ் கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். இவர்கள், யார் என்றால், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாதவர்களாக இருக்கின்றவர்கள். இவர்கள், இப்படி சிந்திப்பதைஆச்சர்யம்என்றும் சொல்லமுடியாது.

ஏனென்றால் உலக வாழ்க்கை மட்டும்தான் உண்மை. அதிலேயேஅனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும்என்ற கொள்கையுடையவர்கள், அவர்களிடத்தில் தீய செயல்களை தரம் பிரித்துக் காட்டும்போது, தீய செயல்களுக்கும் லைசென்ஸ் வேண்டும் என்று கூறக் கூடியவர்கள். விபச்சாரம் கூடாது என்றால், அதற்கும்லைசென்ஸ்வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள். “நிர்வாணமாக ஹோட்டலுக்குள் டான்ஸ் ஆடுவது தவறு அல்லஎன்று சொல்லும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஈமான் கொண்டு, வாழும் நம் முஸ்லிம் சமுதாய மக்கள் நடத்துகிற அரபி கல்லூரிகளிலும், அரபி மதரஸாக்களிலும் இந்தக் கொடுஞ் செயல்கள் நடைபெறுவதாக பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது ஏன்? இஸ்லாமிய சமுதாய மாணவர்கள் எப்படி பயிற்றுவிக்கப்படவேண்டும்? பொதுவாக, அரபி கல்லூரிகளிலும் அரபி மதரஸாக்களிலும் இதுபோன்ற கொடுஞ் செயல்கள் எப்படி ஏற்படுகின்றது என்றால், பயிற்றுவிக்கப்படும் முறை சரியில்லையா? அல்லது மாணவர்கள் மீது நிர்வாகம் கவலைப்படவில்லையா? அல்லது இறையச்சம் போதிக்கப்படுவதில்லையா? இதுபோன்ற கேள்விகள் ஏன் ஏற்படுகின்றது என்றால், அல்லாஹ்வுடைய மார்க்கம் இந்த உலகத்தில் தழைத்தோங்கப் பாடுபடுகிறவர்கள் எந்தவிதமான உலக ஆதாயத்தையும் கணக்கில் கொள்ளாமல் தங்களுடைய கல்வியை அடுத்தவருக் குக் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் கூலிக்கு கும்மி அடிக்கிற கூட்டத்திடம் இறையச்சத்தையும், அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து செய்தல் என்ற பண்பையும் எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், உலக ஆதாயத்தை விரும்பி, மார்க்கத்தைச் சொல்லிக் கொடுப்பவர் கள்தான் இன்று உஸ்தாதுகளாக பெரும்பாலான மதரஸாக்களிலும், அரபி கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். இவர்களிடம் படிக்கின்ற மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார்களா? என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. உலகக் கல்வி படிக்கின்ற பள்ளி கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், தனக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளத்துக்கு வேண்டி சில குறிப்பிட்ட பாடங்களை நடத்திவிட்டு 1ந் தேதி ஆனால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு தான் வாங்கிய காசுக்கு வேலை செய்து விட்டுப் போய் விடுவார்கள். மாணவர்கள் சமுதாயம் சிறந்து விளங்கவேண்டும் என்று நினைக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்? அது போன்றதா அரபி கல்லூரிகளும்? மதரஸாக்களும்? அரபி கல்லூரி, மதரஸா, உஸ் தாதுகள், மாணவர்களை பண்பட்ட மாணவர்களாக உருவாக்குவதில் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.

பாடத்துடன், ஒழுக்கக் பயிற்சி போதிக்கப்பட வேண்டும். இறையச்சம் பற்றி பாடங்கள் அதிகம் சொல்லித் தரவேண்டும். தங்களை நம்பி, தாய், தந்தையர்கள் ஒப்படைக்கிறார்கள். மதரஸாவுக்குப் போனால், நம் மகன் சிறந்தவனாக, ஒழுக்கம் உடையவனாக, சிறந்த சிந்தனையாளனாக, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடக் கூடியவனாக, அனாச்சாரத்தைக் களையக் கூடியவனாக வருவான் என்று கற்பனை செய்து அரபி கல்லூரிக்கும், மதரஸாக்களுக் கும் அனுப்புகிறார்கள்.

ஆனால், வந்த இடத்தில், இது போன்ற தீச்செயல்களும், இஸ்லாமிய பண்பாட்டுக்கு மாற்றமான கல்வி முறைகளும், ஒழுக்கத்தில் தாழ்ந்த நிலையிலும், இறையச்சத்தில் குறைந்தவர் களாகவும், கெட்ட பண்பு உடையவர்களாகவும், மொத்தத்தில்வாய்ச் சொல்லில் வீரர்களாகவலம் வர அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம்? அரபி கல்லூரி, மதரஸா நிர்வாகிகள், முதல்வர்கள், உஸ்தாதுகள், இதை யாரோ சொல்கிறார்கள் என்று அலட்சியப்படுத்தாமல் உண்மையை உள்ளத்தால் ஏற்றுஇஸ்லாமிய மாணவர்களைஉருவாக்க முன்வருவார்களா? அல்லது எப்போதும் போல அலட்சியமாகத்தான் இருப்பார்களா? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

Previous post:

Next post: