ஐயமும்! தெளிவும்!!

in 2022 ஜனவரி

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர். அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர். ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்ற னவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீத் படி இது சரியா?  சையது அஹமது

தெளிவுநீண்ட காலமாக சொத்துக்களின் பெருமதிக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. அவற்றிலிருந்து பெறப்படும் வாடகைக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே வேரூன்றி இருக்கிறது; விவசாயம் செய்யும் நிலத்தில் கிரயத்திற்கு ஜகாத் கொடுப்பதில்லை, அதிலிருந்து விளையும் பொருட்களுக்கு ஜகாத் கொடுக்கும் ஆதாரத்தை வைத்து இவ்வாறு யூகம் (கியாஸ்) செய்துள்ளனர். ஆழ்ந்து சிந்திக்கும் போது இந்த யூகம் தவறு என்பது புரிய வருகிறது.

விவசாயத்தின் மூலம் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தானி யங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயத் தின் அசல் நோக்கம் உணவு உற்பத்தியாக இருக்கிறது; அப்படியிருந்தும் அந்த உற்பத்தி நீர் இறைக்காமல் சுயமாக விளைவ தாக இருந்தால் பத்தில் ஒன்றும், நீர் இறைத்து விளைவதாக இருந்தால் இருப தில் ஒன்றும் அறுவடை செய்தவுடன் கொடுத்துவிட வேண்டும். வருடத்தில் மூன்று போகங்கள் விளைந்தால் மூன்று போகங்களுக்கும் கொடுத்துவிட வேண்டும். இங்கு பணங்காசைப் போல் ஒரு வருடம் பூர்த்தியானால்தான் கொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. விளைந்ததற்கு விளைந்து அறுவடை செய்தவுடன் கொடுத்துவிட வேண்டும்.

எனவே விவசாய வகைக்குரிய ஜகாத் ஆதாரத்திலிருந்து வாடகைக் கட்டிடங்களுக்குரிய ஜகாத்தை யூகம் (கியாஸ்) செய்தவர்கள் முறைப்படி செய்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒவ்வொரு மாத வாடகையிலிருந்தும் பத்திலொரு பங்கை ஜகாத்தாக கணக்கிட்டு கொடுத்து விட சட்டம் இயற்றி இருக்க வேண்டும். காரணம், தானே விளைவது போல் எவ்வித உழைப்புமின்றித்தான் வாடகை வருவாய் வருகிறது. இவ்வாறு சட்டம் வகுத்திருந்தா லாவது, வருடம் முடிவதற்குள் வாடகைப் பணத்திற்கும் கட்டிடம் வாங்கி சொத்து சேர்த்துக் கொண்டுஜகாத்கொடுக்காமல் ஏமாற்றும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

ஆனால் உண்மையில் சொந்த உபயோ கத்திலுள்ள கட்டிடங்கள், வாகனங்கள் இவற்றிற்குத்தான்ஜகாத்கடமை இல்லையே தவிர வருமானத்தை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டுக்கும் அந்த முதலீட்டில் நாற்பதில் ஒரு பங்குஜகாத்கடமை என்பதே சரியாகும்.

இது வியாபார நோக்கத்துடன் கொள் முதல் செய்து வைக்கும் பொருட்களுக்கும்ஜகாத்கடமை என்ற அடிப்படையிலாகும். ஒரு வியாபாரி வருட இறுதியில் தன்னிடமுள்ள பொருட்களின் பெறுமதியில் கடன் கழித்த பின் எஞ்சிய முதலீடு+செலவு போக ஈட்டி வைத்துள்ள ஆதாயம் இரண்டிற்கும்ஜகாத்கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்.

இதேபோல் வாகனங்கள் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் ஒருவர் வருட இறுதியில் தன்னிடமுள்ள வாகனங்களின் அன்றைய பெறுமதி + அவர் ஈட்டிய வருமா னத்தில் செலவு போக எஞ்சியிருக்கும் தொகை இரண்டிற்கும்ஜகாத்கொடுக்க கடமைப்பட்டுள்ளார். அவர் ஈட்டிய வரு மானத்தில் எஞ்சியிருப்பதைக் கொண்டு புதிதாக ஒரு வாகனத்தை வாங்கிக் கொண்டு, வாகனங்களுக்குத்தான்ஜகாத்கடமை இல்லையே என்று சொல்லி ஜகாத்திலிருந்து தப்ப முடியாது. சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கும் வாகனத்திற்கும், வருமானத்தை நோக்கமாகக் கொண்டு வாங்கி விடும் வாகனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

இதேபோல கட்டிடங்கள் விஷயத்திலும் சொந்த உபயோகத்திற்குரிய கட்டிடங்களுக்குத்தான் ஜகாத்திலிருந்து விதி விலக்குண்டு. மற்றபடி வாடகை வருமானத்தை எதிர்பார்த்து கட்டப்படும் கட்டிடங்கள் முதலீட்டு வகையிலேயே சேர்க்கப்பட வேண்டும். முதலீடாகக் கருதி அவற்றின் பெறுமதி+அவை மூலம் பெறப்படும் ஆதாயங்களில் செலவு போக எஞ்சி இருக்கும் பணம் இவற்றை வருட இறுதியில் கணக்கிட்டுஜகாத்கொடுத்து விடுவதே முறையாகும், சரியாகும். சொந்த உபயோ கத்திலுள்ள பெண்கள் அணியும் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற நகைகளுக்கேஜகாத்உண்டு என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்கிறது.

இந்த நிலையில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் நிலத்திலும், கட்டிடங்களிலும் போடப்படும் பணத்திற்குஜகாத்எப்படி கடமை இல்லாமலிருக்கும் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து விளங்க வேண்டும். நிலங்களை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்கள் அவர்கள் வாங்கிவிற்கும் கட்டிடங்கள், நிலங்கள் (அவை விவசாயத்திற்குரிய நிலங்களாக இருந்தாலும் சரியே) இவற்றில் முதலீடு செய்யும்போது, அவற்றை வியாபார நோக்கில் முதலீடு செய்துள்ளதாக கணக்கில் கொண்டு, அவர்கள் செய்துள்ள முதலீடுகள்+அவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதாயங்களிலிருந்து செலவு போக எஞ்சி இருப்பவற்றை வருட இறுதியில் கணக்குப் பார்த்து நாற்பதில் ஒன்றை ஜகாத்தாக கணக்கிட்டுக் கொடுத்து விடுவதே முறை யாகும்.

சொந்த உபயோகங்களுக்காக உள்ள கட்டிடங்கள், வாகனங்கள் இவற்றிற்குஜகாத்கடமை இல்லை என்ற இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையை வியாபார நோக் கத்துடன் ஆதாயத்தைக் கருதி வாங்கப்படும் கட்டிடங்களுக்கும், வாகனங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இது இவ்வுலகில் அவர்களின் வருமானத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தித் தருவதோடு மறுமையிலும் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

ஐயம்நானும் எனது நண்பனும் இங்கே அடுத்தடுத்த வீட்டில் வேலை செய்து வருகிறோம். என் நண்பனுடன் எனது அரபிக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் எனக்கு எனது நண்பனுடன் பேச வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரபிக்குத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது அரபி பார்த்து விட் டார். இனிமேல் நாங்கள் பேசமாட்டோம் என எங்கள் இருவரிடமும் குர்ஆனைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார். நாங்களும் பேசமாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டோம். நாங்கள் இரு வரும் பேசிக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்துக்கு மத்தியில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். குர்ஆனில் சத்தியம் செய்யலாமா? அப்படி சத்தியம் செய்தால் அதை மீறலாமாசையது அஹமது

தெளிவுநீங்களும் உங்கள் நண்பரும்பேசிக் கொள்ள வேண்டாமென்றுதானே சத்தியம் வாங்கியிருக்கிறார். எழுத்துக்கள் மூலம் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாமே, அப்படி முயற்சி செய்யுங்கள்.

உங்களது அரபி குர்ஆனின் மீது சத்தியம் வாங்கியது தவறாகும். இது அவரது அறியாமையை தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும் சத்தியம் செய்தல் கூடாது.

நபி(ஸல்) கூறினார்கள். எவராவது சத்தியம் செய்ய நாடினால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும், அல்லது வாய் மூடியிருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம் புகாரி 8:129)

இதனடிப்படையில் நீங்கள் அச்சத்தியத்தை மீறுவதில் தவறில்லை. உங்களுடைய பிழைப்புக்காக அரபு நாடுகளுக்கு சென்றிருக்கும் தாங்கள் முடிந்தவரை உங் கள் முதலாளியின் ஹலாலான எண்ணங்களுக்கு செவி சாய்த்து செயல்படுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யப் போதுமானவன்.

ஐயம்சாப்பிட்டத் தட்டில் கை கழுவக் கூடாது என்றும், ஒருவர் சாப்பிடும் போது ஸலாம் சொல்லக்கூடாது என்றும் சொல்கி றார்கள், இது சரியா?  முஜாஹித்தீன்

தெளிவு : சாப்பிட்ட தட்டில் கை கழுவக் கூடாது என்று குர்ஆன், ஹதீதில் எவ்வித ஆதாரமும் இல்லை. சாப்பிடும்போது சலாம் சொன்னால் சாப்பிடும் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்ப தற்காக சொன்ன சொல்லோ என்னவோ? சாப்பிடும்போது பேசுகிறவர்களுக்கு சலாம் சொல்வது ஒன்றும் பெரிய வி­யமாகாது. சாப்பிடும்போது சலாம் சொல்லக் கூடாது என்பதற்கான ஆதாரம் நம்மால் காண முடியவில்லை.

ஐயம்முஸ்லிம்கள் வாழும் ஒரே ஊருக்கு இரண்டு சங்கங்கள் தேவையா? இதில் மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம் என்ற வேற்றுமைகள் தேவைதானா? மார்க்கத்தில் அப்படி இருக்க இடம் உண்டா? இரண்டு சங்கங்களும் தனித்தனி நிக்காஹ் ஒப்பந்தப் புத்தகம் வைத்துக் கொள்வது நம் மார்க்கத்தில் உண்டா?   இறையடியான்

தெளிவு : இன்று முஸ்லிம்களிடையே பிரபல்யமாக இருக்கும் பிரிவினை குரூப்புகளான மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் இவற்றிற்கே இஸ்லாத்தில் இடமில்லை என்கிறபோது சங்கங்களுக்கு எப்படி இட மிருக்கும்? இவையனைத்தும் முஸ்லிம்களை பிரித்தாளும் ஷைத்தானின் செயல்களாகும்.

நாமனைவரும் ஏற்றிருப்பது ஒரே இறைவன் அல்லாஹ்; அவனது ஒரே இறை நெறிநூல் குர்ஆன்; நமது ஒரே நேர்வழி காட்டி, தூதர் நபி(ஸல்) அவர்கள் நமது மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என்ற அடிப்படையில் ஒன்றிணையும் வரையும் இப்பிரிவினை கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

திருக்குர்ஆனின் 3:103 ஆயத்தை தாங்களும் நிதானமாகப் படியுங்கள். உங்கள் ஊர் மக்களுக்கும் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் அறுபடாத கயிறான திருகுர்ஆனை நாம் முழுமையாக, ஒற்றுமையாக, கைப்பற்றாத வரை இப்பிரிவினைகளால் பாதிக்கப்படுவோம். நாம் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவே இருப்போம். நரகத்தின் விளிம்பிற்கு சென்று அதலபாதாள நரகத்தில் விழுவோம் என்பதை இவ்வசனத்தில் நீங்களே அதை உணரலாம். எனவே முஸ்லிம் என்ற ஒரே பெயரில் இஸ்லாமிய வழியில் வாழ அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.

ஐயம்இஸ்லாம்சேமிப்புபற்றி ஒன்றும் கூறவில்லையே! நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும்சேமிப்பில்‘ (நாளைய தேவையில் அக்கறை கொள்ளவில்லையே! இது இன்றைய காலகட்டத்தில் ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே! தங்களின் தெளிவு என்ன?  ஜகுபர் காக்கா

தெளிவுஏதோ அன்றாடக் காட்சியாக வாழ்ந்து நாளையைப் பற்றி நினைக்காமல் அதற்காக சேமிக்காமல் பராரியாக, வாழ் வதை இஸ்லாம் என்று எண்ணுவது தவறாகும்.

இஸ்லாம், சேமிப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை எனில் இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான ஜகாத் ஒருவர் மீது எப்படி கடமையாகும்? ஹஜ் செய்யும் பொறுப்பினை ஒரு செல்வந்தர் பெறமுடியுமா? ஒரு வருடம் சேமித்த பணத்தில் 2டி சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டுமல்லவா? ஆயுளில் சிறிது சிறிதாக சேமித்த பணத்தைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டுமல்லவா? நாளைய சேமிப்பைப் பற்றி இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்றால் இவ்விரு கடமைகளையும் அல்லாஹ் நம்மீது ஆணையிட்டி ருக்க வேண்டாமல்லவா? எனவே இஸ்லாம் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அதே நிலையில் அதற்கான கடமைகளை யும், ஜகாத், சதகா, ஹஜ் போன்றவை மூலம் நிறைவேற்றவே ஆணையிடுகிறது.

இஸ்லாமிய சொத்து பிரிவினையிலும் ஒருவரின் மரணத்திற்குப் பின் அவரது வாரிசுதாரர்கள் என்னென்ன விகிதாச்சாரங் களில் மரணித்தவர் சேமித்து விட்டுச் சென்றதை பிரித்துக் கொள்ள நீண்ட நெடிய சட்டங்களை வகுத்துள்ளது. சூரா அந்நிஸாவில் 7 முதல் 14 வரை வசனங்களைப் பார்க்க.

இஸ்லாம் ஒருவர் செல்வந்தராக வருவதை ஆட்சேபிக்கவில்லை. அவரால் முடிந்த அளவு செல்வங்களை ஹலாலான முறையில் சம்பாதித்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் பெரும் பணக்காரர்களாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப், அபூபக்கர், உத்மான் அல்கனி(ரழி) போன்றோர் வாழ்ந்துள்ளதை நாம் இஸ்லாமிய சரித்திரங்களில் காணலாம்.

ஸஃது பின் அபீவக்காஸ் என்ற நபி தோழர் தனது மரணப் படுக்கையில் தனது முழு சொத்துக்களையும் தீனுக்கு அர்ப்பணிப்பதாக ரசூல்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அதனை ஏற்கவில்லை. மூன்றில் இரண்டு பகுதியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார்கள். அதனையும் நபி(ஸல்) ஏற்கவில்லை. அவரது சொத்தில் பாதியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார்கள். அதனையும் நபி(ஸல்) ஏற்கவில்லை. கடைசியாக மூன்றில் ஒரு பகுதி யையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகி றார்கள். அதனை ஏற்றுக் கொண்ட நபி(ஸல்) இதுவும் அதிகமே! நீங்கள் மரணிக்கும் போது உங்களுடைய வாரிசுதாரர்களை மற்றவர்களிடம் கையந்தும்படி விட்டுச் செல்லாதீர்கள் என அறிவுரை பகர்ந்தார்கள். (ஆதாரம்: புகாரி 7:266, முஸ்லிம் 3:3991-99)

இந்நபிமொழி நாம் நமது வாழ்வில் பொருட்செல்வங்களை சம்பாதிப்பதற் கும், சேமிப்பதற்கும் அதனை நமது வாரிசு தாரர்களுக்கு விட்டுச் செல்வதையும் அனு மதியளிப்பதை காணலாம்.

நாம் சம்பாதிக்கும் பொருட் செல்வங் களுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியபடி கடமைகளை நிறைவேற்றினால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம், இதற்கு வரைமுறை இல்லை.

ஐயம்நான் மாற்று மத பெண்ணை விரும்புகிறேன்; மாற்றுமத பெண்ணை திருமணம் செய்யலாமா? அந்தப் பெண் இஸ்லாத்திற்கு வரத் தயாராக இருந்தும் எனது வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் நான் என்ன செய்வது?  முஜாஹிதீன்

தெளிவுஇன்றைய முஸ்லிம் சமுதாயத் திலேயே பல குமரிகள் மணமுடிக்கப்படாமல் பெருமூச்சு விட்டவர்களாக இருக்கிறார்கள். ஒருசிலர் தங்களுக்குத் தகுந்த வரன் கிடைக்காததால் வேறு வழியின்றி தகாத வழியில் சென்றுவிட நேரிடுகிறது. இதை நாம் தமிழகத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நிலைமை இப்படி இருக்க நமது முஸ்லிம் இளைஞர்கள் மாற்று மதப் பெண்களை மணமுடிப்பது நாகரீகம் ஆகக் கொண்டுள்ளனர். இந்நிலைக்கு நீங்களும் ஆளாக்கப்பட்டுவிட்டீர்களே என்று வருந்துகிறோம். இருப்பினும் தங்களது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் பதில் கூறுகிறோம்.

மாற்று மதப் பெண்ணை தாங்கள் விரும்பி விட்டதால் எப்படியாவது உங்களுடைய பெற்றோர்களை சம்மதிக்கச் செய்து அவர்களுடைய சம்மதத்துடன் அந்த பெண்ணை இஸ்லாத்தில் இணையச் செய்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதே சாலச்சிறந்ததாகும். உங்கள் காதல் விவகாரம் காரணமாக உங்களை ஈன்றெடுத்து வளர்த்த பெற்றோர்களை, அவர்களுடைய சம்மதம் இல்லாமல் மண முடிப்பது கொண்டு மனம் நோகச் செய்வது குர்ஆன், ஹதீத் உடைய தெளிவில் குற்றம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் அவர்கள் கைக்கூலி, சீர்வரிசை, மற்றும் திருமண சமயத்தில் மார்க்க முரணான ஷிர்க், பித்அத் காரியங்களில் உங்களை வற்புறுத்தினால், அதற்கு நீங்கள் இணங்க வேண்டாம். இங்கு உங்களையும், அவர்களையும் படைத்துப் போ´த்துப் பாதுகாத்து வரும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே முதற் கடமையாகும். இதனை அல்லாஹ் அல்குர்ஆன் 31:14,15 ஆகிய வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

Previous post:

Next post: