கேரளா தரும் படிப்பினை!

in 2022 ஜனவரி

தலையங்கம்!

கேரளா தரும் படிப்பினை!

அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மனம் கவராத இ.யூ.மு.லீக் கேரளாவில் மட்டும் கொடி கட்டிப் பறக்கின்றது. என்ன காரணம்? என்று சிறிது ஆராய்வோம். தமிழ கத்திலும் கேரளாவைப் போல் இ.யூ.மு.லீக் கொடி கட்டிப் பறந்திருக்கும். ஆனால் இங்குள்ள தாய்ச் சபைக்காரர்கள் 1986களில் இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்ட நேரத்தில் கட்சிப் பணியை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் அதோ வருகிறான் நஜாத்காரன், இதோ இவன் தொப்பி இல்லாமல் தொழுகிறான், விடாதே பிடி என்று ஓட ஓட விரட்டி ஊர் விலக்கல் செய்வது, பள்ளிவாசல் கதவை பூட்டிவிட்டு வயதான முதியவர்களைக் கொண்டு தொப்பி இல்லாமல் தொழுத இளைஞர்களை அடிப்பது என ஏகத்துவ சிந்தனையுடைய இளைஞர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து தங்களுடைய காலத்தை வீணாக் கினர். பள்ளிக்குள் வரவிடாமல் தடுத்ததால் தவ்ஹீத் பள்ளிகள் என்ற பெயரால் போட் டிப் பள்ளிகள் பல உருவாகி சமுதாயம் கூறு போடப்பட்டு பலவீனப்படுவதற்கு முழுக் காரணமாக அமைந்தவர்களே நம்முடைய தமிழ்நாடு இ.யூ.மு.லீக் கட்சிக்காரர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

ஆனால் அதே சமயத்தில் கேரளாவிலுள்ள முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த தாய்ச் சபையிலுள்ள தொண்டர்களில் பாதிப் பேருக்கு மேல், முக்கால்வாசிப் பேர் என்று கூடச்சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் எல் லோரும் முஜாஹித் என்ற நஜாத்காரர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்குள்ள பள்ளிவாசல்களில் தொப்பிப் பிரச்சனையும் கிடையாது. நஜாத்காரன் என்ற வேற்றுமையும் கிடையாது. அதனால் அங்குள்ள தாய்ச் சபையானது நஜாத்காரர் களையும் சுன்னத் ஜமாஅத்காரர்களையும் சேர்த்து இணைத்துக் கொண்டு நல்ல பலத்துடன் அமோகமாக செயல்படுகிறது.

ஆனால் நமது தமிழ்நாட்டை நினைக்கும்போது மனது மிகவும் வருந்துகிறது. என்ன செய்வது? தமிழகத்தில் தாய்ச்சபையினரின் வீம்பான முரட்டுத் தனத்தால் தவ்ஹீது இயக்க பிரிவினைவாதிகள் உருவாகி தனித் தனி பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு, தனித்தனி ஜமாஅத்துகளாகப் பிரிந்து இந்த அளவு ஒட்டுமொத்த சமுதாய மும் பலவீனமாகி விட்டது.

அதாவது சமுதாயமும், தாய்ச்சபையும் சேர்ந்து பலவீனமடைய இ.யூ.மு.லீக் கட்சித் தொண்டர்களே காரணம். எனவே தாய்ச் சபைக்காரர்களே! நீங்கள் அனைவரும் கேரள முஸ்லிம் லீக்கைப் பார்த்து பாடம் படியுங்கள்! தவ்ஹீத் இளைஞர்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டு சமுதாய மற்றும் அரசியல் பணியாற்றுங்கள். இதனால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் ஏற்பட்டு தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக ஆவதற்கு பாடுபடுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நம்பிக்கை கொண்டவர்களே! நியா யத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ் வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை யயல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின் றான். (அல்குர்ஆன் 5:8)

Previous post:

Next post: