படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

in 2022 ஜனவரி

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

எம்ரஹ் அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
அந்த ஒரே இறைவனின் பெயரால்

ஏக இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!

யார் நமது நேர்வழியில் செல்ல முயற்சி செய்கிறாரோ அப்படிப்பட்டவரை நம்முடைய நேர்வழியில் நடத்துவோம்.  (இறைநூல் 29:69)

உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! உங்கள் இறைவன் கருணை புரிவதைத் தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்டான்.

உங்களில் ஒருவர் அறியாமல் தவறு செய்துவிட்டு, பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக் கொண்டால் அவரை அல்லாஹ் மன்னிப்பான்.  (இறை நூல் 6:54)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

அல்லாஹ் படைப்புகளைப் படைத்த போது அரியணைக்கு மேலே தன்னிடமுள்ள பதிவேட்டில் என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது என்று எழுதி னான். புகாரி: 3194, 7404, 7453, 7553.

ஏக இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்!

தமக்கு தாமே அநீதி இழைத்து எல்லை மீறி நடந்த என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான். நிச்சயமாக அவனே மன்னிப்பவன், அன்பானவன் என்று நபியே! என் அடியார்களிடம் நீர் கூறுவீராக. (இறைநூல் 39:53)

இந்த இறைநூல், உலக மக்கள் அனை வருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும். (இறைநூல் 12:104)

எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாதவரை, உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. ஏக இறைவன் ஒரு சமூகத்திற்குத் தீங்கை நாடிவிட்டால் அதை தடுத்து நிறுத்திட யாராலும் முடியாது.  (இறைநூல் 13:11)

(அறிவுடைய முஸ்லிம்கள்) நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். (இறைநூல் 13:22)

திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. (இறைநூல் 11:114)

கெட்ட நண்பர்களுடன் அமர்வதை விட தனிமை மேலானது. நல்ல நண்பனுடன் அமர்வது, தனிமையை விட மேலா னது. தீய கெட்ட வார்த்தை கூறுவதை விட மவுனம் சிறந்தது. நல்ல வார்த்தை கூறுவது மவுனத்தை விட சிறந்தது என அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பைஹகி 256

(நபியே!) நன்மையும், தீமையும் சமமாக மாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டு இருந்தவர் கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர். (இறைநூல் 41:34)

ஆட்டு மந்தைக்குள் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்கள் அந்த மந்தையில் உள்ள ஆடுகளைத் தாக்கி அழிப்பதை விட, ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதும் செல்வாக்கின் மீதுள்ள பேராசையானது, அவனது மார்க்கத்தை அழிக்கக்கூடியதாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் சொன்னார்கள். ஜாமிஉத் திர்மிதி 2298

மண் மூடும் வரை மண்ணில் ஆசை :

நீங்கள் (இறந்து) மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, செல்வப் பெருக்கு உங்கள் கவனத்தைத் திருப்பிவிட்டது.

அவ்வாறன்று; நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். பின்னரும் அவ்வாறன்று; நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

அவ்வாறன்று; நீங்கள் மட்டும் உறுதியாக அறிந்திருந்தால் (அவ்வாறு நடந்திருக்காது) நிச்சயமாக நீங்கள் நரகத்தைக் காண் பீர்கள். பின்னரும் (கூறுகின்றேன்) அதை உறுதியாக (கண்ணால்) காண்பீர்கள்; பின்னர் அந்நாளில், அருட்கொடைகள் குறித்து உறுதியாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (இறைநூல் : 102:1-8)

புறத்தில் இல்லை, அகத்தில்தான்வான் இடிந்து கீழே விழுந்தாலும், நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள் தாம் குருடாகி விட்டன. (இறைநூல்: 22:46)

வானத்திலிருந்து ஒரு துண்டு தம்மீது விழுவதை அவர்கள் பார்த்தாலும், “அது அடர்த்தியான (மழை) மேகம்என்றே கூறுவர். (இறைநூல் 52:44)

அதிகாலையின் அபிவிருத்திகள் அருள் பெறப்பட்ட சமூகம், ஏனோ உறங்குகிறது? அல்லாஹும்ம பாரிக்லி உம்மதீ ஃபீபு கூரிஹா ( தமிழாக்கம்)

யா அல்லாஹ்! என் சமுதாயத்தினருக்கு அதிகாலை ஃபஜ்ர் நேரத்தில் உன் பரகத்களை (அபிவிருத்திகளை) அருள்வாயாக! என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி வாழ்வியல் தகவலாளர்: ஸஹ்ர் பின் வதாஆ அல் ஹாமிதி(ரழி) நபிமொழி ஆய்வாளர்: சுனன் அபூதாவூத், சுனன் திர்மிதி.

அதிகாலைத் தொழுகையில் சங்கமிக்கும் சங்கமம் :

நிச்சயமாக அதிகாலைத் தொழுகையானது, சாட்சியம் பகரப்படுவதாக இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நபிமொழி ஆய்வாளர்: புகாரி, நபிமொழி எண். 648,4717, முஸ்லிம், நபிமொழி எண். 1148.

(நபியே!) சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து இருள் கவ்வும் வரை தொழுகையைக் கடைப்பிடிப்பீராக!

அதிகாலைத் தொழுகையையும் கடைப் பிடிப்பீராக! நிச்சயமாக அதிகாலைத் தொழுகையானது, சாட்சியம் பகரப்படுவதாக இருக்கிறது. (இறைநூல் 17:78)

திருப்தியான முறையில் புலம் பெயர்தல் :

என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச் செய்வாயாக! என் னைத் திருப்தியான முறையில் வெளியேறச் செய்வாயாக! மேலும், உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (இறைநூல் 17:80)

(நபியே!) நீர் அறிவுரை கூறுவீராக! ஏனெனில், நிச்சயமாக அறிவுரையானது உண்மை இறை நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (இறைநூல் 51:55)

Previous post:

Next post: