ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

in 2022 மார்ச்

ஃபஜ்ர்தொழுகையின்சிறப்புகள்!

அல்கோபர்அழைப்பகம்

சான்றுபகரும்தொழுகை :

(நபியே!) சூரியன்(உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (லுஹ்ரு), அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலை நிறுத்துவீராக), நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது. திருக்குர்ஆன் 17:78

பகல்மற்றும்இரவுநேரவானவர்கள்சந்தித்துக்கொள்ளும்தொழுகை :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்து ஏழு மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள். இதை அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் “நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’ (திருக்குர்ஆன் 17:78) என்ற வச னத்தை ஓதுங்கள் என்றார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) அவர்கள், புகாரி 648

ஃபஜ்ரைத்தொழுதவர்மகிழ்வுடன், மனஅமைதியுடன்காலைப்பொழுதைஅடைகிறார் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு! என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும், மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார், இல்லை எனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) அவர்கள், புகாரி 1142

இரவுமுழுவதும்நின்றுவணங்கியநன்மை :

அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான்(ரழி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள், அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன், அப்போது அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார், சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத் துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். முஸ்லிம்:1162

அல்லாஹ்வின்பொறுப்பில்இருக்கிறார்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் வியத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம். அறிவிப்பாளர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான்(ரழி) அவர்கள், முஸ்லிம் : 1163.

நயவஞ்சககுணத்தைவிட்டும்விடுதலை :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை, அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.

இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) அவர்கள், புகாரி 657

மறுமையில்அல்லாஹ்வைக்காணும்பாக்கியம் :

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி “இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் வி­யத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படா திருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!’ என்று கூறிவிட்டு,

“சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!’ திருகுர்ஆன் 50:39 என்ற இறை வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். அறிவிப்பாளர்: ஜரீர்(ரழி) அவர்கள், புகாரி 554

மலக்குகளின்புகழாரம் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.

பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர்.

“என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?’ என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான்.

“அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போதே அவர்களை விட்டுவிட்டு வருகிறோம்’ என்று அவர்கள் பதில் கூறுவார்கள்.  அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) அவர்கள், புகாரி 555

உலகம்மற்றும்உலகத்திலுள்ளஅனைத்தைவிடவும்சிறந்தது :

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்துகள் உலகம், உலகத்திலுள்ள அனைத்தை விடவும் சிறந்தது என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) அவர்கள், முஸ்லிம் 5197

நரகம்நுழையமாட்டார் :

சூரிய உதயத்துக்கு மற்றும் மறைவதற்கு முன்னுள்ள இரு தொழுகைகளைப் (ஃபஜ்ரும், அஸரும்) பேணித் தொழுபவர் நரகம் நுழைய மாட்டார். அறிவிப்பவர்: ருவைபா(ரழி) அவர்கள், முஸ்லிம் 1468

சுவர்க்கத்தில்நுழைவார் :

“பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூமூஸா(ரழி) அவர்கள், புகாரி 574

இழிவிலிருந்துபாதுகாப்பு :

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார், தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார் கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்(ரழி) அவர்கள், புகாரி 1144

தண்டனையிலிருந்துபாதுகாப்பு :

நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பாளர்: ஸமுரா(ரழி) அவர்கள், புகாரி 1143

Previous post:

Next post: