அல்லாஹ்கற்றுத்தரும்அழகியபிரார்த்தனைகள்!

in 2022 மார்ச்

அல்லாஹ்கற்றுத்தரும்அழகியபிரார்த்தனைகள்!

நூருன்னிஸா

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப் பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப் பாயாக!

எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

எங்களை மன்னித்தருள் செய்வாயாக!

எங்கள் மீது கருணை புரிவாயாக!

நீயே எங்கள் பாதுகாவலன்!

நிராகரிப்பாளரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! அல்குர்ஆன் 2:286

எங்கள் இறைவா! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய். அல்குர்ஆன் 3:8

எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளு வதும் உன்னிடமே தான்! அல்குர்ஆன் 2:285

எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக!. அல்குர்ஆன் 3:147

எங்கள் இறைவனே! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்களைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக.

எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக!

கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக; நிச்சயமாக நீ வாக் குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:193,194

எங்கள் இறைவனே! நாங்கள் (உன் மீது) ஈமான் கொண்டுள்ளோம்; எனவே, சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! அல்குர்ஆன் 5:83

எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறு மையையும் பொழிவாயாக; முஸ்லிம்களா கவே எங்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக! அல்குர்ஆன் 7:126

எங்கள் இறைவனே! உன்னையே நாங் கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக; (அது நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; நெறி தவறியோர் வழியுமல்ல. (1:4,5,6,7)

எங்கள் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்கு வாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வாயாக!

எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், விசுவாசிகளையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக. (குர்ஆன் 14:40,41)

எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தைச் சீர்திருத்தித் தருவாயாக. குர்ஆன்18:10

எங்கள் இறைவனே! நாங்கள் உன்மீது ஈமான் கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களுக்கெல்லாம் நீ(யே) மிகவும் மேலானவன்.  குர்ஆன் 23:109

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! அல்குர்ஆன் 25:74

எங்கள் இறைவனே! எங்களுக்கும், விசுவாசம் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப் பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன். அல்குர்ஆன் 59:10

எங்கள் இறைவனே! நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! அல்குர்ஆன் 17:24

எங்கள் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! (20:114)

எங்கள் இறைவனே! என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் சேர்த்து வைக்காதிருப்பாயாக. அல்குர்ஆன் 23:94

எங்கள் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

எங்கள் இறைவனே! நீ என்னை மன்னித் துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களுக்கெல்லாம் மிக்க மேலானவன். அல்குர்ஆன் 23:118

எங்கள் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக; மேலும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக. இன்னும், எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக. அல்குர்ஆன் 26:83,84,85,87

எங்கள் இறைவனே! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன். (28:24)

எங்கள் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டுவிடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிக்க மேலானவன். அல்குர்ஆன் 21:89

என்னுடைய இறைவா! நீ எனக்கு நல்லடியாரான ஒரு நன் மகனைத் தந்தருள்வாயாக. அல்குர்ஆன் 37:100

Previous post:

Next post: