சோதனைகளின்போது பொறுமை கொள்ளவேண்டும்

in 2022 மார்ச்

அபூஅஸீம்,  இலங்கை

சோதனைகளின்போதுபொறுமைகொள்ளல்வேண்டும் :

இறை நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; சோதனைகளின்போது, இன்னல்களை) சகித்து(ப் பொறுத்து)க் கொள்ளுங்கள்; (எதிரிகளுக்காக உங்களுக்கிடையில் ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:200) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நபியாக அறிமுகமாகி அழைப்புப் பணியை ஆரம்பித்த ஆரம்பக்காலகட்டத்திலிருந்தே எதிர்ப்பலைகள் எழ ஆரம்பித்தன.

பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல், என இதுபோன்ற இழிசெயல்களால் குறைஷியர்கள் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினார்கள், அற்பமான வசைச் சொற்களால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைப் பலவாறாக ஏசினார்கள், சில வேளைகளில் புத்தி பேதலித்தவர் என்றார்கள்.

பைத்தியக்காரர்என்றார்கள் :

நமது நபியாகிய உங்களை நோக்கி) “இறைநூல் அருளப்பெற்றதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (15:6,68:51) சில வேளை களில் நபி(ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினார்கள்.

பொய்யர்என்றும்சூனியக்காரர்என்றும்கூறினார்கள் :

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக் கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்) அவர்களி (ன்) இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு “இவர் மிகப்(பெரும்) பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (38:4) அத்துடன் வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வையையும் நபி(ஸல்) அவர்கள் மீது வீசினர்.

வஞ்சகத்தனத்தையும், சுட்டெரிக்கும்பார்வையையும், வீசினார்கள்:

(நபியே!) நிராகரிப்பவர்கள் (உமது) நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய (வெறுப்பான) பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் ((கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றார்கள். அன்றி (உங்களைப் பற்றி) நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர். (68:51) மேலும் நபி(ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.

நீங்கள்எங்களைப்போன்றசாதாரணமனிதர்களேஎன்றனர் :

அதற்கவர்கள் “நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை’ என்று கூறினார்கள். (14:10)

மேலும், அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரிய மனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வா றாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர். (43:31) அதாவது, குறைஷி இணைவைப்பவர்களாகிய அவர்களது பார்வையில் பெரிய மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும், வாய்ந்தவர்களாக, “மக்காவிலும்’, அதன் அருகிலுள்ள “தாயிபிலும்’ உள்ள பெரிய மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களான, வலீத் பின் முஃகீறா, உர்வா பின் மஸ்ஊத் ஸகஃபி, உத்பா பின் ரபீஆ, இப்னு அப்தியாலீல், கினானா பின் அம்ர் ஸகஃபி ஆகியோர் மீது இறக் கியருளப்பட்டிருக்கக் கூடாதா?” என்றெல்லாம் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), இக்ரிமா(ரஹ்), கத்தாதா (ரஹ்), இஸ்மாயில் சுத்தீ(ரஹ்), முஹம்மது பின் கஅபுல் குறளி(ரஹ்), அப்துர்ரஹ்மான் பின் ஜைத் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 256-262) மேலும்,

அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கு என்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகின்றார். கடைகளுக்கும் செல்கிறார் (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்) அன்றி இவ் அக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்’ என்றும் கூறுகின்றனர். (25:7,8) இவ்வாறிக்கையில்,

(நபியே!) “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (26:214) என்ற வசனம் இறங்கியபோது முதன்முதலாகத் தங்களது நெருங்கிய உறவினர்களான ஹா´ம் கிளையாரை மாத்திரம் அழைத்தார்கள். அவர்களுடன் அப்துல் முத்தலிபின் வம்சத்தில் சிலரும் சேர்ந்து மொத்தமாக 45 ஆண்கள் வந்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பேசத் தொடங்கிய போது அவர்களையும் முந்திக்கொண்டு இங்கே கூடியிருக்கும் “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவார்கள், அதை நினைவில் கொண்டு நீ பேசு! இங்கே மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே, அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையு மில்லை, உன்னைத் தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன், நீ கூறுகின்ற இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால் அது அரபிகளின் துணையுடன் குறை´க் குடும் பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகி விடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த மகன் எவரையும் நான் கண்டதில்லை’ என்று கண்டித்து எச்சரித்தவனான; (அர்ரஹீக் அல்மக்தூம் : 99,100)

அதுபோலவே,(நபியே!) “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்ச ரிக்கை செய்யுங்கள்’ (26:214) என்ற வசனம் இறங்கியபோது இரண்டாவது முறையாகவும், தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை மாத்திரம் அழைத்து… உரையாற்றி முடித்ததும், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பானது) மிகவும் இழிவானது, இவரை மற்றவர் கள் தண்டிக்கும் முன்னர் நீங்களே இவரைத் தடுத்துவிடுங்கள்’ என்றவனான, (அல்காமில், அர்ரஹீக், அல்மக்தூம் : 100) மூன்றாவது முறையாகவும்,

(நபியே!) “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்ச ரிக்கை செய்யுங்கள்’ (26:214) என்ற வசனம் இறங்கிய போது, மூன்றாவது முறையாகவும் “ஸஃபா’ எனும் மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா’ “யா ஸபாஹா’ அதி காலை ஆபத்து உதவி உதவி என்று கூவி அழைத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது உறவினர்கள் அனைவரையும் கூவி அழைத்து அழைப்புக் கொடுத்தபோது (அல்குர்ஆன் 26:214, இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி : 1394,3527,4770, 4801, 2753, 3073, 3525, 3526, 4971, 4973, முஸ்லிம் திர்மிதி, ஃபத்ஹுல் பாரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 626, அர்ரஹீக் அல்மக்தூம், பக்கம் 99,100,102) நபி(ஸல்) அவர்கள் மீது மண்ணை வாரி வீசியவனாக, “நாள் முழுவதும் உனக்கு நாசமாகட்டும்! இதற்காகத் தான் எங்களை நீ கூட்டினாயா?’ என்று கூறியவனான,

பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜால் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள், நிச்சயமாக இவர் மதம் மாறியவர், பொய் யர்’ என்று கூறியவனான; (அர்ரஹீக் அல்மக்தூம் : 104)

நபித்துவத்துக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களின் மகள்களானருகையா மற்றும் உம்மு குல்ஸூம்(ரழி) ஆகியோரை மண முடித்திருந்த தனது மகன்மார்களான உத்பா, மற்றும் உதைபா ஆகியோரை நிர்ப்பந்தப் படுத்தி விவாகரத்துச் செய்து பிரிந்து விட்டவனான; (இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம் : 118,119)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் மரணமடைந்தபோது மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் வந்து “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்’ என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னவனான; (தஃப்ஸீர் இப்னு கஸீர், அர்ரஹீக் அல்மக்தூம் : 118,119)

ஹஜ்ஜுடைய காலங்களிலும், கடைத் தெருக்களிலும், அல்லாஹ்வின் தூதர்கள் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து அவர் “பொய்யர்’ பொய்யர் என்று கூறுவது மட்டுமல்லாமல் இரத்தம் கொட்டும் வரை நபியவர்களது பிடரியில் பொடிக் கற்களால் அடித்துக் கொண்டே இருந்தவ னாகிய; (கன்ஜுல் உம்மால், அர்ரஹீக் அல்மக்தூம் : 118,119)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது தந்தையின் சகோதரனாகவும், நபியவர்களின் வீட்டோடு இணைந்திருந்த அண்டை வீட்டுக்காரனாகவும், இருந்து கொண்டு தொழுது கொண்டிருக்கும் போது அழுகிய ஆட்டின் குடலை நபியவர்களை நோக்கி வீசுபவனாகவும், நபியவர் கள் சமைப்பதற்காக அடுப்பில் சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக் குடலைப் போடுபவனாகவும் இருந்தவனாகிய அபூ லஹபின் கொடுமைகள் தொடர்ந்தன. (இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்: 120)

மேலும், அகிலத்தின் அருட்கொடை யாகவும், இறைத்தூதர்களின் தலைவராகவும், இறுதி நபியின் முத்திரையுடனும், வந்த முஹம்மது(ஸல்) அவர்களுடைய சிற்றண்ணையாகிய “அபூலஹபின்’ மனைவி உம்மு “ஜமீல்’ இழைத்த கொடுமைகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனை விட கொஞ்சம் கூட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி(ஸல்) அவர்கள் செல்லும் பாதைகளிலும், அவர்களது வீட் டின் வாசலிலும், வைத்து விடுபவளான; (அர்ரஹீக் அல்மக்தூம் : 119)

மிக முகக் கெட்டவளான, எந்நேரமும் நபி(ஸல்) அவர்களை ஏசிப் பேசிக் கொண்டிருப்பவளான, சமூகத்தில் நபியவர்களைக் குறித்துப் பல பொய்களையும் பரப்பிக் கொண்டே இருப்பவளான, சதாவும் நபியவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், அழைப்புப் பணிக்கு எதி ராக சமூகத்தினரிடையே பிரச்சினையின் நெருப்பை மூட்டிக் கொண்டும் இருப்பவளாகிய, இதனாலேயே அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்’ விறகு சுமப்பவள் என்று வர்ணிப்பவளாகிய; (அர்ரஹீக் அல்மக்தூம் : 119)

தன்னைப் பற்றியும் தனதுகணவனைப் பற்றியும் குர்ஆனின் (111)ஆவது அத்தியா யத்தின் ஐந்து வசனங்கள் இறங்கியதை அறிந்து நபி(ஸல்) அவர்களைக் கொல்வதற் காகக் கையில் குழவிக் கல்லோடு அலைந்து அவர் என்னைக் கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்குத் தெரியவந்துள்ளது. அல்லாஹ்வின் மீதுஆணையாக! அவரை நான் பார்த்தால் இந்தக் குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன்… என்று சொன்னவளான; (அர்ரஹீக் அல்மக்தூம் : 119)

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆன் (111)ஆவது அத்தியாயத்தின் ஐந்து வசனங்கள் இறங்கியதை அறிந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கும் நன்றாகக் கவிதை பாடத் தெரியும்’ என்று கூறிய பின்னர்;

“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையைப் புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்; என்ற கவிதைகளைப் பாடியவளான; (இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம் : 119)   (இன்ஷாஅல்லாஹ்தொடரும்)

Previous post:

Next post: