படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநூலை!

in 2022 மார்ச்

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்இறுதிஇறைநூலை!

ஷரஹ்அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

(படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

இறுதி விசாரணை நாளில் விசாரணைக் கூண்டில் இறை தூதர்கள் உலக மக்கள்.

(படைத்த) ஒரேஇறைவன்கூறுகிறான் :

யாருக்கு இறைதூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனரோ அவர்களிடம் நாம் நிச்சயமாக விசாரணை செய்வோம். அத் தூதர்களிடமும் நிச்சயமாக நாம் விசா ரணை செய்வோம். (இறைநூல்:7:6)

அந்நாளில் மக்களை அல்லாஹ் அழைத்து, “நீங்கள் (உலகத்திலிருந்த போது) இறைத்தூதர்களுக்கு என்ன பதில் அளித்தீர்கள் என்று கேட்பான்”
(இறைநூல் : 28:65)

அல்லாஹ் இறைதூதர்களை ஒன்று திரட்டும் அந்த நாளில், உலகில் உங்கள் அழைப்புக்கு உங்கள் சமுதாயத்தாரால் என்ன பதில் அளிக்கப்பட்டது என்று கேட்பான். அவர்கள், எங்களுக்கு எதுவும் தெரியாது, நீயே மறைவானவற்றை நன்கு அறிந்தவன் என கூறுவர். (அல்குர்ஆன் 5:109)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே, உங்களில் ஒவ்வொருவருக்கும் தத்தமது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள்.

ஆட்சித் தலைவர் அவரது பொறுப்பில் இருக்கும் குடிமக்களைப் பற்றி விசாரிக்கப்படுவார்.

ஓர் ஆண் அவனுடைய குடும்பத்தார் பற்றி விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண் தன்னுடைய கணவரின் வீட்டைப் பற்றி விசாரிக்கப்படுவாள்.

ஓர் அடிமை அவனுடைய உரிமையாளரின் செல்வத்தைப் பற்றி விசாரிக்கப்படுவான் என்று இறைதூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பின்னர், யாருக்குத் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனரோ அவர்களிடம் நாம் நிச்சயமாக விசாரணைசெய்வோம். அத்தூதர்களிடமும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம் என்ற இறை வசனத்தை இறைதூதர்(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.

நபிவாழ்வியல் தகவலாளர்: அப்தில்லாஹ் பின் உமர்(ரழி), நபிமொழி ஆய்வாளர், முஸ்லிம்: 3733, புகாரி: 893, 2409, 2554, 2558, 2751, 5200, 7138

என்னுடைய இறைவா! என்னுடைய சமூகத்தார் இந்தக் குர்ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள் என்று நம் (தூதர் இறுதி தீர்ப்பு நாளில்) கூறுவார். (இறைநூல் 25:30)

Previous post:

Next post: