வழிகெட்ட பிரிவு இயக்கங்களை விட்டும் நீங்கிதவ்பாச் செய்யுங்கள்

in 2022 மார்ச்

வழிகெட்டபிரிவுஇயக்கங்களைவிட்டும்நீங்கிதவ்பாச்செய்யுங்கள்!

அஹமதுஇப்ராஹிம்,

 புளியங்குடி

இஸ்லாத்தில் முஸ்லிம்கள் ஏற்படுத்தி உள்ள பிரிவுகள் போதாதென்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராவுத்தர் நலப் பேரவை என்ற பிரிவானது ஒன்றுபட்ட இஸ்லாமிய சமுதாயத்தைப் பிளக்க வந்த கோடாரி.

இஸ்லாம்என்றவலுவானமரத்தைவெட்டவந்திருக்கும்கோடாரிகள், இஸ்லாத்தில்பிரிவுகளே :

இயக்கங்கள், தரீக்காக்கள், மத்ஹப்கள், சுன்னத் ஜமாத்தினர், ஷியா பிரிவினைவாதிகள், பிரிவினை ஜமாஅத்துகள் இன்னும் பல உள்ளன. இவைகள் அனைத்திற்கும் இம்மை மறுமை வேதனை உறுதி என எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் கூறுகின்றான்.

ஆதாரம் (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள், அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)

அதோடு மேற்கண்ட வெவ்வேறு வகை யான பெயர்களில் இயங்கும் இயக்கங்கள், பிரிவுகள் அனைத்தும் வழிகெட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் வியத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள். (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.”  (அல்குர்ஆன் 7:71)

ஒரேயயாரு ஜமாஅத் மட்டுமே சுவனம் செல்லும். அந்த ஒரு ஜமாஅத் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அந்த அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களும் சத்திய ஸஹாபாக்களும் அங்கம் வகித்த அந்த ஜமாஅத் எது என்றால் அது ஜமாஅத் அல்முஸ்லிமீன் என்ற ஜமாஅத் மட்டுமே. ஆதாரம் : அல்குர்ஆன் 22:78, புகாரி : 3606.

எனவே எனதன்பான இஸ்லாமிய சமுதாயமே!

இன்றே தாங்கள் அங்கம் வகிக்கும் வழிகெட்ட பிரிவு இயக்கங்களை விட்டும் நீங்கி தவ்பாச் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் ஜமாஅத்தாகிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தில் இணைவீர்!

v    இதற்கு எந்த உறுப்பினர் அட்டையும் கிடையாது!

v    எந்தக் கொடியும் கிடையாது!

v    எந்த ஸ்டிக்கரும் கிடையாது!

v    இங்கே வாழ்க! ஒழிக! கோங்கள் கிடையாது!

v    இந்து, கிறித்துவ மற்றும் எல்லா மதத்தினரோடும் நல்லுறவு உண்டு.

v    அவர்களுடன் பகையேதும் கிடையாது!

v    ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மேடைகள் போட்டு மற்ற மதத்தினரை தாக்கிப் பேசி, வெறியூட்டி தத்தமது இயக்கங்களை வளர்த்து அதன்மூலம் தங்கள் வயிற்றை நிரப்பும் கேடுகெட்ட புத்தியுடையோர் எவரும் முஸ்லிம் ஜமாஅத்தில் கிடையவே கிடையாது.

v    அதனாலேதான் இந்த ஜமாஅத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வினதும் அவனது தூதர் (ஸல்) அவர்களினதும் சாபத்திற்குரிய ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் போராட்டங்கள் போன்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் போராட்டங்கள் கிடையவே கிடையாது!

v    மார்க்கப் பணிகளுக்கு இங்கே கண்டிப்பாக யாருக்கும் கூலி கொடுக்கப்படுவதும் கிடையாது!

v    யாரும் வாங்குவதும் கூடாது!

ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் மார்க்கப் பணிக்கு கூலி கொடுக்கப்படுவதை அல்குர்ஆன் கடுமையாக தடை செய்கின்றது.

v    “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).
குர்ஆன் : 36:21

v    அவரவர்கள் நேர்மையான முறையில் உழைத்தே உண்ண வேண்டும்!

அடுத்துஒருமுக்கியவிஷயம் :

v    இந்த ஜமாஅத்துதான் ஒரிஜினல் ஜமாஅத் இந்த ஜமாஅத்தின் அமீரிடம் யார் பைஅத் வாங்கவில்லையோ அவர்கள் காஃபிர், என்ற மூடத்தனமான ஃபத்வா இங்கு கிடையாது.

v    புகாரி : 391 நபிமொழியின்படி நமது கிப்லாவை முன்னோக்கி நமது தொழுகையை தொழுது நாம் அறுத்ததையே உண்பவர் அனைவரும் முஸ்லிம்களே!

v    அவர் எத்தகைய இணைவைப்பில் இருந்தாலும் சரியே!

v    இறைவன் தீர்ப்பு சொல்லும்வரை மனிதர்கள் யாரும் தீர்ப்பு அளிக்க முடியாது.

v    இப்பேர்ப்பட்ட அற்புதமான ஜமாஅத் ஆரம்பிக்க ஒரு ஊரில் அல்லது ஒரு கிராமத்தில் மூன்று பேர் கூட இருந்தால் போதும். அவர்களுக்குள் ஒரு அமீரைத் தேர்ந்தெடுத் துக் கொண்டு அவரின் தலைமையில் ஒரு கட்டுக்கோப்பான முறையில் செயல்படலாம்.

v    இந்த ஜமாஅத்தை ஆரம்பிக்க எத்தகை யக் கட்டணமும், யாருக்கும் செலுத்தத் தேவையில்லை!

v    வழிகெட்ட மத்ஹபுகள் மற்றும் தவ்ஹீத் மற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்களை விட்டு விலகி நீங்கினாலே போதும். இயல்பாக தாங்களாகவே ஜமாஅத்துல் முஸ்லிமீனில் ஐக்கியமாகி விடுகின்றீர்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தில் நபித்தோழர்கள் போன்று மரணிக்கும் வரை உறுதியாக இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்!!

Previous post:

Next post: