அறிந்து கொள்வோம்!

in 2022 ஏப்ரல்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

 1. தாய் தந்தை மற்றும் ரத்த உறவுகளை விட நேசத்திற்குரியவர் யார்?
  முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்,   அனஸ்(ரழி) புகாரி: 15, முஸ்லிம்: 69
 2. அல்லாஹ்வின் நன்மையை எதிர் பார்த்து தனது குடும்பத்தாருக்கு செய்யும் செலவு எதுவாக ஆகிவிடும்?
  தர்மம்.  (ஸதகா) அபூமஸ்ஊத்(ரழி) புகாரி :55, முஸ்லிம்: 1827
 3. மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று.
  கல்வி அகற்றப்படுவது.  அனஸ்(ரழி), புகாரி: 80, முஸ்லிம்: 5186.
 4. பொறாமை கொள்ளக் கூடாத இரண்டு விஷயங்கள் எது?
  1. அல்லாஹ் வழங்கிய செல்வம்,  2. அல்லாஹ் வழங்கிய அறிவாற்றல்.   இப்னு மஸ்ஊத்(ரழி) புகாரி: 73, முஸ்லிம்:1486
 5. தர்மத்தின் செயல்களில் ஒன்று எது?
  ஒருவரை வாகனத்தில் ஏற்றிவிட உதவுவது.   அபூஹுரைரா(ரழி), புகாரி: 2891, முஸ்லிம்: 1835
 6. யாரை தன்னிறைவு பெற்றவராக அல்லாஹ் ஆக்குவான்?
  பிறரிடம் தேவை இல்லாதவராக இருக்க விரும்புபவரை, கூறியவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். ஹக்கீம் பின் ஹிஷாம் (ரழி), புகாரி: 1427,1428
 7. முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்கு கட்டாயப்படுத்தாத செயல் ஒன்று எது?
  ஒவ்வொரு உளுவின் போதும் பல் துலக்குதல்.   அபூஹுரைரா(ரழி), புகாரி: 887
 8. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அவர்களுக்குரிய காணிக்கை எது?
  ஸலாம் (சாந்தி உண்டாகட்டும்)   குர்ஆன்: 33:44
 9. உறவுகளை துண்டித்து வாழ்பவர்களை அல்லாஹ் என்ன செய்தான்?
  அவர்களை சபித்து செவிடாக்கி, குருடாக்கி விடுகிறான்.   அல்குர்ஆன் 47:22,23
 10. வானங்கள் மற்றும் பூமியின் பெருமை யாருக்குரியது?
  அல்லாஹ்வுக்கே.  அல்குர்ஆன் 45:37
 11. முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் எந்த மாதத்தில் அதிகமாக தர்மம் செய்வார்கள்?
  ரமழான் மாதத்தில்.  புகாரி: 1902.
 12. அல்லாஹ் கிணற்றுவாசிகளை எவ்வாறு கூறுகிறான்?
  ரஸ்ஸு. (அரபி பெயர்)  அல்குர்ஆன் : 50:12
 13. கணவனின் அனுமதியின்றி செய்யக் கூடாத செயல்களில் ஒன்று எது?
  நஃபிலான நோன்பு. புகாரி : 5195
 14. வாங்கும்போதும், விற்கும் போதும், வழக்காடும் போதும் எவ்வாறு நடந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும்.  ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) புகாரி: 2076
 15. பறவைகளின் மொழி தெரிந்த நபி யார்?
  சுலைமான் நபி அவர்கள்.  அல்குர்ஆன் 27:16
 16. ஸபர் நாட்டு இளவரசி எந்த நபியின் காலத்தில் முஸ்லிமாக மாறினார்?
  சுலைமான் நபி காலத்தில். அல்குர்ஆன் 27:29,44
 17. சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்தித் தந்த பறவை எது?
  ஹுத் ஹுத் பறவை. அல்குர்ஆன் 27:20

18, பொறுமையாக 20 பேர் எத்தனை பேரை (போரில் வெல்லலாம் என அல்லாஹ் கூறுகிறான்?
200 பேரை வெல்லலாம். அல்குர்ஆன் 8:65

 1. துன்பத்துடன் எது இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  இன்பமும் உள்ளது. அல்குர்ஆன் 94:5,6
 2. பாவம் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு உரிய கூலி எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  சொர்க்கம். அபூஹுரைரா(ரழி), புகாரி 1773

Previous post:

Next post: