அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்?

in 2022 ஏப்ரல்

அபூஅப்தில்லாஹ்

அல்லாஹ்தெளிவுபடுத்திவிட்டான்!

அளவில்லா அருளும் கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ் படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களை தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான்.

மனிதர்களின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வழிமுறைகளை, ரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ “முஹ்க்கமாத்’ வசனங்களில் தெளிவுபடுத்தி விட்டான். இதற்கு எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.

அல்குர்ஆன்வசனங்கள்பாரீர்!

“…. நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”. அல்குர்ஆன் 3:103

“இது மனிதர்களுக்குத் தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது”  அல்குர்ஆன் 3:138

“….இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக் கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்”.  அல்குர்ஆன் 2:230

“அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான்….”   அல்குர்ஆன் 4:26

“….நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்…” அல்குர்ஆன் 4:176

“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியாக) ஆதாரம் வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்”.  அல்குர்ஆன் 4:174

“…நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (வழிகாட்டி) நூல் உங்களிடம் வந்திருக்கிறது”. அல்குர்ஆன் 5:15

“….நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்”. அல்குர்ஆன் 5:89

“எந்த ஒரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டியபின் அவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை…”   அல்குர்ஆன் 9:115

“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது”. அல்குர்ஆன் 10:57

“…இவை தெளிவான (இவ்வழிகாட்டி) நூலின் வசனங்களாகும்”.  அல்குர்ஆன் 12:1

“…இவை (இவ்வழிகாட்டி) நூலாகிய குர்ஆனின் தெளிவான வசனங்களாகும்”.  அல்குர்ஆன் 15:1

“இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை; இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை”. அல்குர்ஆன் 12:104

“…அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு நன்கு விவரிக்கிறான்…”  அல்குர்ஆன் 24:18

“…இன்னும் நிச்சயமாக, உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு  நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கிறோம்”.  அல்குர்ஆன் 24:34

“ஆனால், அது (அல்குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை”.  அல்குர்ஆன் 68:97

“நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்…”  அல்குர்ஆன் 24:46

“…இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்…”  அல்குர்ஆன் 24:58,59,61

“…இவை தெளிவான (வழிகாட்டி) நூலில் வசனங்களாகும்”. அல்குர்ஆன் 26:2

“இவை தெளிவான (வழிகாட்டி) நூலான குர்ஆனின் வசனங்களாகும்”. அல்குர்ஆன் 27:1

“இவை தெளிவான (வழிகாட்டி) நூலின் வசனங்களாகும்”.  அல்குர்ஆன் 28:2

“…இது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை”.  அல்குர்ஆன் 36:69

“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை”.  அல்குர்ஆன் 38:87

“விளக்கமான இவ்(வழிகாட்டி) நூலின் மீது சத்தியமாக”.  அல்குர்ஆன் 43:2

தெளிவான இவ்(வழிகாட்டி) நூலின் மீது சத்தியமாக”.  அல்குர்ஆன் 44:2

“அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்”.  அல்குர்ஆன் 44:58

“நிச்சயமாக இந்த குர்ஆனை (சிந்தித்து) நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கிறோம்…”   அல்குர்ஆன் 54:17,22,32,40

“ஆனால், அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை”. அல்குர்ஆன் 68:52

“நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்”. அல்குர்ஆன் 57:17

“இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்”.   அல்குர்ஆன் 81:27

“நிச்சயமாக இதில் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது”.  அல்குர்ஆன் 16:69

செயல்முறையில்விளக்கம் :

இவ்வளவு தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ மனிதனைப் படைத்த இறைவன் அவனது இறுதி வழிகாட்டல் நூலில் நேர்வழியை-சத்திய பாதையை அனைத்துலக மக்களுக்கும் விளக்கிய பின்னர், அவனது இறுதித் தூதரை அவற்றை நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட அனுப்பி வைத்துள் ளான். நூல் வடிவில் இருப்பதை மனித செயல் வடிவிலும் தனது கண்காணிப்பில் செய்து காட்டச் செய்து விட்டான் ஏகன் இறைவன். அதையும் அல்குர்ஆனில் அல்லாஹ் தவறாது குறிப்பிட்டு உறுதி செய்துள்ளான். அவை வருமாறு :

“எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்…” அல்குர்ஆன் 52:48

“…மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்(வழி காட்டி) நூலை நாம் அருளினோம்”.   அல்குர்ஆன் 16:44

(நபியே!) அன்றியும், அவர்கள் எதில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்(வழிகாட்டி) நூலை இறக்கினோம்; இன்னும் விசுவாசம் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. அல்குர்ஆன் 16:64

இறையறிவிப்புகளைக் கொண்ட நூலை உடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கிறார்; (இறை வழிகாட்டி) நூலிலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல வியங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும் (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டு விடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள (அல்குர்ஆன் எனும் வழிகாட்டி) நூல் உங்களிடம் வந்திருக்கிறது. அல்குர்ஆன் 5:15

“…இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்துவிட்டார்….”.   அல்குர்ஆன் 5:19

“ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம்…”   அல்குர்ஆன் 14:4

“(நபியே!) நாம் இதை வழிகாட்டி நூலை) உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக்கொண்டு நீர் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயம் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்”.   அல்குர்ஆன் 19:97

மேலதிகஆதாரங்களைநீங்களேபாருங்கள்!

மேலும் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆனின் நடைமுறைக்குத் தேவையான குறிப்பாக ஒரே பொருளையுடைய இரண்டா வது பொருளே எடுக்க முடியாத “முஹ்க்கமாத்’ வசனங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டன என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களே சான்று கூறிக்கொண்டி ருக்கின்றன. அல்குர்ஆனின் பக்கங்களைத் திருப்பத்திருப்ப இந்த வசனங்களைப் பல இடங்களில் பார்க்கலாம். அத்தியாயம் வசன எண் இவற்றைத் தந்துள்லோம். சிரமம் பாராது

அல்குர்ஆனைநீங்களேதிறந்துபார்க்கவும்:

2:66,87,92,99,118,159,160,185,187,209,211,213,219,221,242,253,266, 3:86,97,105,118,183, 184, 5:75,92,110, 6:55,57,105,157, 7:73,85,105, 9:115, 11:17,28,63,88,96, 14:45, 16:103, 20:133, 22:5, 29:35, 35:40, 47:14, 65:11.

இன்னும் இவை போல் எண்ணற்ற வசனங்களில் நேர்வழியை அல்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக விளக்கி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

மக்களுக்குவிளக்குவதுஅல்லாஹ்வின்பொறுப்பு!

அல்குர்ஆன் வசனங்களை அனைத்து மக்களுக்கும் விளக்குவது நிச்சயமாக தன்மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்:

“பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது”   அல்குர்ஆன் 75:19

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது, அல்குர்ஆனை, நேர்வழியை-சத்தியப்பாதையை அனைத்து மக்களுக்கும் விளக்குவது தனது கடமை – பொறுப்பு என்று அறிவித்ததோடு, தனது இறுதித் தூதரை அனுப்பி அந்த நேர்வழியை செயல்வடிவிலும் செய்து காட்டச் செய்து விட்டான்.

இதற்குப் பின்னரும் அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறும் பேர்வழிகள் எனக் கூறிக் கொண்டு சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் அள்ளிவிடும் இந்தப் புரோகித மவ்லவிகள் எங்கிருந்து அதற்குரிய அதிகாரத்தைப் பெற்றார்கள்? அல்லாஹ் கூறி யுள்ளதும், நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதும் மக்களுக்கு விளங்காது; எனவே அவற்றை நாங்கள் மக்களுக்கு விளக்குகிறோம் என்றால் அதன் பொருள் என்ன?

அல்லாஹ்வுக்கும்அவனதுதூதருக்கும்ஆற்றல்இல்லையா?

அல்லாஹ்வுக்கும், அவனது இறுதித் தூத ருக்கும் மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் இல்லை; அந்த ஆற்றல் புரோகித மவ்லவிகளாகிய எங்களுக்கே உண்டு என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

மார்க்கத்தை மக்களுக்கு விளங்கச் செய்வதில் அல்லாஹ்வை விட, அவனது இறுதித் தூதரை விட நாங்களே அதிக ஆற்றல் பெற்றவர்கள் எனக் கூறப் போகிறார்களா? என்ன? இறைவன் படைத்த மனிதர்களில் ஒருவர் ஒரு வியம் பற்றி இரண்டாவதொரு மனிதருக்கு விளக்கம் கொடுக்கிறார். அதை அந்த இரண்டாவது மனிதர் விளங்கவில்லை. அதனால் மூன்றாவதொரு மனிதர் அந்த இரண்டாவது மனிதருக்கு அதை மேலும் விளக்கிச் சொல்கிறார். இப்போதுதான் இரண்டாவது மனிதருக்குப் புரிந்தது. அப்படியானால் அந்த முதல் மனிதரை விட மூன்றாவது மனிதர்தான் விளக்குவதில் ஆற்றல் மிக்கவர் என்பதை யாரால் மறுக்க முடியும்.

இதுபோல மனிதனைப் படைத்த இறைவன் நேர்வழியை மனிதர்களுக்காக அல்குர்ஆனில் விளக்கி இருக்கிறான். அதை மனிதர்களால் விளங்க முடியவில்லை. அதனால் மனிதர்களிலேயேயுள்ள புரோகித மவ்லவிகள் அல்குர்ஆனின் நேர்வழியை அறிவிக்கும் “முஹ்க்கமாத்’ வசனங்களை மேலும் விளக்குகிறார்கள். அதையே மற்ற மனிதர்களால் விளங்க முடியும் என்றால், இங்கே ஆற்றல் மிக்கவர் யார்? அல்லாஹ்வா? அல்லது இந்த புரோகித மவ்லவிகளா? சிந்தித்துப் பாருங்கள்.

அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது; நாங்கள் விளக்குகிறோம் என்று கூறும் இந்தப் புரோகித மவ்லவிகள் அல்லாஹ்வை விட தங்களுக்கு விளக்கும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்களா? இல்லையா?

நபி(ஸல்) அவர்களின் விளக்கங்களான ஹதீத்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அவற்றை விளக்குகிறோம் என்று கூறும் புரோகித மவ்லவிகள் நபி(ஸல்) அவர்களை விட எங்களுக்கே மனிதர்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்களா? இல்லையா? அவர்களின் இந்த அகம்பாவ எண்ணம் அவர்களை எங்கே கொண்டு சேர்க்கும்? சிந்தியுங்கள். இந்தப் புரோகித மவ்லவிகள் பற்றி அல்லாஹ் நேரடியாகவே கூறுகிறான் கேளுங்கள்!

தீர்ப்புமறுமையில்என்றுஇல்லாவிட்டால்!

“அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் (புரோகித மவ்லவிகள்) அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்…” அல்குர்ஆன் 42:21

தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால், அல்லாஹ்வை விட அவனது தூதரை விட எங்களுக்கே மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் அதிகம் உண்டு என்று அகம்பாவமாக எண்ணித் திரியும் இந்தப் புரோகித மவ்லவிகள் இவ்வுலகிலேயே இப்போதே கடுமையான தண்டனைக்கு ஆளாகி இருப்பார் கள். ஆனால் மறுமைக்காக விட்டு வைக்கப்பட் டிருக்கிறார்கள். தங்கள் தவறை உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்டு மீண்டால் தப்பினார்கள். இல்லை என்றால் அதோ கதிதான்! நரகத்தை விட்டு மீளவே முடியாது.

மேல்விளக்கம்கொடுப்பவர்கள்மறைப்பவர்களே!

அல்லாஹ்வின் விளக்கத்திற்கு மேல் விளக்கம் கொடுப்பவர்கள் அந்த வசனங்களை மறைப்பதற்காகவே அல்லாஹ் குற்றம் சாட்டுகிறான். இதோ படித்துச் சிந்தித்து விளங்குங்கள்.

“நாம் அருளில் தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் (இறுதி நேர்வழி காட்டி) நூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(பதற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”. அல்குர்ஆன் 2:159

“எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்த வற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறான். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்”. அல்குர்ஆன் 2:160

“யார் (இந்த உண்மைகளை) நிராகரிக்கிறார் களோ; இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளையுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்”  அல்குர்ஆன் 2:161

“அவர்கள் அச்சாபத்திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; மேலும் அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப் படமாட்டாது”   அல்குர்ஆன் 2:162

குர்ஆன். ஹதீத் உங்களுக்கு விளங்காது; அரபு மொழி படித்த மவ்லவிகளாகிய எங்க ளுக்கே விளங்கும்; நாங்கள் கொடுப்பதுதான் விளக்கம் எனக் கூறும் புரோகிதர்கள் நேர் வழியை-சத்தியத்தை மறைக்கிறார்கள், அவர்கள் அல்லாஹ்வினதும், மலக்குகளதும், மனிதர்களதும், சாபத்திற்குரியவர்கள். தாங்கள் மறைத்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புப் பெறாமல் அதே நிலையில் மரணிப்பவர்கள் மீளா நரகை அடைய நேரிடும். அதிலிருந்து விடுதலையே இல்லை என்பதையே இந்த 2:159,160,161,162 இறை வசனங்கள் “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ உணர்த்துகின்றன.

ஆக அல்குர்ஆன் வசனங்களுக்கு குறிப்பாக அதிலுள்ள மனிதர்கள் எடுத்து நடக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய ஒரே கருத்துள்ள இரண்டாவது கருத்தே பெற முடியாத “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதையே இந்த இறைவாக்குகள் உறுதிப் படுத்துகின்றன.

புரோகிதர்களின்போலிஆதாரங்கள்!

சில குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி மார்க்கத்தில் விளக்கம் கூறும் அதிகாரம் மவ்லவிகளாகிய எங்களுக்கு இருக்கிறது என்று புரோகிதர்கள் வாதிடுவார்கள். அந்த இறை வாக்குகள் வருமாறு :

“…உங்களில் விசுவாசம் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்…”   அல்குர்ஆன் 58:11

“…அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார் களா? நிச்சயமாக (இந்த குர்ஆனை கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தான்”  அல்குர்ஆன் 39:9

“…குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்” (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா)”  அல்குர்ஆன் 35:19,20

இந்த குர்ஆன் வசனங்கள் எதிலும் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு மார்க்கத்தில் அதிகாரம் இருப்பதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக விசுவாசம் கொண்ட அனைத்து முஸ் லிம்களும் கல்வி ஞானம் பெற உற்சாகப்படுத் தப்பட்டுள்ளது. அதைக் கொண்டு அல்லாஹ்விடம் உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என உணர்த்தப்பட்டுள்ளது. முறையாக தங்கள் அறிவைப் பயன்படுத்துகிறவர்களே அல்குர் ஆனின் உண்மையான உபதேசத்தை உணர முடியும் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல 58:11ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி ஞானம் குர்ஆன், ஹதீத் கல்வி ஞானம் மட்டுமே. இந்த 58:11 வசனம் இறங்கும்போது இருந்தவை அல்குர்ஆன் மற்றும் நபியின் நடைமுறைகள் மட்டுமே. பின்னால் உருவான மத்ஹபு, தரீக்கா,பிக்ஹ் மற்றும் இயக்கங்கள் அடிப்படையிலான கல்வி ஞானம் அன்றிருக்கவில்லை. எனவே இந்த 58:11 வசனம் இத்தகைய கல்வி ஞானத்தை ஒருபோதும் கூறி இருக்க முடியாது.

மாற்றுமதப்புரோகிதர்களைகாப்பிஅடித்தவர்கள் :

மேலும் இன்று தங்களை ஆலிம்கள் உலமா பெருமக்கள் மார்க்கத்தைக் கற்றவர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் அனைவரும் ஹிந்து மதப் புரோகிதர்கள் போல், பெளத்த மதப் புரோகிதர்கள் போல், யூத மதப்புரோகிதர்கள் போல், கிறிஸ்தவ மதப்புரோகிதர்கள் போல், புரோகிதக் கல்வி கற்றவர்களே அல்லாமல், குர்ஆன், ஹதீத் கல்வி கற்றவர்கள் அல்ல, அதனால்தான் மற்ற மதப்புரோகிதர்களைப் போல் முன் னோர்கள், மூதாதையர்களின் வழிகேட்டு செயல்பாடுகளை எல்லாம் மார்க்கமாக நியாயப்படுத்தி வருகின்றனர்.

அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்து தாரூத் நத்வா மதப் புரோகிதர்கள் எப்படித் தங்களின் முன்னோர்கள் மூதாதையர்களின் வழிகேட்டுப் போதனைகளை பக்தி சிரத்தையுடன் மார்க்கமாகக் கூறி மக்களை மதி மயக்கினார்களோ அதே போலத்தான், இன்றைய முஸ்லிம் மதப் புரோகிதர்களும், முன்னோர்கள் மூதா தையர்களின் வழிகேட்டு போதனைகளையே பக்தி சிரத்தையுடன் மார்க்கமாகப் போதித்து மக்களை மதிமயக்கி வருகின்றனர்.

முன்னோர்கள், மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி செல்வது வழிகேடு என்று கூறும் அல்குர்ஆன் 2:170, 5:104, 7:28,70, 71, 10:78, 11:62,87,109, 12:40, 14:10, 22:53,54, 26:74,76, 31:21, 34:43, 37:69, 43:22,23, 53:23 போன்ற இறைவாக்குகளை எல்லாம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு வழிகேட்டில் சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் நடைமுறைகளை, நேர்வழி சென்ற தலைவர்களின் பெயரால் எடுத்து போதிக்கின்றனர், நடக்கின்றனர்.

எப்படி கிறிஸ்தவர்கள் யேசு என்ற ஈஸா (அலை) அவர்கள் சொல்லாத வி­யங்களை அவர்கள் சொன்னதாக அவர்களுக்குப் பின்னால் வந்த மதப்புரோகிதர்கள் கற்பனை யாக சரடு விட்டதை அப்படியே குருட்டுத்தன மாக நம்பிப் பின்பற்றுகின்றனரோ அதே போல், இமாம்களான அபூஹனீஃபா, மாலிக், ஷாஃபியீ, ஹன்பல்(ரஹ்-ம்) போன்றோர் சொல்லாத வி­யங்களை அவர்கள் சொன்ன தாக அவர்களுக்குப் பின்னால் அந்த மதப் புரோகிதர்கள் கற்பனையாக மத்ஹபு, தரீக்கா, பிக்ஹ், இயக்கம் ஆகிய பெயர்களால் சரடு விட்டதை அப்படியே குருட்டுத்தனமாக நம்பிப் பின்பற்றும் பரிதாப நிலையிலேயே இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பான் மையினர் இருக்கின்றனர். முன்னைய மதங்களின் மதப் புரோகிதர்களுக்கும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றிய மக்களுக்கும் நாளை மறுமையில் எப்படிப்பட்ட தண்டனை வந்திருக்கிறதோ, அதே தண்டனை தான் முஸ்லிம் மதப் புரோகிதர்களுக்கும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் காத்திருக்கிறது. (பார்க்க: அல்குர்ஆன் 33:66,67,68)

புறக்கணிப்பீர்புரோகிதர்களை!

மவ்லவிகள், ஆலிம்கள், அரபி கற்றவர்கள், மார்க்கத்தைச் சொல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் மதப் புரோகிதர்களைப் புறந்தள்ளி விட்டு அல்குர் ஆன் 7:3 மற்றும் 33:66,67,68 இறைக் கட்டளைகள்படி நேரடியாக, குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீத்களையும் சுயமாகச் சிந்தனையுடன் படித்துப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகிறவர்கள் மட்டுமே நாளை மறுமையில் நரக வேதனையிலிருந்து தப்ப முடியும்.

திரித்துக்கூறும்இன்னொருவசனம் :

இந்த முஸ்லிம் மதப் புரோகிதர்களால் திரித்துக் கூறப்படும் இன்னொரு குர்ஆன் வசனம் வருமாறு :

“…நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் (அறிஞர்கள்)தாம்…” அல்குர்ஆன் 35:28

Previous post:

Next post: