இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விரோதிகள்!

in 2022 மே

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விரோதிகள்!

அஹமது இப்ராஹிம், புளியங்குடி

ஈடு இணையற்ற கிருபையாளனாகிய எல் லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருளிய அரும் பெரும் நெறிநூலாகிய அல்குர்ஆனும் அதோடு அழகிய வழிகாட்டுதலின் நாயகரான அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை யும் பின்பற்றி நடக்கும் காலமெல்லாம் நமக்கு அல்லாஹ்வின் பேருதவிகள் வந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இதற்கு மாறாக மதவெறி பிடித்த இந்துத்துவ சங்பரிவாரர்களின் நடைமுறை களை முன்மாதிரிகளாக நமது சமுதாயம் எடுத் துக் கொள்ளுமேயானால் அதன் காரணமாக நமது சமுதாயம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடுவதில் எத்தகைய ஐயமுமில்லை.

இந்தியாவிலுள்ள நமது சமுதாயத்தைச் சார்ந்த பிரிவினை இயக்கவாதிகள் அத்துணை பேரும் நடத்தும் அரசியல் வழிமுறைகள் அனைத்தும் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களின் காட்டித் தந்த நடைமுறைகளுக் கெதிராகவே அமைந்துள்ளன.

மதவெறி பிடித்த சங்கிகளால் இந்திய முஸ்லிம்கள் அனுபவிக்கும் கடும் சித்திரவதை களுக்கும், துன்பங்களுக்கும் மூலக்காரணம் யாரென்றால் வட இந்தியாவைப் பொருத்த மட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசியல் புரோகிதரும், அதேபோன்று தென்னிந்தியா வைப் பொருத்தமட்டில் இஸ்லாமிய இயக்கங் களின் தலைவர்களுமேயாவர்.

இவர்களின் இயக்கங்களை வளர்ப்பதற் காக தங்களின் மேடை தோறும் வரம்பு மீறி வெறித்தனமாகப் பேசும் பேச்சுக்களால் தூண் டப்பட்ட அப்பாவி இந்துக்களிலுள்ள மாண வர்களும், இளைஞர்களும் தீவிர சங்கிகளாக மாறி அதன் காரணமாக யூறீறீ (சிந்தனை கொண்ட இளைஞர்களின்) இயக்கம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருவதை நிதர்ச னமாக நாம் பார்க்கலாம்.

பெரியாரின் மண்ணாக தமிழ்நாடு இருந்திருந்தும் அதையும் தாண்டி நமது சமுதாய இயக்கவாதிகளின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் வரம்பு மீறிய மேடைப் பேச்சுக்களால் எரிச்சல் அடையும் இந்து சமுதாய இளைஞர் கள் இதற்கு மாற்றாக யூறீறீ என்ற பயங்கரவாத இயக்கத்தில் அணியணியாய் இணைவதை நாம் பார்க்கின்றோம்!

இத்தகைய இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினை இயக்கவாதிகளே இந்திய முஸ்லிம் களுக்கு எதிரானவர்கள்! ஆபத்தானவர்கள்! பயங்கரவாத பாஜகவின் ‘ய’ டீம் என்று கூடக் கூறலாம்.

இவர்களை அடையாளம் கண்டு மேற் கண்ட இயக்கங்களை விட்டும் விலகி ஒரே சமு தாயமாக அல்முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தில் (அல்குர்ஆன் 22:78, புகாரி: 3606, 7084) ஒன்றி ணைந்தால் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்கள் சுபிட்சமாக வாழமுடியும்.

மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு உத்தரவிடு கின்றது. “”நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல் லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெற லாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.”  (அல்குர்ஆன் 20:44)

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமா கவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனி வாக) நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடு கடுப்பானவராகவும், கடின சித்தமுடையவரா கவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூ கத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப் படுத்தி விடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங் களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய் யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற் படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:159)

மேற்கண்ட வசனங்களைப் புறக்கணிக்கும் நமது இயக்கங்களின் தலைவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த உப தேசத்தை மீறும் இத்தகையவர்களால் நம்மு டைய சமுதாயம் மேலும் மேலும் சீரழியத் தான் போகிறது.

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக் கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக் கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்’ என்று கூறினான்.  (அல்குர்ஆன் 20:124)

அந்த நெருக்கடி எல்லோரையும் சூழும் :

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங் கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்ப தில்லை, நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:25)

உத்தரப்பிரதேசத்தில் தாம் டெபாசிட் கூட வாங்கமுடியாது எனத் தெளிவாகத் தெரிந்திருந் தும் இஸ்லாமிய வாக்குகளை சிதறடித்து பயங் கரவாத பாஜகவை வெற்றி பெற வைப்பதற் காக 100 தொகுதிகளில் போட்டியிட்டு மூக்கறு பட்ட புரோகிதரை நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு உணரவைத்த அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும்!

இறுதி எச்சரிக்கையாக ஓர் அல்குர்ஆன் வசனம் :

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண் டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங் கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடைய வர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:46)

Previous post:

Next post: