நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2022 ஜுன்

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

ஏப்ரல் 2022 தொடர்ச்சி…

“அறியாமைக்கால அரபிகளின் உண்மையான சில நம்பிக்கைகள் குறித்துப் பேசுகின்ற சில குர்ஆன் வசனங்கள்”

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். (43:87)

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத் தான அர்´ன் அதிபதி யார்?” எனக் கேட் பீராக “”அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். (23:86,87)

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக் குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளி யுங்கள்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “”அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறு வார்கள். (23:84,85)

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி இறந்த பின் அதன் மூலம் அதற்கு உயி ரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். (29:63)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “”மிகைத்தவனாகிய அறிந்த வனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறு வார்கள். (43:9)

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனை யும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவ னும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட் டால் “அல்லாஹ்’ என்று கூறுவார்கள்.  (29:61)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்”‘ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “”அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். (31:25, 39:38)

“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்தி ருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால்(பதில் கூறுங்கள்)” என்று கேட்பீராக “”அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். (23:88,89)

“வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்ற திலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! “”அல்லாஹ்” என்று கூறு வார்கள். (10:31) என்பதாக அறியாமைக் காலத்தவர்களது நம்பிக்கை குறித்து அல்லாஹ் இங்கே பிரஸ்தாபிக்கின்றான்.

“அறியாமைக் காலத்தில் வருடந்தோறும் துல்ஹஜ் மாதம் ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்தமையை அங்கீகரித்த இஸ்லாம்”

அறியாமைக்கால அரபிகள் வருடம் தோறும் துல்ஹஜ் மாதத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்தார்கள். அதனையே இஸ்லாம் அங்கீகரித்தது (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி: 3832, 369, 1622, 1665, 1564, 3177, 4363, 4655-4657, 4520, 4519)

“புனித கஃபாவையும் அதனைச் சுற்றியுள்ள ஹரம் பகுதியையும் புனித அபயமளிக்கும் புகலிடமாகப் பேணி வந்தார்கள்”

இஸ்லாத்திற்கு முன்பிருந்தே புனித கஃபாவையும் அதனைச் சுற்றியுள்ள ஹரம் பகுதியையும் புனித அபயமளிக்கும் புகலிட மாகப் பேணி வந்தார்கள். யாரேனும் கொலைக் குற்றவாளியேனும் ஹரம் புனித பகுதிக்குள் தஞ்சம் புகுந்துவிட்டால் அவர் வெளியே வரும்வரை அவரை ஒன்றுமே செய்யமாட்டார்கள். இஸ்லாமும் அதனை அப்படியே அங்கீகரித்தது, (புகாரி: பக்கம் 111, பாடம் 9,1846,3044,3045,4520,4519, 3:97, 29:67, 2:12,199)

கஃபாவை “”சுற்றிவரும்போது இணைவைப் பாளர்களின் அறியாமைக்கால தல்பியாவின் சில வரிகளை அங்கீகரித்த இஸ்லாம்”

அறியாமைக்கால இணைவைப்பாளர் கள் புனித கஃபாவைச் சுற்றி வரும்போது “லப்பைக், லப்பைக் லா­ரீக்கலக்க லப்பைக” உனது அழைப்பை ஏற்றோம். உனது அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை.. என்று கூறுவார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம் : 2209, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 4:88,828)

ஓர் உயிரின் “அறியாமைக்கால உயிர் நஷ்ட ஈட்டுத் தொகையின் நூறு எனும் அளவை அங்கீகரித்த இஸ்லாம்”

நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு கனவில் ஜம்ஜம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டு அத னைத் தோண்டுமாறு உத்தரவிடப்பட்டது. அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திய வராக மனசு நெகிழ்ந்து தனது பத்துப் பிள்ளைகளில் ஒருவரை கஃபாவிற்கு அருகில் வைத்து அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலி யிடுவதாக அப்துல் முத்தலிப் நேர்ச்சை செய்து கொண்டார்.

அவர்களில் எவரைப் பலியிடுவது என் பது பற்றி சீட்டுக் குலுக்கிப் பார்த்த போது அதில் அப்துல்லாஹ்வின் பெயர் வந்தது. அவர் தமது நேசம் மிகுந்த செல்ல மகன் என் பதால் “”அல்லாஹ்வே நான் அப்துல் லாஹ்வை அறுக்கவா? அல்லது அவருக்குப் பதிலாக நூறு ஒட்டகங்களை அறுக்கவா? என்று கேட்டு அவ்வாறே சீட்டு எழுதிக் குலுக்கிப்போட்டு எடுத்ததில் நூறு ஒட் டகங்கள் என எழுதப்பட்ட சீட்டு வெளியானது.

அவ்வாறே நூறு ஒட்டகங்கள் அல் லாஹ்வுக்காகப் பலியிடப்பட்டன. இஸ்லாமும் அதனை அங்கீகரித்தது இதனையே “”நான் பலி கொடுக்கப்பட்ட இஸ்மாயீல் (அலை) மற்றும் எனது தந்தை அப்துல்லாஹ் ஆகிய இருவரினதும் மகன் ஆவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரஹூக், அல்மக்தூம்: 70-73,39, தல்கீஹ், இப்னு ஹிஷாம், தபரீ, புகாரி:3173, 6142, 68,98, 7192. 4498, 6881, 2:178, 4:92, 5:45)

“அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து மந்தி ரித்து வந்த சில வரிகளை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள்”

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து மந்திரித்து வந்தோம். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டபோது எங்கே உங்களது (அறியாமைக்கால) மந்திரத்தை எனக்குச் சொல்லிக் காட்டுங் கள் என்று கூறினார்கள். (நாங்கள் ஓதிக் காட்டினோம். எமது ஓதலைக் கேட்ட பிறகு) “இணை வைப்புக் (கருத்துக்கள்) ஏற்படாதவரை ஓதிப்பார்த்தலில் தவறில்லை’ என்று (அறியாமைக்கால ஓதிப்பார்த்தலை அங்கீகரித்து இணக்கம்) தெரிவித்தார்கள். (அவ்ஃபான் பின் மாலிக்(ரழி) புகாரி: பாகம் 6, பக்கம் 381, பாடம்: 32, சிறு குறிப்பு: 65)

“ஜாஹிலியத்திலும் சில சிறப்புகளைக் கொண்டிருந்ததால் அபூ ஜஹ்லுக்காகவும் பிரார்த்தனை செய்த நபி(ஸல்) அவர்கள்”

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் “”இறைவா” கத்தாபின் மகன் உமர், ஹிஷா மின் மகன் அபூஜஹ்ல் ஆகிய இருவரில் ஒரு வரைக் கொண்டு உனது மார்க்கத்திற்கு வலு வூட்டுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் உமர்(ரழி) அவர்க ளுக்கு நேர்வழி காட்டினான். அபூஜஹ்ல் வைத் தவறான வழியிலேயே விட்டுவிட் டான். இவர்கள் தொடர்பாகவே,

யாருக்குத் தனது தீய செயல் அழகான தாகக் காட்டப்பட கருதினானோ அவனை (நரகவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடி யோருக்கு நேர்வழி காட்டுகிறான், (முஹம்மதே) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (35:8) எனும் இவ்வசனம் அருளப்பட்டது.  (அறிவிப்பு : இப்னு அப்பாஸ்(ரழி) லுபாபுந் நுகூல், இப்னு ஜரீர், தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:541)

“அறியாமைக்கால இஃதிகாஃப்புடைய நேர்ச் சையை நிறைவேற்றும்படி சொன்ன நபி(ஸல்) அவர்கள்”

(எனது தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் இறைத் தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு) ஒரு நாள் மஸ்ஜிதுல் ஹராம்(புனித மக்காப்) பள்ளிவாசலில் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந் தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை) இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர்(ரழி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (இப்னு உமர்(ரழி) புகாரி: 2032, 2042, 2043, 3144, 432, 6697)

“அறியாமைக் கால நல் பண்பாடுகளை ஏவாமலுமில்லை கெட்ட பண்பாடுகளைத் தடை செய்யாமலுமில்லை”

நீதி செலுத்துமாறும் நன்மையே செய்யுமாறும் உறவுக்காரர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகின்றான் மானக் கேடான செயல்கள், தீமைகள், எல்லை மீறல்கள் ஆகியவற்றுக்கு(த் தான்) அவன் தடை விதிக்கின்றான். (16:90) எனும் குர்ஆன் வசனத்திற்கு விரிவுரை எழுதும் போது கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் நல்லது எனக் கருதிக் கடைப்பிடித்து வந்த நல்ல பண்பாடுகள் எதையும் (இஸ்லாத்தில்) பின் பற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடாமல் இருக்கவுமில்லை. அவ்வாறே அறியாமைக் கால மக்கள் தம்மிடையே குறையாகக் கருதிய எந்தக் கெட்ட பண்பாட்டையும் (இஸ்லாத்தில்) அல்லாஹ் தடை செய்யா மலோ எதிர்க்காமலோ இருந்ததுமில்லை, மிகக் கெட்ட மட்டமான குணங்களையும் இழிவான பண்பாடுகளையுமே அல்லாஹ் தடை செய்தான். (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 5:101,102)

அதனையே அறியாமைக் காலத்தில் நடைமுறைக்கு வந்த நல்ல விசயங்களுக்கான நட்புறவு ஒப்பந்தங்கள் இஸ்லாத்திற் குப் பிறகும் இன்னும் கூடுதல் பலம் பெறும் என்று நபி(ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி னார்கள். (ஜுபைர்பின் முத்இம்(ரழி), முஸ்லிம்: 4952, முஸ்னத் அஹ்மத், பத்ஹுல் பாரி, உம்ததுல் காரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 5:106)

“பசியோடு இருந்தவர் பறித்த தானியக் கதிர்களை அனுமதித்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்”

அப்பாத் பின் ஷிஹ்பீல்(ரழி) அவர்கள் கூறியதாவது ஓராண்டு எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மதீனா வுக்கு வந்த நான் அங்குள்ள ஒரு தோட்டத் திற்குள் சென்றேன். அங்கு ஒரு தானியக் கதிரைப் பறித்து அதை(க் கையால்) தேய்த்துத் (தொலியை நீக்கிவிட்டு)ச் சாப்பிட்டு விட்டேன். சில கதிர்களை எடுத்து எனது ஆடையில் போட்டுக் கொண்டேன்.

அப்போது அங்கு வந்த தோட்டத்தின் உரிமையாளர் என்னை அடித்ததுடன் எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று இதனைத் தெரிவித்தேன். அப்போது அந்தத் தோட்ட உரிமை யாளரிடம் “இவர் பசியுடன் இருந்தபோது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் (அடுத்தவரது பொருளைச் சாப்பிடக் கூடாது என்ற) விபரம் தெரியாதிருந்த போது (அதனைச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட வழி முறையை) நீர் அவருக்குச் சொல்லிக் கொடுக்க வுமில்லை” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் “இவரது ஆடையைத் திருப்பிக் கொடுத்துவிடுக” என்று உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவர் அந்த ஆடையை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். மேலும் எனக்கு ஒரு “வஸ்க்’ அல்லது பாதி “வஸ்க்’ உணவுப் பொருள்களை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அபூ தாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:529, 530)

Previous post:

Next post: