நீதி செலுத்துவதே இறையச்சம்!

in 2022 ஜுன்

நீதி செலுத்துவதே இறையச்சம்!

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்….

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும், நீதிக்கு சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள்கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிட கூடாது. நீங்கள் நீதி செலுத் துங்கள்; இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சி செயலாற்றுங்கள். நீங்கள் செய்வன வற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (இறைநூல் 5:8)

அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று யாரும் கூற வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி : 2662,6061,6162)

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராக வும் திகழுங்கள். நீங்கள் செலுத்தும் நீதி யும், வழங்கும் சாட்சியும் உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! நீங்கள் யாருக்காகச் சாட்சி சொல் கிறீர்களோ அவர் செல்வந்தராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களை விட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கிறான்.

எனவே மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறிவிடாதீர்கள்! நீங்கள் உண்மைக் குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சி அளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்ற வற்றை எல்லாம் நன்கு அறிபவனாக இருக்கிறான். (இறைநூல் 4:135)

பலமான இறை நம்பிக்கையாளர்கள், பலவீனமான இறை நம்பிக்கையாளர் களை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவர். ஆயி னும், அனைவரிடமும் நன்மை உள்ளது.

உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு! இறைவனிடம் உதவி தேடு, நீ தளர்ந்து விடாதே! உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே! என்று அங்கலாய்த்துக் கூறாதே மாறாக அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான் எனச் சொல்.

ஏனெனில் இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருக்குமே என்பதைச் சுட்டும் சொல்லானது, ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (முஸ்லிம்:5178)

நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக்)கண்கள்தான் குருடாகி விட்டன.
(இறைநூல் : 22:46)

Previous post:

Next post: